Tuesday, June 1, 2010

நான் விடை பெறுகிறேன் சந்தனமுல்லைக்கு வேண்டுகோளுடன்..

இணைய தளம்..

அவரவர்கள் எழுத்து ஆர்வத்தைத் தீர்க்கும் அற்புதமான தளம்..

நட்பு வட்டத்தைப் பெருக்கும் தளம்..

நல்லெழுத்துக்களுக்கு..நண்பர்கள் பின்னூட்டத்தை அளித்து நமக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இடம்

சமீப காலமாக ஊடகங்களால் கவனிக்கப்பட்டு..தகுதியுள்ளவர்களின் படைப்பை தங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கும் சக்தி படைத்த இடம்..

திரைப்பட விமரிசனங்களைக் கண்டு..தயாரிப்பாளர்களும்..இயக்குநர்களும் நம் படத்திற்கு இணையத்தில் விமரிசனம் எப்படியுள்ளது என ஆர்வத்தை உண்டாக்கிய இடம்..

மேலே சொன்னவைதான் ஒவ்வொருவரையும் வலைப்பூ ஆரம்பித்து தங்கள் திறமையைக் காட்டச்சொன்னது..இதற்கு தமிழ்மணம்,தமிலீஷ்,திரட்டி,தமிழ்வெளி போன்ற திரட்டிகள் செயல்பட்டன.
ஆனால்..சமீப காலங்களில் அதன் போக்கு சற்று கவலையைத் தந்துள்ளது..

காரணம்..ஒருவேளை எல்லோரும் அறிவாளியாய் இருப்பதால் இருக்குமோ?

சமீபத்திய பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் சாதித்த போதும் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை அனைவராலும் உணரமுடிகிறது..போதும் விசிறியது..பதிவர்களே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்..

இதனால் நர்சிமிற்கு நான் சப்போர்ட் செய்வதாக எண்ண வேண்டாம்.அவரின் சர்ச்சைக்குரிய இடுகை கண்டனத்திற்கு உரியது..அதை எழுதியதற்கு கடந்த நான்கு நாட்களாக அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டார்.

சந்தனமுல்லையைப் பொறுத்தவரை..அவரின் ..மொழிபெயர்ப்பு திறமையைக் கண்டும்..எழுத்துத் திறமையைக் கண்டும் வியந்தவன் நான்.நர்சிமின் மன்னிப்பை அவர் ஏற்பார் என்றே எண்ணுகிறேன்..

முல்லை..ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கேட்கிறேன்..இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி ஒரு பதிவிடுங்கள்..அது உங்களால் மட்டுமே முடியும்..

இனி..

ஜாதிப்பிரச்னை..தனி நபர்த் தாக்குதல் ஆகியவை மலிந்துவிட்ட இணையதளம் எனக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது..ஆகவே தமிழா..தமிழா..வலைப்பூ இனி இயங்காது என அறிவித்துக் கொள்கிறேன்..

இது நாள் வரை எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

53 comments:

கோவி.கண்ணன் said...

:(

தமிழா தமிழா 1000 ஐத் தொட இன்னும் 3 இடுகைகள் தான் இருக்கு என்று நேற்று எண்ணினேன்

பாலா said...

எனக்கு தமிழ்ல தலைப்பு வைக்கச் சொன்னப்ப வந்த கடுப்பு.

ஸார்... இதையெல்லாம் நீங்க ஏன் சார் கண்டுக்கறீங்க? உங்க தளம் வேற. அதை எழுத இங்க யாருமில்லை.

தயவுசெஞ்சி அதை கன்சிடர் பண்ணுங்க.

Cable சங்கர் said...

நீங்க ஏன் சார்.. ?:(

அக்னி பார்வை said...

நீங்களும் போய்விட்டால் எப்படி சார்

Karthick Chidambaram said...

நண்பரே உங்களை போன்ற பண்பான எழுத்துக்களுக்கு சொந்தகாரர்கள் வெளியேறவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

எல் கே said...

sir its my request. please dont stop writing continue

மணிஜி said...

சார் நான் தீக்குளிச்சிடுவேன்..முடியலை.நீங்க ஏன்?

Ganesan said...

ஜயா,

தாங்கள் விடை பெற்று செல்வதற்கு யார் அந்த அதிகாரத்த கொடுத்தா?

கோவி.கண்ணன் said...

