ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, August 31, 2010
திரைப்பட இயக்குநர்கள் - 4 கே.சுப்பிரமணியம்
திரைப்படங்கள் பேச ஆரம்பித்து 79 ஆண்டுகள் ஆகின்றன.இக்கால கட்டங்களில் பல இயக்குநர்கள்..வந்து சில படங்களைக் கொடுத்து சென்றுள்ளனர்.அவர்களில் நம்மால் மறக்கமுடியா பல இயக்குநர்களில் கே.சுப்பிரமணியமும் ஒருவர்.
1904 ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்பிரமணியம்.வக்கீலான இவர் திரைக்கதை,தயாரிப்பு, இயக்கம் என மூன்று நிலையில் கிட்டத்தட்ட 20 படங்களை இயக்கியுள்ளார்.
அந்த நாட்களிலேயே பல சமூக சீர்த்திருத்தங்களை தன் படங்களில் சொன்னவர்.
1934ல் எம்.கே.தியாகராஜ பாகவதரை வைத்து பவளக்கொடி என்ற படத்தை இயக்கினார்.1936ல் நவீன சாரங்கதாரா..பின் பக்த குசேலா ஆகிய படங்களை இயக்கினார்.
1937ல் பாலயோகினி என்ற படத்தை இயக்கினார்.பிராமண குடும்பத்தினரால் துரத்தப்பட்ட மகளும்,அவளது அத்தையும்..அன்று சேரி என்றழைக்கப்பட்ட குடியிருப்பில்..அம்மக்களுடன் தஞ்சம் அடைந்து வசிக்கிறார்கள்.அந்தக் காலத்தில் மிகவும் தைரியமாக எடுக்கப்பட்ட படம்.
1938ல் சேவாசதனம்..வயதானவர்கள்..குழந்தை பருவத்தைக் கூட தாண்டாத பெண்களை மணமுடிப்பதை கண்டித்த படம்.நம் சம்பிரதாயங்கள் குறுக்கே நிற்குமேயாயின்...சாதியே வேண்டாம்..என நாயகன் தான் அணிந்திருந்த பூணூலை அறுத்து எறிந்த படம்.இப்பட நாயகி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆவார்
1939ல் வந்த படம் கல்கியின் தியாகபூமி.பிராமண சமூகத்தின் குறைபாட்டை சொன்ன படம்.இந்த படம் ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டு பின் வெளியான படம்.
1940ல் வெளிவந்த 'பக்த சேதா' என்ற படம்..தீண்டாமையைச் சொன்ன படம்.
பழமையில் ஊறிய பிராமண சமுகம் இவரை தங்கள் ஜாதியைவிட்டு தள்ளி வைத்தனர்.
தமிழ்த் திரைப் படங்களின் தந்தை என போற்றப்படும் இவரை பிராமண பெரியார் எனலாம்.
எஸ்.வீ.ரமணன்,எஸ்.கிருஷ்ணசாமி,பத்மா சுப்ரமணியம்,அபஸ்வரம் ராம்ஜி ஆகியோர் இவருக்கு பிறந்தவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
எனக்கு முற்றிலும் புதிய தகவல்கள்..... பகிர்வுக்கு நன்றி.
சில தகவல்கள் புதிது. நன்றி சார்.
//Chitra said...
எனக்கு முற்றிலும் புதிய தகவல்கள்..... பகிர்வுக்கு நன்றி.//
நன்றி Chitra
நன்றி Bala
//எஸ்.வீ.ரமணன்,எஸ்.கிருஷ்ணசாமி,பத்மா சுப்ரமணியம்,அபஸ்வரம் ராம்ஜி ஆகியோர் //
புதிய தகவல்களுக்கு நன்றி ! இவர்களில் ரமணன் விளம்பர படங்கள் எடுப்பவர் என்று நினைக்கிறன். (லதா ரஜினி உறவினர்?) கிருஷ்ணசாமி யார் என்று தெரியவில்லை.. (சீரியல் producer ஆ?)
வருகைக்கு நன்றி கிரிஷ்..
கிருஷ்ணசாமி...கிருஷ்ணசாமி அஸ்ஸோசியேட்ஸ் என்ற பெயரில்..டாகுமென்டரி ஃபில்ம் எடுப்பவர்.
இண்டஸ் வேலி டூ இந்திரா காந்தி (Indus velley to Indira Ganthi)கேள்வி பட்டிருப்பீர்களே.
தவிர்த்து..துப்பறியும் சாம்பு. தீக்குள் விரலை வைத்தால் போன்ற டி.வி., சீரியல்கள் தயாரித்து..இயக்கியுள்ளார்.
ஒரு சின்ன சுய தம்பட்டம்..எனது கதை வசனத்தில் நான்கு சிறுகதைகள் தொலைக்காட்சிக்காக தயாரித்துள்ளார்.
Post a Comment