Monday, February 22, 2010

பூ வாசம்



நாக லிங்கப் பூவின்

மகரந்த வாசம்

பொன்வண்டாய் நான்

நாட்குறிப்பு பக்கங்களில்

மையின் வாசனை

நுகரா ஏடுகள்

வாசிக்கவும் யோசிக்கவும்

வசப்படாமல்

பொம்மையாய் மனம்

தூங்காதே விழித்திரு

தூரத்தே கேட்கும் குரல்

கண் விழிக்கையில்

அறை முழுதும்

நாகலிங்கப் பூவாசம்

22 comments:

அகநாழிகை said...

சார், நாகலிங்கப்பூ பார்த்து எவ்வளவு நாளாச்சு. இயற்கையின் அற்புதம் அது. சரி நாகலிங்கப்பூவை வீட்டுக்கு கொண்டு வர மாட்டாங்களே..

கவிதை நல்லாயிருக்கு சார், சிறுவயதில் வெண்காட்டீஸ்வர் கோயில்னு ஒரு கோவிலுக்குள்ள இருக்கற பிரம்மாண்டமான நாகலிங்க மரத்தடியில விழுந்து கிடக்கும் பூக்களையும், பெரிய காய்களையும் கண்கள்விரிய ஆச்சர்யத்தோடு பார்த்த அந்தக் கணங்களை நினைவு படுத்தியது உங்கள் இந்தப் பதிவு.

பகிர்தலுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நாகலிங்கப் பூ வாசத்திற்கு பாம்பு வரும் என்பார்கள்..ஆகவே வீட்டிற்கு கொண்டுவர மாட்டார்கள்..இப்போது கவிதையைப் படியுங்கள்..வேறு அர்த்தம் வருகிறதா?

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

நாகலிங்கப்பூ ஒரே ஒரு தரம்தான் பாத்திருக்கேன். அதிசயப்பூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சசிகுமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சின்ன அம்மிணி

Vidhya Chandrasekaran said...

நானும் நாகலிங்கப் பூவை பார்த்து வியந்தேன். பதிவு நல்லாயிருக்கு.

Chitra said...

கண் விழிக்கையில்

அறை முழுதும்

நாகலிங்கப் பூவாசம்

......... :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Chitra

ஹேமா said...

கவிதை வாசமாய்...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
கவிதை வாசமாய்...!//


வாசிக்கும் கவிதையாய்

vidivelli said...

very nice
sempakam

க.பாலாசி said...

நல்ல கவிதை... நாகலிங்கப்பூவுடன் ஒத்து பார்க்கிறேன்...

திருவையாரில் ஒரு மரம் இருக்கிறது...

*இயற்கை ராஜி* said...

nice:-)

உயிரோடை said...

நாக லிங்கப் பூ மகரந்த வாசம் ஆஹா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//vidivelli said...
very nice
sempakam//


நன்றி vidivelli

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
நல்ல கவிதை... நாகலிங்கப்பூவுடன் ஒத்து பார்க்கிறேன்...

திருவையாரில் ஒரு மரம் இருக்கிறது...//

நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இய‌ற்கை said...
nice:-)//

நன்றி raji

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உயிரோடை said...
நாக லிங்கப் பூ மகரந்த வாசம் ஆஹா//


நன்றி Lavanya

vidivelli said...

nallaayirukku unkal kavithai

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி vidivelli