Sunday, August 29, 2010

ஊழலுக்கும்..சுரண்டலுக்கும் வந்தனை செய்வோம்...


(photo courtesy-razzmatazz.mgns.in)

ஊழல்..பிறர் சொத்தை அபகரித்தல், திருட்டு, பொய் சொல்லுதல் இவை எல்லாம் தீயவை..

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்..

என்று பள்ளிகளில் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறார்கள்..ஆனால்..நம்மை வழி நடத்திச் செல்லும் சமுதாயத்தில்..இவற்றிற்கு மாறாகவே நடந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு நாடு சிறப்புடன் செயல்பட வேண்டுமானால்..அந்த நாட்டை ஆளுபவர்கள்..நல்லவர்களாக, ஊழல் புரியாதவர்களாக இருக்க வேண்டும்..ஆனால் நடப்பது என்ன..

ஊழல்..ஊழல்..ஊழல்..

சமீபத்தில்..உலகிற்கு காமன்வெல்த் போட்டிகளை நன்கு நடத்தி இந்தியா நல் பெயர் எடுக்க நினத்தால்..அதிலும் கோடிக்கணக்கில் ஊழல்..

நாட்டில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை..ஊழல் புரியா அரசியல்வாதிகள்..அதிகாரிகள்..விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையிலேயே உள்ளனர்.நீதி வழங்க வேண்டிய நீதிபதிகள் மீதும் ஊழல் புகார்.

யார் மீதேனும் ஊழல் புகார் வந்து நீதி மன்றம் போனால்..தீர்ப்பு பல நிலை கோர்ட்டுகளில் விவாதிக்கப்பட்டு, பல விதமாக வருகிறது.கோர்ட்டுக்கு கோர்ட் நீதி மாறுபடுகிறது..சில சமயங்களில் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள்..அவ்வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை..என வேறு நீதிபதிகளுக்கு வழக்கை மாற்ற சொல்கின்றனர்.எல்லாம் கடந்து..நீதி வழங்கப்படும் என காமன் மேன் எதிர்பார்ப்பு இருந்தாலும்..அது கிடைக்க பல்லாண்டுகள் ஆகின்றன..சம்பந்தப்பட்ட நபர்..இதற்கிடையே அமரர் ஆகி இருப்பார்..

அல்லது..முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அடுத்த ஆட்சியில் விலக்கிக் கொள்ளப்படும்.

இந்நிலையில்..மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என..மக்களும் தங்களால் முடிந்த அளவிற்கு தாங்கள் சம்பந்தப்பட்டத் துறையில்..ஏமாற்றுதல், லஞ்சம் வாங்குதல், பொதுசொத்தை சுரண்டுதல் ஆகியவற்றைச் செய்து வருகின்றனர்.மக்கள் பேராசையும் இதற்கு ஒரு காரணமாய் அமைந்து விடுகின்றன..

இன்னமும் பணத்தை இரட்டிப்பு செய்கிறோம்..என்றால்..மக்கள் நம்புகின்றனர்

கோடிக்கணக்கில் உங்களுக்கு லாட்டரியில் கிடைத்துள்ளது..அதற்கு சில லட்சங்கள் முதலில் நீங்கள் செலுத்த வேண்டும்..என மின்னஞ்சல் வந்தால்..கோடிக்கு ஆசைப்பட்டு கையில் இருக்கும் லட்சத்தை இழக்க தயாராய் இருக்கிறோம்..

கோவில் சொத்து கொள்ளையடிக்கப் படுகிறது.

ஏழைகளுக்கு வழங்கப் படும்..சலுகை விலை ரேஷன் அரிசியில் ஊழல்..

மக்களை இந்த நிலைக்கு தள்ளியதில்..ஆள்பவர்களுக்கு பெரும் பங்கு உண்டு..

ஊழல் புரிபவர்..யாராய் இருந்தாலும்..எந்நிலையில் இருந்தாலும்..எக்கட்சியை சேர்ந்தவராயினும்...உடன் தண்டிக்கப்படுவார்கள் என்று இருந்தாலே ஒழிய ஊழலை ஒழிக்க முடியாது..

அது போன்ற நிலை வரவில்லையெனில்..

