Monday, February 1, 2010

தமிழில் பேச மறுத்த தமிழர்

தமிழன் தமிழ் மாநிலத்தைத் தவிர..வேறு மாநிலங்களில் ஒரு தமிழனைப் பார்த்தால்..உளம் மகிழ்ந்து பேசத் துவங்குவான்..என்றளவில் மகிழ்வேன் நான்..

ஆனால்..ஒரு தமிழன் ..வேறு ஒரு மாநிலத்தில்..தமிழில் கேட்டதற்கு தமிழில் பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறான் என்றால்..அதுவும் தமிழ்ப்பற்றுள்ள ஒருவன்..

எல்லாம் பதவி படுத்தும் பாடு...

புதுதில்லியில் நிருபர்களிடம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் பேசினார்..அப்போது ஒரு நிருபர்..'தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப் படுகிறார்களே..' என்று தமிழில் கேள்வி கேட்டார்..

அதற்கு சிதம்பரம்..'தமிழில் கேள்வி கேட்கக் கூடாது..அது இங்கு மற்றவர்களுக்கு புரியாது..ஆங்கிலத்தில் கேட்டால் மட்டுமே பதில் சொல்வேன்' என்று அக்கேள்விக்கு பதிலளிக்க வில்லை.

ஆனால்..அதுவே.. இவருக்கே தெரியாத ஹிந்தியில் நிருபர்கள் கேட்ட போது..தன் செயலாளர் உதவியுடன் அவர்களுக்கு பதில் அளித்தார்.

மகாராஷ்டிர மக்களுக்கே மும்பை சொந்தம் என்று கூறுவதை ஏற்க முடியாது..எல்லா இந்தியருக்கும் அது சொந்தம் என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர்..ஒரு மாநில மொழி..இந்தியா முழுவதிலும் பேசலாம்..அதைத் தெரிந்தவருக்கு.. அந்த மொழியிலேயே பதிலளிக்கலாம் என்ற எண்ணம் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்.

உண்மையிலேயே..தமிழில் சொன்னால் மற்றவர்க்கு புரியாது..என்ற எண்ணம் ப.சி.,க்கு இருந்திருந்தால்..ஹிந்தி புரியா நிருபர்கள் என்ன செய்வார்கள் என்று அதற்கும் மறுத்து ஆங்கிலத்தில் மட்டுமே சொல்வேன் என்று சொல்லாதது ஏன்?

எல்லாமே பதவிக்குதாண்டா..

45 comments:

கோவி.கண்ணன் said...

//ஹிந்தி புரியா நிருபர்கள் என்ன செய்வார்கள் என்று அதற்கும் மறுத்து ஆங்கிலத்தில் மட்டுமே சொல்வேன் என்று சொல்லாதது ஏன்?//

அவருக்கும் தேசிய வியாதி இருக்கும் போல.

Anonymous said...

//எல்லாமே பதவிக்குதாண்டா.. //

நாமளும் அதுக்கு பழகிப்போயிட்டோம்.

Vidhoosh said...

:( என்ன செய்ய!!

பித்தனின் வாக்கு said...

தமிழில் மற்றவருக்குப் புரியாது எனபது நியாமான கோரிக்கை. ஆனால் இந்தியில் சொல்ல மாட்டேன் என்று சொல்ல முடியாதது பதவி ஆசை. அப்புறம் அவர் மத்திய அமைச்சராக இருக்க முடியாது. அவர் ஏனுங்க வெளினாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கூட சந்திக்கும் போது கராபுரான்ன்னுதான் பேசறாங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சின்ன அம்மிணி said...
நாமளும் அதுக்கு பழகிப்போயிட்டோம்.//

வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

vasu balaji said...

/அதுவும் தமிழ்ப்பற்றுள்ள ஒருவன்../

தமிழ் வோட்டுப் பற்று சார்:)..

Veluran said...

Think in another angle. Are we sure that the Questioner is not known English. I think he asked in Tamil to project his Image.No body is above Comments. But we should be pride that Mr. PC is maintaining his Tamilan Identity in Delhi by Dress.
Answering for Hindi question shows his intention to give answer.

செந்தில் நாதன் Senthil Nathan said...

