Monday, August 23, 2010

நோய் நாடி..நோய்முதல் நாடி..
ஒருவர் நம் நலம் நாடுபவர்..நீண்ட நாள் நண்பர்..நம்மிடம் உள்ள நற் குணங்களை போற்றி வந்தவர்..அப்படிப்பட்டவர் நட்பை பெற நாம் என்ன தவம் செய்தோம் என எண்ண வைப்பவர்.

அப்படிப்பட்ட நண்பர் திடீரென நமக்கு எதிராய் மாறுகிறார்...நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்...நம்மை விட்டு விலகுகிறார்..

உடன் நமது ரியாக்க்ஷன் என்னவாய் இருக்கும்..

நண்பன் முதுகில் குத்திவிட்டான்..நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான்..என்று புலம்ப ஆரம்பிப்போம்..முடிந்தால் அந்த நண்பனைப் பற்றிய இமேஜைக் கெடுப்போம்..

ஆனால்.. நம் மீது என்ன குறை..நாம் என்ன தவறிழைத்தோம்..என நம் மனசாட்சிக்குத் தெரிந்தாலும்..அதற்கு சமாதானம் செய்து அடக்கிவிடுவோம்..

இது..நண்பர்களுக்கிடையே மட்டுமின்றி..சமுதாயத்திலும் இப்போக்கு அதிகமாய் காணப்படுகிறது.

நேற்றுவரை நம்மை ஆதரித்த ஊடகங்கள்..திடீரென நம்மை ஏன் எதிக்கின்றன..என்பது மனதிற்குத் தெரிந்தாலும்..அரசியல்வாதிகள்..திருந்தாமல்..சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது கோபம் கொண்டால்..

வாய்க்கா கரையில் ஒதுங்கியவன்..கோபமுற்று செய்த செயலாக சொல்லப்படும் சொலவடையே ஞாபகம் வருகிறது.

அதுபோன்ற மாற்றம் ஏற்பட..நாம் செய்த செயல் என்ன,அச் செயல் நியாயமா? என்றெல்லாம் ஆராய்ந்து..அப் பாவச் செயலை நீக்கி..மீண்டும் அந்த நண்பன் அல்லது ஊடகங்களின் இழந்த நட்பைப் பெறவேண்டும்..

அதை விடுத்து..மேலும் மேலும்..தவறிழைத்துக் கொண்டிருந்தால்....நாம் தலை நிமிர முடியாது.

இது தனிப்பட்ட நபர் யாரையும் குறித்த இடுகை அல்ல..அனைவருக்குமான இடுகை..

ஊடகங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மக்கள் அனைவருக்குமான இடுகை.கடைசியாக ஒரு குறள்..

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(வந்துள்ள நோய் என்ன..அதற்கான காரணம் என்ன..அதைத் தீர்க்கும் வழி என்ன..இவற்றை முறையாக ஆராய்ந்து (அதைப் போக்க) சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

11 comments:

vasu balaji said...

A stitch in time sir:). ty.

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

அபி அப்பா said...

டிவிஆர் அய்யா! நீங்க ஒரு ஹைக்கூ கவிதை மாதிரி! எதை நினைச்சு படிக்கிறோமோ அந்த அர்த்தம் புரியும்:-)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சரியாக சொன்னிர்கள்

மங்குனி அமைச்சர் said...

சரியா சொன்னிங்க சார் , எதையும் நிதானமா யோசிச்சா நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும்

அ.முத்து பிரகாஷ் said...

பசுவைய்யா அவர்களின் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது ... வரிகள் தாம் எத்தனை முயற்சித்தும் தோன்ற மாட்டேன்கிறது ... பின்னர் வருகிறேன் ...

Vidhya Chandrasekaran said...

ம்ம்

ஹேமா said...

திரும்பத் திரும்பப் படித்தேன்.
எவ்வளவு ஆழமான கருத்து.
முயற்சித்தால் பலனும் அமைதியும்.

Unknown said...

ஆழமான கருத்துக்கு ரொம்ப நிதானமா இருக்கு எழுத்து.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல இடுகை :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி