Friday, June 18, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (18-6-10)

எப்போதெல்லாம் முடிகிறதோ..அப்பொழுதெல்லாம் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.முருங்கை இலையில் பழங்களைவிட 7 மடங்கு வைட்டமின் 'சி' சத்து அதிகமாக உள்ளதாம்.பாலைவிட கால்சிய சத்து 4 மடங்கு அதிகம் உள்ளது.காரெட்டைவிட 4 மடங்கு வைட்டமின் 'ஏ' உள்ளதாம்.பொட்டாசிய சத்து வாழைப்பழத்தைவிட 3 மடங்கு அதிகம் உள்ளது.

2)சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு பெற்றுக் கொண்டு திரும்பியுள்ளார்.அவற்றில் ஒன்று..சிங்கள ராணுவத்திற்கும்,போலீசாருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிப்பது.இலங்கையில் போர் முடிந்துவிட்டது..புலிகளை ஒழித்து விட்டோம் என்று கூறிய ராஜபக்க்ஷே.. சிங்கள ராணுவத்திற்கு மீண்டும் பயிற்சி பெறுவது யாருக்காக..யாரை ஒழிக்க..

3)போலி விஷ வாயு வழக்கில் 26 வருஷம்,சிபுசோரன் கொலை வழக்கில் 36 வருஷங்கள் கழித்து விசாரணை முடிந்து தீர்ப்பு வந்துள்ளது.தீர்ப்புகள் பற்றி விமரிசிக்க வேண்டாம்..ஆனால்..வழக்குகள் முடிய இத்தனை ஆண்டுகளா..என எண்ணுகையில் வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது..கவியரசு அன்றே சொன்னார் 'கோர்ட்டுக்குப் போனால் நடக்காது..அந்த கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது' என்று

4)சதுரங்க ஆட்டத்தை முதலில் கண்டு பிடித்த நாடு என்ற பெருமை இந்தியாவையேச் சாரும்.

5)தற்போது உலகம் முழுதும் வெப்பம் அதிகரித்து வருவதால்..புயல், சூறாவளி, பனிப்பொழிவு ஆகியவை அதிகரித்து வருகிறதாம்..1939 முதல் 1986 வரை அட்லாண்டிக் கடலில் வருஷத்திற்கு 41 புயல் காற்றுகள் உருவாகுமாம்..இப்போது அதுவே 63 ஆக அதிகரித்துள்ளதாம்.

6)கொசுறு...
அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற
வாயுத் தொந்தாவுன்னு போனா..ஆமாம்..உங்க உடம்புல 10 சதவிகிதம் நைட்ரஜன்,3 சதவிகிதம் ஹைட்ரஜன்,65 சதவிகிதம் ஆக்சிஜன் வாயுக்கள் இருக்குன்னு சொல்றார்

டிஸ்கி...அனைவரையும் மாலை புத்தக வெளியீட்டில் சந்திக்கிறேன்

15 comments:

வெண்பூ said...

புத்த‌க‌ வெளியீட்டுக்கு வாழ்த்துக‌ள் சார்... அலுவ‌ல‌க‌ ப‌ணி கார‌ண‌மாக‌ என்னால் புத்த‌க‌ வெளியீட்டு விழாவில் க‌ல‌ந்துகொள்ள‌ முடியாத‌து வ‌ருத்த‌மாக‌ இருக்கிற‌து, இருந்தாலும் விழாவிற்கு வ‌ரும் ந‌ண்ப‌ரிட‌ம் என‌க்கும் ஒரு காப்பி புத்த‌க‌ம் வாங்க‌ச் சொல்லியிருக்கிறேன். ம‌றுப‌டியும் வாழ்த்துக‌ள்..

எல் கே said...

//ஆமாம்..உங்க உடம்புல 10 சதவிகிதம் நைட்ரஜன்,3 சதவிகிதம் ஹைட்ரஜன்,65 சதவிகிதம் ஆக்சிஜன் வாயுக்கள் இருக்குன்னு சொல்றார்//
:)))))

Chitra said...

போலி விஷ வாயு வழக்கில் 26 வருஷம்,சிபுசோரன் கொலை வழக்கில் 36 வருஷங்கள் கழித்து விசாரணை முடிந்து தீர்ப்பு வந்துள்ளது.தீர்ப்புகள் பற்றி விமரிசிக்க வேண்டாம்..ஆனால்..வழக்குகள் முடிய இத்தனை ஆண்டுகளா..என எண்ணுகையில் வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது..கவியரசு அன்றே சொன்னார் 'கோர்ட்டுக்குப் போனால் நடக்காது..அந்த கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது' என்று

......நிகழ்வுகளின் வீரியத்தை குறைத்து, மறக்க வைத்து - நோகாமல் நுங்கெடுக்க - சட்டத்துக்கு தெரிந்து இருக்கிறது. ம்ம்ம்ம்.....



புத்தக வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்!

அத்திரி said...

வாழ்த்துக்கள் ஐயா

Paleo God said...

விழா சிறப்புற வாழ்த்துகள் சார்! :))

மங்களூர் சிவா said...

புத்த‌க‌ வெளியீட்டுக்கு வாழ்த்துக‌ள் சார்.

vasu balaji said...

விழா சிறப்புற வாழ்த்துகள்:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

புத்தக வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்!.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புத்தக வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வெண்பூ
LK
Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
அத்திரி
shankar
starjan
Bala
சிவா
Ramesh

ஈரோடு கதிர் said...

//சிங்கள ராணுவத்திற்கு மீண்டும் பயிற்சி பெறுவது யாருக்காக..யாரை ஒழிக்க..//

அப்ப்ப்ப்ப்ப்ப்பறம்...

தமிழ்நாடு பக்கத்துலதானே இருக்கு

M.G.ரவிக்குமார்™..., said...

\சமீபத்தில் இலங்கை வந்த இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே/சார்,தப்பாக தட்டச்சி விட்டீர்கள்.....திருத்தி விடுங்கள்!..நன்றி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
அப்ப்ப்ப்ப்ப்ப்பறம்...

தமிழ்நாடு பக்கத்துலதானே இருக்கு//

என்னத்த சொல்ல ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நேசன்™..., said...
\சமீபத்தில் இலங்கை வந்த இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே/சார்,தப்பாக தட்டச்சி விட்டீர்கள்.....திருத்தி விடுங்கள்!..நன்றி!//

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நேசன்™..., ...திருத்திவிட்டேன்