Wednesday, March 9, 2011

தேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் என்ன சொல்லும்..





தமிழகத்தில் அடித்துப் பிடித்து.. மறைமுகமாக மிரட்டியோ..எப்படியோ செய்து கேட்ட 63 தொகுதிகளை தி.மு.க., விடம் இருந்து வாங்கிவிட்டது காங்கிரஸ்.

இதை தி.மு.க., முன்னரே தந்திருக்கலாம்..ஏனோ தெரியவில்லை..மத்திய அரசிலிருந்து அமைச்சர்கள் ராஜிநாமா...பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு என்றெல்லாம் பேசப்பட்டது.

பூம்புகார் படத்திற்கு வசனம் எழுதிய கலைஞரும்..கண்ணகியாய் மாறி அரசி சோனியாவிடம்..நீங்கள் செய்தது நியாயமா..நேர்மையா..அழகா..தர்மமா என நீதி கேட்டார்.

தவறை சிலப்பதிகாரத்தில் உணர்ந்தான் மன்னன்.

ஆனால் சோனியாவோ பிடித்த பிடியை விட வில்லை..

கண்ணகியாய் மாறிய கலைஞர்..திடீரென தருமியாய் மாறினார்..நீங்கள் கேட்டதைக் கொடுத்துவிடுகிறோம்..கூட்டணியை விட்டு ஓட வேண்டாம் என வேண்டினார்.

நமட்டுச் சிரிப்புடன் காங்கிரஸும் ..மூன்று நாட்கள் அவதிப் படவைத்து , தான் கேட்ட 63 இடங்களைப் பெற்றது.ஆனால் கலைஞர் என்னும் ராஜதந்திரி..சாணக்கியர் மனதிற்குள் சிரித்திருப்பார்.

அவர் நினைத்தது நடந்துவிட்டது.

இனி..தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.,வும் சேர்ந்து பணி புரிந்தாலே அவர்களால் வெற்றி பெற முடியும்..

இவ்வளவு ஆர்பாட்டங்கள் செய்த காங்கிரஸிற்கு தி.மு.க.,வின் உண்மையான தொண்டன் களம் இறங்கி உழைத்து வெற்றி பெற்றுத் தருவானா? சிறிது சந்தேகம் தான்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில்..தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் மண்ணைக் கவ்வியதற்கு..தி.மு.க., சரியாக உழைக்கவில்லை என்று புகார் சொன்னது நினைவிற்கு வருகிறது.

ஆகவே..தேர்தல் முடிவகள் வந்தபின் ..தி.மு.க., வினர் சரியாக ஆதரவு தராததாலேயே தோற்றோம் என காங்கிரஸ் சொல்லும்..

அதை எப்போதும் போல தி.மு.க., மறுக்கும்.

காங்கிரஸ் தனது கெடுபிடியின் மூலம் தன் தலையில் தானே மணலை வாரி போட்டுக் கொள்ளப் போவது என்னவோ உண்மையாகப் போகிறது.



8 comments:

goma said...

எல்லோருமே ஒருவர் ஊழலை ஒருவர் மறைக்க ,திரையாக ,தடுப்பாக,நிற்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது.
இப்படித்தான்
ஜனநாயகம் ஆட்சி செய்கிறது என்பதும் புரிகிறது.

bandhu said...

தமிழக தேர்தலில் ஜெயிக்காவிட்டால் காங்கிரஸ்ஸிற்கு பெரிய நஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் தி மு கா விற்கு அப்படி இல்லை. மேலும், இந்த மாதிரி உள்ளடி வேலையினால் காங்கிரஸ் தோற்றால், இருக்கவே இருக்கிறது CBI தி மு க மீது ஏவ. எப்படியும் தி மு க வின் குடுமி காங்கிரஸ் கையில்!

சக்தி கல்வி மையம் said...

எல்லாம் அரசியல் தலைவா..

Thenammai Lakshmanan said...

பகிர்வுக்கு நன்றி டி வி ஆர்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி bandhu

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கருன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
தேனம்மை லெக்ஷ்மணன்