பதிவர்களின் பதிவுகளை அச்சில் கொண்டுவரும் செயலை முதலில் வாசுதேவன் ஆரம்பித்து வைக்க குகன் தொடர்ந்துள்ளார்.
கேபிள் ஷங்கர், பரிசல்காரன் ஆகிய பதிவர்கள் எழுதிய சிறுகதைகளை நாகரத்தினா பதிப்பகம் மூலம் குகன் அவர்கள் 14-2-10 அன்று வெளியிடுகிறார்.விவரங்கள் இங்கே..
யூத் பதிவர் என சொல்லிக் கொள்ளும் கேபிளாரும், யூத் பரிசலாரும் இந்த ஆண்டு காதலர் தினத்தை மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
இப்போது தலைப்பிற்கு வருகிறேன்..
சிவராமனும், ஜ்யோவ்ராமும் இணைந்து உரையாடலுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் 250 சிறுகதைகள் வந்தன.பெரும்பாலான கதைகளை நான் படித்திருக்கிறேன்..அனைத்துமே தரமானவை.அகநாழிகையோ, குகனோ..அந்த 250 சிறுகதைகளையும் தொகுத்து புத்தகமாக கொண்டு வரலாம்.கண்டிப்பாக 1000 பக்கங்கள் வரை வரும்.புத்தகத்தின் விலையையும் அதற்கேற்றாற் போல வைக்கலாம்.பதிவர்கள் ஒத்துழைப்பில்..வெளியாகும் பிரதிகள்..முதல் பதிப்பு விற்று விடும்.யாருக்கும் இலவச பிரதிகள் கிடையாது எனலாம்.வேண்டுமானால்..யார் யாருக்கு புத்தகம் தேவை எனக் கேட்டு..முன் பணமும் பெறலாம்.ஆகவே இதற்கான மூலதனம் கண்டிப்பாக நஷ்டத்தை ஏற்படுத்தாது.
இந்த யோசனை பிடித்திருந்தால்..இதைப் படிப்பவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
அதை வைத்து அவர்கள் சாதகமான முடிவை எடுக்க வைக்க முயற்சிக்கலாம்.
23 comments:
நல்ல யோசனை. நானும் வழி மொழிகிறேன்.
அருமையான யோசனை நண்பரே.. வாசுவும் குகனும் எங்கிருந்தாலும் ஓடி வரவும்..:-)))
நல்ல யோசனை
நல்ல யோசனைதான்.. :)) நிச்சயம் அனைவரும் விரும்புவார்கள், இருவருமே சேர்ந்து இரண்டு தொகுதிகளாகவும் வெளியிடலாம்..:))
சிறப்பான யோசனை ஐயா.
நானும் கிட்டத்தட்ட எனது ஆறு தொடர்கதைகளை ஒரே புத்தகமாக வெளியிட எண்ணி இருக்கிறேன்.
வழிமொழிகிறேன்
போட்டிக்கு வந்த கதைகளில் சிறந்த கதைகளை தொகுக்கலாம். எல்லா கதைகளுமே நல்லா இருந்தால் அனைத்தையும் தொகுக்கலாம்.
நல்ல ஆலோசனை சார். பண்ணலாம்.:)
வழி மொழிகிறேன்
நல்ல யோசனை.
நல்ல யோசனை. நானும் வழி மொழிகிறேன்.
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
சாம்ராஜ்ய ப்ரியன்
கார்த்திகைப் பாண்டியன்
Cable sankar
ஷங்கர்..
V.Radhakrishnan
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
SUREஷ் (பழனியிலிருந்து)
மஞ்சூர் ராசா
வானம்பாடிகள்
நசரேயன்
செந்தழல் ரவி
என். உலகநாதன்
நல்ல விசயம், செய்யுங்கள். நன்றி.
நல்ல விஷயம்தான். செய்யலாம்.
//அகநாழிகை said...
நல்ல விஷயம்தான். செய்யலாம்.//
நன்றி வாசு
//பித்தனின் வாக்கு said...
நல்ல விசயம், செய்யுங்கள். நன்றி//
நன்றி பித்தனின் வாக்கு
நல்ல யோசனை
நன்றி Starjan
அருமையான யோசனை.
//ராமலக்ஷ்மி said...
அருமையான யோசனை.//
நன்றி ராமலக்ஷ்மி
250 இரண்டாக பிரித்து வெளியிட்டால் விலை கணிசமாக இருக்கும்
யோசனை மிக நன்று
நன்றி பாலாஜி
Post a Comment