Thursday, April 22, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(23-4-10)

உடல் இளைக்க சிலர் 'டயட்' டில் இருப்பதாகக் கூறுவர்..ஆனால் இப்படி டயட்டில் இருப்பதால் இதய நோய்கள்,கேன்சர்,டயாபடீஸ் ஆகிய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வு அறிக்கைக் கூறுகிறது..ஆகவே மருத்துவரை கலந்து ஆலோசிக்காது..நீங்களே இஷ்டத்திற்கு டயட்டில் இருக்காதீர்கள்

2)சர்வதேச நிதி நெருக்கடிக்கு இடையேயும்..வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த நிதியாண்டில் முதல் ஆறு மாத காலங்களில் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 1.22 லட்சம் கோடி..நமது நன்றியை என்.ஆர்.ஐ., க்களுக்கு சொல்வோம்

3)நம் நாட்டு மக்கள் தொகையில் 37.2 சதவிகிதத்தினர்..அதாவது கிட்டத்தட்ட 40.71 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாம்..

4)உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக கோவையில் 140 திருமண மண்டபங்கள் இதுவரை பதிவு செய்து வைக்கப் பட்டுள்ளனவாம்..தவிர்த்து கோவையில் நான்காயிரம் ஓட்டல் அறைகளும்,மேட்டுப்பாளயத்தில் 300 அறைகளும்,திருப்பூரில் 400 அறைகளும், நீலகிரியில் ஆயிரம் அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்

5)தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 105 கடைகள்..கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது..(தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என அறிவித்த தமிழக அரசு..எங்களுக்கும் அப்படி அறிவித்தால் தமிழில் பெயர் வைக்கிறோம்..அதைவிடுத்து சட்டப்படி நடவடிக்கை என்றால்..அரசு..ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பாய் செயல்படுவது ஏன்? என்கிறார் ஒரு வியாபாரி)

6) இரவுக்கு வேண்டியதை பகலில் தேடி வைத்துக் கொள்
மழைக்காலத்திற்கு வேண்டியதை மற்றைய காலத்தில் தேடி வைத்துக் கொள்
முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக்கொள்
மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்

- வாரியார்

7)கொசுறு ஒரு ஜோக்

தலைவரே! உங்க மேல உயர்நீதி மன்றத்தில் உள்ள கேஸ்ல தர்மம் வெல்லும்னு மக்கள் பேசிக்கிறாங்க
உச்ச நீதி மன்றம் வரைக்கும் போய் பார்த்துடலாம்.,

டிஸ்கி- 25-4-10 ஞாயிறு மாலை 7 மணி அளவில் நாரத கான சபாவில் நடைபெறும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் நான் எழுதி, இயக்கும் 'மனசேதான் கடவுளடா' என்ற நாடகம் அரங்கேறுகிறது.அனுமதி இலவசம்..அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன்

25 comments:

கோவி.கண்ணன் said...

//5)தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 105 கடைகள்..கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது..(தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என அறிவித்த தமிழக அரசு..எங்களுக்கும் அப்படி அறிவித்தால் தமிழில் பெயர் வைக்கிறோம்..அதைவிடுத்து சட்டப்படி நடவடிக்கை என்றால்..அரசு..ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பாய் செயல்படுவது ஏன்? என்கிறார் ஒரு வியாபாரி)//

சிறு கடைகளுக்கு அரசே பெயர் பலகைகளை எழுதித்தரலாம். புதிய விளம்பர பலகை செய்யும் அளவுக்கு உபரி வருமானம் இல்லாதவர்களை மிரட்டுவது கண்டனத்துக்குரியது.

கோவி.கண்ணன் said...

//முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக்கொள்
மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்//

வர வர ஆன்மிகம் பக்கம் ரொம்ப ஒதுங்கிற மாதிரி தெரிகிறது.

:)

கே.ஆர்.பி.செந்தில் said...

"நம் நாட்டு மக்கள் தொகையில் 37.2 சதவிகிதத்தினர்..அதாவது கிட்டத்தட்ட 40.71 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாம்.."

மொத்தத்தையும் சில ஆளுங்களே சாப்பிட்டா...
இப்படிதான்..

பிரபாகர் said...

நாடகம் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள் அய்யா!

