Friday, April 2, 2010

சாகுந்தலம் ..(நாட்டிய நாடகம் )- 3



முந்தைய பகுதி

காட்சி - 4

(துஷ்யந்தன்..சகுந்தலை கூடல்)

தெற்கு வாசல்

தென்னம் ஓலை குடில்

தென்றல் காற்று

குளிர்கால இரவு

வெளியிலோ பனிப் பொழிவு

இரு நிலவுகள்

வானில் ஒன்று

மன்னன் அருகில் ஒன்று

பொட்டு வைத்த முகம்

அள்ளி முடிந்த கூந்தல்

அள்ளும் பூ வாசம்

படிக்காமலே புரியும்

மன்மதக்கலை

அவளைப் படிக்கப் படிக்க

அவனுக்குப் புரிந்தது

அறுபத்தினாலு கலை

சிக்கிமுக்கி கற்களாய்

உடல்கள் உரச

பற்றிக்கொண்டது நெருப்பு


காட்சி-5

(துஷ்யந்தன் நாட்டிற்குத் திரும்புதல்)

றெக்கைக் கட்டி பறந்தது காலம்

தினம் தினம் புது அத்தியாயம்

மன்னனுக்கு நாட்டிலிருந்து அழைப்பு வர

'சகுந்தலை' என விளித்து

அரசரில்லாது நாடு தவிக்கிறதாம்

அமைச்சர்களால் முடிவேதும்

எடுக்க முடியவில்லையாம்

நான் உடன் தலைநகர் சென்றிடவேண்டும்

என்றிட்டான் மன்னன்

பெண்ணே...என் கண்ணே

இன்று உனை நான் பிரிகிறேன்

சென்று..சில நாட்களில் உனை

எந்நாட்டு அரசியாய் அழைத்திடுவேன்

அதுவரை பொறுமகளே என்றிட்டான்

பிரிவு அன்பை வளர்க்கும்

பிரியமுடன் கூறியதைக் கேட்ட பேதை

எதிர்காலக் கனவுகளில் மூழ்கி

கண்கள் தாரையாய் நீர் சொரிய

பிரியா விடை அளித்தாள் பிரியமானவனுக்கு

(தொடரும்)

10 comments:

Chitra said...

பிரிவு அன்பை வளர்க்கும்

பிரியமுடன் கூறியதைக் கேட்ட பேதை

எதிர்காலக் கனவுகளில் மூழ்கி



........ பாட்டில் சந்தம் நல்லா அமைந்து வந்திருக்கு.

goma said...

அருமை.

மின்மினி RS said...

அருமையான பாடல்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை அருமையான பாடல்.

டிவிஆர் சார் உங்களுக்கு ஒருவிருது கொடுத்துள்ளேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ள அழைக்கிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

//பிரிவு அன்பை வளர்க்கும்//

உண்மைதான் சார்.

Unknown said...

நல்ல ரசனை. தெளிவான வரிகள். அருமை.

உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தலத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிரபாகர் said...

நல்லா போகுதுங்கய்யா! தொடருங்க!

பிரியமானவனுக்கு பிரியாவிடை...

ரொம்ப நல்லாருக்கு.

பிரபாகர்...

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
Chitra
Goma
மின்மினி
அக்பர்
punitha
பிரபாகர்
வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
டிவிஆர் சார் உங்களுக்கு ஒருவிருது கொடுத்துள்ளேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ள அழைக்கிறேன்//

நன்றி Starjan