Thursday, March 31, 2011

வடிவேலு அமைச்சராகிறார்..





கடந்த சிலநாட்களாக தமிழக தேர்தல் களத்தில்..பல அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள், பேச்சாளர்கள் பேசினாலும்...முதன்முறையாக தேர்தல் மேடைகளில் பேச ஆரம்பித்துள்ள வைகைப்புயல் வடிவேலுவின் பேச்சைக் கேட்க கூடும் மக்களைக் கண்டு..கோபாலபுரமும், போயஸ் கார்டனும் வியப்பில் வாயைப் பிளக்கின்றனராம்.

தி.மு.க., தலைமையும்..தங்கள் கட்சிக்கு ஒரு தங்கச் சுரங்கம் கிடைத்துவிட்டாற்போல மகிழ்கிறார்களாம்.

தி.மு.க., ஆட்சி அமைத்தால்..வடிவேலு மேலவை உறுப்பினர் ஆகலாம் எனத் தெரிகிறது.

தவிர்த்து..அவர் ஆதரவை விடாமல் பற்றிக் கொள்ள நினைக்கும் தி.மு.க., அவரை சினிமாத் துறை அமைச்சராக ஆக்கவும் முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியைக் கேள்விப்பட்ட விஜய்காந்த் வயிற்றெரிச்சலில்..தன் தேர்தல் பணியை நிறுத்தி வைத்துள்ளாராம்.



டிஸ்கி- ஹி..ஹி..இன்று தேதி ஏப்ரல் ஒன்னு  ..

Wednesday, March 30, 2011

கே.வி.தங்கபாலுவின் சொத்து விவரம்..





தங்கபாலு வேட்புமனு தாக்கும் போது அறிவித்துள்ள சொத்து விவரம்..

திருவள்ளூர் மாவட்டம் கண்ணம்பாக்கத்தில் 31.51 ஏக்கர் நிலம் (இதன் இன்றைய சந்தை விலையை மிகவும் குறைத்து4 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்)

கிருஷ்ணகிரி மாவட்டம் இகண்டம் கொத்தபள்ளியில் 1.38 ஏக்கர் நிலம் (சந்தை விலை 17000 மாம்)

பள்ளிகரணையில் 1.35 ஏக்கர் நிலம் 2.55 லட்சம் இன்றைய விலையாம்

சைதாப்பேட்டையில் .54 ஏக்கர் நிலம்.தற்போதைய மதிப்பு 7.86 லட்சமாம்

தவிர்த்து மனைவி அறங்காவலராய் இருக்கும் அறக்கட்டளைக்கு ஓ.எம்.ஆர்., சாலையில் பல ஏக்கர் நிலம்..அந்த அறக்கட்டளை சார்பில் தங்கவேல் இஞ்சினீரிங்கல்லூரி.

மனைவியிடம் 2 கிலோ தங்கம், 21 கிலோ வெள்ளி.

தங்கபாலுவின் வேட்புமனுவில் சொத்துகள் விவரங்களையும்..சந்தைவிலையையும் மிகவும் குறைத்துக் காட்டியிருக்கிறாராம்.ஆகவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்

Tuesday, March 29, 2011

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா..?





கலைஞர் ஒரு ஆங்கில டி.வி., சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்..தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே 'கூட்டணி ஆட்சியா..அல்லது ஒரே கட்சி ஆட்சி செய்யுமா? ' என முடிவெடுக்கப்படும் என்றுள்ளார்.

119 இடங்களில் போட்டியிடும் தி.மு.க., 118 இடங்களில் வென்றால் தான் தனிப்பட்ட மெஜாரிட்டி பெற்று ஆட்சியை செய்ய முடியும்..அதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக இல்லை.

அப்படியே மெஜாரிட்டிக்கு குறைவான எம்.எல்.ஏ., க்களுடன்..கூட்டணிக் கட்சிகள் வெளியிருந்து ஆதரவு தர ஆட்சியை அமைத்தாலும்..கடந்த ஐந்து வருடங்களாக வார்த்தைக்கு வார்த்தை 'மைனாரிட்டி தி.மு.க., ஆட்சி' என்று சொல்லிவரும் ஜெ மீண்டும் அதையே சொல்ல ஆரம்பிப்பார்.

இந்நிலையை உணர்ந்துதான் பா.ம.க., முதலிலேயே நிபந்தனையற்ற ஆதரவு..ஆட்சியில் பங்கு இல்லை என்று அறிவித்து விட்டது.இது எவ்வளவு காலம் நிலைக்கும் எனத் தெரியாது.கண்டிப்பாக 2013 ராஜ்யசபாவிற்கான சீட்டுகள் ஒதுக்கும் வரை நீடிக்கும் என பா.ம.க., வை அறிந்தவர்கள் அறிவர்.

63 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றதாக வைத்துக்கொண்டாலும்..அது ஆட்சியில் பங்கு ஏற்காமல் பொறுப்பான எதிர்க்கட்சியாய் செயல்படுமா? தெரியவில்லை.

ஏனெனில்..அதைவிட அதிகத் தொகுதிகளில் வெல்லும் அ.தி.மு.க., விற்கே எதிர்க்கட்சி பொறுப்பும்..அதன் தலைவிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பும் கிடைக்கும்.

அப்போது தங்கபாலுவின் எண்ணம் தவிடுபொடியாகும்..

ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்டு கூட்டணி ஆட்சி அமையுமானால்..கிட்டத்தட்ட ஒரு தி.மு.க., தொண்டனாகவே செயல்படும் தங்கபாலுவிற்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கலாம்.

காங்கிரஸ் அந்த ஆசையில் தான் உள்ளது.

கொஞ்சம் இடம் கிடைத்தால் மடத்தை பிடுங்க நினைக்கும் இடத்தில் காங்கிரஸ் உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்தால்...காங்கிரஸ் பல்டி அடித்தாலும் அடிக்கக் கூடும்.

இதுவே..இன்றைய தமிழக நிலை..

நடக்கப் போவதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, March 28, 2011

இங்கே யாரும் யோக்கியன் அல்ல





ஆளும் கட்சியானாலும் சரி..எதிர்க் கட்சி ஆனாலும் சரி அவ்வப்போது அடித்துக் கொண்டாலும்...ஊழல் செய்வதில் ஒருவருக்கொருவர் குறைவு இல்லை.

ஆனால் அது தெரியாதிருக்க அவ்வப்போது ஒன்றன் மீது ஒன்று அவதூறு சேற்றை வாரி வீசிக் கொள்ளும்.

கடைசியில்..இதைப் பார்க்கும் மக்கள் 'ஆகா..இந்தக் கட்சி எவ்வளவு யோக்கியம்' என்று எண்ணுவர்.

ஆனால் காமராஜர் சொன்னாற் போல்..'எல்லாருமே ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்' தான்.

இந்த எண்ணமே ..இன்றைய தினமணியின் இத் தலையங்கத்தைப் படித்ததும் தோன்றியது.
 
 
 

:என்ன உறவோ, என்ன பிரிவோ!


ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பதுதான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

மக்கள்தொகையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இல்லாத நிலையில் வாழும் நாட்டில், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் மட்டுமே பயனடையும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு கடைப்பிடிக்குமேயானால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துத் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருவேறு பொருளாதாரக் கொள்கைகளை உடையவையாக இருந்தால் மட்டுமே தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்.

இந்தியாவில் 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகளை அகற்றி சுலபமாக அந்நிய முதலீட்டுக்கும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தவும் முனைந்தது. அன்றுமுதல் பல விபரீதங்கள் இங்கே அரங்கேறி வருகின்றன. முறைகேடுகளுக்கும், மெகா ஊழல்களுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சர்வசாதாரணமாக சில நிறுவனங்களும் தனிநபர்களும் கொள்ளையடித்துக் கொள்வதற்குத்தான் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உதவி இருக்கின்றன என்கிற அச்சமும் சந்தேகமும் ஏற்படுகின்றன.

காங்கிரஸ், ஐக்கிய கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஆட்சிகள் மாறினவே தவிர, காட்சிகள் மாறவில்லை. ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி சமீபத்திய "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வரை இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்திருக்கும் ஊழல்களின் மொத்த மதிப்பு, இந்தியாவின் ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வரவை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் இங்கே நடக்கக்கூடாததெல்லாம் நடக்கிறது. எந்தவிதக் கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் மக்கள் வரிப்பணமும் தேசத்தின் வளங்களும் கொள்ளை போகின்றனவோ என்கின்ற அச்சம் எழுகிறது.

அவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் ஒரு கபட நாடகம், ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படாமல், மக்கள் மன்றத்தின் கவனத்தைக் கவராமல் காதும்காதும் வைத்ததுபோல அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக எல்லாத் தளங்களிலும் நெருக்குதல் கொடுக்கும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஒரு மிகப்பெரிய தர்மசங்கடத்திலிருந்து அரசுக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது. ஆனால், நடந்திருப்பது அதுதான்.

சில ஆண்டுகளாகவே, குறிப்பாக, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தே எப்படியாவது ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா பிரச்னைக்குரியதாகத் தொடர்ந்து வருகிறது. அதாவது, தன்னிடம் இருக்கும் ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறது அரசு. அப்படிச் செய்தால் பல கோடி தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்காகப் பங்களிப்பாக நல்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து விளையாடிவிடக் கூடும் என்கிற நியாயமான அச்சம் எழத்தானே செய்யும்.

வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததும், அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்கள் போட்ட முதலை இழந்த சரித்திரத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்கிற விபரீத யோசனை ஏற்கப்பட்டால், பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பினாமி நிறுவனங்களின் பங்குகளில் அது முதலீடு செய்யப்பட்டு கபளீகரம் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி தவறுகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்கிறோம் என்று இதற்கு அரசு பதில் அளிக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் ""டிராய்'' ஒழுங்காற்று ஆணையம் இருந்தும் "ஸ்பெக்ட்ரம்' என்கிற பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கவில்லையா என்று பதில் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் அந்த மசோதாவை நிறைவேற்றப் போதுமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கவில்லை. நிலைமையைச் சட்டெனப் புரிந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் பட்டாச்சார்யா, மசோதாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவைத்தலைவரின் அனுமதியும் பெற்றுவிட்டார்.

எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்க வேண்டும்? மசோதாவைத் தோற்கடிப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடாதுதான். ஆனால், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைவது தடுக்கப்படாவிட்டாலும் அந்த முயற்சி ஒத்திவைக்கப்படும். யார் யாரிடம் பேசினார்களோ, யார் யாருக்கு வழிகாட்டினார்களோ தெரியாது, அரசுக்கு ஆதரவாகப் பிரதான எதிர்க்கட்சி வாக்களித்து, மன்மோகன் சிங் அரசைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. உடனடியாக மசோதா சட்டமாக்கப்பட்டுவிடாது என்றாலும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டதால், இனி சட்டமாக்குவது எளிதுதானே.

இதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்!

(நன்றி தினமணி )

FLASH NEWS - குள்ளநரிக் கூட்டம் (சினிமா விமரிசனமல்ல)





சட்டசபைத் தேர்தலில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி மனுதாக்கல் செய்திருந்தார்.அவர்மனு சரிவர நிரப்பப்படாததால் நிராகரிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தொகுதியில் மாற்று வேட்பளராக தங்கபாலு மனுதாக்கல் செய்திருந்தார்.

அவரது மனைவி மனு நிராகரிக்கப்பட்டதால் மயிலை வேட்பாளராக தங்கபாலு போட்டியிடுகிறார்.

ஜயந்தியின் மனு வேண்டுமென்றே தவறாக நிரப்பப்பட்டதா..தற்செயலாக நடந்ததா என்ற கேள்விக்குள் போக நான் விரும்பவில்லை.

தங்கபாலுவின் மனைவிக்கே எதிர்ப்பு இருந்த நிலையில்..தங்கபாலுவே வேட்பாளரென்றால்..காங்கிரஸ்காரர்கள் எப்படியெடுத்துக் கொள்வார்வார்கள் எனத் தெரியவில்லை.

இத்தொகுதியில் தங்கபாலுவின் தோல்வியை இன்றே எழுதிவைத்துக் கொள்ளலாம்

Sunday, March 27, 2011

விஜயகாந்தை விளாசும் வடிவேலு



தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் 41 சீட் வாங்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர் வடிவேலு விஜய்காந்தை தாக்கோ தாக்குன்னு தாக்கி வருகிறார்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘’அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு,

‘’ நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு...’’ன்னு சொல்லுறார். ( விஜயகாந்த் மாதிரியே மிமிக்ரி செய்து காட்டுகிறார். வடிவேலுவுக்கு விஜயகாந்த் குரல் நல்லா வருது)

நான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது.
கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு.

அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும்.

ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா.

விருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற.

நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும் மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற.

டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன்.

ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்...ம்..ம்..ங்குற..( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) இப்படியே முக்குறியே.

முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு’’ என்று விளாசி எடுத்தார் வடிவேலு.

(நன்றி நக்கீரன் )

டிஸ்கி =விஜயகாந்திற்கும் வடிவேலுவிற்கும் மதுரையில வாய்க்கா,வரப்பு தகராறு இல்ல..விருகம்பாக்கத்தில தெருத் தகராறுதான்

தூண்டில் புழுக்கள்





சிரிக்கும் காந்தி

லட்டுக்குள் மூக்குத்தி

பிரியாணி - தவிர்த்து

தேர்தல் தூண்டிலில் புழுக்களாய்

இலவச அரிசி

லேப்டாப்

கிரைண்டர், மிக்ஸி

ஆடு..மாடு..

பஸ் பயணம்

Friday, March 25, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(25-3-11)





ஒரு நாளில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்கள் ஒரு வாரத்தில் உள்ளிழுக்கும் நிகோடின் அளவு 400 மில்லிகிராமாம்.இந்த அளவு நிகோடினை ஒரே சமயத்தில் ஒருவர் உட்கொண்டால் உடனே மரணமாம்.வெள்ளை எமனை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்க வேண்டுமா?



2)பிரைன் டெட் எனப்படும் மூளை இறப்பு எற்பட்ட 88 பேரிடமிருந்து இதுவரை தமிழக அரசு 18 இதயம்,2 நுரையீரல்,34 கல்லீரல்,166 சிறுநீரககங்கள், 99 இதய வால்வுகள்,126 விழி வெண்படலங்கள் தானமாகப் பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப் பட்டுள்ளவனவாம்.இதனால் 479 பேர் பயனடைந்துள்ளனராம்.



3)ஆண்டுதோறும் காடு வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு காட்டுப் பகுதியை அதிகரித்து வருகிறதாம் சைனா..இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அன்றே படித்த ஒரு செய்தி..கும்மிடிபூண்டி அருகே காடுகளை அழித்து ஒரு தொழிற்சாலை உருவாகிறதாம்.



4)ஒரு பொன்மொழி..

பணத்தை குவிப்பதிலேயே குஷியாய் இருப்பதை விட பரந்த மனப்பான்மையுடன் இருப்பது அவசியம்.பரந்தமனப்பான்மை என்பது அனைவரையும் நேசிப்பதும், வாழ்க்கையின் அருமையான விஷயங்களை பாராட்டுவதும் தான்.நம்முடன் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்ற நினைப்பு எப்போதும் இருக்கட்டும்.



5)மகாத்மா காந்திக்கும், பாடலாசிரியர் வாலிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்ன தெரியுமா?

காந்தி தன் வாழ்நாளில் ஒரு முறை கூட. .விமானப் பயணம் செய்ததில்லை..வாலியும் அப்படித்தான்.



6)வாரப்பத்திரிகைகளில் பாக்யா வில் கேள்வி பதில் எனக்குப் பிடித்த ஒன்று.இந்த வாரம் அன்புமணி என்பவர் 'அறிவு என்பதில் பிரிவு இருக்கிறதா?' என்று கேட்ட கேள்விக்கு பாக்யராஜின் பதில்..

உடலால் மட்டும் உணர்வு ஓரறிவு தாவரங்களுக்கு

உடல்,நாக்கால் உணர்வது ஈரறிவு..இது கடல்வாழ் உயிரினங்களுக்கு

உடல்,நாக்கு,மூக்கால் உணர்வது மூன்றறிவு..இது ஊர்வினங்களுக்கு

உடல்,நாக்கு,மூக்கு,கண் இவற்றால் உணர்வது நான்கறிவு..இது பூச்சி இனங்களுக்கு

உடல்,நாக்கு,மூக்கு,கண்,காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு..இது விலங்கினங்களுக்கு

உடல்,நாக்கு,மூக்கு,கண்,காது,மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு..இது மனிதர்களுக்கு



அருமையான பதில் அளித்தமைக்கு வாழ்த்துகள் பாக்யராஜ்.

Thursday, March 24, 2011

வாய் விட்டு சிரிங்க...(தேர்தல் ஜோக்ஸ்)







அந்தக் கூட்டத்தில கடைசில நிக்கறாங்களே..அந்த இரண்டு பேரை கூட்டிட்டு வாங்க

ஏன் தலைவா..

அவங்க ஒரு படத்தில தலை காட்டியிருக்காங்க...நமக்கு ஆதரவா பொதுக் கூட்டத்தில பேசட்டும்



2)நடிகை புஷ்பாவிற்கு இந்த தேர்தல்ல தலைவர் ஏன் சீட் கொடுக்கல

அரசியல்ல இன்னும் முழுக்க மலரலயாம்



3)(தேர்தலில் வாக்களிக்க ஆயிரம் ரூபாய் கொடுக்கும் வேட்பாளரிடம் ஒரு வாக்காளர்..)

என்னங்க..இவ்வளவு குறைவா கொடுக்கறீங்க..ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில ஒரு வாக்காளருக்கு 42500 கொடுக்கலாம்னு கணக்கு சொல்லியிருந்தாங்களே!



4) தலைவர்ங்க எல்லாம் சென்னையைவிட்டு ஏன் வெளியூர் தொகுதிகள்ல போட்டி போடறாங்க..

வெளியூர்லதான் இன்னும் வளைச்சுப்போட நிலங்கள் இருக்காம்



5)தலைவர் தான் ஒரு பத்திரிகை ஆசிரியராய் இருந்ததை நிரூபிச்சுட்டார்

எப்படி

தேர்தல் அறிக்கையில கடைசி பக்கத்திலே..'இதில் காணப்பட்டவையெல்லாம் கற்பனையே..கற்பனையன்றி அவற்றில் உண்மை இல்லைன்னு எழுதிட்டாரே



6) ஆளும்கட்சி தேர்தல் அறிக்கையில அனைத்து தமிழருக்கும் ரேஷன்ல அரிசி இலவசம்னு சொன்னதாலே..எதிர்க்கட்சி தேர்தல் அறிக்கையில என்ன சொல்லியிருக்காங்க..தெரியுமா?

என்ன சொல்லியிருக்காங்க

சிங்கப்பூர்,அமெரிக்கா ன்னு வெளிநாட்டில இருக்கற தமிழர்களுக்கும் அரிசி இலவசம்ன்னு சொல்லியிருக்காங்க



7)குடிமகன்- எந்தக் கட்சித் தேர்தல் அறிக்கையிலும் நம்மைக் கண்டுக்க மாட்டேன்னு சொல்றாங்களே..யாராவது நமக்கு இவ்வளவு லிட்டர் சரக்கு இலவசம்னு சொல்லலாமே



8)பேருந்துல நடத்துநர் ஏன் அந்தப் பெரியவரைத் திட்டறார்..

இலவச பாஸ்ல வரார் இல்லையா? அதனால அந்த வெறுப்பை நடத்துநர் காட்டறார்

9அந்த  நகைச்சுவை நடிகர்  கட்சியில  சேர்வதற்கு  நிபந்தனை விதிச்சாராமே
 ..என்னன்னு
தன்னை பிரதமராக ஆக்கணும்னு

10)எல்லா தலைவர்களும்..எல்லாவற்றையும் இலவசமாய் கொடுப்பதாய் அறிவிச்சுட்டாங்கங்கறதால தலைவர் இப்படி ஒரு இலவசத்தை அறிவிச்சிருக்க வேண்டாம்


என்ன சொல்லியிருக்கார்

குழந்தைகள் இல்லாத குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் இலவசம்னு சொல்லியிருக்கார்

Wednesday, March 23, 2011

நீங்க கோடீஸ்வரர் ஆக வேண்டுமா..?





பணத்தாசை இல்லாத மனிதன் இல்லை..

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது சொலவடை.

பரம்பரை சொத்து இல்லாமல்..ஒருவர் வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆக முடியுமா?

அவர் எந்த படிப்பு படித்திருந்தாலும்..எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும்..அதிகபட்சம் இரண்டு பெட்ரூம் கொண்ட அடுக்ககக் குடியிருப்பும்..வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதில் வைப்பு நிதியிருந்து சில லட்சங்களும் கிடைக்கும்.இதனிடையே அந்த பணத்திலும் அட்வான்ஸ் வாங்கி..மகன்/மகள் படிப்பு...அவர்கள் திருமணம் ஆகியவை நடத்தியிருப்பார்.

இந்நிலையில்..ஒருவரால் தன் வாழ்நாளில்..கோடீஸ்வரனாய் ஆக முடியுமா? என்ற வினாவிற்கு..பதில்..

முடியும்...என்பதே..

எப்படியென பார்த்தோமானால்..நம் கண்ணெதிரேயே பலரை உதாரணமாகக் காட்டமுடியும்.

வாழ்நாள் என்பது அவர்களுக்கு அதிகம்..

ஐந்து வருடங்கள் போதும்..

என்ன ஒன்று..அவர்கள்..அந்தக் காலத்தில் அரசியலில் ஒரு பெரிய கட்சியில் ஈடுபட்டு..தலைமையிடம் நல்ல பெயர் வாங்கி..ஒரு எம்.பி.ஆகவோ..எம்.எல்.ஏ., ஆகவோ..அல்லது குறைந்த பட்ச மாவட்ட செயலாளராகவோ ஆனால் போதும்..

அடுத்த ஐந்து வருடங்களில் அவர் கோடீஸ்வரர் தான்..

இதைத்தான்..வேட்பு மனு தாக்கும் பல வேட்பாளர்கள் தெரிவிக்கும் சொத்து கணக்குத் தெரிவிக்கிறது.

ஐந்து வருடம் முன் ஓரிரு லட்சம் கையிருப்பு வைத்திருந்தவரின் இன்றைய சொத்து மதிப்பு...பல கோடிகள்..ஊர் பக்கம் ஏக்கர் கணக்கில் நிலம்...மனைவி..மக்கள் என அனைவருமே கோடீஸ்வரர்கள்,லேண்ட் லார்ட்ஸ் தான்.

சில நூறு ரூபாய் வருமான வரி கட்டாவிடின்..சாமான்யனை ஆயிரம் கேள்விகள் கேட்கும் வருமானவரித் துறை இவர்களை என்ன செய்யும்?

விடை தெரியாத கேள்வி தான்..

இன்னும் கொஞ்சம் நீங்கள் சாமர்த்தியசாலி என்றால்..ஒரு டீ.வி.,சேனலுக்கே உங்களால் உரிமையாளராக முடியும்.

ஆகவே நண்பர்களே..உங்கள் வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆகும் வழியைச் சொல்லிவிட்டேன்.

இனி மகனே உன் சமர்த்து.

Tuesday, March 22, 2011

தி.மு.க., வெற்றி உறுதி



கூட்டணி அமையும் விதத்தையும்..கட்சிகள் சென்ற தேர்தலில் வாங்கிய ஒட்டு விகிதத்தையும் வைத்து..யாருக்கு எவ்வளவு விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என தீர்மானித்து வெற்றியை அனுமானிப்பது ஒரு வகை..இது ஒரு வகையில் சரியில்லை எனலாம்.

உதாரணமாக 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க., விற்கு விழும் வாக்குகளை விட 160 தொகுதிகளில் விழும் அ.தி.மு.க., வின் வாக்குகள் அதிகமே இருக்கும்..உடன் அ.தி.மு.க., ஆதரவு பெருகுகிறது என்று சொல்லுவது சற்று அபத்தம்.அதுபோல காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் அதற்கு விழும் தி.மு.க., வாக்ககளை கணக்கில் கொள்ளாமல் காங்கிரஸிற்கு ஆதரவு பெருகுகிறது என்பதும் அபத்தம்.

ஆனால் நடைமுறையில் சர்வே இப்படித்தான் பத்திரிகைகள் எடுக்கின்றன.அவர்கள் வாதம் மற்ற தொகுதியில் போட்டியிடும் அந்தக் கூட்டணிக் கட்சியின் ஓட்டுகளும் அதே சதவிகிதத்தில் உள்ளன ..என்பதே.

அதே முறையில் இந்த முறை சர்வே சொல்வது என்ன..

தி.மு.க., பா.ம.க., வி.சி.கே., காங்கிரஸ் இவை வாங்கும் வாக்குகளின் சதவிகிதம்..அ.தி.மு.க.,தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள் வாக்கும் வாக்குகளை விட அதிகம்..இருக்கும்

ஆகவே இன்றைய நிலையில் தி.மு.க., அணிக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம்.

ம.தி.மு.க., அ.தி.மு.க., அணியில் இருந்திருந்தால்..இரண்டு கூட்டணிகளுக்கும் சம பலம் இருக்கும்..யார் வெல்வார்கள் என கணிப்பதும் சற்று கடினம்.

மதி.மு.க., பா.ம.க., போலவோ, வி.சி.கே.,போலவோ ஒரு சில மாவட்டங்களில் வலிமை பெற்றதல்ல.வை.கோ.வின் ஆதரவாளர்கள் தமிழம் முழுதும்..அனைத்துத் தொகுதிகளிலும் உள்ளனர்.

ம.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதாய் கூறினாலும்..அந்தக் கட்சியின் தொண்டர்கள் வாக்களிக்காமல் இருக்கப் போவதில்லை.

அவர்கள் வை.கோ.,வை உண்மையில் நேசிப்பவர்கள்.

அதனால்..தன் தலைவனுக்கு ஜெ யால் ஏற்பட்ட அவமானத்தை அவர்கள் மறக்க மாட்டார்கள்..ஆகவே அவர்கள் வாக்குகள் ஜெ க்கு எதிர் அணிக்கே விழும்..

அப்போது தி.மு.க., விற்கு வாக்குகள் விழுக்காடு அதிகமாகி வெல்லக் கூடிய தொகுதிகள் அதிகமாகும்.

தி.மு.க., வெற்றி கூட்டணியாய் இம்முறை திகழ கணிசமாய் வை.கோ., ஆதரவாளர்கள் வாக்குகள் இருக்கும் என உறுதியாய் கூறலாம்

இன்றைய நிலையில்..தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதியாய் கூறலாம்.

Monday, March 21, 2011

வை.கோ., விற்கு ஒரு திறந்த மடல்..





மதிப்பிற்குரிய வை.கோ., அவர்களுக்கு

வணக்கம்.

உங்கள் மீது..உங்கள் கொள்கைகள் மீது சற்று பற்று கொண்டவன் என்னும் முறையில் இம்மடலை எழுதுகிறேன்.

நீங்கள் தி.மு.க., விலிருந்து வெளி வந்து ம.தி.மு.க., ஆரம்பித்த போது...மற்ற திராவிடக் கட்சிகள் இரண்டுக்கும் மாற்றாக..கொள்கை பிடிப்புள்ள ஒரு தலைவரால் ஆரம்பிக்கப் பட்ட கட்சி என அனைவரும் எண்ணினர்.

தாங்கள் ஒரு தேர்தலில் தனித்து நின்று..எந்தத் தொகுதியில் வெல்லாத போதும்..வை.கோ., விற்கு கணிசமான வாக்கு சதவிகிதம் இருப்பதை அனைவரும் உணர்ந்தனர்.

ஏதாவது திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தால் தான் சட்டசபைக்குள் நுழைய முடியும் என்னும் துரதிருஷ்ட நிலை இன்று தமிழகக் கட்சிகள் எல்லாவற்றிருக்கும் ஆன தலையெழுத்து.நீங்களும் அவ் வலையில் விழுந்து..

உங்கள் மீது கொலை பழி சுமத்திய கட்சியுடன் கூட்டு வைத்தீர்கள்..

பின் சில அதிகத் தொகுதிகள் கிடைத்தது என மாற்று கட்சி அணியில் சேர்ந்தீர்கள்..அக்கட்சி 'பொடா' வில் உங்களை சிறையில் அடைத்ததையும் மறந்து.

ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்காத..தி.மு.க., வையும் காங்கிரஸையும் வசை பாடிய நீங்கள்...

போரென்றால் அப்பாவி மக்கள் கொல்லப் படுவது சகஜம் ..என்று சொன்ன உங்கள் கூட்டணித் தலைவிப் பற்றி வாய் மூடி மௌனியானீர்கள்..கூட்டணி தர்மம் என.

இன்று கூட்டணியில் நீங்கள் இல்லையென்றதும்..ஜெ மீது வசை பாடுகிறீர்கள்.

அது தவறு என நான் சொல்லவில்லை...ஏனெனில் ஜெ பற்றி அனைவருக்குமே தெரியும்.. ஆனால் அவருடன் இருந்ததால் அவர் செய்யும் செயலுக்கெல்லாம் துணை போனீர்கள்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்..

இந்த முறை அ.தி.மு.க., உடன் கூட்டணி முறிவு என்றதும்...

தி.மு.க., கூடாரத்திலும் இடமில்லை..

உடன்..தனியே நின்றால் வெற்றி பெற முடியாது என்பதால்..தேர்தல் புறக்கணிப்பு என்கிறீர்கள்..

இதனால் என்ன நடக்கும்..உங்களுக்கான வாக்குகள் யாருக்கு விழும்..

உங்களை நம்பிய உங்கள் கட்சிக்காரர்களும்..ஈழத் தமிழர் ஆதரவாளர்களான பொது மக்களும், தமிழக மீனவர்களும்...அ.தி.மு.க., மீது கோபமாய் இருப்பார்கள்.அவர்கள் வாக்கு ஜெ விற்கு விழாது.

அதற்கு பதில் தி.மு.க.உடன் ஆன காங்கிரஸிற்கு விழும்..

உங்கள் தயவால்..காங்கிரஸ் சில இடங்களில் வெல்லும் நிலை வரக்கூடும்..

அப்படி ஒரு நிலை உங்களால் ஏற்படலாமா?

கூடாது..கண்டிப்பாய் கூடாது..

ஆகவே..நீங்கள் செய்ய வேண்டியது என்ன..

குறைந்த பட்சம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலாவது..ம.தி.மு.க., போட்டியிட வேண்டும்..

வெல்கிறோமா..இல்லையா..என்பது..பிரச்னையல்ல..காங்கிரஸ் வெல்லக் கூடாது..

இந்தக் கோணத்தில் யோசியுங்கள்..

அப்போது..உங்களுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும்..காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு வைக்கப் பயன் படட்டும்.

ம.தி.மு.க., பல இடங்களில் வெல்லும்..நாமும் வென்றிருப்போம் அக்கட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்தால்..என சம்பந்தப் பட்டவர்களுக்கும் புரியும்.

ம.தி.முக., வின் வாக்கு சதவிகிதம் எப்படியுள்ளது என அனைவருக்கும்..நீங்கள் உட்பட தெரியும்.

செய்வீர்களா?



அன்புடன்

ராதாகிருஷ்ணன்

Sunday, March 20, 2011

கூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய 2 தொழிலதிபர்கள்





மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.

முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு 'எஸ் டைப் சேர்'மாதிரியே உட்கார்ந்து தரையை மட்டுமே பார்க்கும் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது தான். அதிமுகவிடமிருந்து அடுத்த 20 நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.

21வது நாள் திரும்பி வந்த இருவரும் வைகோவிடம், அம்மா உங்களுக்கு 8 தொகுதிகள் தருவதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, வைகோவிடம் திட்டு விழும் என்று பயந்து அதே வேகத்தில் திரும்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து 25 தொகுதியாவது வேண்டும் என்று பதில் அனுப்பினார் வைகோ. அடுத்த இரு நாட்களில் திரும்பி வந்த இந்த இருவரும் ''அண்ணே.. 8 தான் தர முடியும்னு அம்மா சொல்லச் சொன்னாங்க'' என்று பழைய ராகம் பாடினர்.

அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வைகோவை சந்திக்க வந்த இந்த இருவரும் நீண்ட நேரமாக பேசாமல் தரையையே பார்த்து தவித்துக் கொண்டிருக்க.. அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட வைகோ.. ''உங்கள் தலைவி என்ன சொன்னார்னு சும்மா சொல்லுங்க.. நான் உங்க மேலே எரிச்சல் பட்டு என்ன ஆகப் போகுது'' என்று தைரியம் தந்ததோடு, காபியும் தந்தார்.

காபி டம்ளரை கையில் கூட எடுக்காமல், அண்ணே, அண்ணே என்று தயங்கிய இருவரும்.. மொதல்ல 8 தொகுதினு சொன்ன அம்மா இன்னிக்கி காலைல எங்களை கூப்பிட்டு 7 இடம் தர முடியும்னு உங்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க என்று கூறிவிட்டு, அதே வேகத்தில் அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே காரில் ஏறிப் பறந்துவிட்டனர்.

அவர்கள் போய் பல மணி நேரம் ஆகியும் அவர்கள் சொன்ன தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வைகோ மீளவில்லை என்கிறார்கள். இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் மட்டும் வைகோ பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள், ''நம்மை கூட்டணியை விட்டு வெளியே போகுமாறு ஜெயலலிதா மறைமுகமாகச் சொல்கிறார்'' என்பதை யூகித்து வைகோவிடம் சொல்ல, நானும் அதே தான் நினைக்கிறேன் என்றிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் 9,8,7,8,7,9,7 என்று அதிமுக தரப்பிலிருந்து தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கவே வைகோ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி அவரை அதிமுக டார்ச்சர் செய்ததற்குக் காரணம், அவர் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால், அவரோ கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டுள்ளதாக தனது கட்சி நிர்வாகிகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு ஜெயலலிதாவை கடுப்பாக்கினார்.

சரி.. இனியும் வைகோ தானாகவே போக மாட்டார் என்பதால் தான் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணம் இரு தொழிலதிபர்கள் அதிமுகவுக்கு நீட்டியுள்ள 'உதவி' தான் என்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஒரு ஆலைக்கு எதிரான வைகோ நடத்திய போராட்டமும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆலையினர் அதிமுக தரப்பை சந்தித்துப் பேசியதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது ஹெலிகாப்டர், விமானம் தந்து

உதவும் கர்நாடக தொழிலதிபர். விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், இவர் தனது நிறு​வனத்தை இலங்கையில் விரிவாக்கவுள்ளார். இதற்காக இவருக்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு, இந்தத் தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியே விரட்டிவிட்டுவிட்டது என்கிறார்கள்.

வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான 'சக்தியை' இவர்கள் அதிமுகவுக்கு நீட்ட முன் வந்துள்ளனர். மேலும் ராஜபக்சே தரப்பும் கூட கூட அதிமுகவுக்கு மறைமுகமாக உதவலாம் என்கிறார்கள்.

(நன்றி தட்ஸ்தமிழ்)

இலவச பேருந்து பயணம் சாத்தியமா?



தி.மு.க., தேர்தல் அறிக்கையில் முதியோர்க்கு இலவச பேருந்து பயணம் என்றுள்ளது.

ஆனால் அது சாத்தியமா?

மேற்கண்ட கேள்வி..ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சாத்தியமா? என கிண்டலாகச் சிலரால் கேட்கப்பட்டதே..அதைப் போன்ற கேள்வி அல்ல இது..

ஏற்கனவே அரசு பேருந்து கழகங்கள் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

பணி செய்யும் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஊதியம்..பழைய வண்டிகளுக்கு மாற்ற படவேண்டிய உதிரி பாகங்கள், பராமரிப்பு, புது வண்டிகள் வாங்க வேண்டிய நிலை,எல்லாவற்றிருக்கும் மேலாக டீசல் விலை உயர்வு..என கணக்கிடமுடியா செலவுகள்..தவிர்த்து ஆண்டு ஒன்றுக்கு ஊழியர்களுக்கான போனஸ்..

இப்படிப்பட்ட நிலையில்..புது வண்டிகள் வாங்க உலக வங்கியின் கடன் கிடத்தாலும்..அது..'இலவச பயணத்தை' சுட்டிக் காட்டும்.

ஏற்கனவே மாணவர்களுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது..

பயணிக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது..

காவல்துறையைச் சேர்ந்தவர்கள், போக்குவரத்து காவல்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு இலவச பாஸ் வசதி உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது.

கலைஞர்களுக்கு கட்டணச் சலுகை இப்போதே உள்ளது

இப்போது முதியோருக்கும் இலவசப் பயணம் என்றால்..