அட போன தடவ இவர் எப்படி ஜெய்ச்சார்னு எங்கட்ட கேளு நைனா!! எங்க ஊர்காரர் தான். ரெம்ப புத்திசாலி தான். என்னத்த சொல்லறது. நம்ம மனுசகங்கள மதிக்க மாட்டேங்கிறாரே!!

திரு,
அவர் அந்த தமிழ் கேள்விய மொழிபெயர்த்து மத்தவங்களுக்கு சொல்லி விட்டு, தன் பதில ஆங்கிலத்தில் சொல்லலாமே ?

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு..

goma said...

தமிழில் பேசினால் பதவி நாற்காலியில் ஸ்க்ரூ லூசாகி விடுமோ என்ற அச்சம்.
ஆகவேதான் யாராவது தமிழில் பேசினால் கூட லூசாப்பா நீ என்று கேட்கும் நிலையில் தமிழ் இருக்கிறது.

க.பாலாசி said...

//எல்லாமே பதவிக்குதாண்டா.. //

உண்மை....

sathishsangkavi.blogspot.com said...

//எல்லாமே பதவிக்குதாண்டா..//

இது தான் இன்றைய அரசியல்.......

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Vidhoosh said...
:( என்ன செய்ய!!//

என்னத்த சொல்ல..;((

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பித்தனின் வாக்கு said...
தமிழில் மற்றவருக்குப் புரியாது எனபது நியாமான கோரிக்கை. ஆனால் இந்தியில் சொல்ல மாட்டேன் என்று சொல்ல முடியாதது பதவி ஆசை. அப்புறம் அவர் மத்திய அமைச்சராக இருக்க முடியாது. அவர் ஏனுங்க வெளினாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கூட சந்திக்கும் போது கராபுரான்ன்னுதான் பேசறாங்க.//

என்ன செய்ய!!:((

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
/அதுவும் தமிழ்ப்பற்றுள்ள ஒருவன்../

தமிழ் வோட்டுப் பற்று சார்:)..//

அதே!! அதே!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Thiru said...
Think in another angle. Are we sure that the Questioner is not known English. I think he asked in Tamil to project his Image.No body is above Comments. But we should be pride that Mr. PC is maintaining his Tamilan Identity in Delhi by Dress.
Answering for Hindi question shows his intention to give answer.//


மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தில் நாதன் said...
அட போன தடவ இவர் எப்படி ஜெய்ச்சார்னு எங்கட்ட கேளு நைனா!! எங்க ஊர்காரர் தான். ரெம்ப புத்திசாலி தான். என்னத்த சொல்லறது. நம்ம மனுசகங்கள மதிக்க மாட்டேங்கிறாரே!! //

உண்மை..அவர் தமிழக முதல்வராக வரணும்னு நான் ஆசைப்பட்டதும் உண்டு

குட்டிபிசாசு said...

ப.சிதம்பரம் என்பவர் தமிழனா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
லூசாப்பா நீ என்று கேட்கும் நிலையில் தமிழ் இருக்கிறது.//

:-((

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
//எல்லாமே பதவிக்குதாண்டா.. //

உண்மை....//

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
//எல்லாமே பதவிக்குதாண்டா..//

இது தான் இன்றைய அரசியல்.......//


வருகைக்கு நன்றி sangkavi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குட்டிபிசாசு said...
ப.சிதம்பரம் என்பவர் தமிழனா?//

நீங்கள் ஏன் இப்படி கேட்கறீர்கள் எனத் தெரியவில்லை..

ஆனால் அவர் தமிழன் மட்டுமல்ல..தமிழின் பால் மிகவும் பற்றுக் கொண்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர்

Starjan (ஸ்டார்ஜன்) said...

இது வருத்தமான விஷயம் .

சிநேகிதன் அக்பர் said...

சரிதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

CS. Mohan Kumar said...

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா

TBCD said...

ப.சி,

கேள்வியயை ஆங்கிலத்தில் மற்றவர்களின் நலனிற்காக மொழிப்பெயர்த்து சொல்லி தமிழிலும்/ஆங்கிலத்திலும் பதிலளித்திருக்கலாம்.

ஆனால் அவர் இருப்பது காங்கிரசு கூடாராம். அவரிடம் இதை நாம் எதிர்ப்பார்ப்பது நம்முடைய அறிவீனம் ! :-(

Radhakrishnan said...

