Monday, February 15, 2010

மௌனராகம்

சம்மதத்திற்கும்

தர்க்கம் தவிர்க்கவும்

மௌனமே

மௌனமாய் அமர்கிறது


2) பெயரோ ஸ்ரீமதி

இன்னமும் அவள்

செல்வி


3)கர்ப்பிணிப் பெண்

மெதுவாக நடக்கிறாள்

வெண்மேகத்தின் வேகத்தை விட

சூல் கொண்ட

கார்மேகம் வேகம் குறைவுதானே!


4)என் இதயம் உன்னிடம்

என்றவளைக் காணவில்லை

இதயம் இல்லாதவள்

யாரையேனும் கண்டால்

தெரிவியுங்கள்

திரும்ப அனுப்பிவிடுகிறேன்


5)கடிகாரம்

நாட்காட்டி - இவை

காலம் காட்டினாலும்

காலனை நினைப்பதில்லை

கல் நெஞ்சர்கள்

18 comments:

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

ஸ்ரீமதி - செல்வி
வெண்மேகம் - கார்மேகம்
இதயம் இல்லாதவள்

அனைத்துமே அருமை - மிக ரசித்தேன்

நல்வாழ்த்துகள் டிவிஆர்

அகநாழிகை said...

முதல் நான்கு கவிதைகளும் மிகவும் பிடித்திருக்கிறது.
வாழ்த்துகள் டிவிஆர் சார்.

உயிரோடை said...

//மௌனமே

மௌனமாய் அமர்கிறது//

ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து

Chitra said...

சம்மதத்திற்கும்

தர்க்கம் தவிர்க்கவும்

மௌனமே

மௌனமாய் அமர்கிறது

.......... அருமையான வரிகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Cheena sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வாசு
லாவண்யா
சித்ரா

பிரபாகர் said...

அய்யா வணக்கம்.

கர்ப்பிணி மேகம் மிக அருமை. எளிமையாய் அருமையாய் யாவும்.

பிரபாகர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பிரபாகர்

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு சார்.

vasu balaji said...

எல்லாமே அருமை:)

Ashok D said...

நான் கடிகாரம் கட்டுவதில்லை ..கல்நெஞ்சனோ?

//மௌனமே
மௌனமாய் அமர்கிறது//
கடந்தவாரம் உலக சினிமாவில் உங்கள் வலதுபக்கம் மௌனமாக அமர்ந்திருந்தது யானே. அப்போது நீங்கள் யாரென்று எனக்கு தெரியாமல் போனது. அறிந்துயிருந்தால் ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கலாம். எல்லோரும் உங்களுக்கு விஷ் பண்ணவோ நீங்கள் தான் ஓனரோ என்று எண்ணிவிட்டேன் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
எல்லாமே அருமை:)//

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//D.R.Ashok said...
நான் கடிகாரம் கட்டுவதில்லை ..கல்நெஞ்சனோ?//

ஒரு அருமையான படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்..கடிகாரம் 7-13 காட்டுகிறது..அலைபேசி அழைப்பு ஒன்று வர..எழுந்து ஒடுபவர் கல்நெஞ்சனாய் இருக்கக் கூடும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//D.R.Ashok said...
நீங்கள் தான் ஓனரோ என்று எண்ணிவிட்டேன் :)//

நல்லவேளை..படத்தின் தயாரிப்பளராகவோ..இயக்குநராகவோ எண்ணவில்லையே

Ashok D said...

//ஒரு அருமையான படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்..கடிகாரம் 7-13 காட்டுகிறது..அலைபேசி அழைப்பு ஒன்று வர..எழுந்து ஒடுபவர் கல்நெஞ்சனாய் இருக்கக் கூடும்.//

கண்ணீர்விட்டு படம் பார்த்தேன்.. நான் எனது கஸ்டமரை என் செண்டரில் போட்டுவிட்டு வந்தேன். கஸ்டமர் எனக்கு 2hrs கொடுத்தது பெரிய விஷயம். அப்புறம் க்ளைமேக்ஸ் தண்டோராவிடன் போன் செய்து கேட்டுக்கொண்டேன். எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் அன்று 1hr தான், வந்த நோக்கம் யாத்ராவின் பத்திரிக்கையை வாங்க. :)

Ashok D said...

//நல்லவேளை..படத்தின் தயாரிப்பளராகவோ..இயக்குநராகவோ எண்ணவில்லையே//

உங்களது முகம் தென்னிந்தய சாயலில் இருந்ததினால் அப்படி தோன்றவில்லை :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி D.R.Ashok