Monday, January 17, 2011

தி.மு.க., காங்கிரஸ் வெற்றி கூட்டணியா?

வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில்..பா.ம.க., இவர்களுடன் இணையலாம்.விடுதலை சிறுத்தைகள் இணையும்.அப்போது இக்கூட்டணி வலுவானதாக இருக்குமா?

அல்லது..

அ.தி.மு.க., ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட்கள்,விஜய்காந்த்,சீமான் இவர்கள் இணைந்த கூட்டணி வலுவானதா..

பாரதீய ஜனதா கட்சி வலுவானதா..

என்று பார்த்தோமானால்.

தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ்,இரு கம்யூனிஸ்ட்கள் இணைந்த 2006 தேர்தல் கூட்டணி 162 இடங்களில் வெற்றி பெற்றது .இவர்களுக்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 44.5%

அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை இவர்களுக்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 39.8 % ஆனால் முடிவுகள் என்று பார்த்தால் தி.மு.க., கூட்டணிக்கு 162 இடங்கள் கிடைத்தன.

அ.தி.மு.க., கூட்டணிக்கு 68 இடங்கள்.

தனித்து போட்டியிட்ட டி.எம்.டி,கே., ஒரு இடம்.

உண்மையில் விஜய்காந்த் கட்சிக்கான தமிழ் நாடு முழுதும் ஆன ஆதரவு 8.32 சதவிகிதம் இதுவே சரி.

மற்றவை..அந்தந்தக் கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் கிடைத்த சதவிகிதத்தை வைத்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.இது சரியாய் இருக்குமா எனத் தெரியவில்லை.

இந்நிலையில்..வரும் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் அதி.மு.க., கூட்டணிக்கு வந்துள்ளன.வி.சி.கே., தி.மு.க. கூட்டணி.

தனிப்பட்ட கட்சி ஆதரவு எனப் பார்த்தால்..தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், விஜய்காந்தும் மட்டுமே அவர்கள் வாக்கு வங்கியை சரியாக வைத்திருப்பார்கள்.

சென்ற தேர்தலின் படிப் பார்த்தால்..

அ.தி.மு.க.,32.5 +கம்யூனிஸ்ட்3.27+ ம.தி.மு.க. 5.97+விஜ்யகாந்த் 8.38..இவர்களின் ஓட்டு சதவிகிதம் 50.12%

தி.மு.க., 26.4+பா.ம.க.5..58+காங்கிரஸ்8.38 மொத்தம் 40.36%

தவிர்த்து சீமான் அ.தி.மு..க.விற்கும், திருமாவளவன் தி.மு.க., விற்கும் எவ்வளவு வாக்குகள் கொண்டுவருவார்கள் என தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகியவை ஆளும் கூட்டணிக்கான வாக்குகளில் சில சதவிகிதங்கள் குறைக்கக் கூடும்.

(மேலும் சென்ற தேர்தலில் தி.மு.க., அதி.மு.க., கட்சிகள் தோற்ற இடத்தில் ..அவைகள் தோல்வியுற்ற வாக்குகளைவிட விஜய்காந்த் 63 தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்)

இன்றைய நிலையில் எதிர்க்கட்சிக் கூட்டணியே சற்று பலம் வாய்ந்ததாகத் தெரிகிறது.போகப் போக நிலைமை மாறலாம்.

ஜெ ., பி.ஜே.பி., ஐயையும் தன் கூட்டணியில் கொண்டு வந்தால் சில சதவிகித வாக்குகள் கூடக் கூடும்.

ஆனால்..ஒன்று மட்டும் நிச்சயம்..இந்தத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை எந்த திராவிடக் கட்சிக்கும் கிடைக்காது என உறுதியாய் சொல்லலாம்.

15 comments:

Chitra said...

இலவச திட்டம் எல்லாம் பலன் தராதா? அவ்வ்வ்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஏற்கனவே பெற்றுவுட்ட இலவசத்தை விட பெறப்போகும் இலவசம் பற்றி எண்ணுவதே மக்கள் இயல்பு

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

நல்ல பகிர்வு திரு. T.V.R சார். ஆனால் இதே தலைப்பில் என்னுடைய பதிவு ஒன்று 15.01.2011 பொங்கல் அன்று தமிழ்மணத்திலும் இணைக்கப் பட்டது. ஆனால் அது வேறொரு கோணத்தில் இதே பிரச்சினையை அலசிய பதிவாகும். நேரமிருந்தால் அதை கீழே உள்ள லிங்க் இல் படித்து தங்கள் கருத்தை பகிரவும்.

CS. Mohan Kumar said...

காங்கிரஸ்க்கு தனியா சட்ட சபை தேர்தலில் பெரிய ஓட்டு வங்கி இல்ல சார். MP தேர்தலில் மட்டும் ஓரளவு விழும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கொக்கரகோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மோகன் குமார்

ரவி said...

திமுக கூட்டணி 130 சீட்
அதிமுக கூட்டணி 100 சீட்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ரவி..
அடுத்து எந்தக் கட்சியாயினும்..கூட்டணி ஆட்சியாய்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது

Unknown said...

வரும் தேர்தலில் பணம் அதிகம் விளாயாடும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

முதலில் யார்யார் யாருடன் என முடிவாக அறிவித்த பின் வாய்ஸ் யாருக்கு கொடுக்கப்படுகிறது என பார்த்து பிறகு பார்க்கலாமே .

nandhavanam said...

உங்கள் கணிப்புகள் தவறென்றே நினைக்கிறேன். டி எம் டி கே ஓட்டுகள் ஆரம்பத்தில் 13 % லிருந்து படி படியாக குறைந்து சென்ற தேர்தலில் 8 % அளவிற்கு குறைந்து உள்ளது தற்பொழுது 5 % அளவிற்கு கீழே செல்ல வாய்ப்பும் உள்ளது. இதை மறுப்பதற்கில்லை, இதை தவிர அரசின் இலவசங்கலுக்கு எதிருப்பு இருந்தாலும், அதை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது, (ஊதாரனதிர்க்கு பொங்கல் பை), பொதுவாக தம்ழ்ளர்கள் உண்ட வீடிற்கு துரோகம் செய்வதில்லை. ....................இப்படி யாருமே யோசிப்பதில்லை.............................. என் அறிவிற்கு எட்டிய வரை டி எம் கே கூட்டணியே தற்பொழுதும் முன்னணி வகிக்கிறது..................... சென்ற முறை ஈழ போர் நடக்கும் பொழுதே டி எம் கே கூட்டணியே வெற்றி பெற்றது நமக்கு நினைவுக்கு வருகிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி nandhavanam