தவிர்த்து இன்று பெருபாலானோர் அலுவலகம் செல்ல..இரு சக்கர வாகனங்களையும்..பல நிறுவனங்கள் சொந்த செலவில் பேருந்தையும் உபயோகிக்கின்றனர்.பேருந்தை எதிர்பார்க்கும் அலுவலர்கள் குறைந்துக் கொண்டு வருகிறது.

இலவச பயணச் செலவை போக்குவரத்து கழகங்களால் ஈடு செய்ய முடியுமா?

ஏற்கனவே..ஒரு ரூபாய் அரிசியில்..அரசுக்கு கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் செலவாகிறது..ஆனால்..அரிசி அத்தியாவசத் தேவை..ஆகவே அதில் குறை காண முடியாது..

ஆனால்...நம் நாட்டில் முதியோர் ஜனத்தொகை..கணிசமான அளவு அதிகம்..

ஆகவே..அவர்களுக்கு இலவசப் பயணம் என்பதை கணக்கிட்டால்...அரசால்..அந்த இழப்பை..போக்குவத்து ஊழியர் முணுமுணுப்பை மீறி ஈடு கட்ட முடியுமா?

முதியோர்கள் மருத்துவமனை செல்ல நேரிட்டால் இலவசம் என்றாலும்..நடைமுறையில் சாத்தியம்..

இது நடைமுறைப் படுத்தப் பட்டால்...

வரிகள் உயர்த்தப்படும்..அப்பாவி உழைக்கும் மக்கள் தலையில் சுமை கூடும்..

பீட்டரிடமிருந்து திருடி பால் ற்கு கொடு என்னும் ஆங்கில சொலவடைதான் ஞாபகம் வருகிறது

Saturday, March 19, 2011

வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்







வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.

1967ல் காங்கிரஸ் பதவியை பறிக்கொடுத்தது முதல் திராவிடக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றன.

காங்கிரஸில் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் இன்று இல்லை.பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டவர்கள் பிடியில் இன்றைய காங்கிரஸ்..அன்று அந்நியனை விரட்டியடித்த காங்கிரஸ் இன்று.....???!!!!

காங்கிரஸ் சப்போர்ட் இல்லையெனில்..உங்கள் திராவிடக் கட்சிகள் வெல்ல முடியாது..என காங்கிரஸ்காரர் எனப்படுபவர் சொல்லலாம்..

அந்த வார்த்தை உண்மைதான்..ஆனால்..அதற்கும் காரணம்..திராவிடக் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மை.

காங்கிரசை பொறுத்தவரை தமிழனை ஒரு இந்தியனாக அவர்கள் எண்ணுவதில்லை..

பங்களாதேஷ் மக்களை பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுவித்து..தனி நாடாக்கிய காங்கிரஸ்..

கிட்டத்தட்ட அதே சூழலில்..இலங்கைத் தமிழர்களை சிங்களர்களிடமிருந்து விடுவிக்க முன்வரவில்லையே..ஏன்..

காரணம்..சிங்களத்தில் அவதிப்படுவது தமிழன்..

இஸ்லாமிய சமுதாய நண்பர்களுக்காக மற்றொரு இஸ்லாம் நாட்டுடன் போட்டியிட்ட அந்த காங்கிரஸின் மனிதாபிமானம் இன்று எங்கே?

இந்தியத் தலைவன் ஒருவன் கொல்லப்பட்டான்..உண்மைதான்..

அதற்காக பழிவாங்க..இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டுமா..

பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்..பல்லாயிரக்கணக்கானோர்..கணவன், குழந்தை,ஆடு,மாடுகள்,வீடு வாசல் எல்லாம் இழந்து தவிக்கின்றனர்..கைகால்களை இழந்து..தன் முன்னே இருண்ட எதிர்காலத்தைக் காண்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கு.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல..காயத்தில் உப்பைக் கொட்டுவது போல..நடந்த காமன்வெல்த் போட்டி விழாவில் சிறப்புவிருந்தினர்..அந்த நாட்டு கொடுங்கோலன்..

ஆணவச் சிரிப்பு சிரித்திருப்பர் சம்பந்தப் பட்டவர்கள்..

ஆனால் காலம் என்றாவது சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்கும்..அப்போது தன் தவறை தாமதமாக உணர்ந்து வருந்துவார்கள் இவர்கள்..அதற்கு இவர்கள் கொடுக்கும் விலையும் அதிகமாய் இருக்கும்.

சரி அது போகட்டும்..தமிழத்தில் உள்ள தமிழனின் நிலையைப் பார்ப்போம் எனில் ..அதுவும் இதைப்போலத்தான்..

தமிழக மீனவர்கள்..தன் வயிற்று பசியைத் தீர்க்க கடல் கடந்து..மீன் பிடிக்கப் போய்..சிங்கள ராணுவத்தால் சுடப்பட்டு மரணமும்..சிறைவாசமும் அடைவது..இந்நாள்வரை தொடர்கதையாய் இருக்கிறது.

வெளிநாட்டில்..இந்தியன் டர்பன் கட்டமுடியாது எனில்..விரைந்து செயல்படும் அரசு..

அமெரிக்காவில் இந்திய மாணவர்களை கண்காணிக்க காலில் கண்காணிப்பு கருவியை பூட்டியதை கண்டு உடன் நடவடிக்கை எடுக்கும் அரசு..

ஆஸ்திரேலியாவில்..இந்தியர்கள் படும் அவதிக்கு உடன் தீர்வு காணும் அரசு..

தமிழக மீனவர்கள் விஷயத்தில் மௌனியாய் இருப்பதோடு..நிலமை கட்டுக் கடங்காமல் போகையில்..வன்மையாய் கண்டிக்கிறோம் என்றும்..இது தொடராது என உறுதிமொழியும் வாரி வழங்கி வருதுடன் உருப்படியாய் இப்பிரச்னைக்கு முடிவு எடுப்பதில்லை.காரணம்..அவதிப்படுபவன்..மீனவத் தமிழர்கள்...மீனவ இந்தியர்கள் இல்லை என்பதுதான்.

ஆகவே ..நண்பர்களே!..நமக்கு முன்னால் பீகார் வாக்காளர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்..

அவ்வழியைப் பின் பற்றுவோம்..

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலெல்லாம் ..எதிர்க் கட்சி வேட்பாளர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாக்களிப்போம்.

யார் ஜெயிக்கிரார்கள் என்பதை விட யார் தோற்கிறார்கள் என்பதே முக்கியம்.

தேர்தலை புறக்கணிக்கிறோம்; வை.கோ., அறிவிப்பு








அதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது. அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது 8 தொகுதிகள் வேண்டுமானால் தருகிறோம் என்றது.
இதனால் விரக்தியடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்காமல் இருந்தார்.

இதையடுத்து மதிமுகவை கூட்டணியில் சேர்க்காமல் அதிமுக தொகுதிகளை அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டணிக்கட்சியினர் மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.

பின்னர் அதிமுக கொஞ்சம் இறங்கிவந்து 12 சீட் தருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளார் வைகோ. அதுமட்டுல்ல வரப்போகும் சட்டமன்ற தேர்தலையே புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர், ‘’தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக நடந்து கொண்டவிதம் பிடிக்கவில்லை. 21 தொகுதிகள் கேட்ட நிலையில் 12 தருவதாக அதிமுக கூறியதால் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய அவசியம் மதிமுகவிற்கு இல்லை. தமிழகம் - புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், 3-வது அணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.



(நன்றி நக்கீரன் )






தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்..





தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை சிறிதுமுன் வெளியிடப்பட்டது.

அதில் அறிவிக்கப் பட்ட சில இலவசங்கள்



ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடர்ந்து வழங்கப்படும்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 18.64 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படும்.

2)பெண்களுக்கு வீடு தோறும் கிரைண்டர் இலவசம்..கிரைண்டர் வேண்டாதோர்க்கு மிக்ஸி இலவசம்.

3) 60 வயதைக் கடந்த முதியோர்க்கு இலவசமாக பேருந்தில் செல்லும் திட்டம் அமுல்படுத்தப்படும்.

4)அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மாணவர்களுக்கு மடிக்கணிணி இலவசமாக வழங்கப்படும்.

5)மாணவர்களுக்கு ஆண்டுக்கு 3 சீருடை வழங்கப்படும்

6)தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ விடுப்பு 4 மாதமாக உயர்த்தப் படும்

7)மகளிர் சுயநல ஊழைப்பு குழுவினருக்கான கடன் தொகை 4 லட்சமாக உயர்த்தப்படும்.அதில் 2 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

8)நெல்,கரும்பிற்கு நியாயவிலை

9)மீனவருக்கான காப்பீடுதிட்டம் தொடங்கப் படுவதுடன்..அவர்கள் வேலைக்கு போக முடியா நாட்களை கணக்கிட்டி நிதி வழங்கப்படும்.

10) கட்சத்தீவை திரும்பப் பெற மைய அரசை வலியுறுத்தும்

11)ஈழத் தமிழர் அமைதியாக வாழ இலங்கை அரசை வலியுறுத்தச் சொல்வோம்

12)சொட்டு நீர் பாசனத்திற்கு விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும்



மேலும் நதிகள் தேசிய மயம்,மதுரை,திருச்சியில் மன நல மருத்துவ மனைகள்..முதியோர்க்கு மாதம் ஒருமுறை வீடுதேடி வந்து மருத்துவ சிகிச்சை,நுகர்வோர் சந்தை போன்ற பல கவர்ச்சிகர அறிவிப்புகள் அறிக்கையில் காணப்படுகின்றன..



இரு தினங்களுக்கு முன் கலைஞர் சொன்னது போல இந்த அறிக்கை கதாநாயகி அறிக்கையே.

Friday, March 18, 2011

மதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ஓ.பி-செங்கோட்டையன் சமரச பேச்சு




 மதிமுகவின் முக்கியத்துவத்தை வெகு தாமதமாக உணர்ந்துள்ள அதிமுக தற்போது வைகோவை சமரசப்படுத்த தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக அதிமுக குழுவினர் நேரடியாக மதிமுக அலுவலகத்திற்கே சென்று வைகோவுடன் பேச்சு நடத்தினர்.

அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட வைகோவுக்கு உரிய மரியாதை கொடுக்காமல், கேவலமாக நடத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் அதிருப்தி அடைந்த மதிமுக இன்று தனது கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தை கூட்டியது. இடையில், ஜெயலலிதாவின் அவசரக்குடுக்கை செயல்பாட்டால் ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டன.

எல்லாம் கூடி வந்த நேரத்தில் அத்தனையும் தனக்கு எதிராக திரும்பியதைப் பார்த்து ஜெயலலிதாவும், அவரது ஆஸ்தான ஆலோசகர்களும் குழம்பிப் போயினர்.
இந்த நிலையில் தற்போது மதிமுகவையும் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தீவிரமாகியுள்ளது. இதற்காக இன்று காலை ஓ.பன்னீர் செல்வமும், கே.ஏ.செங்கோட்டையனும் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்திற்குச் சென்றனர்.

அங்கு வைகோவை அவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது மதிமுக நிர்வாகிகள் மல்லை சத்யா, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு திட்டத்தை வைகோவிடம் தெரிவித்த அவர்கள் மதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணையுமாறு கோரினர்.

அப்போது 23 இடங்கள் வேண்டும், குறைந்தபட்சம் 21 இடங்கள் கட்டாயம் வேண்டும் என்ற தனது நிலையை வைகோ விளக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து வைகோவிடம் பேசியதை ஜெயலலிதாவிடம் தெரிவிக்க ஓபியும் செங்கோட்டையனும் போயஸ் கார்டன் கிளம்பிச் சென்றனர்.

முன்னதாக மதிமுகவுக்கு 9 இடங்கள் தருவதாக ஜெயலலிதா கூறியதால் இன்று தனது கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை வைகோ கூட்டினார்.

அதில் ஏடாகூடாமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் வைகோவுடன் ஜெயலலிதா சமரசப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.


(நன்றி -தட்ஸ்தமிழ்)

சூபர் மூன்..





இன்று பௌர்ணமி..மெகா பௌர்ணமி.

ஆம்..பூமிக்கு அருகில் இன்று சந்திரன் வருவதால்..வழக்கத்தைவிட சந்திரன் சற்று பெரியதாகத் தெரியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இப்படி வானில் அதிசயங்கள் வருகையில்..பூகம்பம்,எரிமலை,வெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.அதற்கேற்றாற் போல ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்து விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்...

