Sunday, January 30, 2011

2016ல எங்க ஆளுதான் முதல்வர்





தங்களால முடியலேன்னாலும் சிலர் குரல் விடறதுல கில்லாடியாய் இருப்பாங்க..

அதுபோல..தன்னால தனித்து நின்னு ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சாலும்..நான் தனித்து நின்னா 100 தொகுதிகள் ஜெயிப்போம்..என்றவர் 50..தொகுதி ஜெயிப்போம் என்றார் அடுத்த நாள்.அப்படிப்பட்ட நீங்க ஏன் 30, 40 சீட்டுக்கு கூட்டணி சேரணும்னு நக்கலாய் கேட்ட போதும் இவர் சட்டை செய்யலை.அப்புறம்

நம்ம ஜாதி 2 1/2 கோடி பேர் இருக்கோம்..எல்லாரும் எங்களுக்கு ஓட்டுப் போட்டா..நான் கோபாலபுரத்துக்கும், போயஸ் கார்டனுக்கும் அலையா அலைய வேண்டியதில்லைன்னு புலம்பிக்கிட்டு இருந்தாரு.

அப்புறம்..கொஞ்ச நாள் கழிச்சு..'என் முதல் எதிரியே தி.மு.க., தான்' என்றார்.

அப்பறம்..கூட்டணிப் பற்றி இன்னிக்கு முடிவு,நாளைக்கு முடிவுன்னு தள்ளிப் போட்டுக் கிட்டு வந்தார்..

எல்லாவற்றிருக்கும் முற்றுப்புள்ளிப் போட்டாற்போல கலைஞர் இவரு கூட்டணிலே இருக்கார்னு அறிவிச்சுட்டார்.

இவங்க தான் முதல் எதிரின்னுட்டு ..இப்போ ..அடுத்த எதிரியை தோற்கடிக்க முதல் எதிரியுடன் சேர்ந்து விட்டார்.

இனி..நாங்க எல்லாம் பங்காளி..ஒன்னுக்குள்ள ஒன்னு ன்னு சொல்வார்..

ஏன்னா..பகையாளிக் குடியை உறவாடிக் கெடு ன்னு சொல்றது இவருக்குத்தான் அத்துப்படி.

எந்தக் கூட்டணிலே நாங்க இருக்கோமோ அந்த கூட்டணி ஜெயிக்கும்னாரு..ஆனா பாராளுமன்ற தேர்தல்ல காலி.

சட்டசபை தேர்தல்ல..நாம் ஏன் சொல்லணும்..

இப்போதைக்கு கோபாலபுரத்துல செட்டில்டு..சட்டபை தேர்தல் வரைக்கும்..இல்லை..இல்லை..அதுக்கு அப்பால..ராஜ்யசபா வுக்கு தன் பையனுக்கு சீட் கிடைக்கற வரை அணி மாறமாட்டார்னு உறுதிசொல்வோம்.

அப்புறம்..

அப்புறம் என்ன..2016ல எங்க ஆளுதான் முதல்வர்னு ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..

டிஸ்கி-.ஆனால் சம்பந்தப் பட்டவரோ...கூட்டணி பற்றி தான் எதுவும் முடிவெடுக்கவில்லை என வழக்கம் போல பேசியுள்ளார்.


ஏழுகுண்டல வாடா..எது உண்மை

16 comments:

நசரேயன் said...

test pass

Philosophy Prabhakaran said...

அவர் ஒரு காமெடி பீசு.... விட்டுத் தள்ளுங்க...

அத்திரி said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம் ஐயா

சி.பி.செந்தில்குமார் said...

ராம்தாஸ் ராம்தாஸ்னு ஒரு மானஸ்தன்

இருந்தாரே பார்த்தீங்களா?

Prathap Kumar S. said...

அவரையெல்லாம் மதிச்சு.... :)

சினிமாகாரர்கள் அரசியலுக்கு வரக்கூடாதாம்....ஆனா கூட்டணி மட்டும் வைப்பாராம்...என்ன எழவு அறிக்கை இது...:))

Chitra said...

Philosophy Prabhakaran said...

அவர் ஒரு காமெடி பீசு.... விட்டுத் தள்ளுங்க...


....ஹா,ஹா,ஹா,ஹா.... அதே.... அதே....

சிநேகிதன் அக்பர் said...

என்னத்த சொல்ல‌

MANO நாஞ்சில் மனோ said...

இவனுங்க எல்லாம் பெரிய அரசியல் வியாதிங்க பாஸ் விடுங்க..............

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
test pass//


வருகைக்கும்..டெஸ்டில் பாஸ் பண்ணவைத்தற்கும் நன்றி நசர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Prabhakaran said...
அவர் ஒரு காமெடி பீசு.... விட்டுத் தள்ளுங்க...//

என்னத்த சொல்ல‌

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
ராம்தாஸ் ராம்தாஸ்னு ஒரு மானஸ்தன்

இருந்தாரே பார்த்தீங்களா?//

அவர் இப்போ நுனிக்கொம்பில் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்™

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி MANO