Monday, April 26, 2010

18000000000 + 2000000000



(மேலே உள்ள போலீஸ்காரரால் என்ன செய்ய முடியும்?)


கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தும் 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாகக் கட்டித்தரும் தமிழக அரசின் திட்டத்திற்கு..முதல் ஆண்டிற்கான அரசு செலவிடப்போகும் பணம் இது..இதனால் மூன்று லட்சம் மக்கள் வீடு பெறுவர்..இதற்கான செலவு 1800 கோடீ ருபாய்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி,5 பேரூராட்சி மற்றும் 64 வழியோரக்குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு குடிநீர்திட்ட விவாக்கத்திற்கு அரசு செலவிடப்போகும் பணம் 1800 கோடி..இதனால் மக்கள் தாகம் தீர 270 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்..

மாயாவதிக்கு அவர் ஆயுள் முழுதும் பிறந்த நாளுக்கு பணமாலை போட 1800 கோடி போதும்..

IPL T20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு..போட்டியாளர்கள் முதல் பரிசுத் தொகையாக 1800 கோடியை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்குக் கொடுக்கலாம்.

ஆமாம் இதெல்லாம் என்ன கணக்கு என்கிறீர்களா?

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயிடமிருந்து ஊழல் குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்..ஒவ்வொரு வருடமும் அங்கீகாரம் தர கோடிக்கணக்கில் லஞ்சம்..தவிர அக்கல்லூரிகளில் அவருக்கென்று 5 சீட்டுகள்..அதன் மூலம் ஆண்டு வருமானம் 200 கோடி..

ஊழல் பெருச்சாளி எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்..ஆனால் ஊழல் யானை இவர்..

ஆமாம்..சாதாரணக் குடிமகனுக்கு கிடைக்கும் டெபாசிட் வட்டியில் கூட pan நம்பர் இல்லையேல் வருமான வரி பிடித்தம் செய்யச் சொல்லும் அரசுக்கு..இவ்வளவு ஆண்டுகளாக எப்படி இவரைப் பற்றித் தெரியாமல் போச்சு?

மேலே குறிப்பிட்டுள்ளது 1800 கோடிக்கு எத்தனை சைபர் எனத் தெரிந்துக் கொள்ள..

அது சரி + போட்டு அது என்ன என்கிறீர்களா? அவரிடமிருந்து கைப்பற்றிய 1500 கிலோ தங்கத்தின் மதிப்பு..(கிராம் 10000 ரூபாய் எனக் கொண்டால்)

அவருக்கென்ன..வாழ்நாளில் பெரும் பகுதி கழிந்து விட்டது..மீதி நாளை ஜாமீனில் கழித்துவிடுவார்..

கடைசியில் பதிவை ஒரு திருக்குறளுடன் முடிக்காவிட்டால் வானம்பாடிகள் (பாலாஜி) கோபித்துக் கொள்வார்..அதனால் ஒரு குறள்

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்

(களங்கத்துக்குப் பயப்படக்கூடியவர்கள்..விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்)

எருமைத் தோலர்களைப் பற்றியும், நாட்டு துரோகிகள் பற்றியும் பேசிப் பயனில்லை..

டிஸ்கி..- ஹி..ஹி..மேலே உள்ள போலீஸ்காரர் நான் தான்..என் 'மனசேதான் கடவுளடா" நாடகத்தில்

25 comments:

Jackiesekar said...

டிஸ்கி..- ஹி..ஹி..மேலே உள்ள போலீஸ்காரர் நான் தான்..என் 'மனசேதான் கடவுளடா" நாடகத்தில் --//

அந்த படத்துல போலிஸ்காரருக்கான எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு...

ஈரோடு கதிர் said...

//மீதி நாளை ஜாமீனில் கழித்துவிடுவார்..//

ம்ம்ம்ம்...

போலீஸ்கார அய்யாக்கு... மேக்கப் நல்லாயிருக்குங்க

கோவி.கண்ணன் said...

//ஊழல் பெருச்சாளி எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்..ஆனால் ஊழல் யானை இவர்..//

பொதுவாக சாதுவான விலங்குகளை உதாரணமாக சொல்லமாட்டார்கள்.

ஊழல் முதலை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

கோவி.கண்ணன் said...

//அது சரி + போட்டு அது என்ன என்கிறீர்களா? அவரிடமிருந்து கைப்பற்றிய 1500 கிலோ தங்கத்தின் மதிப்பு..(கிராம் 10000 ரூபாய் எனக் கொண்டால்)//

கிராம் ரூ 10,000 இல்லை, 8 கிராம் (ஒரு சவரன்) 15,000 ரூபாய் தான். தவறான தகவல் என உங்க மேல தேசாய் கேஸ் போட்டுவிடப் போகிறார்.