உங்களை பாலோ செய்யும் 200+ பேருக்கும் நடக்கும் பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருக்குன்னு நினைத்தால் நீங்க முடிவு எடுக்கலாம்

Unknown said...

ஐயா தயவு செய்து உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்..
கவனித்துப் பார்த்தால் ஒரு இருபது பேர் மட்டுமே நடத்திய வன்ம நாடகம் அது...
பதிவுலகம் சுமார் மூன்று இலட்சம் வாசகர்களால் படிக்கப் படுவது,
உங்களுக்கு என்று உள்ள தனிப்பட்ட வாசகர்கள் நாங்கள்...
எங்களுக்காக உங்கள் முடிவை மாற்றிக் கொள்வீர்கள் என நம்பும்
உங்கள் பிள்ளைகளில் ஒருவன் ......

butterfly Surya said...

ஸார்... இதையெல்லாம் நீங்க ஏன் சார் கண்டுக்கறீங்க? உங்க தளம் வேற. அதை எழுத இங்க யாருமில்லை.
தயவுசெஞ்சி அதை கன்சிடர் பண்ணுங்க//

தம்பி பாலாவை வழி மொழிகிறேன்.

எல் கே said...

எங்களை நீங்கள் உங்களது பிள்ளைகளாக எண்ணினால் தொடர்ந்து எழுதுங்கள்

அமைதி அப்பா said...

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு ஹாஸ்யம் பண்ண விரும்பல.

உங்கள் எழுத்தை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன்.
நீங்கள் விலகுவதால் எந்த பலனும் ஏற்படும் என்று நான் நம்பவில்லை.
ஒரு நல்ல எழுத்தாளரை பதிவுலகம் இழக்கும். அது இன்றைய சூழ்நிலைக்கு நல்லதல்ல.


நீங்கள் தொடரவேண்டும்.
அது தான் 'அமைதி விரும்பி'-ன் தந்தையின் வேண்டுகோள்.

பீர் | Peer said...

இந்த முடிவு சரியானதல்ல /ஏற்கத்தக்கதல்ல...
தயவுசெய்து மறுபரிசீலனை செய்யவும்.

sathishsangkavi.blogspot.com said...

சார் இதொல்லாம் ஒரு பிரச்சனையா?...

நீங்க உங்க கருத்த எப்புவும் போல சொல்லுங்க சார்...

ஒரு கருத்து என்றால் அதற்கு நான்கு எதிர் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும்...

மறப்போம் மன்னிப்போம்...

தமிழ் அமுதன் said...

//ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து//


அதே ஸ்தானத்தில் வைத்து வேண்டுகிறேன் தொடருங்கள்..!

சாந்தி மாரியப்பன் said...

தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்க.உங்களைப்போன்ற மூத்தவர்கள் இல்லாத பதிவுலகம் மாலுமி இல்லாத கப்பல் :-((

இராகவன் நைஜிரியா said...

என்ன சொல்வெது என்று தெரியவில்லை. உங்களின் பன்முகம் எனக்கு பிடித்த ஒன்று.

உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லிவிடப் போகின்றேன்.

உங்களுக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதைச் செய்யுங்கள்.

கண்ணகி said...

தவறான முடிவு...

உண்மைத்தமிழன் said...

ஐயா முடிவு மறுபரீசிலனை செய்யுங்கள்..!

நீங்கள் ஏன் போக வேண்டும்..? துரத்தப்பட வேண்டியவர்களே கூலாக இருக்கிறார்கள்..!

goma said...

எறியப்பட்ட ஒவ்வொரு கல்லும், படிக் கல்லாகட்டும்.பாதை சீராகும்

IKrishs said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
பதிவுலகம் சுமார் மூன்று இலட்சம் வாசகர்களால் படிக்கப் படுவது,
உங்களுக்கு என்று உள்ள தனிப்பட்ட வாசகர்கள் நாங்கள்...//
Yenave, naangal solgirom neengal thodarungal. (Vendumaanal siruthu oyivu ku piragaavadhu)

சிநேகிதன் அக்பர் said...

நீங்க என்ன சீழ்தலை சாத்தனாரா சார்... யாரோ செய்யும் தப்புக்காக நீங்கள் தலையில் குட்டிக்கொள்கிறீர்களே.

இந்த சம்பவம் மூலம் அனைவரும் வருந்துவது உண்மை. சகஜ நிலை திரும்ப சில காலம் தேவைப்படுவதும் உண்மைதான்.