பூகம்பமோ..சுனாமியோ ஏற்பட எந்த வகையிலும் இது காரணமாய் அமையாது.சற்று பெரியதாய்த் தெரியும் நிலவை பார்த்து ரசியுங்கள்.

இதனால் வெப்பநிலையிலும் மாற்றம் இராது.கடல் அலைகள் மட்டும் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் இருக்கும்.

1993ஆம் அண்டுக்குப் பிறகு இன்று தான் இந்நிகழ்வு ஏற்படுகிறது.சந்திரன் இன்று 14 விழுக்காடு வழக்கத்தைவிட பெரியதாகவும்..30 விழுக்காடு அதிக ஒளியுடனும் திகழும்.

பூமிக்கு 356577 கிலோமீட்டர் தூரத்தில் சந்திரன் வருகிறதாம்.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(18-3-11)





ஒட்டகம் மணிக்கு 15 கிலோமீட்டர் வீதம் 18 மணிநேரம் தொடர்ந்து பாலவனத்தில் நடந்துச் செல்லுமாம்..பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகும் நிலையில்..வீட்டிற்கு ஒரு ஒட்டகம் வளர்க்கலாம்.



2)ஜூன் மாதம் முதல் 25 காசு நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ஆனால் நடைமுறையில் இப்போதே யாரும் 25 காசை வாங்குவதில்லை



3)இந்த வார குமுதம் இதழில் 'அரசு' கேள்வி பதிலில் ஒரு வாசகர் 'சிறுகதைகள்' பற்றிய கேள்விக்கு அரசு அளித்துள்ள பதில்..

"இப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருவகை.எப்படியும் எழுதலாம் என்பது இன்னொரு வகை.முதலாவது வகைக்கு எழுத ஆள் கிடைப்பது அரிதாக இருப்பதால் சிறுகதைக்கு இது சுனாமி காலம்"

இந்த பதில் உண்மைதானா..

தமிழில் இன்று எழுத்தாளர்களே இல்லையா..

சிறுகதை எழுத்தாளர்களும்..தமிழ் ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும் என்ன சொல்கிறார்கள்...தெரியவில்லை



4)நம் நாட்டில் செல்ஃபோன்,மெகாசீரியல் இரண்டும் மனிதர்களின் நேரத்தை வீணடிப்பதுடன்..மூளையையும் மழுங்கச் செய்வதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.



5)ஜப்பான் மொத்தம் 2456 தீவுகளைக் கொண்டதாம்.மொத்த பரப்பளவு 3லட்சத்து77ஆயிரத்து 923 சதுரகிலோமீட்டராம்.பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம்.இது பொறுக்காமல் தான் இயற்கை அவ்வப்போது தன் சீற்றத்தைக் காட்டுகிறதோ!!



6)1966ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு தமிழக அரசு வழங்க இருந்தது.அவ்விருதை அன்றைய கவர்னர் வழங்க இருந்தார்.மொழி தெரியாத அவர் என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை.என் படத்தை பார்க்காதவர் கொடுக்கும் விருதை நான் வாங்கத் தயாராய் இல்லை என்று விட்டாராம் ராதா.



7) ஒரு ஜோக்..

தலைவர் யாருடனோ கூட்டணி வைக்க கேட்கச் சொல்லியிருக்காரே....யாருடனாம்..

உலகக் கோப்பையை வெல்லும் அணி கூட்டணிக்குத் தயாரா என கேட்கச் சொல்லியிருக்காராம்.

2)தலைவர் ஏன்..கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை கட்சியிலிருந்து எடுத்துவிட்டார்..

கட்சிக்கு என்று எதுவும் கொள்கை இல்லை என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டாராம்

Thursday, March 17, 2011

கலைஞருடன் ஒரு கற்பனைப் பேட்டி..





கேள்வி- தி.மு.க., 119 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்

பதில்-234 க்குள் 119 இருப்பதால்

கேள்வி-திருவாரூரில் நீங்கள் போட்டியிடக் காரணம்

பதில்-திருவாரூர் என ஒரு தொகுதி இருப்பதால்

கேள்வி-காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அது வெற்றி பெறுமா?

பதில்-இதற்கான பதில் சத்திய மூர்த்திபவனில் கிடைக்கும்

கேள்வி-இந்த நேரத்தில் சாதிக் தற்கொலை செய்துக் கொண்டது பற்றி..இது கொலையா..தற்கொலையா

பதில்-தற்கொலைக்குள்ளேயே கொலை இருப்பது தெரியவில்லையா

கேள்வி-பத்திரிகைகள் ஒத்துழைப்பைக் கேட்டுள்ளீர்களே..ஏன்?

பதில்-பக்கம் பக்கமாய் வசனம் எழுதும் என்னை..அடுக்கடுக்காய் வசனம் பேசும் என்னை..ஓருரு வார்த்தைகளில் பதில் பேசவைப்பதால்

கேள்வி-அ,தி.மு.க., கூட்டணி தகராறு பற்றி

பதில்-இதற்கு நான் மகிழ்ச்சியாய் உள்ளது என பதிலை எதிர்பார்ப்பீர்களானால்..நீங்கள் ஏமாறுவீர்கள் என நான் சொல்வேன் என எதிர்பார்க்கிறீர்களா

கேள்வி-தனித்து மெஜாரிட்டி பெற்று தி.மு.க., ஆட்சி அமைக்குமா

பதில்-அத்தைக்கு மீசை முளைக்கட்டும்..பின்னர் அத்தையா..சித்தப்பாவா என புரியும்

கேள்வி-வைகோ திரும்ப உங்களிடம் வருவாரா?

பதில்-என் படங்களுக்கு ஹவுஸ்ஃபுல் போர்ட் போட முடியாவிடினும்...தொகுதி பங்கீடு முடிந்து ஹவுஸ்ஃபுல் போடப்பட்டு விட்டது

கேள்வி-இந்த முறை தேர்தல் அறிக்கையில் இலவசமாக என்ன அறிவிக்கப் போகிறீர்கள்

பதில்-மைய அரசில் மந்திரிகள் மாற்றத்தை வைத்து அதற்கேற்றார் போல் இலவசங்கள் அறிவிக்கப் படும்..

கேள்வி-வீராசாமி,மணி ஆகியோர்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே

பதில்-அன்பழகன் மற்றும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டி இருப்பதால்

கேள்வி-நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எங்கு பதவி ஏற்பீர்கள்

பதில்-சீவக சிந்தாமணி பூங்கா தயாராகிவருகிறது.

கேள்வி-மகாபலிபுரம் போய் வேட்பாளர் பட்டியலை தேர்ந்தெடுக்கக் காரணம்

பதில்-மாமல்லன் தான்

Wednesday, March 16, 2011

ஜெ ஏன் இந்த முடிவெடுத்தார்..





வை.கோ.வுடன் தொகுதி பங்கீடு முடியவில்லை.

மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டாலும் தொகுதிகள் ஒதுக்கப் படவில்லை.

இந்த நிலையில் ஜெ ஏன் அவசரப் பட்டு 160 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

என் அரசியல் நண்பர்..அ.தி.மு.க., வைச் சேர்ந்தவர் அவருடன் உரையாடுகையில் அவர் தந்த தகவலை அப்படியே தருகிறேன்.

ஜெ ..தி.மு.க., வால் காங்கிரஸ்,பா.ம.க., வி.சி.க.,விற்கு ஒதுக்கப் பட்ட தொகுதிகளைப் பார்த்ததும் இம் முடிவெடுத்தார் என்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள பல தொகுதிகளில் ..அ.தி.மு.க., வெற்றி பெறும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.ஆகவே ம.தி.மு.க., வின் 4 சதவிகித ஓட்டுவங்கி தனக்கு ஆதரவாய் இல்லையெனினும் பரவாயில்லை என முடிவெடுத்தார்.ஆனால்..இது கம்யூனிஸ்ட்கள், தே.மு.திக., வையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் என நினைக்கவில்லை.

ஆனாலும்..இனி எதற்கும் அம்மா தயார் 'என்றார்.

இது எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கக் கூடும் என தெரியவில்லை.

ஆனால்..ஒன்று மட்டும் புரிகிறது..

அம்மாவின் அகங்காரம் இன்னும் குறையவில்லை..என்று.

இனி வைகோ என்ன செய்ய வேண்டும்..





அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது.

ம.தி.மு.க.விற்கு இடமில்லை..

இதற்கு மேல் வைகோ இறங்கி வந்து...கொடுத்த தொகுதிகளை ஒப்புக் கொள்வார் என்று தோன்றவில்லை.அப்படியே ஒப்புக் கொண்டாலும் அது அவரது தன்மானத்திற்கு இழுக்கு.

ஆக..இந்நிலையில் வை.கோ., செய்ய வேண்டியது என்ன..

தமிழனின் முதல் எதிரி காங்கிரஸ்..காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ..அங்கெல்லாம் அதைத் தோற்கடிக்க வேண்டும்.

வை.கோ.,வின் முயற்சி அதுவாய் இருக்கட்டும்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து..அங்கு தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்தட்டும்..வெற்றி முக்கியமல்ல..காங்கிரஸ் தோல்வி முக்கியம்..அதைத் தன்னால் ஓரளவு செய்ய முடியும் என நிரூபிக்கட்டும்.

அப்படி போட்டியிடும் தொகுதியில்..வாங்கும் ஒவ்வொரு ஓட்டும்..விலை மதிப்பற்றது.

வை.கோ., சீமான்..ஆகியோர் இனி இதைத்தான் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால்..கருத்து ஒருமித்த சில சிறு கட்சிகளுடன் வை.கோ., கூட்டு சேர்வதில் தவறில்லை.

Tuesday, March 15, 2011

தி.மு.க.., பறிகொடுத்த தொகுதிகள்


காங்கிரஸ் கட்சிக்கும், பா.ம.க.,விற்கும்,வி.சி.கே.,விற்கும் தி.மு.க., கூட்டணியில் ஒதுக்கியுள்ள தொகுதிகளைப் பார்த்தால் சற்று வியப்பே ஏற்படுகிறது.

நிச்சயம் நம்மால் வெல்ல முடியும் என தி.மு.க., எண்ணும் தொகுதிகள் பல கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

1991ல் சட்டசபைத் தேர்தலில்...ராஜிவ் மறைவு அனுதாப அலை வீசிய போதும்...துறைமுகம் தொகுதி தி.மு.க., வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தது.வென்றவர் கலைஞர் என்பது வேறு விஷயம்.

சென்னையைப் பொறுத்தமட்டில் 16ல் 6 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.இதில் அண்ணாநகர், வேளச்சேரி, துறைமுகம் ஆகியவை தி.மு.க.,வின் தொகுதிகள் எனலாம்.

பல முக்கியத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது நன்றாகவே தெரிகிறது.

ஜெ வையே தோற்கடித்து அன்றைய புதுமுகம் சுகவனத்தைத் தேர்ந்தெடுத்த பர்கூர் பா.ம.க., விற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

அதே போன்று புதிதாக உருவாகியுள்ள ஆவடி தொகுதி தி.மு.க., வெல்ல முடிந்த தொகுதி.அது காங்கிரஸ் கட்சிக்கு.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் என பா.ம.க.,விற்கும், காங்கிரஸிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் தி.மு.க., பல வலுவான தொகுதிகளை...கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது புரிகிறது.

இஸ்லாமிய சகோதரர்கள் நிறைந்தவை என்ற அளவில் துறைமுகமும்,வாணியம்பாடியும் முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது புரிகிறது..ஆனால் நாகப்பட்டிணம்..கம்யூனிஸ்ட் எளிதில் வெல்லும் தொகுதியை ஏன் முஸ்லீம் லீக்கிற்குக் கொடுத்தார்கள்.தி.மு.க., முஸ்லீம் லீக் காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்த ஒரு தொகுதியை..தி.மு.க., மீண்டும் தருவதாகத் தந்தது இத் தொகுதியைத்தான் என புரிகிறது.

மதுரையில்..மதுரை வடக்கு,மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகியவை காங்கிரஸிற்கும்..சோழவந்தான் பா.ம.க., விற்கும் கொடுத்துள்ளது புருவத்தை உயர்த்த வைக்கிறது.

தி.மு.க., வின் தொகுதிகள் பல பறிபோயுள்ளது புரிகிறது.

இது.....

தி.மு.க., வின் நிலையை புரிய வைக்கிறது

Monday, March 14, 2011

வை.கோ., என்னும் மாமனிதன்..