:)

கோவி.கண்ணன் said...

:)

போலிஸ்காரரின் முக்கிய அம்சம் தொப்பையுடன் நல்லா பொருத்தமாக இருக்கு வேடம்.

கோவி.கண்ணன் said...

சிரிப்பு போலிஸ் வடிவேல் படத்தில் பார்த்ததுண்டு, இப்ப மறுபடியும்.

:))))))))))

Chitra said...

கூடவே, இன்னும் பல போட்டோஸ் ....... பதிவு நல்லா இருக்கு.

You look like a real cop. :-)

Vidhya Chandrasekaran said...

:(((

:))

vasu balaji said...

கொஞ்ச்ச்ச்ச்ச்சம் காஸ்ட்லி ஹாபி போல இருக்குல்ல சார்:))

ராமலக்ஷ்மி said...

நாட்டு நடப்பை எடுத்துச் சொல்லும் நல்ல போலீஸ்:)!

Unknown said...

என்னால பெருமூச்சு மட்டும்தான் விடமுடியும்...

Paleo God said...

ஊழல் யானையா? வெறும் பாக்ட்டீரியா சார் இது. யானைங்கள்ளாம் முகம் காட்டாம சுதந்திரமா திரிஞ்சிகிட்டு கிடக்குங்க.

போலீஸ்கார் போட்டோ டக்கர்! :)

இராகவன் நைஜிரியா said...

// ஆமாம்..சாதாரணக் குடிமகனுக்கு கிடைக்கும் டெபாசிட் வட்டியில் கூட pan நம்பர் இல்லையேல் வருமான வரி பிடித்தம் செய்யச் சொல்லும் அரசுக்கு.//

அரசின் சட்ட திட்டங்கள் எல்லாம் சாதாரணமானவர்களுக்குத்தான்.

சிநேகிதன் அக்பர் said...

சரியா சொல்லியிருக்கீங்க சார்.

அந்த போலீஸ் படத்தை பார்த்தவுடனே உங்கள் நாடகம் தான் என்பது தெரிந்தது. ஆனால் நீங்கள் என்பது சொல்லித்தான் தெரிந்தது.

Vidhoosh said...

சார், என் பொண்ணையும் அழைச்சுண்டு வந்திருந்தேன். இரண்டு ஸீன் முடிஞ்சிருந்தது.

முதல்ல நீங்கதான் அதுன்னு கண்டுபிடிக்க முடில. "போலி"ஸ் வேறையா.. :)) கன்னத்து மச்சம் வேற இல்லையா? :)) அதான். ஆனா நைசா நான் அனுப்பின sms செக் பண்ணீங்க பாருங்க, அப்போதான் மாட்டிகிட்டீங்க :))

என் பொண்ணு நல்ல சிரித்து ரசித்து கொண்டிருந்தாள் சார். 'தியேட்டர் டிராமா'ன்னு சொன்னியே, இது 'பெரிய டிவி' (சினிமா ஹால்) மாதிரி இல்லையே, நிஜம் மனுஷங்க வராங்களே என்றெல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள். :)

நல்ல lighting, மற்றும் acoustics

Vidhoosh said...

சார், அதுக்காக யானையை ஏன் சார் வம்புக்கு இழுகிறீங்க. பாவம் சார், பூரம் வேற வந்துண்டே இருக்கு... சோறு தண்ணி இல்லாம "கொட்டு கொட்டு"ன்னு கொட்டரதை பாத்துண்டு கால் மாறி மாறி நின்னுண்டு இருக்கும் பாவம் .... :(

ஹேமா said...

நல்ல போலீஸ்.
அழகாயிருக்கிறார் ஐயா.

angr said...

அப்ப ஊழல் 'சுறா'ன்னு சொல்லலாமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

LK
அந்த பின்னூட்டம் நீக்கப்படுகிறது.ssk மன்னிக்கவும்..
அந்த வரிகள் உங்கள் பின்னூட்டத்திலும் உள்ளதால் அதையும் நீக்குகிறேன்
வருகைக்கு நன்றி Lk

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் கெட்டப்..
எங்களுக்கும் நடிக்க சான்ஸ் குடுங்க :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

goma said...

வள்ளுவர் வாக்கு எந்தகாலத்துக்கும் ஏற்ற ஒரு எழுத்தோவியம் என்பதை அழகாக செய்தியோடு இணைத்து விட்டீர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Goma

Radhakrishnan said...

வாழ்த்துகள் ஐயா. மிகவும் அருமையாக இருக்கிறது வேடம். ஊழல், என்ன செய்வது, நமது நாட்டின் சாபக்கேடு. நாடகத்தின் அசைபடம் கிடைக்குமா ஐயா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
V.Radhakrishnan