Monday, August 9, 2010

போலிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது சமுதாயம்..


( photo thanks to - picsdigger.com )

போகிற போக்கைப் பார்த்தால்..தாய்..ஒருத்தி மட்டுமே அசல் என்னும் நிலை வந்து விடும் போலத் தெரிகிறது.

மாம்பழங்களை கார்பைடு கற்கள் போட்டு..பழுக்க வைப்பதையும்..ஆப்பிள் போன்ற பழங்கள் பளீச் என தோற்றமளிக்க மெழுகு பூசப்படுவதையும் அறிவோம்.

மாடு நன்கு அதிகமாக பால் கறப்பதற்கு ...பால் கறக்கும் முன் அதன் மடிகளில் ஆக்சிடோசின் என்னும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள்..அப்போது மாடு வழக்கத்தை விட அதிகமாக பால் கறக்குமாம்.ஊசி மூலம் இதை செடிகளுக்கு செலுத்தினால்..பருவத்திற்கு முன்னரே பூக்குமாம்..காய்கள் வழக்கத்தை விட பருமனாகுமாம்.பளபளப்பாய் இருக்குமாம்.

(சில ஆண்டுகள் முன்னர்..சிறுமியாய் நடிக்க வந்த ஒரு நடிகை..விரைவில் கவர்ச்சிகரமாய் தோற்றமளிக்க வேண்டும்..என ஹார்மோன் ஊசி போடப்பட..அவர் வயதுக்கு மீறிய குண்டாகி..இருந்த சினிமா வாய்ப்பையும் இழந்தது ஞாபகம் வருகிறது)

சாதாரணமாகவே..பூச்சி மருந்துகள் தெளிக்கப் பட்டு பாதி விஷமாகத்தான்..திராட்சை போன்றவை சந்தைக்கு வருகின்றன.இன்னும் சொல்லப் போனால் அவை பூச்சிக் கொல்லி மருந்தில் முக்கப்பட்டே அனுப்பப்படுகின்றன.நாம் இவற்றை கழுவும் போது ஓரளவே விஷத்தை நீக்க முடியும்.காய்கறி, பால் ஆகியவற்றிற்காக போடப்படும் ஹார்மோன் ஊசிகளால் உருவாவதை உண்ணும் போது உடல் குண்டாகும்.பெண் குழந்தைகள் விரைவில் பூப்பெய்துவர்..பெண்களுக்கு மாத விலக்கு பிரச்னைகள் ஏற்படும்..எலும்புகள் வலுவிழக்கும்..என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

ஆனால்..இவ்வூசி போடப்பட்ட மாட்டின் பாலைக் குடித்தால்..எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும்..ஆக்சிடோசின் என்பது ஒரு வகை புரதம்..காய்ச்சும் போது அப்புரதம் போய்விடும் என்றும் கூறப்படுகிறது.

ஆய்வாளர்கள் எந்த விஷயத்தில் ஒரே மாதிரி முடிவை எடுத்துள்ளார்கள்..

எங்கும் ..எதிலும் கலப்படம்..உடல் கோளாறு ஏற்படாத காற்றை சுவாசித்து வாழும் வழி வந்தாலும் மாசில்லா காற்றிற்கும் பஞ்சம்.

(ஒரு வார பத்திரிகையில் இது பற்றி படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு இப்பதிவு)

6 comments:

Unknown said...

ஐயா இங்கு பெரும்பாலானவை தகிடுதத்தங்கல்தான் ...

vasu balaji said...

இத்தன வருஷமா அப்படி கறந்த பாலைத்தானே குடிக்கிறோம். கவர் பாலுக்கு ஊசி போட்டு தண்ணி கலக்கறானே சார்? அதுக்கில்லையா கவலைப்படணும்.:))

க.பாலாசி said...

வருத்தம் தரும் செய்திதானுங்க...

Jey said...

வருத்தமளிக்கும் விசயங்கள்...

சிநேகிதன் அக்பர் said...

வேதனையான விசயங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி