Saturday, June 26, 2010

நண்பர் பெயரிலிக்கு ஒரு மடல்...

அன்பின் பெயரிலி

வணக்கம்,..

எனது பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி..உங்களது பின்னூட்டம் இதோ...

-///பெயரிலி. said...
நான்தான் நெகட்டீவோ மறையோ அந்த வோட்டினையோ வாக்கினையோ போட்டேன். கருணாநிதி என்றவரை விதந்தோத்தியும் எல்லாமே சாமிநாதையன்னும் ஜகத்நாதனுமே என்றுமே நிறுவவும் முயலுவதிலே இப்படியாவது எதிர்ப்பதிலே ஒரு சிறு உவகை.

தமிழ் என்றால் உங்களுக்கெல்லாமே இப்போது உங்களுக்கான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலாகத்தான் தெரிகின்றது. அண்டை அயலிலே பலருக்கு அப்படியில்லை - உயிராகவும் உயிர்குடிக்கும் தென் திசைக்கா(வ)லனாகவும் தெரிகின்றது.

நீங்கள் உங்கள் பாட்டுக்குப் புத்தகம் வெளியிட்டுப் படத்துக்குப் 'போசு' கொடுத்து மகிழுங்கள். நான் என் பாட்டுக்கு இப்படியாக - போட்டுக்கொ'ல்'கிறேன்//



எனது தேங்காய்..மாங்காய்..பட்டாணி சுண்டல்..(செம்மொழி சிறப்பு சுண்டல்) பதிவில்..அரசியல் கலக்கக் கூடாது என எந்த ஒரு இடத்திலும் கலைஞரையோ..அரசியலையோ எழுதவில்லை.மொழி பற்றி மட்டுமே சிறு குறிப்புகள் அ
ந்த இடுகைகள்..

இலங்கைத் தமிழர் குறித்தும்..அவர்கள் வேதனைகளையும் இந்திய/தமிழக அரசின் மெத்தனம் குறித்தும்..அவற்றைக் கண்டித்தும்..என் இடுகைகளை நீங்கள் படித்திருக்கக் கூடும்..

ஆனால் செம்மொழி மாநாடு என்ற போது அதில் அரசியல் வேண்டாம் என்பதே என் எண்ணம்..

நீங்கள் சொல்லியிருக்கும் என் புத்தகத்தில் கூட..கலைஞரின் திரைப்படங்கள் குறித்துத்தான் எழுதியுள்ளேன்.

இலங்கை பிரச்னையில்..தன் ஆட்சி பறி போகும் என்று தெரிந்தும் IPKF ஐ..வரவேற்கச் செல்லாதவர் கலைஞர்.அப்படிப் பட்டவர் ஏன் இன்று இப்படி நடந்துக்கொள்கிறார்..சற்று சிந்தித்தால்..கலைஞர் பழைய கலைஞராய் நடந்திருந்தால்..காங்கிரஸ் உடன் ஆன கூட்டு முறிந்திருக்கும்..கலைஞர் ஆட்சி கவிழ்ந்திருக்கும்..பின்னர் வரும் ஆட்சி...சற்று ..சிந்தியுங்கள்...

தவிர்த்து..போபால் விஷவாயு வழக்கில்..ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர்..இலட்சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர்..அவர்களுக்கு நியாயம் கிடைத்ததா? வல்லரசு நாட்டிற்கு பயந்து..குற்றவாளியை தப்பிக்க விட்டு..தம் மக்களுக்கு துரோகம் இழைத்த கட்சி..பிற நாட்டு மக்கள் மீது எந்த அளவு அக்கறைக் கொள்ளும்?

இந்தியா மட்டுமல்ல..எந்த நாடும் முதலில் தன் நலனில் அக்கறைக் கொண்டுதான்..பிற நாடுகளுடன் அரசியல்..பொருளாதார உறவுகளை பேணிக்காக்கும்..மேலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மற்ற நாட்டு உள்விவகாரத்தில் தலையிட முடியாது.

