Tuesday, February 16, 2010

கேபிள் சங்கரின் சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை

கேபிள் சங்கரின் வலைப்பூவை படிப்பவர்கள் கண்டிப்பாக 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' படித்திருப்பார்கள்.ஆனால் அந்தப் பெயரைத் தாங்கி வந்திருக்கும் அவரின் சிறுகதைத் தொகுப்பு..அவரை அறியாத..சராசரி வாசகர்கள்..இப் புத்தகத் தலைப்பைக் கண்டு..பிறமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட கதைகள் போலும்..என்று என்ன வாய்ப்புண்டு.

இத் தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் தரிசன..சாரி..நிதர்சனக் கதைகள்.

1) முத்தம்- 'ஹலோ..9840071..' கேபிள்ஜியா..கதையை அழகு நடையில் எழுதியுள்ளீர்கள்.ரமேஷிற்கு அவள் முத்தமிட்ட உதடுகளில் லேசான வலி என்ற முடிவின் போது..அந்தப் பெண்ணை எண்ணி நமக்கும் மனதில் சற்று வலிக்கவே செய்கிறது.

2)லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்- சிலர் புத்தகம் படிக்கையில்..கடைசி பக்கத்திலிருந்து படிப்பார்கள்.அதுபோல் படிப்பவர்கள்..இக்கதையின் கடைசி இரு வரிகள் படித்தால்..'உங்க வயசை தெரிஞ்சுக்கலாமா? என்றதற்கு..சிரித்தபடியே..சுற்றிலும் உள்ள பெண்களையும் பார்த்து ரகசியமாய் சொல்வதுபோல என் காதருகே 'எழுபது' என்று கத்தினான்..
எங்கே எழுந்துட்டீங்க..இந்தக் கதையைப் படிக்கத்தானே..

3)கல்யாணம்-இக்கதையைப் பற்றி..ஆறாவது மாடியில் இறங்கிட்டு..அஞ்சாவதுக்கு நடந்து வந்துடுங்க என்ற கேபிளின் வரிகளே என் விமரிசனம்

4) ஆண்டாள்-ஆண்டாள் TVS50ல போகும்போது அசுர வேகத்தில சைக்கிள்லப் போய் அவ முன்னால நின்றேன் என்னும் வரிகள்..சங்கர் கண்டிப்பாக தமிழ்ப்பட இயக்குநர் ஆகும் தகுதியை பெற்று விட்டார் என்பதைக் குறிக்கிறது.

5)ஒரு காதல் கதை.. இரண்டு கிளைமாக்ஸ் - இந்தக் கதைக்கு இரண்டு முடிவு..இரண்டும் அருமை.."ஏற்கனவே வெடித்து..வழிய தயாராய் இருக்கிற குலுக்கிய ஷாம்பெயின் பாட்டில் போல் பொங்கி நுரைத்து.." சங்கர் எப்படி இப்படியெல்லாம்ம்..ம்..ம்...ம்..!!!!

6)தரிசனம்-யதார்த்தமான கதை..கடவுளின் அவதாரங்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏமாற்று பேர்வழிகள் என்பதை நாசுக்காக சொல்லும் கதைகள்..'துரைமுருகன்' ஞாபகத்தில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

7)போஸ்டர்- எனக்கு மிகவும் பிடித்திருந்தது.நல்ல நடை..எதிர் பாரா முடிவு..வெல்டன்

8)துரை-நான்-ரமேஷ் சார்- துணை நடிகைப் பற்றிய கதை.அவள் படும் துன்பங்கள்..கணவன் துரையின் போக்கு..இயக்குநரின் எதிப்பார்ப்புகள்..நடுவே ரமேஷ் போன்றவர்கள்..பாத்திரப் படைப்புகள் அருமை. கேபிள்..இக்கதைக்காக பிடியுங்கள் பூங்கொத்து

9)என்னைப்பிடிக்கலையா- காதலித்து மணந்த கணவனிடமிருந்து..திருமணத்திற்குப் பின் அங்கீகாரம் கிடைக்கவில்லையெனில்...சிலர் வாழ்வு தடுமாறிப் போகலாம் என்பதை சொல்லும் கதை

10)காமம் கொல்-ஆகா..கேபிள்..இதை இணையத்தில் படித்திருந்தாலும்..அச்சில் படிக்கையில்..தைரியம்தான் உங்களுக்கு..

11)ராமி-சம்பத்-துப்பாக்கி - விமரிசிக்க ஒன்றுமில்லை

12) மாம்பழ வாசனை- கேபிளாருக்கான தனித்தன்மையான வாசனை இக்கதை

13)நண்டு-இந்த கதையின் முடிவை , முதலிலேயே யூகிக்க முடிந்தாலும்..கடைசி பத்தி படிக்கையில் மனம் சற்று சங்கடப் படவே செய்தது..அநேகமாக மார்பு என்ற சொல் இக்கதையில் மட்டுமே இல்லை எனலாம்.

