1)இந்தியாவின் குடியரசுத் தலைவர் அதிகாரபூர்வ அலுவலகமாகவும், இல்லமாகவும் திகழும் ராஷ்டிரபதி பவனின் மொத்த பரப்பு 4.5 ஏக்கராகும்.இதில் 340 அறைகள்,74 லாபிகள்.டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 104 பேர் அமர்ந்து சாப்பிடலாம்.பரிமாற இரண்டு பேருக்கு ஒரு சர்வர்.சைனீஸ்,இத்தாலியன்,மெக்ஸிகன்,ஐரோப்ப,தென்னிந்திய உணவுகள் என 24 மணி நேரமும் கிடைக்கிறதாம்.37 செயற்கை நீரூற்றுகள், வெந்நீர் நீச்சல் குளம் உண்டு.மாளிகையின் உள்ளே 900 சீருடை பணியாளர்கள் உள்ளனர்.இவர்களின் லாண்டெரி செலவு மாதத்திற்கு ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாயாம்.
2)மணமாகி வீட்டிற்கு வரும் மணமக்களை நுழைவாயிலில் வலது காலை எடுத்துவைத்து வா என்கிறார்கள்.இப்படி எல்லாவற்றிலும் வலம் முதலிடம் பெறுவது ஏன் தெரியுமா? பூமி வலப்பக்கமாக சுற்றுகிறது என்பதாலேயே ஆகும்
3)தமிழுக்கு இனம் மூன்று.அவை வல்லினம்,மெல்லினம்,இடையினம் என்பதாம். நம் மொழியின் பெயரில் மூன்று இனங்களும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.த- வல்லினம்., மி-மெல்லினம்.,ழ்-இடையினம்.
4) ஒரு மனிதன்
கோபமாய் பேசினால் குணத்தை இழப்பான்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பான்
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பான்
வேகமாய் பேசினால் வேலையை இழப்பான்
ஆணவமாய் பேசினால் பெயரை இழப்பான்
சிந்தித்து பேசினால் சிறப்புடன் இருப்பான்
5)மனித உடலில் மிகவும் தூய்மையான ரத்தம் சிறுநீரகச் சிறையில்தான் இருக்கிறது
6)ஒரு ஜோக்
ஒரு விவாகரத்து நீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருந்தது.கணவனிடமிருந்து விவாகரத்துக் கேட்ட பெண்மணியைப் பார்த்து நீதிபதி'உனக்கு உன் கணவனிடமிருந்து மாதம் எவ்வளவு ஜீவனாம்சம் வேண்டும்' என்றார்.அதற்கு அப் பெண்மணி 'எனக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம்..என்னை கல்யாணம் செய்துக் கிட்ட போது..நான் எப்படியிருந்தேனோ..அதே போல என்னை விட்டா போதும்' என்றாள்.இதைக் கேட்டுக் கொண்டிருந்த கணவன் 'அது எப்படி முடியும்..இவளைக் கல்யாணம் பண்ணினப்போ அவ விதவையா இல்ல இருந்தா..!!'என்றான்
27 comments:
1: நல்ல முன்னுதாரணம்.அடுக்குமா இது:(
2-5: நன்றி தகவலுக்கு
6:கலக்கல்
நல்லா இருக்கு. சுவாரஸ்யம்.
அனுஜன்யா
//த- வல்லினம்., மி-மெல்லினம்.,ழ்-இடையினம்.//
அடடா... இதுவும் சிறப்பல்லவோ....
தகவல்கள் அருமை...ஜோக்கும்...
ஜோக் சூப்பர்
நல்ல தகவல்
தேங்க்ஸ்
//வானம்பாடிகள் said...
1: நல்ல முன்னுதாரணம்.அடுக்குமா இது:(
2-5: நன்றி தகவலுக்கு
6:கலக்கல்//
நன்றி வானம்பாடிகள்
//அனுஜன்யா said...
நல்லா இருக்கு. சுவாரஸ்யம். //
நன்றி அனுஜன்யா
//க.பாலாசி said...
அடடா... இதுவும் சிறப்பல்லவோ.... //
தகவல்கள் அருமை...ஜோக்கும்...///
நன்றி பாலாசி
//வரதராஜலு .பூ said...
ஜோக் சூப்பர்//
நன்றி வரதராஜலு .பூ
//venkat said...