இந்தியாவை பொறுத்து வேறு அந்நிய சக்திகள் ஸ்ரீலங்காவில் ஊடுருவியுள்ள நிலையில்..தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..

சமிபத்திய செய்தி ஒன்று சாலைப் பணியாளர்கள் என சீன ராணுவத்தினர் ஸ்ரீலங்காவில் ஊடுருவியுள்ளனர் என்பதாம்..

ஏற்கனவே வட எல்லையில்..பாகிஸ்தான்..சீனா..

தென் எல்லையிலும் அப்படி ஒரு நிலை வந்தால்..சற்றே ..சிந்தியுங்கள்..

கலைஞரை திட்டுவது என்பது..இவ்விஷயத்தில் ..'ஊருக்கு இளைத்தவன்....' என்று சொல்லப்படும் சொலவடையே ஞாபகம் வருகிறது.

உங்கள் மீது எனக்கு பெரும் மதிப்புண்டு..ஆதலால்..உங்களின் நெகடிவ் ஓட்டோ..போஸ் கொடுக்கிறேன்..என்றதோ எனக்கு மனவருத்தத்தைத் தரவில்லை.பின்னூட்டமே மன வருத்தம் ஏற்படுத்தியது.

இந்த இடுகைக்கும் பல நெகடிவ் வாக்குகள் வரக்கூடும்..அதை தவிர்க்க முடியாது..ஆனால்..தனி நபர் தாக்குதல் பின்னூட்டத்தை தவிர்க்கலாம் என்றே பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் பட்டுள்ளன.

நன்றி

அன்புடன்
T V Radhakrishnan

12 comments:

ப.கந்தசாமி said...

பதிவுலகத்தில் நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள்தான் இருக்கிறார்கள்.

-/பெயரிலி. said...

/ஆனால் செம்மொழி மாநாடு என்ற போது அதில் அரசியல் வேண்டாம் என்பதே என் எண்ணம்../

செம்மொழி மகாநாடே முழுக்க அரசியல்... இதிலே இனிமேலும் கலப்பதற்கு என்ன இருக்கின்றது!

தெளிவான என் தனிப்பட்ட கருத்துகள் இவை
1. தாயும் சேயானாலுங்கூட வாயும் வயிறும் வேறுவேறுதான்

2. அவரவர் தலையிடியும் வயிற்றுநோவும் அவரவருக்குத்தான் தெரியும்.

மிகுதிப்படி, நானிட்டவை உங்களுக்கு இடப்பட்ட (-) அல்ல, செம்மொழி என்ற பெயரிலே காட்டப்பட்டும் கோவைக்கூத்தின் பக்கவாட்டுச்சந்தமாக வந்த செம்மொழி பற்றிய குறிப்புகளுக்கானவையேதான்.

ஓராண்டுத்திவசம் ஒழுங்காக முடியமுன்னால், "போரினை ஒதுக்கி வைத்துப் பொருளாதாரத்தைப் பெருக்குவோம்" என்று கவிதை எழுதி ரஹ்மான் பாட வந்தபோது அரசியல் இல்லையென்றால் சொல்ல ஏதுமில்லை. இணையமகாநாடு முதலாகக் கொண்டு செம்மொழிமகாநாடுவரை நடக்கும் அரசியலை அவதானிக்காமலா இருக்கின்றோம்!

புலியின் பெயரிலேயே செம்மொழி மகாநாடென்று வந்ததை இணையப்பதாகையாக ஒட்டும் உடன்பிறப்புகளின் அரசியல் முதலாகக் கொண்டு தினமலர் செம்மொழி காவுநிலை வந்த அரசியல்வரை அறியாமல் இல்லையே?

