விதியை
மதியால் வெல்லலாம்
என்றவர்கள் கூட
செத்துத் தொலைத்திருக்கிறார்கள்
மதியின்றி
2)தேங்கிய மழைநீரில்
பேருந்தின் டீசல் சிந்தி
தரையில் வானவில்
3)ஒன்றுக்கு போகக்கூட
ஒன்றுமில்லாதவனால் முடியாது
அதற்கும் வேண்டும்
அம்பது காசு
4)தாய் பசித்திருக்க
தன் நலமாய் இராதே
நீ பசித்திருக்கையில்
நாளை உன் மகன் செய்வான்
உனக்கு
5)அசையும் வளைவுகள்
அசையாத வளைவுகளாய்
இட்ட கோலங்கள்
8 comments:
3,2,4,1 ஹி ஹி 5:))
இது ஒரு விதம், புது விதம்
வருகைக்கு நன்றி பாலா
//கவிதை காதலன் said...
இது ஒரு விதம், புது விதம்//
வருகைக்கு நன்றி கவிதை காதலன்
எப்பவும்போல குட்டிக் குட்டியாய் உங்கள் கவிதை கதை சொல்லுது.அருமை.
நன்றி ஹேமா
//தேங்கிய மழைநீரில்
பேருந்தின் டீசல் சிந்தி
தரையில் வானவில்//
//அசையும் வளைவுகள்
அசையாத வளைவுகளாய்
இட்ட கோலங்கள்//
அழகான (ஹைக்கூ?) கவிதைகள்!
மற்றவையும்தான்!
நான் விஜய்
வருகைக்கு நன்றி விஜய்
Post a Comment