ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, August 15, 2010
மருத்துவர்களின் திறமையும்..பொது மருத்துவமனைகளும்..
சூபர் பக்..கடந்த சில நாட்களாக இது பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம்..இது இந்தியாவில் இருந்து பரவுவதாகவும்..ஆகவே இதற்கு நியூடெல்லி-1 (NDM 1) என்று லண்டனில் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..
இந்திய மருத்துவத்துறையின் வளர்ச்சி கண்டு பொறுக்காமல்..இப்படி செய்திகள் கிளம்புவதாகவும்கூட சொல்கிறார்கள்.
உண்மைதான்..
சமீபத்தில் கூட..அமெரிக்கர் ஒருவர் இதயமாற்று சிகிச்சைக்கு இந்தியா வந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
சாதாரணமாக..சூபர் பக் என்பது..நாம் வீரியமுள்ள ஆன்டிபயாடிக் மருந்தை அடிக்கடி ஏதேனும் உடல் நலக்குறைவிற்கு உபயோகப் படுத்துவோமாயின்..அந்தநோயை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அந்த மாத்திரையின் வீரியத்திற்கு பழக்கப்பட்டு விடுவதால்...அடுத்த முறை நாம் குணமடைய அதனெனினும் வீரிய மருந்தை உட் கொள்ள வேண்டியுள்ளது.இதுவே சூபர் பக் உருவாவதன் ஆரம்பமாய் அமைகிறது.ஆகவே இனி மருந்து கடைகளில் எல்லா மருந்துகளுக்கும் டாக்டர் பிரஸ்கிரிப்ஷன் தேவை என்று கொண்டு வரலாமா என யோசித்து வருகின்றனர்.
சரி..தலைப்பிற்கு வருவோம்...
இந்திய மருத்துவம்..உலக தரத்திற்கே உள்ளது.ஆனால் அதே சமயம்..நம்மில் கூட சிலர்..தனியார் மருத்துவமனைக்கு நிகராக பொது மருத்துவ மனை இல்லை என எண்ணுகிறோம்.அது தவறு.இன்னும் சொல்லப் போனால்..பொது மருத்துவமனைகளில் தனியாரில் இல்லா..பல அதி நவீன மருத்துவக் கருவிகள் உள்ளன.
இன்று செய்தித்தாளில் வந்துள்ள சென்னை அரசு பொது மருத்துவமனையின் சாதனையைப் பாருங்கள்..
ஆந்திராவைச் சேர்ந்த +2 மாணவி ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன் ஆசிட் குடித்துவிட்டார்..இதனால் இரப்பை,உணவுக்குழாய் ஆகியவை அழுகிவிட்டன.ஆந்திராவில்..தனியார் மருத்துவ மனைகளில் நான்கு முறை அறுவைசிகிச்சை செய்தும் பலனில்லை.
இந்நிலையில்..அவர் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இரப்பை,குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் சந்திர மோகன் தலைமையில்..மருத்துவ குழுவினர் கலாவிற்கு அறுவைசிகிச்சை மூலம் பெருங்குடலின் ஒரு பகுதியை எடுத்து இரப்பை,உணவுக்குழாயிற்கு பதிலாக பொருத்தினர்.அவருக்கு சுமார் ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.அவர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார்.எந்த பிரச்னையும் இன்றி உணவு அருந்துகிறார்.
இந்திய மருத்துவர்களின் திறமையை எந்நிலையிலும், யாராலும் குறைக்க முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
ம்..
அப்படியே தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒரு சட்டம் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.
உண்மை சார். இன்பேஷண்ட் ட்ரீட்மெண்டுக்கு ஜி.எச். மாதிரி வராது.
///இந்திய மருத்துவர்களின் திறமையை எந்நிலையிலும், யாராலும் குறைக்க முடியாது. ///
.....அவர்களின் திறமைகளை யாரும் குறை கூறுவதில்லை. மருத்துவமனைகளின் வியாபார போக்குதான் சர்ச்சைகளுக்கு வந்துள்ளன.