நல்ல தகவல்
தேங்க்ஸ்//
நன்றி venkat
தமிழா.., தமிழா..,
//அது எப்படி முடியும்..இவளைக் கல்யாணம் பண்ணினப்போ அவ விதவையா இல்ல இருந்தா..!!'என்றான் //
நாங்க வேற எதிர்பார்த்தோம்
//பரிமாற இரண்டு பேருக்கு ஒரு சர்வர்.//
இந்தியாவில் எல்லா மக்களுக்கு இவ்வாறு பரிமாற ஆள் நியமித்துவிட்டால் சுலபமாக வேலை இல்லா திண்டாட்டத்தை நீக்கிவிடலாம்
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
தமிழா.., தமிழா..,//
தமிழா.., தமிழா!!!
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
நாங்க வேற எதிர்பார்த்தோம்//
நீங்க எதிர்ப்பார்க்கறதை நாங்க கொடுத்தா எப்படி
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
இந்தியாவில் எல்லா மக்களுக்கு இவ்வாறு பரிமாற ஆள் நியமித்துவிட்டால் சுலபமாக வேலை இல்லா திண்டாட்டத்தை நீக்கிவிடலாம்//
உங்கள் ஆலோசனை டில்லிக்கு அனுப்பப்படும் :)))
சுண்டல் நல்லாயிருக்கு.ஜோக் சூப்பர்ர்ர்ர்ர்...
//) மணமாகி வீட்டிற்கு வரும் மணமக்களை நுழைவாயிலில் வலது காலை எடுத்துவைத்து வா என்கிறார்கள்.கோயிலில் பிரதட்சணம் என்றாலும் கூட வலப்பக்கமாக சுற்றுகிறோம்.இப்படி எல்லாவற்றிலும் வலம் முதலிடம் பெறுவது ஏன் தெரியுமா? பூமி வலப்பக்கமாக சுற்றுகிறது என்பதாலேயே ஆகும்.
//
தவறான தகவல் பூமி கடிகார எதிர் திசையில் தான் சுற்றுகிறது, கோவிலை கடிகார திசையில் சுற்றுவார்கள். சிங்கைக்கு பொழுது விடிந்த பிறகு தான் இந்தியாவிற்கு விடியும் கடிகார சுற்றுக்கு எதிராக சுற்றினால் தான் இது நடக்கும்
1. இந்தியா ஏழை நாடு- எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க.
2. கோவி சொன்னது போல பூமி இடமாகத்தான் சுற்றுகிறது. http://en.wikipedia.org/wiki/Earth's_rotation
3. நல்ல தகவல்
4. ப்ளாக் எழுதினால் /படித்தால் - நேரத்தை இழப்பான்
5. Irony
6. நல்ல ஜோக்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//Mrs.Menagasathia said...
சுண்டல் நல்லாயிருக்கு.ஜோக் சூப்பர்ர்ர்ர்ர்...//
நன்றி Menaga
//வல்லினம்,மெல்லினம்,இடையினம்//
இவ்வளவுநாள் இது பெண்யினம் சமந்தப்பட்டதுன்னு நெனச்சிட்டு இருந்தேனே!!!
வருகைக்கு நன்றி Sriram
/// D.R.Ashok said...
//வல்லினம்,மெல்லினம்,இடையினம்//
இவ்வளவுநாள் இது பெண்யினம் சமந்தப்பட்டதுன்னு நெனச்சிட்டு இருந்தேனே!!!///
வருகைக்கு நன்றி Ashok
//கோவி.கண்ணன் said...
தவறான தகவல் பூமி கடிகார எதிர் திசையில் தான் சுற்றுகிறது, கோவிலை கடிகார திசையில் சுற்றுவார்கள். சிங்கைக்கு பொழுது விடிந்த பிறகு தான் இந்தியாவிற்கு விடியும் கடிகார சுற்றுக்கு எதிராக சுற்றினால் தான் இது நடக்கும்//
பூமி வலம் இருந்து இடம் சுற்றுகிறது என நான் சொல்லவில்லை..பிரதட்சணம் என்ற சொல் தவறி இடம் பெற்றுவிட்டது அவ்வரியை நீக்கிவிட்டேன்.பூமி வலம் நோக்கி சுற்றுவதால் என்று கொள்ளவும்
நல்லாயிருக்கு சார்.
வருகைக்கு நன்றி அக்பர்
Post a Comment