Saturday, February 6, 2010

வாய் விட்டு சிரியுங்க...

1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.

2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.

3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.

4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..

5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..

6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?

12 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

good jokes

goma said...

:-

வாய் விட்டுச் சிரித்ததில் மேற்கண்ட சிம்பலில் வாயைக் காணவில்லை

ஹி ஹி ஹி

இராகவன் நைஜிரியா said...

1,2,4 அருமை.

3 - மருத்தவர் ராமதாசுக்கு பொருத்தமான சிரிப்பு.

5 - வாழ்க்கையின் நிதர்சனம் உணர்ந்தவர். இவரை கட்டிகிட்டா வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இவர் மனைவிக்கு வராது.

6 - இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை என்று படித்து இருக்கேன். இதுதான் உண்மையும் கூட.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
:-

வாய் விட்டுச் சிரித்ததில் மேற்கண்ட சிம்பலில் வாயைக் காணவில்லை

ஹி ஹி ஹி//


நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி இராகவன் நைஜிரியா

பித்தனின் வாக்கு said...

hahahaha

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பித்தனின் வாக்கு

உடன்பிறப்பு said...

நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்

/\*/\

இது டாப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்

/\*/\

இது டாப்பு//

உடன்பிறப்பு..உங்க பின்னூட்டம் கண்டு எவ்வளவு நாளாச்சு..நன்றி

சிநேகிதன் அக்பர் said...

நல்ல ஜோக் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்பர்