உயர்-உச்ச நீதிமன்ற ஜோக் அருமை.

பிரபாகர்...

Chitra said...

வாழ்க தமிழ்!
உங்கள் நாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

goma said...

நாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

பரிதி நிலவன் said...

நாடக அரங்கேற்றத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

டமில் மாநாட்ல ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!!

வானம்பாடிகள் said...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த நிதியாண்டில் முதல் ஆறு மாத காலங்களில் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 1.22 லட்சம் கோடி..//

இது கொஞ்சம் ரிஸ்கி. அந்த நாட்டு பொருளாதாரம் தொங்கல்ல இருக்கும்போது இதனால் அங்கிருப்பவருக்கு ஆபத்து.

முரளி said...

போற போக்க பார்த்தா, பிள்ளைகளுக்கு தமிழ்ல பெயர் வெக்க கூட வரி விலக்கு ..ஊக்கத்தொகை கேட்பாங்க போல இருக்கு :)

நாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

கண்ணகி said...

4)உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக கோவையில் 140 திருமண மண்டபங்கள் இதுவரை பதிவு செய்து வைக்கப் பட்டுள்ளனவாம்..தவிர்த்து கோவையில் நான்காயிரம் ஓட்டல் அறைகளும்,மேட்டுப்பாளயத்தில் 300 அறைகளும்,திருப்பூரில் 400 அறைகளும், நீலகிரியில் ஆயிரம் அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்

5)தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 105 கடைகள்..கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது..(தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என அறிவித்த தமிழக அரசு..எங்களுக்கும் அப்படி அறிவித்தால் தமிழில் பெயர் வைக்கிறோம்..அதைவிடுத்து சட்டப்படி நடவடிக்கை என்றால்..அரசு..ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பாய் செயல்படுவது ஏன்? என்கிறார் ஒரு வியாபாரி)

நியாயமான கேள்வி...

மணிகண்டன் said...

&&&&
உடல் இளைக்க சிலர் 'டயட்' டில் இருப்பதாகக் கூறுவர்..ஆனால் இப்படி டயட்டில் இருப்பதால் இதய நோய்கள்,கேன்சர்,டயாபடீஸ் ஆகிய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வு அறிக்கைக் கூறுகிறது..ஆகவே மருத்துவரை கலந்து ஆலோசிக்காது..நீங்களே இஷ்டத்திற்கு டயட்டில் இருக்காதீர்கள்
&&&&

Completely agree.

க.பாலாசி said...

நல்ல பகிர்வு அய்யா...

தங்களின் நாடகம் சிறப்புடன் நடந்தேற வாழ்த்துக்கள்....

என்.ஆர்.சிபி said...

//டிஸ்கி- 25-4-10 ஞாயிறு மாலை 7 மணி அளவில் நாரத கான சபாவில் நடைபெறும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் நான் எழுதி, இயக்கும் 'மனசேதான் கடவுளடா' என்ற நாடகம் அரங்கேறுகிறது.அனுமதி இலவசம்..அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன் //

அட! வாழ்த்துக்க்கள்!

மாதேவி said...

தகவல்களுக்கு நன்றி.

கொசுறு ஜோக் அருமை.

உங்கள் நாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

*இயற்கை ராஜி* said...

நாடகம் நல்லபடியாக நடக்க என் வாழ்த்துக்கள்

நசரேயன் said...

நாடகம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

செந்தழல் ரவி said...

தமிழ்மணம் ப்ரீஸ் ஆகும்போது சரியாக முகப்பில் தோன்றிவிட்டதே..

நாடகத்துக்கு வாழ்த்துக்கள்...!!!

~~Romeo~~ said...

நாடகம் நன்றாக நடைபெற வாழ்த்துக்கள் ..

LK said...

நாடகத்திற்கு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி..வாசக பரிந்துரைக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கும்...எதிர்த்து வாக்களித்தவருக்கும் நன்றி

இளமுருகன் said...

நல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி

நாடகம் சிறப்புற வாழ்த்துகள்

இளமுருகன்
நைஜீரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இளமுருகன் said...
நல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி

நாடகம் சிறப்புற வாழ்த்துகள்//

நன்றி இளமுருகன்

Dr. Srjith. said...

அருமை நண்பரே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Dr. Srjith.