Friday, August 6, 2010

திரைப்பட இயக்குநர்கள் - 2 A.V.மெய்யப்பன்




அவிச்சி மெய்யப்ப செட்டியார் 28-6-1907ல் பிறந்தவர்.A.V.மெய்யப்பன் என்றும்,AVM என்றும் பின்னாளில் அறியப்பட்டவர்.தமிழ்த் திரைப்பட மும்மூர்த்திகள் என வாசன், எல்.வி.பிரசாத், மெய்யப்பன் ஆகியோர் போற்றப்பட்டனர்.

சினிமா தயாரிப்பாளர்,இயக்குநர், சமுக சேவகர் என போற்றப்பட்ட ஏ.வி.எம்., உருவாக்கிய ஸ்டூடியோ மட்டுமே..மூன்று பரம்பரை கடந்தும் வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது.இதுவரை தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என நான்கு மொழிகளிலும் படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனமாய் திகழ்கிறது.

காரைக்குடியில் பிறந்த மெய்யப்பன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்னும் கிராமபோன் கம்பெனியை ஆரம்பித்தார்.பின் அதையே சரஸ்வதி சவுண்ட் புரடக்க்ஷன்ஸ் கம்பெனி ஆக்கி அல்லி அர்ஜுனா,பூகைலாஷ்,ரத்னாவளி ஆகிய படங்களை எடுத்தார்.அவை எல்லாம் தோல்வியடைந்தன.

பின் இன்று மந்தைவெளியில் சன் டி.வி.உள்ள இடத்தில்..பிரகதி ஸ்டூடியோ ஆரம்பித்தார்.என் மனைவி,ஹரிசந்திரா,ஸ்ரீவள்ளி ஆகிய படங்கள் எடுத்தார்.1941ல் சபாபதி என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,காளி என்.ரத்தினம் நடித்த இந்த படம்..இன்றும் டி.வி.,யில் ஒளி பரப்பப்படும் போது பெரும் ஆதரவை பெறுகிறது.நல்ல நகைச்சுவை படம்.

பின் 1945ல் ஏ.வி.எம்., ஸடூடியோ பிறந்தது.காரைக்குடிக்கு ஸ்டூடியோ இரண்டாம் உலகப் போர் போது மாற்றப்பட்டு..பின் மீண்டும் வடபழனியில் இன்றுள்ள இடத்திற்கு மாற்றபட்டது.

1947ல் நாம் இருவர்,1948ல் வேதாள உலகம்,1949ல் வைஜயந்திமாலா அறிமுகத்துடன் வாழ்க்கை ஆகிய படங்கள் வெளியாயின. வாழ்க்கை தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பாஹர் என்றும் வந்து வெற்றி பெற்றது.

அதற்கு பின் பிரபல தயாரிப்பு நிறுவனமாகி..பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது ஏ.வி.எம்.,

குறிப்பாக பராசக்தி (சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., அறிமுகம்)அந்த நாள்,களத்தூர் கண்ணம்மா (கமல் அறிமுகம்),அன்னை, அன்பே வா, சர்வர் சுந்தரம் என வெற்றி தொடர்ந்தது.

ஏ.வி.எம்., 1979 ல் அமரரானார்.

பின்னர்..அவரது குமாரர்கள் இன்றுவரை வெற்றிகரமாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை 174 படங்களை ஏ.வி.எம்.தயாரித்துள்ளது.

ஏ.வி.மெய்யப்பன் இயக்குநர் என்பதை விட திறமைசாலிகளைக் கொண்டு வெற்றி படங்களை அளித்த சிறந்த வியாபாரி எனலாம்.

7 comments:

Unknown said...

AVM சகாப்தம்...

சிநேகிதன் அக்பர் said...

பல நல்ல விசயங்களை அறிந்து கொண்டேன். நன்றி சார்.

vasu balaji said...

பகிர்வுக்கு நன்றி சார்.

உடன்பிறப்பு said...

ஏ.வி.எம்.மில இருந்த வந்த படங்கள் எல்லாமே மசாலா படங்கள் தானே ஐயா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
ஏ.வி.எம்.மில இருந்த வந்த படங்கள் எல்லாமே மசாலா படங்கள் தானே ஐயா?//

இதற்கான விடை இடுகையின் கடைசி வரியில்

vijayan said...

தமிழ் ரசிகனின் ரசனையை ஒருவழியாக்கியதில் செட்டியாருக்கு பெரும்பங்கு உண்டு.ப.நீலகண்டன் என்று (இந்த ஆளை என்ன சொல்லறது என்றே தெரியவில்லை)ஒரு assistant வேறே பத்தும் பத்தாதற்கு.