Wednesday, February 3, 2010

அன்று ஆணாதிக்கம்..இன்று பெண்ணாதிக்கம்


அக்கிரமம் தலையெடுக்கயில்

அவதரிப்பேன் என்றான்

கீதையில் கண்ணன்

அக்கிரமமும்..அநியாயங்களும் தான்

இன்று நாட்டில்

சொன்னார் போல் அவன் எங்கே?

வாக்குத் தவறிய

அவனும் ஒரு அரசியல்வாதியே!!


2)நிலவை அழைத்து

குழந்தைக்கு

சோறூட்டினாள் அன்னை

நிலவைப் பிடித்து

கறையைத் துடைத்த

முகம் உனது

என்றவன் ஞாபகத்தில் வர..


3)கற்புக்கரசிகளாய்

கண்ணகி

நளாயினி

சீதை

தவிர்த்து யாரேனும்

அறிவாயா நீ

வினவினான் இல்லாளிடம்


4)அன்று

அப்பாவின் கோபம்

அம்மாவின் காது கிழிந்தது

கணவனின் கோபம்

முக வீக்கம் மனையாளுக்கு

இன்றோ

அவளின் கோபம்

நீதிமன்ற வாசலில் ஏறியது

28 comments:

Anonymous said...

எல்லாமே அருமை.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இன்று நாட்டில்

சொன்னார் போல் அவன் எங்கே?//

அந்தக் காலத்தில் இதைவிட நிலமை படு மோசமாக இருந்திருக்கும்..,

கண்ணகி said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

ஓடமும் ஒரு நாள் கரையேறும்...

இதெல்லாம் பழமொழிங்க...???

goma said...

அருமையாகச் செதுக்கிய சொற்சிலைகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சின்ன அம்மிணி said...
எல்லாமே அருமை.//

நன்றி சின்ன அம்மிணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அந்தக் காலத்தில் இதைவிட நிலமை படு மோசமாக இருந்திருக்கும்//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கண்ணகி said...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

ஓடமும் ஒரு நாள் கரையேறும்...

இதெல்லாம் பழமொழிங்க...???//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
அருமையாகச் செதுக்கிய சொற்சிலைகள்//


நன்றி goma

வானம்பாடிகள் said...

:)). என்னாச்சி சார் இவ்வளவு கோவம்?

அக்பர் said...

//3)கற்புக்கரசிகளாய்

கண்ணகி

நளாயினி

சீதை

தவிர்த்து யாரேனும்

அறிவாயா நீ

வினவினான் இல்லாளிடம்//

கற்புக்கரசனாய்

ராமனை தவிர்த்து

யாரேனும் அறிவாயா நீ

வினவினாள் இல்லானிடம்.

பித்தனின் வாக்கு said...

அருமை, கடவுள் வாக்கு தவறிய அரசியல்வாதி. மிக அருமையான,உண்மையான கற்பனை. அருமை. நன்றி.

ஹேமா said...

நாலாவது கவிதை மாதிரியும் நடக்குதா !
எல்லாமே நல்லாயிருக்கு.

Sangkavi said...

சரியாச்சொல்லியிருக்கறீங்க.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
:)). என்னாச்சி சார் இவ்வளவு கோவம்?//

உண்மை பாலா..நேற்று மாநில அரசு அலுவலகம் ஒன்றில் ஒரு சிறிய வேலை..சென்றேன்..அங்கு நடந்த அக்கிரமங்கள்..அநியாயங்கள் கண்கூடாய் பார்த்து..ஏற்பட்ட மனக்கொதிப்பின் வெளிபாடே இது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கற்புக்கரசனாய்

ராமனை தவிர்த்து

யாரேனும் அறிவாயா நீ

வினவினாள் இல்லானிடம்.//

அதுதான் உள்ளங்கை நெல்லிக்கனி ஆயிற்றே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பித்தனின் வாக்கு said...
அருமை, கடவுள் வாக்கு தவறிய அரசியல்வாதி. மிக அருமையான,உண்மையான கற்பனை. அருமை. நன்றி.//

நன்றி பித்தனின் வாக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
நாலாவது கவிதை மாதிரியும் நடக்குதா !
எல்லாமே நல்லாயிருக்கு.//

பெண் மௌனியாய் இருந்த காலம் போயிற்று என்பதற்கே இக்கவிதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
சரியாச்சொல்லியிருக்கறீங்க.....//

நன்றி Sangkavi

V.Radhakrishnan said...

கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது, எனது பெயரை ஆங்கிலத்தில் மாற்றியதன் மூலம் தங்களுக்கு இடைஞ்சல் தந்துவிட்டேன் என நினைக்கிறேன், மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said...
கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது,//

நன்றி V.Radhakrishnan

Jawahar said...

தலைப்பைப் பார்த்து விட்டு சூடான விவாதங்களுக்கு இடமளிக்கும் கட்டுரையோ என்று வந்தேன். கவிதைகள் நன்றாக இருக்கின்றன.

http://kgjawarlal.wordpress.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Jawahar

நசரேயன் said...

நல்லா இருக்கு ஐயா

Madurai Saravanan said...

kavithaiyil ungkal aathikkam super. arumai ayya arumai.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நல்லா இருக்கு ஐயா//


நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Madurai Saravanan said...
kavithaiyil ungkal aathikkam super. arumai ayya arumai.//

நன்றி Madurai Saravanan

சக்தி said...

//3)கற்புக்கரசிகளாய்

கண்ணகி

நளாயினி

சீதை

தவிர்த்து யாரேனும்

அறிவாயா நீ

வினவினான் இல்லாளிடம்//

கவிதா ரொம்ப நல்ல இருக்கு நண்பரே..!

ஆனால், இலக்கியத்தில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே கற்புக்கரசிகள் என்பது ஏற்க இயலாத கருத்து.. கலையில் சிறந்தவர்கள் தங்களை இந்த சமுதாயத்தில் நிலைநிறுத்திக்கொள்ள தாம் தம் திறமையினை வெளிக்காட்டி கொள்ளலாம்.. அனால் கற்புக்கரசிகள் என்பவர்கள் எவ்வாறு தாங்கள் கற்புக்கரசிதான் என்று எல்லோரிடமும் தம்பட்டம் அடித்துக்கொள்ள முடியும்.. இப்படி இருக்கையிலே தவறான கோணத்தில் எழுதி இருப்பது துரதிஷ்ட வசமானது நண்பரே..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

தவறான கோணத்தில் எழுதப் படவில்லை. சக்தி.கவிதையின் நோக்கமே..தன் தாய், மனைவி பெயர்கள் கூட அவன் ஞாபகத்திற்கு வரவில்லையே..என்று குறிப்பால் உணர்த்தத்தான்