Thursday, January 27, 2011

இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லை - நாஞ்சில் நாடன்





சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்தார்..

மிகவும் சுவாரஸ்யமான அந்தப் பேட்டி குறித்து ஒன்றிரண்டு இடுகைகள் இடலாம் என்று எண்ணம்.

சமிப காலங்களில்..எதற்கும் பயப்படாமல்..தன் மனதில் உள்ளதை பளீரென பதிலாக அளித்த எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும்..அதற்கு அவரது பதிலும்..

கேள்வி- இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே

பதில்-உண்மைதான்.தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம்.ஆனால் இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட'பார்ப்பதற்கு செலவழிக்கும் மணித்துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள்.ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு இன்று எந்தத் தேசியத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள்.நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?

இன்று ஸ்பெக்ட்ரமில் 1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம்.ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம்.உணர்ச்சி வசப்படுவதும் போராடுவதும் தான் இளைய தலைமுறையின் இயல்பே.ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப் போல இருக்கிறான் இளைஞன்.
எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்த்க் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை..

நாஞ்சில் நாடனின் இந்த் பதிலில் உண்மையில்லாமல் இல்லை.இது குறித்து பதிவர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்டமாகவோ..அல்லது தங்கள் வலைப்பூவில் தனி இடுகையாகவோ இடலாம்.

சினிமா மட்டுமே தமிழ் காலாசாரத்துக்கு அபாயமானதா? என்ற கேள்விக்கு அவர் பதில் அடுத்த இடுகையில்..

6 comments:

Chitra said...

This reflects the apathy of today's society. :-(

ஜீவன்சிவம் said...

எந்த சந்தேகமும் இல்லாமல் சினிமா மட்டுமே ஒட்டுமொத்தத்த தமிழ் சமுதாயத்தின் எல்லா சீர்கேடுகளுக்கும் காரணம் என்பது என் கருத்து

Unknown said...

ஒருவிதத்தில் மாணவர்களும் இளைஞர்களும் அரசியலில் ஒதுங்கி இருப்பது நல்லதுதான். எதெற்கும் உணர்ச்சிவசப்படும் அவர்களை ஏதாவது தப்பான விஷயத்துக்கு நமது இன்றைய நவீன அரசியல்வாதிகள் உசுப்பேற்றிவிட்டு குளிர் காய்வார்கள். இந்தி போராட்டம் போலே பல மாணவர்கள் மடிந்த ரத்தத்தில் இன்றைய முதல்வர் போல். எது எப்படி இருந்தாலும் நமது சினிமா ஒரு பெரும் சாபக் கேடே. நெஞ்சு பொறுக்குதில்லயே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

bsatheeshme said...

arasiyal unarvodu.... ravdikal irukkirarkale....athu pothaatha...


kurippu: inraiya ravdikal munnal (velai illatha) maanavarkal thaan....

Thenammai Lakshmanan said...

உண்மைதான் டி வி ஆர்.. ஓட்டுப் போடாத ஒரு சமூகமே உருவாகிக்கிட்டு இருக்கு..

raja said...

சமுகத்தை விமர்சனம் செய்யும் போது நம்மை நாமே (அ) நம் குடும்பத்து பிள்ளைகளையும் சேர்த்து யோசிக்கவேண்டும். குறைந்த பட்சம் உங்களுடைய கல் எந்த அநீதியை நோக்கிவீசப்பட்டது.. என்று யோசிக்கவேண்டும்.. மத்திய அரசு நம்மக்களை கொன்ற ஒருவனிடம் சேர்ந்து குடியரசுத்தலைவர் மாளிகையில் ஒயின் அருந்திய காட்சியை நீங்கள் யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். இந்தியாவின் வேறு மாநிலத்தவரை இப்படிகொன்றுகுவித்து விட்டு ஒருவன் வந்து ஒயின் சாப்பிடமுடியுமா என்று யோசித்து பாருங்கள். ஆனால் அந்த குடியரசுத்தலைவரிடம் தான் எழுத்தாளர் சாகித்ய அகாடமி வாங்கப்போகிறார். அந்த மத்தியரசு கொடுத்த விருதுக்குத்தான் தமிழர்கள் அத்தனை பேரும் பெருமையடைகிறோம். இளைஞர்களை வசைப்பாட உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது....?