குடியரசு தினம்
சுதந்திர நாள்
கிரிக்கெட்
இவை மூன்று மட்டுமே
நான் இந்தியன் எனும்
நினைவை ஞாபகப்படுத்துகிறது
மாநில மொழி
வெறியர்களுக்கு
2) வியர்வை முத்து சிந்தி
விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்
பண்ணை வீட்டு பத்தாயத்தில்
3)கவர்ச்சி காட்டி நடிகை
ஆண்களின்
உள்ளாடை விளம்பரத்தில்
4) பொழுது போக
வாங்கிய தொலைக்காட்சி
தொல்லைக்காட்சியாய்
பொழுதை விழுங்கிக் கொண்டிருக்கிறது
6 comments:
எல்லாம் கலக் கொடுமை சார் ... வேறென்ன சொல்ல...
//மாநில மொழி
வெறியர்களுக்கு//
நான் இந்திய தேசத்தை என் தேசமாக சொல்வதற்கு வெக்கப்படும் ஆள்தான்.. இத்தனை கோடி மனிதவளம் உள்ள நாட்டில் இன்னும் கஞ்சிக்கு அலையும் மக்கள் இருப்பதும் ஆறாயிரம் கோடியில் அம்பானி வீடு கட்டுவதும் அசிங்கமல்லவா..?
இன்றைக்கு மொத்தம் உள்ள ஐநூறு மாவட்டங்களில் நூற்றி ஐம்பது மாவட்டங்கள் நக்சல்களின் கட்டுபாட்டில் இது எதைக் காட்டுகிறது..
அந்தந்த மாநிலத்துக்கும் சுயாட்சி உரிமை இருந்தால், அது ஓட்டு மொத்த முனேற்றத்தையும் தரும்...
இன்றைய தேதிக்கு பணக்காரன் கோடானு கோடீசுவரன் ஆகிறான ... ஏழை ஓட்டாண்டி ஆகி தெருவுக்கு வருகிறான்...
3)கவர்ச்சி காட்டி நடிகை
ஆண்களின்
உள்ளாடை விளம்பரத்தில்///
என்ன சார் நீங்க , லேடீஸ் தானே பாத்து நல்லா இருக்கான்னு சொல்லனும் , ஏன்னா , இத அவுங்க மட்டும் தான் பாக்க முடியும் (ஹி,ஹி,ஹி )
வருகைக்கு நன்றி
செந்தில்
மங்குனி அமைச்சர்
வெறும் பயல்
//வியர்வை முத்து சிந்தி
விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்
பண்ணை வீட்டு பத்தாயத்தில்//
அண்ணாவோட செவ்வாழை சிறுகதை படிச்சிட்டீங்களா?
இந்தியா என்பது ஒரு கூட்டமைப்புதான். தேசிய இனங்களின் உரிமைகள் நசுக்கப் படும்போது ஒற்றைத்தேசியப் பற்று என்பது பொருளிழந்து போகும். அதுவே உலகெங்கும் நடந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்டங்களின் அடிப்படை. வெறுமனே தட்டையாய் ஒரு பிரச்சினை அணுகுவது முறையா? இந்தக் கவிதைக்கு என் கண்டனங்கள். உலக விடுதலைப் போராட்டங்களுக்கு என் உணர்வுப்பூர்வமான வாழ்த்துக்கள்!
Post a Comment