ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Thursday, August 5, 2010
தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (6-8-10)
1)தினமும் இரண்டு லிட்டராவது தண்ணீர் அருந்த வேண்டும்.அது நம் உடல் நலத்தைக் காப்பதுடன்..உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.ஊட்டச்சத்தை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்கிறது.நோய்க்கிருமிகளை அழிக்கிறது.இவை அனைத்திற்கும் மேலாக மூளையின் வளர்ச்சிக்கு குடிநீர் அவசியம்.
2)உலகில் அதிகம் விற்கப்படும் பத்திரிகை 'ரீடர்ஸ் டைஜஸ்ட்'. ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகளுக்கு மேலாக விற்பனையாகிறதாம்.
3)மாநிலங்களில் ஆட்டுக்கு தாடி போல கவர்னர்கள் இருப்பதை நாம் அறிவோம்.ஆனால் இந்த கவர்னர் அப்படியில்லை..நாட்டின் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கியின் தலைவரும் கவர்னர் என்றே அழைக்கப் படுகிறார்.இவரது பதவிக் காலம் நான்காண்டுகள்.ரூபாய் நோட்டுகளில் இவர் கையெழுத்தே இடம் பெற்றுள்ளது.
4)தன் துறை சம்பந்தபட்ட முதல் கேள்விக்கு அழகிரி தமிழில் பதில் சொல்லலாம் என்றும்..மற்ற கேள்விகளுக்கு துணைஅமைச்சர் பதிலளிக்கலாம் என சபாநாயகர் அனுமதி அளித்ததற்காகவே..நாடாளுமன்றத்தில்..தமிழில் பேச அனுமதி கிடைத்துவிட்டது என மகிழ்ச்சி அடைந்தவர்களுக்காக இச் செய்தி..
1919ஆம் ஆண்டிலேயே (13-3-1919) ஆங்கிலேயர் காலத்தில் தமிழக சட்ட மேலவையில் பி.வி.நரசிம்ம ஐயர் என்னும் உறுப்பினர்..தமிழில் பேசினாராம்.அதற்கு எதிர்ப்பு கிளம்ப ..'எந்த மொழியில் பேசவும் எனக்கு உரிமை உண்டு..அதை நிலை நாட்ட நான் தமிழ் மொழியில்தான் பேசுவேன்' என்று வாதிட்டு வெற்றி பெற்றாராம்.
5) ஒருவர் வாழ்வில் வெற்றி பெறுவதை எது தீர்மானிக்கிறது தெரியுமா? படிப்பு..செல்வம்..பரம்பரை பெருமை.நல்ல வாய்ப்பு.. இவை எதுவுமில்லை. நம் மனம் தான் நம் வெற்றியை தீர்மானிக்கிறது.
6) ஒரே ஆண்டில் மூன்று பிரதமரைப் பார்த்த நாடு நம் இந்தியா..1996ல் நரசிம்ம ராவ்,வாஜ்பாய்,தேவகௌடா ஆகியோர் அவர்கள்.
7) ஊழலை ஒழிக்க ஆதரவை நாம் தரத்தயார்..அதே போன்று போலி சான்றிதழுக்கும் கண்டனத்தை தெரிவிப்போம்.
8) இந்த வாரம்..நான் படித்த வரையில் எனக்குப் பிடித்த இடுகை கே.ஆர்.பி.செந்திலின் இந்த இடுகை..தமிழா தமிழா வின் இவ்வார மகுட இடுகை இதுவே
9) உயர்ந்த சாதி
தாழ்ந்த சாதி
பேசியவர்களின் உடல்கள்
ஒன்றாய்
பிணவறையில்
10) கொசுறு ஜோக்..
நிருபர்- இந்த படத்தில் நீங்க ரொம்ப கவர்ச்சியா நடிச்சிருக்கீங்களே..ஏன்?
நடிகை- அடுத்த படத்திலிருந்து சம்பளத்தை உயர்த்தத்தான்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி ஐயா..
//ஒருவர் வாழ்வில் வெற்றி பெறுவதை எது தீர்மானிக்கிறது தெரியுமா? படிப்பு..செல்வம்..பரம்பரை பெருமை.நல்ல வாய்ப்பு.. இவை எதுவுமில்லை. நம் மனம் தான் நம் வெற்றியை தீர்மானிக்கிறது.//
நிதர்சனம்...
ஆஹா! செண்ட்ரல் ஸ்டேஷன்ல விக்கற சுண்டல் மாதிரி கொசுறு போடாமலே இருக்கிறத விரல்ல அழுத்தின கணக்கா நான்கோட தொடர்ச்சிய ஐந்தாக்கிட்டீங்களா சார்:))
மாற்றியாகிவிட்டது..நன்றி பாலா
வருகைக்கு நன்றி செந்தில்
//1919ஆம் ஆண்டிலேயே (13-3-1919) ஆங்கிலேயர் காலத்தில் தமிழக சட்ட மேலவையில் பி.வி.நரசிம்ம ஐயர் என்னும் உறுப்பினர்..தமிழில் பேசினாராம்•//
நல்ல செய்தி பகிர்வு அய்யா... நன்றிகள்....
நம் மனம் தான் நம் வெற்றியை தீர்மானிக்கிறது.
உண்மைதான்
வருகைக்கு நன்றி
ஹேமா
க.பாலாசி
Post a Comment