Monday, August 30, 2010

உலகத்தில் சிறந்தது எது...




பட்டிணத்தில் பூதம் என்று ஒரு திரைப்படம் வந்தது.ஜெயஷங்கர்,விஜயா,நாகேஷ் நடித்தது.அதில் கண்ணதாசனின் ஒரு பாடல்..

'உலகத்தில் சிறந்தது எது' என ஆரம்பிக்கும்..நாகேஷ்..வட்டி என்பார், விஜயா..காதல் என்பார்..ஜெய்..தாய்மை என்பார்..

உலகத்தில் சிறந்தது தாய்மை..என்பதே வெற்றி அடையும்.

சரி..விஷயத்திற்கு வருவோம்..

ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற பெண் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.கருத்தரித்து 27 வாரங்களே ஆன நிலையில்.அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண், ஒரு பெண். இரு குழந்தைகளையும் காக்க மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.பெண் குழந்தை உயிர் பிழைத்தது.ஆனால்..மருத்துவர்கள் கடைசி வரை போராடியும் ஆண் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப் பட்டது.

அதைத் தாங்கிக் கொள்ள முடியாத..அந்தத் தாய்..இறந்த குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டார்.தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன் உடலுடன் குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார்.அப்போது..குழந்தை மெதுவாக மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார்.உடன் மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட ஆரம்பித்ததைக் கூறினார்.

மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து..இங்குபேட்டரில் வைத்து..சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர்.சிறிது நேரத்தில் கண் விழித்தது குழந்தை..

அதைப் பார்த்து..ஆனந்தக்கண்ணீர் விட்ட தாயின் விரல்களை குழந்தை பிடித்துக் கொண்டது.

இறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது எது..

ஆம்..அந்த தாயின் அரவணைப்பு..

இப்போது சொல்லுங்கள்..உலகத்தில் சிறந்தது எது....

தாய்மைதானே...

10 comments:

vasu balaji said...

வாவ். க்ரேட். எப்போதோ டைஜஸ்டில் படித்த கவனம். கோமாவில் இருந்த கணவனை கருணைக் கொலை செய்ய விழையாமல், தினமும் வீட்டில் நடப்பதை காதில் சொல்லிச் சொல்லி, உயிருடன் இருப்பது போலவே பேசிப் பேசி, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு திடீரென நினைவு திரும்ப, சொன்னதெல்லம் நினைவில் இருக்க தூங்கி எழுந்தாற்போல் கொஞ்சமும் பேதமின்றி நார்மலுக்குத் திரும்பியதை. அதுவும் ஒரு வகையில் தாய்மையே. இல்லையா சார்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆம்..அதுவும் தாய்மை தான்..
அதனால் தான் 'தாய்க்குப் பின் தாரம்' என்பார்கள்
வருகைக்கு நன்றி பாலா

ரமி said...

Wow.

Is it possible to share the news link with us.

kindly share the news link.

Regards
Ramesh.P

Thamira said...

கிரேட்.

goma said...

தாயிற் சிறந்த கோவிலும் இல்லைன்னு சும்மாவா சொல்லியிருப்பாங்க.......

Vidhya Chandrasekaran said...

சூப்பர்ப்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ரமி said...
Wow.

Is it possible to share the news link with us.

kindly share the news link.

Regards
Ramesh.P//

இந்த செய்தி நேற்று தமிழ்ப் பத்திரிகைகளில் வந்த செய்தி..
வருகைக்கு நன்றி ரமேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
கிரேட். //

நன்றி ஆதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
தாயிற் சிறந்த கோவிலும் இல்லைன்னு சும்மாவா சொல்லியிருப்பாங்க.......//

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
சூப்பர்ப்..//


நன்றி வித்யா