Wednesday, January 19, 2011

கோழைகள் (கவிதை)

காதலித்தான்
காதலித்தாள்
மணமுடித்தான்
ஒருமுழ கயிற்றை
மூன்று முடிச்சுடன்
கழுத்தில் கட்டி
வேறோருத்தியை.
கோழை
இவள் தழுவினாள்..
மூன்று முழக் கயிற்றையும்
ஒரு முடிச்சையும்
நன்றிகெட்ட
நம்பிக்கைத் துரோகிக்காக!!

12 comments:

அன்புடன் நான் said...

இது காமத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட காதலா இருக்கும்.... ஆனா அவள் அவன சட்டையை பிடிச்சிருக்கணும்.

சக்தி கல்வி மையம் said...

இதற்கு பெயர் காதலே இல்லை.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/2010-2011.html

Chitra said...

காதல் என்ற பெயரில் துரோகம்.

ராமலக்ஷ்மி said...

கோழை. சரியாகச் சொன்னீர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி சி. கருணாகரசு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Sakthistudycentre

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி

ஹேமா said...

இப்படியும் சில காதல் கருமாதியில் !

உங்கள் ”மீன்” கவிதை
உயிரோசையில் வாசித்தேன்.வாழ்த்துகள் ஐயா !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
இப்படியும் சில காதல் கருமாதியில் !

உங்கள் ”மீன்” கவிதை
உயிரோசையில் வாசித்தேன்.வாழ்த்துகள் ஐயா !//



உங்க கவிதையும் 'சொல்லா சாபமா' படித்தேன் உயிரோசையில்.வாழ்த்துகள்

goma said...

எந்த ஒரு கஷ்டமும் ,இறைவன் நமக்கு தராத வரை ,
நாமும் வீரர்கள்தான்.

மூன்றுமுழக்கயிறு ஒரு முடிச்சுக்கு வரும் முடிவு ,கண நேரத்தில் உருவானது.அவராலும் தவிர்க்க முடியாத முடிவு,யாராலும் தடுக்க இயலாத விதி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி goma