சில நாட்களில் மீண்டு(ம்) வருவீர்கள் என்று நம்புகிறேன்.

Unknown said...

மிகச் சரியான முடிவு! தமிழ்மணம்-ல், வினவு போன்ற எழுத்து தீவிரவாதிகளுக்க்கும், விடுதலையில் வரும் கட்டுரைகளை பிரதி எடுக்கும் எழுத்துகூலிகளுக்கும், ருத்ரமான மன வெறியர்களுக்கும், பழங்கதைகளை பேசும் ஈழர்களுக்கும், பார்ப்பன ஆதரவு/எதிர்ப்பாளகளுக்கும் தான் மரியாதை! தரமான, பண்பான நபர்களுக்கும்/படைப்புகளுக்கும் இடமில்லை/ஆதரவில்லை!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நீங்க ஏன் ஐயா போறீங்க!

தொடருங்கள்!

அனைவருக்குமான இடம்!

Radhakrishnan said...

அட, என்ன சார் நீங்க!

புத்தியில்லாமல் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக ஊரைவிட்டே ஒதுங்கிவிடுவேன் என சொல்கிறீர்கள்.

நான் செய்த ஒரு செயல் ஒன்று உண்டு. அது எவரையும் பாலோ பண்ணுவது என குறிப்பிடாமல் ஒதுங்கிவிடுவது. எனது தளத்தில் பாலோயர் என்பதை நீக்குவது. ஆனால் எப்போதும் போல் பதிவுகள் பார்வையிடுவது, எழுதுவதை தொடர்வது.

நாளையே ஒரு புது பொலிவுடன் புதிய பதிவு காண ஆவல்.

தமிழ் உதயன் said...

ஏஞ்சாமி நீங்க ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க??

பா.ராஜாராம் said...

அட என்ன சார், நீங்க வேற?

குடம்பதுக்குள்ளயே ஆயிரத்தெட்டு பிரச்சினை. குடும்பத்தை விட்டு ஓடியா போயிறோம்?

இது பெரிய குடும்பம் சார். இப்படித்தான் இருக்கும்.

எல்லாம் சரியாயிரும். வாங்க சார், தகப்பனா காரியமா..

Bruno said...

சாரி சார்

உங்கள் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை

வானமே எல்லை said...

ரேப் பண்ணிட்டு மன்னிப்பா. நீங்கள் எந்த ஊர் நாட்டமை. நர்சிம் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். கேவல ஜந்து.

ILA (a) இளா said...

ஐயா, பிரச்சினை என்று எல்லோரும் விலகிவிட்டால் எப்படிங்க. என்னோட தாழ்மையான கோரிக்கை, தொடருங்கள்

M.G.ரவிக்குமார்™..., said...

L.K.G.யில ஃபெயிலாப் போனவன் விசம் குடிச்சா மாதிரி இருக்கு சார் இந்த முடிவு!...இன்னும் கொஞ்சம் யோசிங்க!..

ராஜ நடராஜன் said...

வருத்தங்கள்

Prathap Kumar S. said...

TVR sir Summathane sonneenga....

நசரேயன் said...

ஐயா .. இதெல்லாம் செல்லாது

vasu balaji said...

நொறுங்கிப் போச்சு சார். எழுத்த வச்சு ஆளை எடை போடக்கூடாதுன்னு பாழாப்போற மூளைக்கு தெரிஞ்சாலும், மனசுல ஒரு பிம்பம் உசந்த இடத்துல வெச்சது. எல்லாம் சுக்கு நூறாச்சி.போகட்டும். சுண்டலுக்கும் சிரிக்கவும் உங்கள விட்ட எங்க போக்கிடம். எத்தனை முறை பின்னூட்டம் போட்டிருக்கேன், காலையில தித்திக்க தமிழ் படிக்கிறதே சுகம்னு. அதெல்லாம் எங்க சொத்து சார். அதை தரமாட்டேன்னு சொல்லாதீங்க. பாருங்க.

அத்திரி said...

ஐயா தீர்ப்பை மாத்தி சொல்லுங்க

Unknown said...

வேண்டாம் ஐயா. முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். பின்னுட்டம் இடாவிட்டாலும் தங்கள் பதிவை தொடர்ந்து படித்துதான் வந்திருக்கிறேன். வாழ்க்கையில் முக்கியமான ஏதோ ஒன்றை இழந்தது போல் ஆகி விடும்.

பிரபாகர் said...