அரசியலில் பல தலைவர்கள், குட்டித் தலைவர்களையெல்லாம் நாம் நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால்..தான் கொண்ட கொள்கைகளை எங்கிருந்தாலும் கடைப்பிடிக்கும் தலைவர்களைப் பார்ப்பது அபூர்வம்.
அப்படிப்பட்ட ஒரு தலைவர் வை.கோ., எனலாம்.
அவர் எம்.பி.யாய் இருந்த போதும் சரி..இல்லாத போதும் சரி மத்திய அரசு பிரதமர்களால் மதிக்கப் பட்டவர்.வாஜ்பாயி ஆனாலும் சரி..இன்றைய மன் மோஹன் சிங்கும் சரி வைகோ வை மதிப்பவர்கள்.
வை.கோ., வும் தான் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட்ட கூட்டணி தலைமைமையில் தான் இருந்த போதும் அக்கூட்டணியை மதிப்பவர்.
அதனால் தானோ என்னவோ.. அவர் அதிகம் அவர்களால் அலைக்கழிக்கப் படுகிறார்.
2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., ஒதுக்கிய தொகுதி போதாது..என ஒரு சில தொகுதிகளை அ.தி.மு.க., தந்ததால் அந்த கூட்டணியில் இணைந்தார்.இன்றுவரை ஒரு சில கட்சித் தலைவர்களைப் போல இல்லாமல் தான் சார்ந்த கூட்டணித் தலைமைக்கு உண்மையாய் இருக்கிறார்.
ஆனால்..அதற்கு பலன்..இந்த நிமிடம்வரை அவருக்கு அ.தி.முக.,, உடன் தொகுதி உடன் பாடு ஏற்படவில்லை.
கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆனாற் போல போனமுறை 35 தொகுதிகள் பெற்றவர்..இப்போது 25..18..12 என 10தொகுதிகளே கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ளார்.
வை.கோ.,வின் பிரச்சாரம் இந்த முறை அவசியம் தேவை என்பதை கூட்டணித் தலைமை உணரவில்லை.
வை.கோ., இப்போது என்ன செய்ய வேண்டும்..
கொடுத்த 10 தொகுதிகளை வாங்கிக் கொண்டு..அந்த 10 தொகுதிகளிலும் வென்று காட்ட வேண்டும்.
தனது முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும்.
எந்த கூட்டணியாய் இருந்தாலும்..ம.தி.மு.க., முக்கியக் கட்சி என புரிய வைக்க வேண்டும்.இழந்த அதிகாரத்தை மீட்க வேண்டும்..
வை.கோ., என்ற பண்பாளர், மாமனிதன் இதைச் செய்வாரா?

எந்த ஊர் நியாயம்



ஒரு உயிருக்கு
ஒரு உயிர் என்றால் சரி
ஒரு கொலைக்கு
லட்சக் கணக்கான கொலையா
பல்லாயிரக் கணக்கானோர்
வீடு வாசல் இழப்பா
ஆயிரக் கணக்கானோர்
கற்பழிப்பா
எந்த ஊர் நியாயம்
பழிக்குப் பழி என்றால்
பாவம் மக்கள் என்ன செய்தர்
நீதி தேவதை கண் கட்டிதானிருக்கிறது

Sunday, March 13, 2011

கருணைக்கொலையும்..மனிதாபிமானமும்





38 ஆண்டுகளாக உணர்ச்சியற்ற நிலையில் அந்தப் பெண் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.படுக்கையிலேயே அவள் கிடப்பதால் கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

அவள் பெயர் அருணா..வட கர்நாடகாவில் உள்ள ஹால்திப்பூர் சொந்த ஊர்.ஏழைக் குடும்பம்..அதனால்தானோ என்னவோ..மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அவளுக்கு எண்ணம்.ஆகவே மும்பைச் சென்றாள்.நர்ஸ் பயிற்சி முடித்தார்.மும்பை பரேல் பகுதியில் உள்ள மன்னர் எட்வர்ட் நினைவு மருத்துவ மனையில் வேலைக்கு சேர்ந்தார்..

அந்த மருத்துவமனையில் தான் ஷோகன்லால் என்னும் காமுகன் வார்டு பாயாக இருந்தான்.அவன் சரிவர வேலை செய்யாததால் அருணா அவனை அவ்வப்போது கடிந்து கொள்வாள்.

இதனால் ஆத்திரமடைந்த அவன் அவளை பழிவாங்கத் துடித்தான்.மேலும் அருணா கொள்ளை அழகு.அந்த அழகு வேறு அவனை ஆட்டிப் படைத்தது.

1973ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள்..மாலை 5 மணி.அருணா அன்றைய பணி முடிந்து. அறைக்குச் சென்று நர்ஸ் உடைகளை கலைந்து தன் சாதாரண உடைகளை அணிந்துக் கொள்ளச் சென்றாள்.

ஆனால்..அந்த அறையில் ஏற்கனவே மறைந்திருந்த மிருகம் ஷோகன்லால் அவள் மீது பாய்ந்தான்.தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டான்.பின் அவளைக் கொல்லவும் முடிவெடுத்தான்.நாய்ச்சங்கலியால் அருணாவின் கழுத்தை இறுக்கினான்.அப்போதுதான் அருணா உணர்வற்றுப் போனாள்.இன்னும் மீளவில்லை.

அருணாவிற்கு அப்போது வயது 23.அதே மருத்துவமனையில் வேலைப் பார்த்து வந்த டாக்டர் சந்தீப் சர்தேசாயை அவள் காதலித்து வந்தாள்.அவர்கள் திருமணத் தேதியும் குறித்தாகி விட்டது.இந்நிலையில் தான் இந்தக் கோரச் சம்பவமும் நடந்தது.

அருணாவிற்கு மருத்துவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும்..அவரது வாழ்க்கை படுக்கையில்தான் என்றாகிவிட்டது.




இன்று வயது அவளுக்கு 63..

அவள் படும் நரக வேதனையைக் கண்டு மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அவளை கருணைக் கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றத்தை நாடினர்.மத்திய அரசின் கருத்தை உச்ச நீதி மன்றம் கேட்டது.மத்திய அரசோ கருணைக் கொலையை அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டது.ஆதலால் உச்ச நீதி மன்றத்தில் உறுதியான தீர்ப்பளிக்க முடியவில்லை.

இது அருணா மீது கரிசனத்தோடு இருப்பவர்களால் வரவேற்கப்பட்டது.

ஆனாலும் பாவம் ..இன்னும் இந்த பூமியில் அவள் எவ்வளவு நாள் படுக்கையில் இருந்தபடியே மூச்சுக் காற்றை விட்டுக் கொண்டிருக்க வேண்டுமோ?

Saturday, March 12, 2011

சொத்தை பௌலரும்..சொதப்பல் இந்தியாவும்..





இந்திய அணிக்கு என்னதான் பேட்டிங் லைன் அப் ஸ்ட்ராங்காய் இருப்பதாய் சொல்லிக் கொண்டாலும்...கடைசி சில ஓவர்களில் நம் இந்திய வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல்..அல்லது சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழப்பது வழக்கம்.

இந்த விஷயத்தில் இந்திய அணியினருக்கும்..பெரிய டீம்..சின்ன டீம் என பாராபட்சமே கிடையாது.

அதே போன்று எவ்வளவு ரன்கள் அணி எடுத்தாலும்..எதிர் அணியுடன் விளையாடுகையில் பார்ப்பவர் நகங்களை கடித்து விழுங்கும் அளவு டென்ஷனில் வைப்பதும் கை வந்த கலை.

நேற்றைய சவுத் ஆஃப்ரிக்காவுடன் ஆன ஆட்டத்திலும் அதுவே நடந்தது.

டெண்டுல்கரும்,ஷேவாகும்,கம்பீரும் அருமையாய் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள் நேற்று.267 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில்..மீத மிருந்த பத்து ஓவர்களில் இந்தியா கிட்டத்தட்ட 350 ஓட்டங்களை நெருங்கும் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் 69 ஒட்டங்களில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது. அணி 50 ஓவர்கள் கூட முழுமையாக விளையாட முடியாதது வெட்கங்கெட்ட விஷயம்
சவுத் ஆஃப்ரிக்கா நன்கு ஆடி, கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்..

கடைசி ஓவர் போடும் சந்தர்ப்பத்தை கேப்டன் தோனி ஆஷிஷ் நெஹ்ராவிற்கு அளித்தார்..ஹர்பஜன் சிங்கிற்கு ஒவர் மீத மிருந்தது.

தவிர்த்து..கடைசி ஓவர்களில் பௌலர்ஸிற்கு சச்சின் சில அறிவுரைகளை வழங்கியதைப் பார்த்த போது..அவருக்கும் இரண்டு மூன்று ஓவர்கள் கொடுத்திருக்கலாம் எனத் தோன்றியது.

விஷயத்திற்கு வருவோம்...

கடைசி ஓவர் நெஹ்ராவிற்கு என்றதும்..என்னுடன் அமர்ந்து மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பத்து வயது சிறுவன் எழுந்து விட்டான்..

'எதுவும் சொல்லமுடியாது..மேட்சைப் பார்' என்றேன்.

'13 ரன் எடுக்கணும் சவுத் ஆஃப்ரிக்கா..போடப் போவது சொத்தை பௌலர்..அதனால் அவங்க ஈஸியா ஜெயிச்சுடுவாங்க' என்றான்.

நெஹ்ராவும்..கொஞ்சமும் யோசிக்காது..4,6,2,4 என ரன்களை அள்ளி வழங்கினார்.

வீரர்களின் ஈடுபாட்டை சற்று யோசிக்கவைத்த மேட்ச்.

Friday, March 11, 2011

விசாரிப்பு


எங்கள்

அடுக்ககத்தில்

அண்டை வீட்டில்

தூது அஞ்சல் ஊழியர்

என்னை விசாரிக்கையில்

தெரியாது என காதில் விழும் நேரம்

வரிசையாக

எதிரும் புதிரும் விரையும்

எறும்புகள்

ஒன்றை ஒன்று

முகர்ந்து செல்வதை

பார்த்துக் கொண்டிருக்கிறேன்



தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (11-3-11)





இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது..பிரணாப் முகர்ஜி, 'மழைக்கு இந்திரனையும்,செல்வத்திற்கு லட்சுமியையும் பிரார்த்திப்பதாக'க் கூறினார்.இதற்கு டிவிட்டரில் பதில் வந்து விட்டதாம்..இவற்றையெல்லாம் அழிக்கும் கடவுள் சிவன்..பிரணாப் என.



2)நாள் முழுதும் கூடுமானவரை ஆனந்தமாக சிரியுங்கள்.இதன் மூலம் மன அழுத்தம், கவலையை போக்கலாம்.மனம்விட்டு சிரிப்பதால் முகத்திலுள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி கிட்டி, முக அழகுக் கூடுகிறது



3)மனித உடலில் மிகவும் குளிர்ச்சியான பாகம் மூக்கின் நுனியாகும்



4)துருவப் பிரதேசங்களான ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றனவாம்.அடுத்த நூறு ஆண்டுகளில் சென்னை நகரமே கடலில் மூழ்கிடும் என்கிறார் 'பனிமனிதர்' என அழைக்கப் படும் துருவப்பகுதி ஆராய்ஸ்சியாளர் ராபெர்ட் ஸ்வான்



5)தமிழக அரசின் சின்னமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் 196 அடி உயரமாம். 11நிலைகளுடன்..11 கலசங்களுடன் அமைந்துள்ளது.பொதுவாக கோபுரங்களில் சாமிகளின் உருவம்தான் இருக்கும்..ஆனால் இந்தக் கோபுரத்தில் அப்படி ஏதும் கிடையாது.தமிழர்களின் சிறந்த கட்டிடக் கலைக்கு இது எடுத்துக் காட்டாகும்



6)அரசியல் அதிகாரத்திற்காக எதையும் செய்கிற அளவிற்கு துணிந்து விட்டார்கள்.அதற்காகத் தேர்தல் விதிகளை மீறி பணத்தை இறைக்கிறார்கள்.வாக்காளர்கள் இதற்கு ஒரு போதும் மயங்கக் கூடாது.பணத்திற்கும், பிரியாணி பொட்டலத்திற்கும்,மது விற்கும் வாக்குகளை அடகு வைக்கும் நிலைக் கூடாது..'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்கள் புரிய வைக்க வேண்டும் என்கிறார்..தமிழக தேர்தல் அதிகாரியாய் இருந்த நரேஷ் குப்தா.