:) வந்தே மாதரம். தமிழ் ஒரு மாநில மொழி, ஹிந்தி பல மாநிலங்களின் மொழி. தமிழ் வாசிக்கத் தடுமாறும் என் மனைவி, தமிழ் தெரியாமல் தத்தளிக்கும் என் மகன். எனக்கு தமிழ் பற்று இருக்கிறது என சொன்னால் நானே சிரித்துக் கொள்வேன். ப.சிதம்பரம் பரவாயில்லை.

"உழவன்" "Uzhavan" said...

அவர் பதிலளிக்காததற்கு காரணம் வேறு.. கேட்ட கேள்வி அப்படி .. அதனால் தான் பதிலளிக்க இயலவில்லை அவரால்.

ஜீவேந்திரன் said...

இவன் எல்லாம் ஒரு மனுஷனா??? இவனுக்கெல்லாம் வாக்களிக்கும் தமிழக மக்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
இந்தாளைப்பற்றி எனது வலைப்பூவிலும் எழுதியிருக்கிறேன் கொஞ்சம் பாருங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மோகன் குமார் said...
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா//

வருகைக்கு நன்றி மோகன் குமார்

நசரேயன் said...

//எல்லாமே பதவிக்குதாண்டா.. //

உண்மை .. உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//TBCD said...
ஆனால் அவர் இருப்பது காங்கிரசு கூடாராம். அவரிடம் இதை நாம் எதிர்ப்பார்ப்பது நம்முடைய அறிவீனம் ! :-(//

:-((((

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said...
:) வந்தே மாதரம். தமிழ் ஒரு மாநில மொழி, ஹிந்தி பல மாநிலங்களின் மொழி. தமிழ் வாசிக்கத் தடுமாறும் என் மனைவி, தமிழ் தெரியாமல் தத்தளிக்கும் என் மகன். எனக்கு தமிழ் பற்று இருக்கிறது என சொன்னால் நானே சிரித்துக் கொள்வேன். ப.சிதம்பரம் பரவாயில்லை.//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உழவன் " " Uzhavan " said...
அவர் பதிலளிக்காததற்கு காரணம் வேறு.. கேட்ட கேள்வி அப்படி .. அதனால் தான் பதிலளிக்க இயலவில்லை அவரால்.//


உண்மை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//jeevendran said...
இவன் எல்லாம் ஒரு மனுஷனா??? இவனுக்கெல்லாம் வாக்களிக்கும் தமிழக மக்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
இந்தாளைப்பற்றி எனது வலைப்பூவிலும் எழுதியிருக்கிறேன் கொஞ்சம் பாருங்கள்.//

படித்துவிடுகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//...நசரேயன் said...
//எல்லாமே பதவிக்குதாண்டா.. //

உண்மை .. உண்மை//


வருகைக்கு நன்றி நசரேயன்

சுப.நற்குணன்,மலேசியா. said...

எவ்வளவு உயர்ந்த இடத்திற்குப் போனாலும் தமிழனின் அடிமைத்தமிழனின் அடிவருடித் தனமும் பேடிமைத்தனமும் மாறாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சுப.நற்குணன் said...
எவ்வளவு உயர்ந்த இடத்திற்குப் போனாலும் தமிழனின் அடிமைத்தமிழனின் அடிவருடித் தனமும் பேடிமைத்தனமும் மாறாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.//



உண்மை....

வருகைக்கு நன்றி

பாத்திமா ஜொஹ்ரா said...

இது தான் அரசியல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பாத்திமா ஜொஹ்ரா said...
இது தான் அரசியல்//

வருகைக்கு நன்றி பாத்திமா

வே.தமிழரசன் said...

செருப்பால் அடித்தால் எல்லாம் சரி ஆகிவிடும்! நாம் தமிழ் வெறியன் அல்ல ஆனால் இந்த நேரத்தில் அப்படி நம்மை ஆக்காமல் விடமாட்டார்கள் போல் தெரிகின்றது. படித்து தெரிந்த அனைவருக்கும் இது வேலை நேரம்.. உள்ளதை எடுத்து சொல்லி மக்களை உன்னற செய்வதற்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Velmurugan

சரவணகுமரன் said...

தமிழ்நாட்டில் தமிழை மதித்து பேசியதை போல, புது தில்லியில் அங்குள்ள ஹிந்தியை மதித்து பேசியிருக்கிறார்.