அனைவருமே..இடுகையின் தலைப்பையே தாரக மந்திரமாய்க் கொண்டுதான் செயல் படுவார்கள்.

காமன்மேன் ஏமாளியாய்..வாங்கும் சம்பளம் கைக்கும், வாய்க்கும் எட்டாமல் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பான்.

13 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை..யாரேனும் இணைக்கவும்

vasu balaji said...

பெரும்பாலும் ஊழலுக்கு ப்ரொசீஜரல் லேப்ஸ் எனப்படும் வழிமுறை குறைபாடுகளே காரணம். அதற்குத் தண்டனை கொடுக்க ப்ரோசீஜரை கடுமையாகப் பின்பற்ற வேண்டியிருப்பதுதான் கொடுமை.

நர்சிம் said...

வானம்பாகள் அய்யா கருத்தே என் கருத்தும். நல்ல பதிவு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
பெரும்பாலும் ஊழலுக்கு ப்ரொசீஜரல் லேப்ஸ் எனப்படும் வழிமுறை குறைபாடுகளே காரணம். அதற்குத் தண்டனை கொடுக்க ப்ரோசீஜரை கடுமையாகப் பின்பற்ற வேண்டியிருப்பதுதான் கொடுமை.//

அதைத்தான் ஒழிக்க வேண்டும் என்கிறேன்..தவறிழைத்தால்..உடன் தண்டனை என்ற நிலை வரவேண்டும்.வருகை புரிந்தமைக்கு நன்றி பாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நர்சிம் said...
வானம்பாகள் அய்யா கருத்தே என் கருத்தும். நல்ல பதிவு//

நன்றி நர்சிம்

vinthaimanithan said...

ரெட் டேப்பிஸம் ஒழிந்தால் ஒரு விடிவு பிறக்கும்

ராம்ஜி_யாஹூ said...

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தேர்ந்து எடுப்பது நாம் தானே (காமன் மேன் /வுமன் தானே). நாம் கையூட்டும், அன்பளிப்பும் பெற்று கொண்டு வாக்கு அளிக்கிறோம் அல்லது வாக்கே அளிப்பதில்லை., வாக்கு சாவடியில் ஊழலை நாம் ஆரம்பித்து வைக்கிறோம். அது தொடர்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி.

நம்மிலிருந்து வருபவர்கள் தானே அவர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//விந்தைமனிதன் said...
ரெட் டேப்பிஸம் ஒழிந்தால் ஒரு விடிவு பிறக்கும்//


..லாம்..
வருகைக்கு நன்றி விந்தைமனிதன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ராம்ஜி_யாஹூ said...
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தேர்ந்து எடுப்பது நாம் தானே (காமன் மேன் /வுமன் தானே). நாம் கையூட்டும், அன்பளிப்பும் பெற்று கொண்டு வாக்கு அளிக்கிறோம் அல்லது வாக்கே அளிப்பதில்லை., வாக்கு சாவடியில் ஊழலை நாம் ஆரம்பித்து வைக்கிறோம். அது தொடர்கிறது.//

எல்லாவற்றையும் ஆராய்ந்தால் மூலக்காரணம்..சுயநலம்..என்றே இருக்கும்.
வருகைக்கு நன்றி ராம்ஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சிநேகிதன் அக்பர் said...
மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி.

நம்மிலிருந்து வருபவர்கள் தானே அவர்கள்//

:)))

suneel krishnan said...

லஞ்சம் ஊழல் ஆகியவை குறித்து இன்றைய மக்களின் பார்வை அதிர்சிகரமாக இருக்கிறது . நீங்கள் சொல்வது போல் சுயநலமே இதன் அடிநாதம் , இன்னொருவன் உழலையும் லஞ்சத்தையும் கொடுக்கும் பொது அல்லது பெரும் போது , அவரை அக்டுமாயாக சாடுகிறார்கள் , ஆனால் நமக்கு என்று வரும் போது , இது எல்லா இடத்துலயும் சகஜம் , யார் தன கோடுகள என்று நியாயா படுத்துகிறார்கள்

ngaani said...

எனது ப்ளக்கை பாருங்கள்- எனது நடவடிக்கை சரியா என கூறுங்கள்
www.kutimakkal.blogspot.in