Sunday, August 8, 2010

கூட்டணி வலுவிழக்கிறதா...?
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும்..தி.மு.க.விற்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலிமை சேர்க்காது..வலியையே சேர்க்கும் என்று கலைஞரும் கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூட்டணிக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரும் பேசக்கூடாது என கண்டித்தும் மீண்டும் இளங்கோவன் தி.மு.க., ஆட்சியில் தலித் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை பழிவாங்குகிறார்கள் என்று பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில் கடந்த 31ஆம் நாள் திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் அழகிரியை வைத்துக் கொண்டு ஒரு முக்கியத் தலைவர் ராஜீவைப் பற்றியும் ராகுலைப் பற்றியும் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார்.நான்கு ஆண்டுகள் பொறுமையாய் இருந்தோம்....மக்களுக்கு நீங்கள் யார் என்பதை நினைவுப் படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

காங்கிரஸ்காரர்கள் நாம் சொல்வதை ஏற்று கொள்வார்கள்.அவர்களை ஏமாற்றிவிடலாம் என நினைப்பது தவறு.பதவி இல்லாமல் இருந்தால் அவர்கள் நிலை என்ன என்பது எமர்ஜென்சி காலத்திலேயே தெரிந்தது..கரை வேட்டிகள் காணாமல் போயின.மேலே இருப்பவர்களுக்கு சலாம் போட்டுவிட்டு காங்கிரஸ்காரர்களை ஏமாற்றமுடியாது..

என்று கூறியுள்ளார்.

இளங்கோவனின் இப்பேச்சு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.தங்கபாலு எச்சரித்தும் இளங்கோவன் இப்படி பேசிருப்பதைப் பார்த்தால்..இளங்கோவனுக்கு ஆதரவு வேறு எங்கோ இருப்பது போலத் தோன்றுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வாகை முத்தழகன் என்னும் கழக பேச்சாளர் தி.மு.க.,உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ், தி.மு.க., உறவை பாதிக்கும் வகையில் கழகத்தினர் யாரும் விமரிசிக்கக்கூடாது என அன்பழகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

கத்திரிக்காய் காய்த்தால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்..

12 comments:

வானம்பாடிகள் said...

:)

கோவி.கண்ணன் said...

//.இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலிமை சேர்க்காது..வலியையே சேர்க்கும் என்று கலைஞரும் கூறியுள்ளார்.//

கிலியைச் சேர்த்துவிட்டதால் பம்மிக் கொண்டு பதில் சொ9ல்லி இருக்கிறார் கருணாநிதி

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எப்போதாவது ஒரு முறைதான் உண்மை பேச சந்தர்ப்பமும் தைரியமும் வாய்க்கும்..:))

NAGA said...

//.இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலிமை சேர்க்காது..வலியையே சேர்க்கும் என்று கலைஞரும் கூறியுள்ளார்.//
ஆட்சி பலி ஆகிவிடும் என்று கிலி அடைந்து வலி பேச்சு பேசியுள்ளார்

கே.ஆர்.பி.செந்தில் said...

:):)

சசிகுமார் said...

இது இல்லன்னா அது அது தானே காங்கிரஸ்

thamizh elango said...

E V K சம்பத் அடுத்தவன் பேச்சை கேட்டு, கட்சி ஆரம்பித்து, பகடையாக, கடைசியில் அடையாளம் இன்றி போனார்.அவரது பிள்ளை E V K S இளங்கோவனும் காங்கிரஸ் கட்சியிலேயே பகடையாக மாறி வருகிறார்.

சிநேகிதன் அக்பர் said...

எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பயன்.

என். உலகநாதன் said...

கூட்டணி நீடிக்குமா?

Karthick Chidambaram said...

:)))))))

Thamizhan said...

காங்கிரசு தமிழ்நாட்டில் குதிரைகள் மேல் சவாரி செய்வது முடியட்டும். உளறல் கோவன் போன்ற மண் குதிரைகளை நம்பி ஆற்றோடு செல்லட்டும்.குதிரையை மாற்ற நினைத்தால் இன்னும் பல அவமானங்களைச் சந்திக்கத் த்யாராகட்டும்.இக்கரைக்கு அக்கரை பச்சைத் தான்.அதுவும் நெற்றி வேர்வை என்றால் என்னவென்றே தெரியாத வாய்க்கொழுப்பிற்கு மிகவும் பசசைதான்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி