Tuesday, January 11, 2011

லீனா மணிமேகலை படத்திற்குத் தடை..?!


இந்தப் படம் முழுக்க முழுக்க உண்மையே..கற்பனை யில்லை என தைரியமாக அறிவித்துவிட்டு..வெளியிட தயாராய் உள்ள ஈழ யுத்தத்தையும்,தமிழக மீனவர் பிரச்னைகளையும் விளக்க முயலும் லீனா மணிமேகலை உருவாக்கியுள்ள 'செங்கடல்' என்ற படத்திற்கு சென்னை சென்சார் குழு தடை விதித்துள்ளது.
ஒருகரையில் ரத்தம் வடிக்கும் தமிழன்,மறு கரையில் தன் இனம் படும் அவதி எண்ணி கண்ணீர் வடிக்கும் தமிழக தமிழன், இடையில் மீன் பிடிக்கச் சென்று உயிர் விடும் தமிழக மீனவர்கள் இவர்கள் அவலங்களை அப்படியே வைத்து படம் தயாராகியுள்ளதாம்.
இப்படத்தில் விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு..அப்பாவி தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்த சிங்கள அரசை விமரிசிக்கும் வசனங்கள் உள்ளதாம்.
தில்லி நடுவர் தீர்ப்பாயத்திற்கு அனுமதி கோரி லீனா போகப் போகிறாராம்.

டிஸ்கி-அனுமதி படத்தில் எந்தக் காட்சி நீக்கமும் இல்லாமல் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் ஜூன் மாத வாக்கில் தான் படம் வெளிவரும் நிலை ஏற்படும் என பட்சி சொல்லுது

2 comments:

ஹேமா said...

தர்மம் நின்று கொல்லும்.கொல்லும் காலத்தில் எல்லாமே வீன்தான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
தர்மம் நின்று கொல்லும்.கொல்லும் காலத்தில் எல்லாமே வீன்தான் !//

உண்மை ஹேமா..
தேவைப்படுகையில் கிடைக்காதது பின் எப்போது கிடைத்தால் என்ன