7) கடந்த நிதி ஆண்டில் நாட்டில் தகவல் நுட்பம் மற்றும் பி.பீ.ஓ., துறை 19 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

8)ஜப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் அந்நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை முற்றிலுமாக புரட்டிப்போட்டுள்ளது
 

Thursday, March 10, 2011

அரசியல் ஜோக்ஸ்..




1)காங்கிரஸ் ஏன் 63 தொகுதிகள் கேட்டங்களாம்

ஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்



2)ராமதாஸ் தனக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து ஒரு தொகுதியை எப்படி விட்டுக் கொடுத்தார்

ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் கேட்டாப்போல மேலவைல ஒரு சீட் அவர் சொல்றவருக்குத் தரதா கலைஞர் சொல்லி இருப்பார்



3)சரத்குமாருக்கு இரண்டு தொகுதியை ஜெ ஒதுக்கி இருக்காரே

இரண்டாவது யார்



4)நாட்டில எவ்வளவு ஜாதிகள் இருக்கு

ஒரு சீட்,இரண்டு சீட் வாங்கின கட்சியெல்லாம் லிஸ்ட் எடுத்துப் பார் ..தெரிஞ்சிடும்



5)இந்த முறை ஆட்சிக்கு வந்தா மக்களுக்கு இலவசமா என்ன தருவாங்க

அல்வா தருவாங்க



6)தலைவர் டில்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்

அவங்க சொல்றதெல்லாம் புரியாம..மௌனமாகவே இருந்திருக்கார்..மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு ..பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க



7)63 தொகுதிக்கு பின்னும் கட்சிக்குள்ள பேச்சு வார்த்தை நடக்குதாமே

மொத்தம் கட்சியிலே 9 கோஷ்டி இருக்கே..ஒரு கோஷ்டிக்கு ஒன்பது தொகுதிகள் கேட்டு பேச்சு வார்த்தை நடந்துக் கிட்டு இருக்கு



8)விபீஷணன் சரணாகதிக்கும்..தி.மு.க., சரணாகதிக்குமான ஒற்றுமை .வேற்றுமை என்ன

ஒற்றுமை ஆட்சியை தனதாக்கிக் கொள்ள..வேற்றுமை..அநீதியை ஒழிக்க விபீஷணன் சரணாகதி..நீதியை ஒழிக்க தி.மு.க., சரணாகதி



9)இந்த தேர்தல்ல யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு நினைக்கறே..

யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு தெரியாது..ஆனா யார் தோப்பாங்கன்னு தெரியும்..ஜனநாயகம் தோற்கும்



10) சரத்குமார் அ.தி.மு.க., கூட்டணிக்குப் போயிட்டாரே..இனி என்னவாகும்

செல்லமே ஜெ ல வரும்

அதிமுக கூட்டணி உடைகிறது?: 3வது அணி அமைக்க வைகோ முயற்சி?



தங்களை அதிமுக பொதுச் செயலாளர் ஊறுகாயாக பயன்படுத்துவதாக மதிமுக, இடதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இவர்களுக்கு மிகக் மிகக் குறைவான தொகுதிகளையே தர அதிமுக முன் வந்துள்ளது. இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.
ஆனால், அதைவிட அவர்களை மிக மிக கோபம் கொள்ள வைத்தது ஜெயலலிதாவின் சந்தர்ப்பாதம் தான் என்கிறார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே சண்டை வந்தவுடன், காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பதற்காக தங்களுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையையே ஜெயலலிதா நிறுத்தி வைத்ததை வைகோவும் இடதுசாரிகளும் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கேவலமாகக் கருதுகின்றனர்.
ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரின் சொல்படி, இவர்களை வெட்டிவிட்டுவிட்டு காங்கிரசோடு கூட்டணி சேர அதிமுக முடிவு செய்து டெல்லியில் தனது சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆ'சாமி'யின் உதவியோடு அந்தக் கூட்டணிக்காக அதிமுக தீவிரமாக முயன்றது.
இதை உணர்ந்த மதிமுகவினரும், இடதுசாரிகளும் கடும் கோபத்துக்குள்ளாகினர். ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதியானதும், இவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. இதை இவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்.
அதிமுக செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தங்களுக்கு மரியாதையான அளவிலான தொகுதிகளையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்பது தான் வைகோ மற்றும் இடதுசாரிகளின் இப்போதைய கருத்தாக உள்ளது.
ஆனால், தேமுதிக வந்துவிட்ட தைரியத்தில் இவர்களை உதாசீனப்படுத்தும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். இதற்கு அவரது அட்வைசரான அந்த பத்திரிக்கையாளரே முக்கியமானதாகக் கருதப்படுகிறார். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட அவருக்கு வைகோவைக் கண்டாலும் ஆகாது, இடதுசாரிகளை ஆகவே ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் மதிமுகவுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட் தருவதாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. கடந்த முறை 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக இம்முறை 36 கேட்டது. பின்னர் 30, 26 என்று இறங்கி வந்தார் வைகோ.
ஆனால், அதிமுகவோ மதிமுகவுக்கு 5 சீட்டில் ஆரம்பித்து 6, 7, 8, 9 என்று போய் இப்போது 10 சீட்களிலேயே நின்று கொண்டுள்ளது. இதையடுத்து 18 தந்தால் உடன்பாடு செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வைகோ இப்போது இறங்கி வந்துவிட்டார். ஆனாலும் இதைக் கூடத் தர அதிமுக தயாராக இல்லாததால் தான் அவரை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இழுத்தடித்து வருகிறது என்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் 35ல் போட்டியிட்டு 6ல் தானே வென்றீர்கள். அதிலும் 3 எம்எல்ஏக்கள் உங்களுடன் இல்லையே, மக்களவைத் தேர்தலில் 4 சீட் தந்து ஒரு
இடத்தில் தான் வென்றீர்கள், இதனால் இப்போது 10 தொகுதிகள் போதாதா என்று மதிமுகவிடம் அதிமுக கேள்வி எழுப்பியதாகவும் சொல்கிறார்கள். இதையடுத்து 184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வெறும் 61 தொகுதிகளில்தானே வென்றது. இதற்காக அதிமுக 50 மட்டும் போட்டியிடுமா என்று மதிமுக தரப்பு பதில் கேள்வி கேட்டுள்ளது.
அதிமுகவின் இந்த செயல்களால் மனம் ஒடிந்து போன வைகோ, இப்போது தனது கட்சியின் மரியாதையைக் காப்பாற்ற போராடிக் கொண்டுள்ளார்.
முதலில் கடந்த 5ம் தேதி இரவு 10 மணிக்கு தாயகத்தில் வைகோ தலைமையில் நடந்த மதிமுக அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் அனல் பறந்துள்ளது.
கூட்டத்தில் பேசிய மதிமுக தொகுதி உடன்பாட்டுக் குழு உறுப்பினரான திருப்பூர் துரைசாமி, போயஸ் கார்டன் கதவை எத்தனையோ தடவை தட்டி விட்டோம். நம்மை ஒரு பொருட்டாகவே ஜெயலலிதா மதிக்கவில்லை. காங்கிரசோடு கூட்டு சேர சுப்பிரமணிய சாமி மூலம் ஜெயலலிதா முயற்சித்தார். இதனால் தான் ஸ்பெகட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிப்பதை சாமி நிறுத்தினார். ஜெயலலிதா ஒரு நம்பிக்கைத் துரோகி என்று பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசுகையில், நமக்கு மரியாதைக்குரிய அளவில் சீட் தரப்படாவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து நாம் வெளியேற வேண்டும் பேச, அடுத்தடுத்துப் பேசியவர்கள் ஜெயலலிதாவை மிகக் கடுமையான அர்ச்சித்துள்ளனர்.
இறுதியில் கலங்கிய முகத்துடன் பேசிய வைகோ, நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா துரோகிதான். துரோகச்செயல்களுக்கு அஞ்சாதவர் தான். கம்யூனிஸ்டுகள் வெளியே வந்தால் அவர்களோடு சேர்ந்து மூன்றாவது அணியை அமைக்க முயல்வோம் என்று பேசியுள்ளார்.
இந்தத் தகவல் அதிமுக தரப்புக்குக் கிடைக்க, நள்ளிரவில் மதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், அவசரப்பட வேண்டாம், கம்யூனிஸ்டுகளுக்கும், உங்களுக்கும் உரிய இடங்கள் தரப்படும் என்று சமாதானம் சொன்னதோடு சரத்குமார், கார்த்திக் கட்சிகளுக்கும் அம்மா சீட் தரப் போகிறார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் என்கிறார்கள்.
ஆனாலும் அதைத் தொடர்ந்து 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதிமுகவிடமிருந்து எந்த அழைப்பும் இல்லாததால் அந்தக் கூட்டணியிலிருந்து கழன்றுவிட வைகோ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து தனியாக 3வது அணியை உருவாக்க வைகோ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய மூன்று கட்சிகளையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைத்து தொகுதிகளின் எண்ணிக்கையை ஜெயலலிதா அறிவிப்பார் என்று இந்தக் கட்சிகள் கருதின.
ஆனால், இதில் எந்தக் கட்சியுடனும் ஜெயலலிதா இதுவரை தொகுதி உடன்பாடு செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் கடந்த திங்கள்கிழமை அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து டீ, வடை தந்து அனுப்பிவிட்டனர்.
அப்போது மார்க்சிஸ்டுகளுக்கு அதிகபட்சம் 11 தான் என்று அதிமுக கூறியதால் பேச்சில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
அட்லீஸ்ட் இவர்களை அதிமுக அழைத்தாவது பேசியது. ஆனால், சசிகலா மூலம் அதிமுகவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை இன்னும் அடுத்த சுற்று பேசக் கூட அதிமுக அழைக்கவில்லை. சசிகலாவின் பேச்சு இம்முறை போயஸ் கார்டனில் எடுபடவில்லை என்றும், ஜெயலலிதாவை அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் தான் வழிநடத்து வருகின்றனர் என்பதும் தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இதில் ஒருவரான அந்த பத்திரிக்கையாளர் தான் படாதபாடுபட்டு தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 சீட் தான் என்று அதிமுக தேர்தல் குழுவினர் முன்பு கூறியிருந்தனர். இப்போதும் அதே எண்ணிக்கையில் தான் அதிமுக நிற்கிறது என்கிறார்கள்.
இதனால் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு மதிமுக,
இடதுசாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக களத்தை சந்திக்கலாம் என்பதே இந்தக் கட்சிகளின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. ஆனால், தா.பாண்டியன் மட்டும் பொறுத்திருக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.
தனியாகக் களமிறங்கி ஓட்டுக்களைப் பிரித்து தங்களை கேவலப்படுத்தும் அதிமுகவை திமுக கூட்டணியிடம் தோற்கச் செய்வதே சரியான பதிலடியாக இருக்கும் என்று இவர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவுக்கு பாடம் புகட்டுவதே சரி என்று மதிமுக, இடதுசாரிக் கட்சிகளுக்கு காவிரி டெல்டா
இந் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மதிமுக-இடதுசாரிகள் தனியாக மூன்றாவது அணி அமைக்க மாட்டார்களா என்ற நப்பாசையுடன் திமுகவும் எதிர் முகாமை பார்த்துக் கொண்டு
காத்துக் கொண்டுள்ளது. அப்படி ஒன்று நடந்தால் அது தங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரும் என்பது திமுகவின் கணக்கு.
இதனால் அந்தக் கூட்டணியை உடைக்க நாம் ஏதாவது செய்ய முடியுமா என்ற வியூகங்களையும் யோசித்துக் கொண்டுள்ளது திமுக.
தேமுதிக, பிற கட்சிகளுக்கு 49 இடங்கள் தந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும் 185 இடங்களில் மதிமுக, சிபிஎம், சிபிஐக்கு மொத்தமாக 30 இடங்களை மட்டும் ஒதுக்கிவிட்டு, கார்த்திக், சரத்குமார் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளைத் தந்துவிட்டு மீதியுள்ள 153 இடங்களில் (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு உகந்த 9) போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதை மதிமுக-இடதுசாரிகள் ஏற்காவிட்டால் கூட்டணி உடைவதை தவிர்க்க முடியாது என்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு திமுக 27 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் கடைசி நேரத்தில் 35 இடங்கள் தந்த அதிமுக கூட்டணிக்கு வைகோ இடம் மாறியது குறிப்பிடத்தக்கது. இம்முறை அவர் திமுக கூட்டணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதால்,
இடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைப்பது ஒன்றே அவருக்குரிய ஒரே வழியாகும.
அடுத்த இரு நாட்களி்ல் தங்களுடன் உரிய தொகுதிப் பங்கீட்டை அதிமுக முடிக்காவிட்டால் மதிமுகவும் இடதுசாரிகளும் இது தொடர்பாக வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதிமுக 153க்குப் பதிலாக 144 தொகுதிகளை (மீண்டும் கூட்டுத் தொகை 9) எடுத்துக் கொண்டு மிச்சமுள்ள 9 தொகுதிகளை மூவருக்கும் பகிர்ந்து கொடுத்து கூட்டணியை காப்பாற்றும் முயற்சிகளில் இறங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
(நன்றி -தட்ஸ்தமிழ்)
 
 

Wednesday, March 9, 2011

தேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் என்ன சொல்லும்..





