Thursday, August 26, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (27-8-10)
தமிழகம் முழுதும் 7000 மதுக்கடைகள் உள்ளன.அவற்றில் 32000 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.தமிழக அரசுக்கு மதுக்கடைகள் மூலம் 14000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது..அரசின் மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு மதுக்கடைகள் மூலம் வருகிறது..யாரேனும் பொன் முட்டையிடும் வாத்தை கொல்வேன் என்றால்..அது ஒப்புக்குத்தான் என்றே தோன்றுகிறது..

2)அறுவை சிகிச்சை மூலமோ..அல்லது அது இல்லாமலோ பிளாஸ்டிக் சர்ஜெரியை சிறந்த முறையில் மக்களுக்குத் தரும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவையும் அங்கீகரித்துள்ளது பிளாஸ்டிக் சர்ஜெரிக்கான பன்னாட்டு அமைப்பு.

3)டெல்டா மாவட்டங்கள் என்கிறோம்..டெல்டா என்றால் என்ன தெரியுமா?
Delta is a triangular coastal land formed by silt deposited by a river while flowing in to a sea or an Ocean.

4)எதற்குத்தான் ஆய்வு என்ற விவஸ்தை இல்லாமல் போய் விட்டது..ஆண்கள் சராசரியாக தங்கள் ஆயுளில் ஒரு ஆண்டை , பெண்களைப் பார்த்து ரசிக்கவே செலவிடுவதாக இங்கிலாந்து நிறுவனம் ஒன்று ஆய்வறிக்கை செய்து கண்டறிந்துள்ளது.

5) யாருக்கேனும் உதவியோ, நன்கொடையோ கொடுத்தால்..அதை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது..செய்ததைக் கூட மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டே இருப்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரியது.

6)கோபம் வரும் போது நம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.நெஞ்சு பட படக்கிறது.ரத்தக்குழாயில் அடைப்புக் கூட ஏற்படுகிறது.கோபம் வருகையில் அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது.அது உடலின் ரத்தக் குழாயைச் சுருக்கிவிடுகிறது.கோபத்தின் உச்சக்கட்டம் இருதய பாதிப்பு..தான்..ஞாபகத்தில் வையுங்கள்.7)இந்த வாரம் நான் படித்தவற்றுள் தமிழா தமிழா வின் மகுடம் ...மாதவராஜின் இந்த இடுகைக்கே.வாழ்த்துகள் மாதவராஜ்

8)கொசுறு ஒரு பொன்மொழி...

பெண்மையும்..தாய்மையும் இல்லாமல் பெண்கள் வாழ ஆரம்பித்தால்..அழிவில் கொண்டு போய் விடும்.

8 comments:

வானம்பாடிகள் said...

கொசுறு ஒரு பொன்மொழி...

//பெண்மையும்..தாய்மையும் இல்லாமல் பெண்கள் வாழ ஆரம்பித்தால்..அழிவில் கொண்டு போய் விடும்.//

அய்யய்யோ. இது ஆணாதிக்க சிந்தனைம்பாய்ங்க:))))))

அபி அப்பா said...

டெல்டாவுக்கு விளக்கம் நானும் எதுனா பதிவிலே சொல்லனும் சொல்லனும்ன்னு இருந்தேன் நீங்க சொல்லீட்டிங்க. அப்படியே யாராவது அதுக்கு சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்கப்பா. "ஆற்றுப்படுகைன்னு என்னவோ வரும்.

வித்யா said...

:))

Chitra said...

நல்ல தொகுப்பு.

Mahi_Granny said...

இந்த வாரம் வாசிப்பு எல்லாமே தாமதம் என்றாலும் சுண்டல் மட்டும் முந்திக் கொண்டது. மகுட இடுகை தெரிவும் அருமை

யாசவி said...

டெல்டா = ஆற்று முகத்துவாரம் என படித்ததாக நியாபகம்

ஆயில்யன் said...

டெல்டா - கழிமுகப்பகுதி என்று குறிப்பிட்டிருக்கின்றோம் - முன்பு சிலகாலம் பொதுப்பணித்துறையினில் நீர்வள ஆதாரங்கள் துறையில் பணியாற்றியபோது !

காவிரி கழிமுகப்பகுதி & கொள்ளிட கழிமுகப்பகுதி என குறிப்பிடுவார்கள் துறை சார்ந்த அலுவல்களில்!

ஹேமா said...

பொன்மொழி உண்மை சொல்கிறது !