Friday, August 27, 2010

விடுதலை (அரை பக்கக் கதை)




அந்த சிறிய அறைக்குள் ஐம்பது பேர் அடைக்கப் பட்டிருந்தனர்.

அறை திறக்கும் ஓசை..

இன்று அவர்களில் ஒருவனுக்கு விடுதலை..

அது நாமாக இருக்குமா..என ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு.

அவர்களில் இருந்து ஒருவன் வெளியே இழுத்து வரப்பட்டான்..அறை மீண்டும் மூடப்பட்டது.வெளியே வந்தவனுக்கு விடுதலை ஆகி விட்ட மகிழ்ச்சி.

ஆனால் அதற்குள்..அவன் தலை அந்த அறையின் வெளிப்பக்க சுவற்றில் வேகமாக உரசப்பட்டது.

தலை பளீரென நெருப்புப் பிடிக்க..அவனை பக்கவாட்டில் திருப்பி அருகில் இருந்த விளக்கை ஏற்றினான் அவனை விடுவித்தவன்.விடுதலை ஆனவன் தலை கருகி இறந்தான்.

அவன் நிலையை அறிந்த தீப்பெட்டிக்குள் இருந்த மற்ற தீக்குச்சிகள்..இனி நம்மில் யாருக்கும் விடுதலை வேண்டாம்..என எண்ணின.

13 comments:

பாலாஜி சங்கர் said...

இப்பல்லாம் ஐம்பது இல்லை நாற்பது தான்
நல்ல புனைவு

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல புனைவு

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமை

பிரபாகர் said...

விடுதலை... மரணத்திற்கு!

நல்லாருக்குங்கய்யா!

பிரபாகர்...

vasu balaji said...

சார்! அவ்வ்வ்வ். இது போங்கு.போட்டோவும் சேர்ந்து ஏமாத்திடிச்சி.

ஈரோடு கதிர் said...

நைஸ்

VISA said...

oooooooooooooh

பெசொவி said...

கொஞ்சம் யோசிச்சு பாத்தா இலங்கைத் தமிழர்கள் நினைவு தான் வருது :(

க.பாலாசி said...

சுத்தமா எதிர்பார்க்கல... கலக்கல் சார்...

மோகன்ஜி said...

தம் அடிக்கும் தம்பிகளே! தீப்பெட்டி எடுக்கும் போது கதைய நெனச்சிகிட்டா பாவம் தீக்குச்சின்னு,பழக்கத்தையே
விட்டுருவீங்கள்ள?

a said...

நல்லா இருக்கு சார்...

gundumama said...

ஒரு சந்தேகம் .. அவன் வெளிய வந்தவுடன் அறை சாத்தப்பட்டால் , எப்படி மற்ற தீகுசிகளுக்கு அவன் நிலை தெரிந்தது?

T.V.ராதாகிருஷ்ணன் said...

// gundumama said...
ஒரு சந்தேகம் .. அவன் வெளிய வந்தவுடன் அறை சாத்தப்பட்டால் , எப்படி மற்ற தீகுசிகளுக்கு அவன் நிலை தெரிந்தது?//


அறையில் உரசப்படும் போது ஏற்படும் வெப்பம்..
அவன் எரியும் போது..அவன் ஏற்படுத்தும் 'உஷ்' சப்தம்..ஆகியவற்றைக் கொண்டு மற்றவை ஊகித்துவிட்டதாகக் கொள்ளவும்
(இது எப்படி இருக்கு)