'என்னங்க..இன்னிக்கு நம்ம பையன் ஸ்கூல்ல.. அப்பாவையோ..அம்மாவையோ..அழைச்சுட்டு வரச் சொன்னாங்களாம்..நீங்க இன்னிக்கு ஆஃபிஸிற்கு லீவைப் போட்டுட்டு போயிட்டு வாங்களேன்' என்கிறார் அம்மா.
'அதெல்லாம்..முடியாது..எனக்கு ஆஃபீஸ்ல வேலை அதிகம் இருக்கு..அவன் உனக்கும் பிள்ளைதானே..நீயே போயிட்டு வா' என்று அப்பா சொல்லிவிட்டார்.
அம்மா..மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று முதல்வரைப் பார்த்தார்.அவர்..'இதோ பாருங்க அம்மா..இப்பவெல்லாம் எட்டாவது வகுப்பு வரை யாரையும் எந்த வகுப்பிலேயும் ஃபெயில் பண்ணக்கூடாது.அதை வைச்சு உங்க பையன் எட்டாவது வரை வந்துட்டான்..இனி ஒன்பதாம் வகுப்பிலே இருந்து..இறுதித் தேர்வில் தேறினால்தான் அடுத்த வகுப்பிற்குப் போகமுடியும்.அப்படி உங்க பையன் போகணும்னா..தமிழை தப்பில்லாம எழுதணும்.அதனால முதல் காரியமா..இன்னும் தாமதப் படுத்தாம அவனை தமிழில் தப்பு இல்லாம எழுத பழக்குங்க' என்றார்.
'சரி' என அவரிடம் தலையாட்டி விட்டு வெளியே தனது மகனுடன் வந்த அம்மா...அவனைப் பார்த்து 'இப்படியே இருந்தா..என்ன செய்யப் போறே..' என்றார்.
'கவலைப்படாதே அம்மா...தமிழ்த் தெரியாத ஊர்ல போய் என் தமிழை வளர்த்துப்பேன்' என்றான் மகன்.
அதன் படியே எப்படியோ தேறி..(போலி மதிப்பெண்ணா..அல்லது போலி சான்றிதழா!!) வெளி நாட்டில் வேலை செய்ய கிளம்பிவிட்டான் மகன்
12 comments:
hahahaha
இது வேறயா??? :-)
//'கவலைப்படாதே அம்மா...தமிழ்த் தெரியாத ஊர்ல போய் என் தமிழை வளர்த்துப்பேன்' என்றான் மகன். //
ம்ஹூம். இப்படி
“கவலப்படதெ அம்ம..தமிழ் தெரியத ஊரில பேய் என் தமிழை வளர்துபென்” என்றன் மகன்.
:))
சார்! தளபதிய மாதிரி ஒரு தமிழ்ப்பற்றுள்ள ஆளை நீங்க பார்க்க முடியாது சார். சீனித் தக்காளித் தொக்குன்னா என்ன தெரியுமா சார் உங்களுக்கு. அவ்வளவு தமிழ்ப் பற்று.:))
//வானம்பாடிகள் said...
ம்ஹூம். இப்படி
“கவலப்படதெ அம்ம..தமிழ் தெரியத ஊரில பேய் என் தமிழை வளர்துபென்” என்றன் மகன்.
:))//
பேசும்போது கூட அப்படித்தானா :-)))
//போலி மதிப்பெண்ணா..அல்லது போலி
சான்றிதழா!//
இருக்கும் .. இருக்கும்
//கவலப்படதெ அம்ம..தமிழ் தெரியத ஊரில பேய் என் தமிழை வளர்துபென்//
அண்ணே எழுத்து பிழையே இல்லையே !!!
Super.......
ஹா ஹா ஹா...
கதை சூப்பர். ஆமா வெளிநாடு போன தமிழ் வளருமா?
:) இன்னும் இப்படி எத்தனை கதை வரப்போகுதோ :)
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
Post a Comment