பேருந்து பயணத்தில்
நடத்துநர்
பக்கத்துப் பயணி
மின்தூக்கியில் உடன் வருபவன்
தாமதமாக வந்ததால்
கண்டிக்கும் அதிகாரி
தெருவை கடக்கையில்
தென்படும்
காவல் துறை அதிகாரி
முகம் தெரியா
மற்றும் பலர் -என
கண்டு புன்னகைப்பவன்
வீடு வந்ததும்
தெரிந்த முகங்களிடம்
மறப்பதேன்
2) தடகளப் போட்டி
பாதி தூரம்
குச்சி எடுத்து
ஓடி வந்தவள்
இரண்டாம் கட்டத்தில்
உன்னிடம் தர
வெற்றி பெற்ற
உனை பாராட்டி
முதலாமவளை
மறந்த
குச்சியாய் நான்
24 comments:
ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்...
"மறப்பது"
இரண்டும் நல்லாக இருக்கிறது.
//கமலேஷ் said...
ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்//
நன்றி கமலேஷ்
// மாதேவி said...
"மறப்பது"
இரண்டும் நல்லாக இருக்கிறது//
நன்றி மாதேவி
"குச்சியாய் நான்" ..........வித்தியாசமான கவிதை தொகுப்பு.
நன்றி Chitra
புன்னகைப்பதிலும் சுயநலம் காட்டுகிறொம். வேறென்ன.
அருமை அருமை அசத்தல் கவிதை
வருகைக்கு நன்றி தமிழ் உதயம்
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை அருமை அசத்தல் கவிதை//
நன்றி Starjan
இது வாத்தியார் கையில இருக்கிற குச்சியால்ல இருக்கு. சபாஷ்:)
அருமை சார். பிடிச்சிருக்கு
//வானம்பாடிகள் said...
இது வாத்தியார் கையில இருக்கிற குச்சியால்ல இருக்கு. சபாஷ்:)//
நன்றி வானம்பாடிகள்
//அக்பர் said...
அருமை சார். பிடிச்சிருக்கு//
நன்றி அக்பர்
நல்லா இருக்குங்க...
நன்றி DREAMER
குச்சியாய் நான்/ அருமை . கவிதை நல்லா வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்குங்க.............
அருமையான கவிதை......
//Madurai Saravanan said...
குச்சியாய் நான்/ அருமை . கவிதை நல்லா வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.//
நன்றி Madurai Saravanan
//vidivelli said...
நல்லாயிருக்குங்க.............
அருமையான கவிதை......//
நன்றி vidivelli
அருமை.
நன்றி ராமலக்ஷ்மி
//
முதலாமவளை
மறந்த//
அப்படியெல்லாம் இல்லையே.. எல்லோருக்கும்தான் பரிசு தருவார்கள் : )
வருகைக்கு நன்றி. Uzhavan" பரிசு பற்றி அல்ல கவிதை..குச்சி முதலாமவளை மறந்துவிடுகிறது..அதாவது தாயை மறந்துவிடுகிறோம் என்கிறேன்..அவ்வளவுதான்
Post a Comment