Saturday, August 7, 2010

எல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-சவால் விட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

பாமகவை யாராலும் அழிக்க முடியாது. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று என்று சவால் விட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 400 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த கணக்கெடுப்பை கிராம நிர்வாக அலுவலரை பயன்படுத்தியே எடுக்கலாம். 30 அல்லது 40 கோடி ரூபாய்தான் செலவாகும்.

பாமகவை யாராலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில் நாங்கள் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று.

20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இது சமூக நீதி போராட்டம். தமிழக அரசின் ஆய்வு 7 மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக குறிப்பிடுகிறது. அதில் வேலூர் முதலிடம், சேலம் ஆறாவது இடம். மொத்தம் 7 மாவட்டங்களும் வடமாவட்டங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 73 சதவீதம் குடிசைகள் இருக்கிறது அதில் 42 சதவீதம் வன்னியர்கள் குடிசை. 36 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசைகள். இதிலிருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

வன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல், தமிழகம் முன்னேறாது. வன்னியர்கள் முன்னேறினால் தமிழகம் முன்னேறும்.

ஈழத் தமிழர்கள் இலங்கையில் இதுவரை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தி தரவில்லை. சிறப்புக்குழு இலங்கைக்கு செல்வதால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு நலன் கிடைக்க வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.

காவிரியை வைகையில் இணைப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஏன் தெற்கு பகுதிகளுக்கே அனைத்து நலன்களையும் கொண்டு செல்கிறார்கள். பாலாற்றில் இணைக்க வேண்டியதுதானே?

வாய்தா ராணி என்று திமுக போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சேலத்தில் புதிய மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு இதுவரை எனக்கு முறைப்படி அழைப்பிதழ் வரவில்லை என்றார் அன்புமணி.

(நன்றி தட்ஸ்தமிழ்)

11 comments:

அருள் said...

மிகச்சரியான சவால், ஆனால், தமிழ்நாட்டின் எந்த கட்சிக்கும் இந்த சவாலை ஏற்கும் துணிச்சல் இல்லை.

உண்மையில், தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு 1991 இல் 1 இடம், 1996 இல் 4 இடம் வென்ற கட்சி பா.ம.க.

வேறு எந்த கட்சியும் இப்படி தன்னந்தனியாக போட்டியிட்டு வென்றதாக வரலாறு இல்லை.

ஒசை said...

கோபத்துல ஏதோ சொல்றாரு. விட்டுடுங்க.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///வேறு எந்த கட்சியும் இப்படி தன்னந்தனியாக போட்டியிட்டு வென்றதாக வரலாறு இல்லை.///

இருக்கிறது என்று நினைக்கிறன்...பழைய தேர்களை நராகப் பாருங்கள்.

இப்பொழுதும் தனியாக நிற்க வேண்டும். இவர்கள் தனியாக நின்றால் ஜெயிக்க வேண்டியகட்சியை யாவது கீழே இழுத்து விட்டு விடலாம்.

vasu balaji said...

பாத்துறணும். அப்பிடியே ஊத்திரணும்:))

Unknown said...

//வாய்தா ராணி என்று திமுக போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//

Great...

Vidhya Chandrasekaran said...

\\பாமகவை யாராலும் அழிக்க முடியாது.\\

வேற யாரும் வேணாம். அவங்களே செல்ப் டேமேஜ் பண்ணிப்பாங்க.

KATHIR = RAY said...

யாரும் இவங்கள கூட்டணில சேத்துக்கலன்ன
இப்படித்தானே சொல்ல முடியும்

சிநேகிதன் அக்பர் said...

அப்போ நேற்று டிவியில கலைஞர் அழைத்தால் கூட்டணி வைத்துக்கொள்வம்னு ஒருவர் சொன்னாரே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
அப்போ நேற்று டிவியில கலைஞர் அழைத்தால் கூட்டணி வைத்துக்கொள்வம்னு ஒருவர் சொன்னாரே...//அதுதானே..மாற்றி மாற்றி பேசறதுதானேஅவங்க வழக்கம்னு சொல்றீங்களா?:))

Guruji said...

முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/