Saturday, February 13, 2010

ஆதலினால் காதல் செய் ...

1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ கத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.

2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.

3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.

4.இரவில் கவிதை
கவிதையான இரவு
கனவில் நிலவு
நிலவு பற்றி கனவு
தனிமையில் சிரிப்பு
சிரிப்பில் தனிமை
இதுதானா காதல்?

5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.

6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.

7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.

8.காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்

9.பறக்கத் தெரியும்
திசை தெரியாது
காதல் ஓர்
இலவம் பஞ்சு

_ கபிலன்

(மீள்பதிவு)

14 comments:

*இயற்கை ராஜி* said...

mm..lovely:-)

vasu balaji said...

3ம் 4ம் அபாரம்.

சிநேகிதன் அக்பர் said...

அருமை சார்.
காதலர் தின வாழ்த்துகள்.

அத்திரி said...

4வது இரவல் கவிதை கலக்கல்.... வாழ்த்துக்கள் ஐயா

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இய‌ற்கை said...
mm..lovely:-)//

நன்றி ராஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
3ம் 4ம் அபாரம்.//


நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
அருமை சார்.
காதலர் தின வாழ்த்துகள்...//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
அத்திரி said...
4வது இரவல் கவிதை கலக்கல்.... வாழ்த்துக்கள் ஐயா//


நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்//

நன்றி Starjan

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

அனைத்துமே அருமை - 2, 3, 5, 7, 9 மிக மிகப் பிடித்தது - ரசித்தேன்

நல்வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Cheena sir

Karthick Chidambaram said...

காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்.


இதில் நீங்கள் எதாவது சொல்ல வருகிறீர்களா ? இல்லை உடன்படுகிறீர்களா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

கண்டிப்பாக மாறுபடுகிறேன்...அதற்கு ஒரு உதாரணம் நான் எழுதிய இக் கவிதை

இன்று பூத்து

நாளை வாடிவிடும்

மலரல்ல காதல்

சாகாவரம் பெற்ற

வாடா மலர் அது