விடுங்கள்; உங்கள் பதிவுக்கு மட்டும் (-) குத்தவில்லை; சுயவிளம்பரதாரியான மு. இளங்கோவன் என்ற எதிர்க்கருத்துகளை அமுக்கித் தன்னைப் பாராட்டி தன் தொழிலுக்கான dossier இனை இணையத்திலே வளர்த்தெடுக்கும் பேர்வழிக்கும் "செம்மொழி" பாடலை இணைக்கும் தளங்களுக்கும் அதே (-) தான். இதனாலே, ஏதும் செம்மொழிக்கு மாசில்லை.

-/பெயரிலி. said...
This comment has been removed by the author.
-/பெயரிலி. said...

கலைஞர் ஊருக்கு இளைத்தவரா?
இந்திய அரசியல்வாதிகளிடம் நான் எதையும் என்றைக்கும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த "ஈழத்தமிழருக்காக ஒன்றரை மணிநேரம் உண்ணாவிரதமிருக்கின்றேன்", "கனிமொழி, பாலுவுக்கு ராஜபக்ஷ தரிசனம் ஸ்பெஷன் அரேஞ்சுமெண்டிலே வாங்கிக்கொடுக்கிறேன்" டைப் ஓரங்க நாடகங்களேதான் எரிச்சலூட்டுகின்றன.

இதை கருணாநிதி என்ற ஆளுக்கு மட்டும் நான் குத்திக்காட்டவில்லை; கஸ்பர்ராஜ் முதற்கொண்டு திருமாவளவன் உள்ளிட்ட பலருக்குமேதான் இணையத்திலே குத்தி வருகின்றேன். திருமாவளவனின் வலைப்பக்கத்திலே இட்ட எவ்விதமான பின்னூட்டங்களுமே அனுமதிக்கப்படவில்லை என்பதையும் இவ்விடத்திலே சுட்டிக்காட்டவேண்டும்.

எந்நாட்டு அரசியல்வாதியாயிருப்பினுங்கூட, அரசியலை எவ்விதத்திலும் செய்யுங்கள்; ஆனால், எதுக்கு அதிலே உங்களுக்கு ஈழத்தமிழர்கள் என்றோர் ஊறுகாயும் புலம்பெயர்தமிழரென்ற மோர்மிளகாயும்?

-/பெயரிலி. said...

thank you for initiating starting the moderation :-)

கோவி.கண்ணன் said...

//செம்மொழி மகாநாடே முழுக்க அரசியல்... இதிலே இனிமேலும் கலப்பதற்கு என்ன இருக்கின்றது!
//
மாநாடு குறித்து,
பெயரிலி நகையாடியதில் அல்லது வருத்தப்பட்டத்தில் ஞாயம் உண்டு, மற்றபடி அவரின் உங்கள் மீதான எள்ளலில் உடன்பாடு இல்லை. பெயரிலியின் "செம்மொழி மகாநாடே முழுக்க அரசியல்... இதிலே இனிமேலும் கலப்பதற்கு என்ன இருக்கின்றது!" என்ற கருத்தில் உடன்படுகிறேன்

-/பெயரிலி. said...

/மற்றபடி அவரின் உங்கள் மீதான எள்ளலில் உடன்பாடு இல்லை. /
நான் T.V.ராதாகிருஷ்ணனை இங்கேனும் அல்லது எங்கேனும் தனிப்பட்ட விதத்திலே எள்ளவில்லை. அப்படியேதும் தோன்றியிருப்பின், என் எழுத்தின்பாற்பட்ட கோளாறென்றே கொள்ளவேண்டுகிறேன். இதனை இவ்விடத்தே தெளிவு படுத்தவேண்டியதென் கடன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

முழுக்க முழுக்க சுய நலத்துக்காக, இனப்படுகொலையை மூடி மறைக்க, வரும் தேர்தலுக்காக கட்சி பலகீனமாக உள்ள கொங்கு மண்டலத்தில் மக்கள் ஆதரவை விஸ்தரிக்க, கருணாநிதியால் நடத்தப்படும் கருணாதுதி மாநாட்டிலிருந்து நாமெல்லாம் விலகியிருப்பதே நல்லது.

