ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, August 10, 2010
பொறுப்பற்ற ஊடகங்கள்....
ஃபோர்த் எஸ்டேட் என அழைக்கப் படும் ஊடகங்களுக்கு ..சமூக பொறுப்புணர்ச்சி அதிகம் இருக்க வேண்டும்..எந்த ஒரு செய்தியும் அச்சில் ஏறுவதற்கு முன் அதன் நம்பகத்தன்மை பற்றி உறுதி செய்து கொள்ள வேண்டும் ஊடகங்கள். அவை அளிக்கும் செய்திகள் மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும்.
இப்போதெல்லாம்..பர பரப்பான செய்திகளைத் தர வேண்டும்..என வியாபார நோக்கில்..இல்லாத செய்திகளையும்...இருக்கும் செய்தியை மிகைப்படுத்தியும் கூறி வருகின்றன பத்திரிகைகள். இவர்கள் வெளியிடும் செய்தி தவறானால்..அடுத்த நாள் பத்திரிகையில் ஒரு மூலையில் தன் வருத்தத்தை தெரிவிக்கின்றன.
தாங்கள் வெளியிட்ட தவறான செய்திகளை கொட்டை எழுத்துகளில் வெளியிடுபவர்கள்..அது தவறு என்பதையும் அதே போல வெளியிட்டால் தானே எல்லோர் பார்வைக்கும் போகும்.ஆனால் தவறை சொல்கையில்..அது யார் கண்ணிலும் படாமல் சொல்கின்றன.
இன்னும் சில பத்திரிகைகள் செய்திகளுக்கும்..அதற்கான தலைப்புகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் வெளியிடுகின்றன..இதை படிப்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ..என்பதை புரிந்து கொள்வதில்லை..அல்லது..தவறாக புரிந்து கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஒன்றை தினகரன் பத்திரிகை வெளியிட்டதைப் பாருங்கள்..
பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த
கல்வி கட்டணத்தில்
மாற்றம் இல்லை
கோவிந்தராஜன் குழு அறிவிப்பு
இதை படித்தால் என்ன எண்ணுவீர்கள்...அரசு நிர்ணயித்த கட்டணம் சரி என்ற எண்ணம் தானே ஏற்படும்..
ஆனால் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய பள்ளிகள் கேட்டுக் கொண்டுள்ளன.அவற்றை நேரில் ஆய்வு செய்து..குழு..தர நிர்ணயம் செய்வதைப் பற்றி முடிவெடுக்கும்..அதற்கு கால அவகாசம் தேவைப் படுவதால் இந்த ஆண்டு பள்ளிகளின் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயிக்காது. இதுவே செய்தி..
இதைப் புரிந்துக் கொள்ளும் வகையில் செய்தி இல்லை..
இந்த விஷயத்தில் ஓரளவு ஹிந்து பத்திரிகை சரியான தலைப்பைக் கொடுத்து செய்தியை வெளியிட்டுள்ளது.
New fee structure only from next year
several schools welcome the decision
committee to inspect schools again
தவிர்த்து..சில புலனாய்வு என சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகள் உள்ளன..இவற்றிற்கு..'தாம்' என்னும் சொல் மிகவும் உபயோகம் ஆகிறது..
எந்த ஆதாரமற்ற செய்தியை போட்டாலும்..'இருக்கிறதாம்..நடக்கிறதாம்..சொல்லப்படுகிறதாம்' என்று போட்டுவிட்டால் போதும்.செய்தியும் போட்டால் போல் ஆயிற்று..பின்னாளில் சட்டச் சிக்கிலில் இருந்தும் தப்பி விடலாம்.
(டிஸ்கி- இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்க வேண்டும் என நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது..(போதுமடா சாமி..குழப்பமோ..குழப்பம்) )
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
:(
இந்த சேனல்களில் அழிச்சாட்டியம் அதுக்கும் மேல். என்னதான் ப்ரேக்கிங் நியூசா போடறதுன்னு விவஸ்தையே கிடையாது. இதுக்கெல்லாம் ஏதுனாச்சும் கிடுக்கிpபிபடி சட்டம் கொண்டு வந்தா நல்லாருக்கும்.
ஆளும் மற்றும் எதிர் வர்கத்தினரும் அவர்களின் அடி வருடிகளும். அல்லக்கைகளும் பத்திரிக்கை ஊடகங்கள் நடத்தினால் இப்படிதான் செய்தி வரும் ..
புரியக்கூடாதுன்னு போடுற செய்திதானே. அப்புடித்தான் இருக்கும். ஃபோர்த் எல்லாம் எமர்ஜென்ஸ்யோட போய்டுத்து. இப்போல்லாம் வெறும் எஸ்டேட்தான்:)
ஆம்..உண்மைதான் வித்யா..
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி செந்தில்
வருகைக்கு நன்றி Bala
இது சூப்பர், விளங்கிடும்
ஊடகங்களின் அரசியல் சார்பு சமீபத்தில் மிக அதிகம். எனவே, செய்திகளைத் “தெளிவாக” வெளியிடுகிறார்கள்.
ஸ்ரீ....
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இது சூப்பர், விளங்கிடும்//
நன்றி SUREஷ்
//ஸ்ரீ.... said...
ஊடகங்களின் அரசியல் சார்பு சமீபத்தில் மிக அதிகம். எனவே, செய்திகளைத் “தெளிவாக” வெளியிடுகிறார்கள். //
வருகைக்கு நன்றி ஸ்ரீ....
Post a Comment