சபாஷ்!!
உங்கள் கருத்துக்கு நன்றிங்க! ஆயிரம் அறுவை சிகிக்கை நன்கு செய்த மருத்துவருக்கு எதிர்பாரா விதமாக மருத்துவர்மேல் குறை இல்லாவிடினும், அபாய னிலையில் உள்ள ஒருவருக்கு செய்யும் அறுவை பலனளிக்காமல் இறந்துவிட்டாலும், மருத்துவர் தண்டிக்கப் படுகிறார். இது இன்னும் அவசர சிகிச்சை செய்ய முன் வரும் மருத்துவர்களின் ஆர்வத்தைக் குறைக்கிறது.
மிக்க நன்றி..புரிதலுக்கு..
வருகைக்கு நன்றி வித்யா
//வானம்பாடிகள் said...
உண்மை சார். இன்பேஷண்ட் ட்ரீட்மெண்டுக்கு ஜி.எச். மாதிரி வராது.//
உண்மை..ஆனால் பெரும்பான்மையினருக்கு அது தெரியவில்லை
வருகைக்கு நன்றி பாலா
//.....அவர்களின் திறமைகளை யாரும் குறை கூறுவதில்லை. மருத்துவமனைகளின் வியாபார போக்குதான் சர்ச்சைகளுக்கு வந்துள்ளன.//
நீங்கள் சொல்லும் பிரச்னை தனியார் மருத்துவ மனைகளில்தான்..
ஆனாலும்..உலக நாடுகளில் குறைந்த செலவில்..நிறைந்த வைத்தியம் இந்தியாவில் என்பது ஊரறிந்த உண்மை
வருகைக்கு நன்றி சித்ரா
//"உழவன்" "Uzhavan" said...
சபாஷ்!!//
:)))
//தேவன் மாயம் said...
உங்கள் கருத்துக்கு நன்றிங்க! ஆயிரம் அறுவை சிகிக்கை நன்கு செய்த மருத்துவருக்கு எதிர்பாரா விதமாக மருத்துவர்மேல் குறை இல்லாவிடினும், அபாய னிலையில் உள்ள ஒருவருக்கு செய்யும் அறுவை பலனளிக்காமல் இறந்துவிட்டாலும், மருத்துவர் தண்டிக்கப் படுகிறார். இது இன்னும் அவசர சிகிச்சை செய்ய முன் வரும் மருத்துவர்களின் ஆர்வத்தைக் குறைக்கிறது.//
நீங்கள் சொல்லும் பிரச்னை பெரும்பாலும் கல்வியறிவு குறைந்தவர்களிடமும்..அரசியல்வாதிகளாலும் தான்..
மேலும்..ஒரு சில மருத்துவர்கள் தொழிலில் மெத்தனம் காட்டுவதை ஒப்புக் கொள்ளவே வேண்டியிருக்கிறது ..ஒரு வருத்தமான செய்திதான்
//Dr.ராம் said...
மிக்க நன்றி..புரிதலுக்கு..//
நன்றி Dr.
பொது மருத்துவமனைகளில் தனியாரில் இல்லா..பல அதி நவீன மருத்துவக் கருவிகள் உள்ளன.
///
எல்லாவற்றையும் சரியாக பராமரிக்காமல் பாலாக்கி விடுகின்றனர் . அது தான் மிகப் பெரிய குறை .
உண்மை சார். இன்பேஷண்ட் ட்ரீட்மெண்டுக்கு ஜி.எச். மாதிரி வராது//
உண்மைதான் வானம் பாடி சொன்னது கரெக்ட்..
வருகைக்கு நன்றி மங்குனி
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
உண்மை சார். இன்பேஷண்ட் ட்ரீட்மெண்டுக்கு ஜி.எச். மாதிரி வராது//
உண்மைதான் வானம் பாடி சொன்னது கரெக்ட்.//.
வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்
Post a Comment