Friday, February 12, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (12-2-10)

1) அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? என அவரிடம் கேட்கப்பட்டது..அதற்கு அவர் 'அடுத்த வீடுகளில் ஒழுக்கமில்லாத பெண்கள் குடியிருந்தால்..நம்ம வீட்டிலும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை' என்றார்.அவர் சின்ன அண்ணாமலை

2)68 வகை சாப்பாடு..25 வகை ஊறுகாய்..17 வகை பாயசம்..15 வகை அப்பளம்..இனிப்பு அல்வா விலிருந்து ஜாங்கிரி வரை..இவ்வளவும் ஒரு திருமண வீட்டு கல்யாண சாப்பாடு.கல்யாணம் முடிந்ததும்..எந்தெந்த சாப்பாடுக் கூடத்தில் என்னென்ன உணவு என்பதற்கு பட்டியலுடன் ஒரு மேப்பே கொடுக்கப் பட்டதாம்.
அந்தத் திருமணம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்களின் இல்ல வீட்டு திருமணம்.
அது சரி பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான்.

3)தண்ணீர் எந்த அளவு குளத்தில் உள்ளதோ..அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் அவ்வளவே இருக்கும்.அதுபோல மனிதனின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

4) எத்தனை லட்ச ரூபாய் கார் நம்மிடமிருந்தாலும்..உற்பத்தி செய்ய முடியாத இறைவன் அளித்துள்ள காற்று இல்லையேல் கார் ஓடாது..என்னதான் புத்தி ஓங்கி நின்றாலும்..விதி துணை இல்லாமல் வீதி கூட ஏற்றுக்கொள்ளாது. - கண்ணதாசன்

5) நமது புராணக்கதைகள் நையாண்டி செய்யப்படுகின்றன.இவை கற்பனைக் கதைகள் தான்.கற்பனை என்பதே புளுகு தானே..ஆனால் மோசடி இல்லையே..அந்த புரிதலோடு படித்தால் புராணக்கதைகளும் சுவையாக இருக்கும்.

6)கொசுறு ஒரு ஜோக்

ஓட்டலில் உணவு அருந்துக் கொண்டிருப்பவர்..சாம்பாரில் ஒரு பல்லி இருப்பதைப் பார்த்துவிட்டு..அதைக் காட்டி கோபத்துடன்..- இந்தாப்பா சர்வர் இதுக்கு என்ன அர்த்தம்..?

சர்வர்- பல்லி விழும் பலன் எல்லாம் எனக்குத் தெரியாது சார்

20 comments:

தண்டோரா ...... said...

இன்னும் ஒரு 3 பாயிண்ட் போட்டிருந்தால் நவராத்திரி சுண்டல் சாப்பிட்டா மாதிரி இருந்திருக்கும்.

venkat said...

//அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? என அவரிடம் கேட்கப்பட்டது..அதற்கு அவர் 'அடுத்த வீடுகளில் ஒழுக்கமில்லாத பெண்கள் குடியிருந்தால்..நம்ம வீட்டிலும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை' என்றார்.அவர் சின்ன அண்ணாமலை\\

அருமை

மாதேவி said...

"வாழ்க்கையின் உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே" நல்ல கருத்து.

D.R.Ashok said...

//68 வகை சாப்பாடு..25 வகை ஊறுகாய்..17 வகை பாயசம்..15 வகை அப்பளம்..இனிப்பு அல்வா விலிருந்து ஜாங்கிரி வரை//

Jackie sekar TCS Backgroundla எடுத்த புகைப்படம் ஞாபகத்துக்கு வருது.

க.பாலாசி said...

//அந்த புரிதலோடு படித்தால் புராணக்கதைகளும் சுவையாக இருக்கும்//

மிகச்சரி....

அருமை...

நிகழ்காலத்தில்... said...

நல்லதொரு பகிர்வு

வாழ்த்துகள் நண்பரே

கண்ணகி said...

பல்சஉவைச்சுண்டல்...

அக்பர் said...

சுவை அருமை சார்.

கமலேஷ் said...

சுவையோடு இருக்கிறது...வாழ்த்துக்கள்....

V.A.S.SANGAR said...

சா இன்னுமொரு பார்சல் போடுங்க

வானம்பாடிகள் said...

கடைசி லொள்ளு அநியாயம்:))

Imayavaramban said...

அருமை...

Anonymous said...

கடைசி ஜோக் - பயமா இருக்கு :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி

தண்டோரா
venkat
மாதேவி
D.R.Ashok
க.பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
நிகழ்காலத்தில்...
கண்ணகி
அக்பர்
கமலேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
V.A.S.SANGAR
வானம்பாடிகள்
Imayavaramban
சின்ன அம்மிணி

வழிப்போக்கன் said...

ரசமான பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வழிப்போக்கன்

இய‌ற்கை said...

nalla irukku:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Raji