வலையுலகில் அய்யாவாக என்னுள் வியாபித்திருக்கும் இரண்டாவது நபரான நீங்கள் இன்னும் பல எழுதவேண்டும், எஙகளுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருக்கவேண்டும்! ஒருவார கால ஓய்வுக்குப்பின் வலைக்கு வந்த நான் தடுமாறி நிற்கிறேன், மீண்டும் தொடர!

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..தனித்தனியாக விவரமாக என் முடிவிற்கான காரணத்தை சொல்ல ஆசை..ஆனால் அவை மீண்டும் சர்ச்சைகளை விளைவிக்குமோ என்று எண்ணுவதால் பொதுவாக நன்றி கூறுகிறேன்

உடன்பிறப்பு said...

ஐயா இந்த உலகம் முழுவதும் களவாளி பயலுவ தான் சுதந்திரமா சுத்துறானுக அதுக்காக இந்த உலகத்தை விட்டே போக முடியுங்களா. நீங்க பெரியவங்க அறிவுரை சொல்றதா நினைக்கப்படாது ஏதோ என் புத்திக்கு எட்டியதை சொன்னேன்

ரமி said...

Now you know what is happening exactly.

The problem with only x and y.

Today Y came out with his idea(bad).

Leave that x and y. Please write for us.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
உடன்பிறப்பு
ரமி

மங்குனி அமைச்சர் said...

என்னா சார் பைத்தியகாரத்தனமா இருக்கு , நீங்க ஆக்சன் பண்ண மாட்டிக , உங்கள மாதிரி ஆளுக ஒதுங்குறது நால இந்த மாதிரி சாக்கடை நோண்டிகள் கிளறி விட்டுக்கிட்டு இருக்காங்க , பிரச்சினைக்குரிய ரெண்டு பெரும் அமைதி ஆகிட்டாங்க , அப்புறம் ஏன் சார் மத்த பன்னாடைகள பத்தி நாம கவலை படனும் , அவ்வளவுதான் எனக்கு தெயரிஞ்சது , உங்களுடைய இந்த முடிவு முட்டாள் தனமா இருக்கு (கொவிச்சுகாதிக )

பின்னோக்கி said...

:(

ஷர்புதீன் said...

உங்களை போன்ற பண்பான எழுத்துக்களுக்கு சொந்தகாரர்கள் வெளியேறவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

கலகலப்ரியா said...

என்னாச்சு சார்..? ம்ம்.. நீங்க எழுதலைன்னா போங்க... ஆனா எனக்கு அப்ப அப்ப பின்னூட்டமும்... வோட்டும் வேணும்... பார்த்துப் பண்ணுங்க..ப்ளீஸ்...

||மணிஜீ...... said...
சார் நான் தீக்குளிச்சிடுவேன்..முடியலை.நீங்க ஏன்?||

மணிஜி நான் இந்த முடிவை முற்றிலும் ஆதரிக்கிறேன்... தீக்குளிக்கிறப்போ சொல்லுங்க... அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்க ஆட்டோ புடிச்சாவது வந்துடறேன்..

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

சற்றே ஒய்ய்வெடுங்கள் - சிந்தியுங்கள் - வலையுலக நட்பினை எண்ணி சிந்தியுங்கள் - 200க்கும் மேற்பட்டோர் பின் தொடர - ஆயிரத்தினை நோக்கி நடை போடும் நேரத்தில் இம்மாதிரி ஒரு முடிவா - மன நிலை மாறக்கூடியது - காலம் மாறும் - கவலை வேண்டாம் - சிந்தித்துச் செய்லாற்றுங்கள்.

நல்வாழ்த்துகள் டிவிஆர்
மீண்டும் டிவிஆர் - விரைவினில்
நட்புடன் சீனா

மாதேவி said...

"வாய்விட்டுச் சிரிக்க" மீண்டும்ஆவலாய் இருக்கின்றோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
மங்குனி அமைச்சர்
பின்னோக்கி
கலகலப்ரியா
Cheena sir
மாதேவி

தருமி said...

இங்கே உங்களையும் கூப்பிட்டிருக்கேனே .. வாங்களேன் .. நிறைய வேலை இருக்கு இங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தருமி sir

தருமி said...

நானென்ன உங்களிடம் நன்றியா கேட்டேன்! நான் கேட்டது: //வாங்களேன் .. நிறைய வேலை இருக்கு இங்க//

நன்றி :)