மெலிதான இருள்
மெழுகுவர்த்தியின் சன்ன ஒளி
ஹேப்பி பர்த் டே பாடல்
அவனுக்கு பிறந்த நாள்
மெழுகுவர்த்திக்கு இறந்த நாள்
2)கொட்டும் மழையில்
தொப்பலாக நனைகிறாள்
இரு தங்கக் குடைகள்
காதில் நடனமாட..
3)பூக்களைப் பறிக்காதீர்
பூங்காவில் வாசகம்
பெருமூச்சு விடுகிறாள்
பேரிளம் பெண்
4)குளத்தில்
முழு நிலா
குளிரில் நடுங்குகிறது
5)கல்யாணம் பண்ணும் வரை பிள்ளை
கண்ணை மூடும் வரை பெண்
இது பழமொழியாம்
கண்ணை மூட வைத்ததும் பெண்
அதைச் சொல்ல மறந்ததேன்?
14 comments:
எல்லாமே அழகு.............!!!
/கண்ணை மூட வைத்ததும் பெண்
அதைச் சொல்ல மறந்ததேன்?/
கண் மூட விடாமல் பண்ணுவதும் அவளென்பதாலோ?:))
ஐந்தும் நல்லா இருக்கு
கண்ணைத் திறந்து வைப்பதும் பெண்
அதையும் யோசிக்க மறந்து போனேனே..
எல்லாம் நல்லா இருக்கு...
//வானம்பாடிகள் said...
கண் மூட விடாமல் பண்ணுவதும் அவளென்பதாலோ?:))//
வருகைக்கு நன்றி பாலா..
வரதராஜன் ஞாபகம் வந்தார்..எழுதும்போது..அதுதான் வரிகள் அப்படி அமைந்துவிட்டன.
//Chitra said...
எல்லாமே அழகு.............!!!//
நன்றி Chitra
//சின்ன அம்மிணி said...
ஐந்தும் நல்லா இருக்கு//
நன்றி சின்ன அம்மிணி
//goma said...
கண்ணைத் திறந்து வைப்பதும் பெண்
அதையும் யோசிக்க மறந்து போனேனே..//
வருகைக்கு நன்றி கோமா..
வானம்பாடிகள் பின்னூட்டத்திற்கான பதிலே உங்களுக்கும்
//வித்யா said...
எல்லாம் நல்லா இருக்கு...//
நன்றி வித்யா
அற்புதம் தங்கக் குடைகள் அற்புதம்
//"உழவன்" "Uzhavan" said...
அற்புதம் தங்கக் குடைகள் அற்புதம்//
நன்றி "உழவன்"
//அவனுக்கு பிறந்த நாள்
மெழுகுவர்த்திக்கு இறந்த நாள்
//
ஏனிப்படி..,
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//அவனுக்கு பிறந்த நாள்
மெழுகுவர்த்திக்கு இறந்த நாள்
//
ஏனிப்படி..,//
அதேதான் என் கேள்வியும்
Post a Comment