Monday, February 8, 2010

'தல' நீ தான் அசல் (விமரிசனம் அல்ல)


கூட்டத்தில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால்..அதுவும் தலைவர்கள் நிரம்பியுள்ள கூட்டத்தில் பேசும் சந்தர்ப்பம் வந்தால்...தலைவரை ஆகா..ஒஹோ..என புகழ்ந்து தலைவரின் இதயத்தில் இடம் பிடிக்க நினைக்கும் காக்கைகள் கூட்டத்தின் நடுவே சில குயில்களும்..தன் பாணியில் கூவும்..அப்படி ஒரு குயிலின் கூவல் கேட்டது சனியன்று நடந்த முதல்வருக்கு பாராட்டு விழாவில் . அந்தக் குயில் 'தல'யுடையது.

இதற்குமுன் நடந்தவை என்ன....

விழா நடப்பதற்கு சில நாட்கள் முன் ..நிகழ்ச்சிக்கு வராத நடிக..நடிகையர்க்கு ரெட் கார்ட் போடப்படும் என சிலர் பேட்டி கொடுக்க..கலைஞர்கள் நடுவே..இது பெரிய பாதிப்பை உண்டாக்கியதாம்.நடிகர்கள் சங்க நிர்வாகிகளும் வருத்தப் பட்டனராம்.சங்கமே அப்செட் ஆனது தெரிந்த விழா அமைப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துவிட்டு..நிகழ்ச்சிக்கு அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் கேட்டுக் கிட்டாங்களாம்.

சினிமா நிகழ்ச்சிகள்லே கலந்துக்காத அஜீத் திற்கும் மிரட்டல் போயிற்றாம்.இதை அஜீத், கலைஞர்பாராட்டு விழா அன்று மேடையில் பேசியதும்,. மேடையில் இருந்த ரஜினியே எழுந்து நின்று கை தட்டினாராம்.

அஜீத் பேச்சின் சுருக்கம்...

அறுபது வருடத்திற்கும் மேலாக..தமிழ் மக்களுக்கும்..தமிழ் நாட்டிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவரை பாராட்ட வந்திருக்கிறேன்.தமிழர்கள் பொங்கலன்று சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது போல..இந்த சூரியனுக்கு நன்ன்றி தெரிவிக்கிறேன்..சினிமா உலகிற்கு நிறைய சலுகைகள் செய்துள்ளீர்கள்.

சமிப காலங்களாக சினிமா துறையினர் மீது கோபம் இருக்கிறது.தேவையில்லா விஷயங்களில் அவர்கள் தலையிடுவதால்..சென்சிடிவ்வான விஷயங்களில் அவர்கள் தலையிட வேண்டாம் என சொல்லுங்கள்.இங்கிருக்கிற சிலர் கட்டாயப்படுத்தி எங்களை அழைக்கின்றனர்.நாங்களும் வருகிறோம்.எங்களுக்கு அரசியல் வேண்டாம்.காவிரியில் தண்ணீர் விடவில்லையெனில் நீங்கள் இருக்கிறீர்கள்.பார்த்துக் கொள்ளுங்கள்.நாங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது.ஒரு பக்கம் எங்களை அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள்.வந்தால் மிரட்டுகிறார்கள்.நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

கலைஞர் பேசுகையில்..அஜீத் பெயரைக் குறிப்பிடாமல்..இது பற்றி பேசுகையில்..

நாம் கலைக்குடும்பம் என்ற வகையில் சேர்ந்திருக்கிறோம்..இதில் அரசியலை நுழைக்க விரும்பவில்லை.தானாக நுழைந்தால் நான் பொறுப்பல்ல.இந்த துறையில் அரசியலை நுழைத்து கெடுத்து விடாதீர்கள்.அரசியல் நுழைந்து ஆமை புகுந்த வீடாய் திரைப்படத் துறை ஆகிவிடக் கூடாது.யாரையும் வலியுறுத்தி வருகிறாயா..இல்லையா..எனக் கேட்க வேண்டாம்.வந்தவர்களை வாழ்த்துவோம் என்றார்.

மனதில் தோன்றியதை 'பளீச்' என ஒளிக்காமல் பேசிய அஜீத்தை பாராட்டுவோம்.

டிஸ்கி- கலைஞருக்கு பாராட்டுவிழா நடந்த அதே நாள்..தில்லியில் விலைவாசி பற்றி நடந்த..பிரதமர் கலந்துக் கொண்ட..மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக சார்பில் துணை முதல்வர் கலந்துக் கொண்டார்.

20 comments:

goma said...

நடிகர்களுக்கிடையே நடிகனாக மட்டுமே வளரும் நல்லதொரு தமிழன் அஜித்.

Paleo God said...

தல அசல்'தான்.. :))

செந்தில் நாதன் Senthil Nathan said...

தல 'தல' தான்..

கோவி.கண்ணன் said...

உளறிக் கொட்டி சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லாமல் தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பி சர்சையை ஏற்படுத்தாமல் அஜித் நேரடியாகப் பேசியது பாராட்டத்தக்கது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
நடிகர்களுக்கிடையே நடிகனாக மட்டுமே வளரும் நல்லதொரு தமிழன் அஜித்.//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஷங்கர்.. said...
தல அசல்'தான்.. :))//

நன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தில் நாதன் said...
தல 'தல' தான்..//

நன்றி செந்தில் நாதன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
உளறிக் கொட்டி சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லாமல் தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பி சர்சையை ஏற்படுத்தாமல் அஜித் நேரடியாகப் பேசியது பாராட்டத்தக்கது//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி கோவி

kanavugalkalam said...

தல போல வருமா.

ரோஜா காதலன் said...

பேச வேண்டியதை, அதற்குரிய இடத்திலே மென்மையாகவும், உண்மையாகவும் பேசியதற்காக, அஜித் அவர்களுக்கு பாராட்டுக்கள்....

Starjan (ஸ்டார்ஜன்) said...

தல போல வருமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//kanavugalkalam said...
தல போல வருமா.//

நன்றி kanavugalkalam

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ரோஜா காதலன் said...
பேச வேண்டியதை, அதற்குரிய இடத்திலே மென்மையாகவும், உண்மையாகவும் பேசியதற்காக, அஜித் அவர்களுக்கு பாராட்டுக்கள்....//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ரோஜா காதலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

..Starjan ( ஸ்டார்ஜன் ) said...
தல போல வருமா//

வருகைக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு சார்.

உண்மையை கூறிய அஜீத் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

Cable சங்கர் said...

ajith sonnathu sariyanathe..

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி cable shankar

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
உள்ளேன் ஐயா//


நன்றி நசரேயன்