அருமையான விருந்துக்கு அமர்ந்துக் கொண்டிருக்கும் போது..இலையின் நடுவில் இனிப்பைப் போட்டுவிட்டு..ஓரத்தில் அன்னம் வைத்ததைப் போல..சற்று திகட்டவே செய்கிறது அளவிற்கு அதிகமாக சில இடங்களில்.

கேபிளாரின் திறமைக்கு..இன்னும் பல அருமையான தொகுப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

32 comments:

CS. Mohan Kumar said...

அடடா இப்போ தான் நானும் கேபிள் புத்தகத்துக்கு விமர்சனம் போட்டேன்

வரதராஜலு .பூ said...

ரைட்டு

Cable சங்கர் said...

நன்றி சார்.. உங்களது விமர்சனத்துக்கு.

sathishsangkavi.blogspot.com said...

உங்க விமர்ச்சனம் சூப்பர்...

Chitra said...

புத்தக விமர்சனம் நல்லா இருக்குங்க.

Jerry Eshananda said...

இப்போதே வாங்க ஓர்டர் செய்கிறேன்.

Raju said...

நல்லா எழுதியிருக்கீங்கய்யா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மோகன் குமார் said...
அடடா இப்போ தான் நானும் கேபிள் புத்தகத்துக்கு விமர்சனம் போட்டேன்//

படித்து பின்னூட்டம் போட்டாகிவிட்டது மோகன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வரதராஜலு .பூ said...
ரைட்டு..//

ஓகே..ஓகே..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Cable Sankar said...
நன்றி சார்.. உங்களது விமர்சனத்துக்கு.//

நன்றி Cable

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
புத்தக விமர்சனம் நல்லா இருக்குங்க.//

நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
உங்க விமர்ச்சனம் சூப்பர்...//

நன்றி Sangkavi

vasu balaji said...

Tallied:)))

பிரபாகர் said...

ஆசான் வானம்பாடிகள் விமர்சனத்தை படித்து அதிசயித்த நான், அய்யா உங்களின் விமர்சனத்தால் ஆச்சர்யமுறுகிறேன். உங்கள் வாசித்தலின் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது உங்களின் எழுத்துக்களில், விமர்சனத்தில்...

பிரபாகர்.

சிநேகிதன் அக்பர் said...

விமர்சனம் நல்லாயிருக்கு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தா. said...
இப்போதே வாங்க ஓர்டர் செய்கிறேன்.//

ஓகே ஜெரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜு said...
நல்லா எழுதியிருக்கீங்கய்யா.//

நன்றி ராஜு

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வானம்பாடிகள் said...
Tallied:)))//

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
ஆசான் வானம்பாடிகள் விமர்சனத்தை படித்து அதிசயித்த நான், அய்யா உங்களின் விமர்சனத்தால் ஆச்சர்யமுறுகிறேன். உங்கள் வாசித்தலின் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது உங்களின் எழுத்துக்களில், விமர்சனத்தில்...

பிரபாகர்.//



நன்றி பிரபாகர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
விமர்சனம் நல்லாயிருக்கு சார்.//


நன்றி அக்பர்

க.பாலாசி said...

நல்ல விமர்சனம்...

Radhakrishnan said...

அருமையான விமர்சனம், ஓரிரு வரிகள் எனினும் கதையின் தரம் நன்றாகவே புலப்படுகிறது.

"உழவன்" "Uzhavan" said...

நீங்கள் சொன்ன முதல் கதையை விகடனில் படித்த ஞாபகம் இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

.//பாலாசி said...
நல்ல விமர்சனம்...//


நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said...
அருமையான விமர்சனம், ஓரிரு வரிகள் எனினும் கதையின் தரம் நன்றாகவே புலப்படுகிறது.//

நன்றி V.Radhakrishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//"உழவன்" "Uzhavan" said...
நீங்கள் சொன்ன முதல் கதையை விகடனில் படித்த ஞாபகம் இருக்கிறது.//

ஆம்..அந்தக் கதை 'எங்கிருந்தோ வந்தாள்' என்ற பெயரில் விகடனில் வந்தது.வருகைக்கு நன்றி உழவன்

Ashok D said...

வி :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

// D.R.Ashok said...
வி :)//

ந:)

Paleo God said...

நான் பொறுமையா படிச்சிட்டு போடறேன் ::))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நான் பொறுமையா படிச்சிட்டு போடறேன் ::))//

படிக்கக் காத்துக்கிட்டு இருக்கோம்

creativemani said...

// இத் தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் தரிசன.. சாரி.. நிதர்சனக் கதைகள்.//

சொல்விளையாட்டை ரசித்தேன் சார்.. ;)

T.V.ராதாகிருஷ்ணன் said...

// அன்புடன்-மணிகண்டன் said...
// இத் தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் தரிசன.. சாரி.. நிதர்சனக் கதைகள்.//

சொல்விளையாட்டை ரசித்தேன் சார்.. ;)//

நன்றி அன்புடன்-மணிகண்டன்