
நூறு கிடைத்தது
இரு நூறுக்கு ஆசை
இரண்டாயிரம் கிடைத்ததும்
நாலாயிரத்திற்கு ஆசை
அதுவும் கிடைத்ததும்
நாசிக்கிற்கு ஆசை
2)கரிகாலன் காலைப்போல
கருத்திருக்கு குழலு..
என்றதும்
என்னைத்தான் சொல்லியுள்ளான்
கவிஞன்
என்கிறது குழலில் உள்ள
பேன்
3)மலர் பூக்கிறது
மணம் வீசுகிறது
வண்டு வருகிறது
மலரில் அமர்ந்து
தேனை சுவைக்கிறது
அடுத்த நாள்
மலர் வாட
வந்த வண்டு
அம்மலரை தவிர்த்து
அருகில் மலர்ந்துள்ள
புத்தம் புது பூவில்
அமர்கின்றது
அதன் தேனை சுவைக்க
4)கடற்கரையில்
மக்கள் வெள்ளம்
காற்றுக்கு புழுக்கம்
15 comments:
1ம்,3ம் யதார்த்தம்..
2ம்4ம் வித்தியாசம்...நல்லாருக்கு.
எனக்கு நாலு புடிச்சுருக்கு!!
முதல் கவித இந்த மரமண்டைக்கு புரியல :(
நல்லா இருக்கு
SUPER HIT
2ம் 4ம் பிடித்திருக்கிறது சார்.
தொடர்ந்து எழுதுங்க.
நாலாவது வெகு அருமை.
//கண்ணகி said...
1ம்,3ம் யதார்த்தம்..
2ம்4ம் வித்தியாசம்...நல்லாருக்கு//
நன்றி கண்ணகி
//செந்தில் நாதன் said...
எனக்கு நாலு புடிச்சுருக்கு!!
முதல் கவித இந்த மரமண்டைக்கு புரியல :(//
வருகைக்கு நன்றி செந்தில்..
நாசிக்கில் என்ன நடக்கிறது என்பது தெரியுமானால்..முதல் கவிதையின் பொருள் வளங்கும்
//சின்ன அம்மிணி said...
நல்லா இருக்கு//
நன்றி சின்ன அம்மிணி
//அகநாழிகை said...
2ம் 4ம் பிடித்திருக்கிறது சார்.
தொடர்ந்து எழுதுங்க.//
நன்றி அகநாழிகை
//ராமலக்ஷ்மி said...
நாலாவது வெகு அருமை.//
நன்றி ராமலக்ஷ்மி
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
SUPER HIT//
நன்றி SUREஷ்
// வானம்பாடிகள் said...
:)) //
நன்றி வானம்பாடிகள்
மிகவும் அருமை.
நன்றி V.Radhakrishnan
Post a Comment