Robin said...

இந்த இடுகையை மன முதிர்ச்சியுள்ள ஒருவரின் தெளிவான சிந்தனையாகப் பார்க்கிறேன்!

இராமநாதன் சாமித்துரை said...

அய்யா வணக்கம்,
உங்களுடைய பதிவின் தொடர்ச்சியில் நடக்கும் விவாதங்களும் ...அதில் உங்கள் மறுப்புகளும் ஆரோக்கியமான நடைமுறை .
ஈழம் தொடர்புடைய திமுகவின் நிலைபாடுகளை பற்றி திமுக உணர்வாளர்கள் பேசும்போது, அவர்கள் மார்த்தட்டிகொள்கிற ஒரு அரசியல் சாதக விசயமே பெரிய பொய்களோடு மீண்டும் மீண்டும் தமிழர்களின் செவிப்பறை கிழியப்பேசபடுகிறது. அதே பொய்யை நீங்களும், உங்களைப் போன்ற திமுக காரர்களும் அரைகுறை தமிழர்களுக்கு பாடம் நடத்துகின்றீர்கள்.
அதாவது, அப்போது முதல்வராக இருந்த கலைஞர் IPKF ஐ வரவேற்க செல்லாததால் அவருடைய ஆட்சியே பறிபோனதாக... நல்ல கற்பனை . இது அப்பாவி திருவாளர் பொதுஜனங்கள் நம்ப, ஏமாற தகுந்ததே.

அய்யா, உண்மையில் நீங்கள் மனசாட்சியோடு என்னுடைய இந்தபதிலை அழிக்காமல் இருப்பீர்களா?

கலைஞர் எப்போதுமே தேர்தல் சதுராட்டத்தை மட்டுமே சிந்திப்பவர்.. இனம், மொழி, கொள்கை என பிற அனைத்துமே இரண்டாம்பட்சமே .
உங்களை போன்ற தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் நீங்கள் உங்கள் தலைவர்களின் பிம்பங்களை பிரமிப்பாய் பார்க்கும்போது, நாங்கள் சிலர் அவர்களின் நிழலசைவுகளை, அவை பின்தொடர்ந்து செல்லும் ஆதாயங்களை உற்றுப்பார்கிறோம்.

நீங்கள் குறிப்பிடும் அந்த காலக்கட்டம்.....
நீங்கள் பெருமையாக குறிப்பிடும் எந்தவித நெருக்கடியும் அந்த நேரத்தில் கலைஞர் அவர்களுக்கு இல்லாத காலக்கட்டம்.
அப்போது , சோ, ராம் மற்றும் சில கைக்கூலிகள் தவிர அத்துணைத் தமிழனும் ஓரணியில் இருந்த காலக்கட்டம். அது தேர்தல் கணக்கிற்கும் ஏற்ற நிலைப்பாடு.
மேலும் உச்சக்கட்ட உண்மையென்னவென்றால்.,
மேலே மத்தியில் நடைபெற்றதும்.... திமுக ஆட்சியை கலைத்த சந்திரசேகருடைய ஆட்சியல்ல., அப்போது நடைபெற்றது திரு. வி. பி. சிங் அவர்களின் ஆட்சி. அது கலைஞர் கூட்டணி ஆட்சி.... அதில் நீங்கள் அனைவரும் கூறி திரியும் ஆட்சி கவிழ்ப்போ அல்லது அதன் நிழல் அச்சமோ கூட இல்லாத தெளிவான சூழல். நன்றி .

T.V.ராதாகிருஷ்ணன் said...

பின்னூட்டங்கள் பலவற்றுடன் உடன்பாடில்லை எனினும் ..அவற்றை வெளியிடுவது கடன் எனக்கருதியதால் வெளியிட்டுள்ளேன்...வருகை புரிந்தோர்க்கு நன்றி

ரவி said...

http://tvpravi.blogspot.com/2010/06/blog-post_28.html