தமிழகத்தில் அடித்துப் பிடித்து.. மறைமுகமாக மிரட்டியோ..எப்படியோ செய்து கேட்ட 63 தொகுதிகளை தி.மு.க., விடம் இருந்து வாங்கிவிட்டது காங்கிரஸ்.

இதை தி.மு.க., முன்னரே தந்திருக்கலாம்..ஏனோ தெரியவில்லை..மத்திய அரசிலிருந்து அமைச்சர்கள் ராஜிநாமா...பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு என்றெல்லாம் பேசப்பட்டது.

பூம்புகார் படத்திற்கு வசனம் எழுதிய கலைஞரும்..கண்ணகியாய் மாறி அரசி சோனியாவிடம்..நீங்கள் செய்தது நியாயமா..நேர்மையா..அழகா..தர்மமா என நீதி கேட்டார்.

தவறை சிலப்பதிகாரத்தில் உணர்ந்தான் மன்னன்.

ஆனால் சோனியாவோ பிடித்த பிடியை விட வில்லை..

கண்ணகியாய் மாறிய கலைஞர்..திடீரென தருமியாய் மாறினார்..நீங்கள் கேட்டதைக் கொடுத்துவிடுகிறோம்..கூட்டணியை விட்டு ஓட வேண்டாம் என வேண்டினார்.

நமட்டுச் சிரிப்புடன் காங்கிரஸும் ..மூன்று நாட்கள் அவதிப் படவைத்து , தான் கேட்ட 63 இடங்களைப் பெற்றது.ஆனால் கலைஞர் என்னும் ராஜதந்திரி..சாணக்கியர் மனதிற்குள் சிரித்திருப்பார்.

அவர் நினைத்தது நடந்துவிட்டது.

இனி..தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.,வும் சேர்ந்து பணி புரிந்தாலே அவர்களால் வெற்றி பெற முடியும்..

இவ்வளவு ஆர்பாட்டங்கள் செய்த காங்கிரஸிற்கு தி.மு.க.,வின் உண்மையான தொண்டன் களம் இறங்கி உழைத்து வெற்றி பெற்றுத் தருவானா? சிறிது சந்தேகம் தான்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில்..தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் மண்ணைக் கவ்வியதற்கு..தி.மு.க., சரியாக உழைக்கவில்லை என்று புகார் சொன்னது நினைவிற்கு வருகிறது.

ஆகவே..தேர்தல் முடிவகள் வந்தபின் ..தி.மு.க., வினர் சரியாக ஆதரவு தராததாலேயே தோற்றோம் என காங்கிரஸ் சொல்லும்..

அதை எப்போதும் போல தி.மு.க., மறுக்கும்.

காங்கிரஸ் தனது கெடுபிடியின் மூலம் தன் தலையில் தானே மணலை வாரி போட்டுக் கொள்ளப் போவது என்னவோ உண்மையாகப் போகிறது.



Tuesday, March 8, 2011

பொறுப்பில்லாத பிரதமர்!






தான் செய்த தவறுக்கான பழியை அடுத்தவர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வது என்பது அதிகார வர்க்கத்துக்கே உரித்தான "உயரிய' பண்புகளில் ஒன்று. இந்தியாவின் இந்நாள் பிரதமரான மன்மோகன் சிங், ஒரு முன்னாள் அரசு உயரதிகாரி என்பதால், அவரது அடிப்படை மனோபாவம் மாறாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.



பிரதமரின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது முதலே பிரதமரின் முடிவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. நமது தலையங்கத்தில் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, ஒரு பிரதமர் தனக்கு எதுவுமே தெரியாது என்றோ, தனக்குத் தெரியாமல் நடந்துவிட்ட தவறு என்றோ குறிப்பிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது, கூடாது. நூறு கோடி இந்தியர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பதவியில் இருப்பவர், அந்தப் பதவிக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.



பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டபோதே ஊடகங்களில் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தவண்ணம் இருந்தன. கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாமாயில் இறக்குமதி ஊழலில் பி.ஜே. தாமஸ் சம்பந்தப்பட்டிருப்பதும், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதும் அநேகமாக இந்தியாவிலுள்ள அத்தனை தினசரி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் பரபரப்பான செய்தியாக வெளியானது. தாமஸ் மீது அப்படி ஒரு விசாரணை இருப்பது பற்றியே தெரியாமல் இருந்திருப்பதாகப் பிரதமர் கூறுவது உண்மையானால், நமது பிரதமர் இந்தியப் பத்திரிகைகளைப் படிக்கிற, தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்க்கிற பழக்கமில்லாதவர் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. ஒருவேளை, லண்டன் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற மேலைநாட்டுப் பத்திரிகைகளைத்தான் படிக்கிறாரோ என்னவோ, யார் கண்டது?



""தாமஸ் நியமனத்தில் ஏற்பட்ட தவறுக்கு உயர்மட்டத் தேர்வுக் குழுவின் தலைவர் என்பதாலும், பிரதமர் என்ற முறையிலும் நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என்று பவ்யமாக ஒத்துக்கொள்வதுடன் பிரதமர் நிறுத்தியிருந்தால், "மறப்போம், மன்னிப்போம்' என்று விட்டுவிட்டிருக்கலாம். அடுத்தாற்போல அவர் அவிழ்த்து விட்டிருக்கும் அண்டப்புளுகுகளைத்தான் நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை.



செப்டம்பர் 3-ம் தேதி நடந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்துக்கான உயர்மட்டக் குழுவின் கூட்டத்துக்கு வருவதுவரை, அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்த மூன்று நபர்களில் ஒருவரான பி.ஜே. தாமஸ் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பது பற்றித் தனக்குத் தெரியாது என்று நா கூசாமல் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் பிரதமர். இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா?



""பி.ஜே. தாமஸ் கேரள மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்தவர். மத்திய அரசின் செயலராகப் பணியாற்றியவர். இந்தப் பணி நியமனங்களுக்கு முன்னால் அவரது பின்னணி கண்காணிப்புத் துறையால் பரிசீலிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில், மூன்று உறுப்பினர்களில் ஒருவரான எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பி.ஜே. தாமûஸ நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதுதான், தாமஸ் மீது ஊழல் விசாரணை நடைபெறுவது பற்றிய விவரமே எனக்குத் தெரியும்'' - இது மாநிலங்களவையில் நேற்று பிரதமர் அளித்திருக்கும் தன்னிலை விளக்கம்.



அது உண்மை என்றே நம்புவோம். இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவியும், மூன்று பேர் குழுவில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் முன்வைத்தவுடன், பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும்? கூட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே. தாமஸின் பின்னணியைப் பற்றித் தீர விசாரித்த பிறகு, நியமனத்தை உறுதிப்படுத்துவதுதானே நியாயம்? ஏன் செய்யவில்லை?



தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒரு "மெகா' ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்தத் துறையின் செயலராக இருந்தவர் பி.ஜே. தாமஸ். தனது துறையில் நடந்த ஊழலைப் பற்றி விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்று அறிவித்தவர் பி.ஜே. தாமஸ். அவசர அவசரமாக அதே பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? இதுகூடப் பிரதமருக்குத் தெரியாது என்று நம்மை நம்பச் சொன்னால் எப்படி?



அதையெல்லாம்விட மிகப்பெரிய வேடிக்கை பிரதமர் மன்மோகன் சிங், பழியைத் தனது பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருந்து இப்போது மராட்டிய மாநில முதல்வராக இருக்கும் பிருதிவிராஜ் சவாண் மீது போடுவதுதான். ""இதுபோன்ற கூட்டங்களுக்கான குறிப்புகளைத் தயார் செய்வது, பணியாளர் நியமனத் துறையின் இணையமைச்சர்தான். அவர் தயாரித்துத் தந்த குறிப்பில் தாமஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பற்றி எதுவும் இருக்கவில்லை'' என்கிறார் பிரதமர்.



அப்படியானால் நமது பிரதமர் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர் அல்லவா? தனக்கு யாரோ தரும் குறிப்புகளின் அடிப்படையிலும் வேறு யாரோ வழங்கும் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்படுபவரா? வேறு யாராவது கூறியிருந்தால், ""இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கலாம். பிரதமரை எப்படிக் கேட்பது?''



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிக் கேட்டால், அது அமைச்சர் ஆ. ராசாவின் முடிவு, தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரிக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல கோடி கொள்ளை போயிருக்கிறதே என்றால், ""அப்படியா? தவறு செய்தவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டோம்'' என்றுகூறித் தனக்குத் தொடர்பே இல்லை என்று நழுவப் பார்க்கிறார். தாமஸ் நியமனம் பற்றிக் கேட்டால் அவர் மீது விசாரணை இருப்பதே தெரியாது என்று மாநிலங்களவையில் வாக்குமூலம் அளிக்கிறார். அப்படியானால், நமது பிரதமருக்குப் பதவி சுகத்தை அனுபவிப்பதைத் தவிர, வேறு ஒன்றுமே தெரியாதா?



கடைசியாக ஒரு கேள்வி. இன்றைய இந்தியாவைப் பிடித்திருக்கும் மிகப்பெரிய கேடு என்று கருதப்படும் ஊழலைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற பொறுப்பான அரசியல் சட்ட நியமனப் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கோப்புகளைப் படித்து, பட்டியலிலுள்ள நபர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு கூட்டத்தில் கலந்துகொள்வதுதானே முறை! அதைக்கூடச் செய்யாத பொறுப்பற்றதனம் ஒரு பிரதமருக்கு இருக்கலாமா?

(நன்றி தினமணி )
 
 
இனி நாம் .....
 
இந்தியா பல பிரதமர்களைச் சந்தித்துள்ளது.சரண்சிங், குஜ்ரால்,சந்திரசேகர்,தேவகவுடா..இப்படி சில காலமே பதவி வகித்தவர்கள்கூட இன்றைய நம் பிரதமரைவிட சிறந்தவர்கள் என்ற பட்டியலில் சேர்த்துவிடலாம் போல இருக்கிறது.


நீதிமன்றத்தில்..சாட்சிகள்..பிறழும்போது..எது கேட்டாலும் 'எனக்குத் தெரியாது' என சாதாரணமாக பதிலளிப்பார்கள்.அதுபோல பிரதமர்..தாமஸ் நியமனத்தில் ஆகட்டும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆகட்டும், காமன்வெல்த் ஊழலில் ஆகட்டும் இப்படியே சொல்கிறார்.

எந்த பொறுப்பான பதிலும் சொல்லாத..இந்த பொறுப்பற்ற பிரதமர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா>>>

சுதந்திர இந்தியா சந்தித்த பிரதமர்களில் பொம்மை பிரதமர் இவர் என ஆணித்தரமாய் சொல்லலாம்.

ஆடிய நாடகம் முடிந்ததம்மா..அடியேன் அனுதாபம்..





கடந்த நான்கு நாட்களாக நடந்துவந்த நாடகம் முடிந்தது.

நாடகத்தின் கிளைமாக்ஸ் எதிர்பார்த்ததுதான் என்றாலும்..கடைசிவரை நம்மை இருக்கையின் ஒரம் வரை வந்து உட்காரவைத்த கலைஞரின் நாடகமாக்க அமைப்பிற்கு நன்றி.

காங்கிரஸ் கடைசிவரை தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் 63 தொகுதிகள் என்ற கோரிக்கையில் வெற்றி பெற்றது. தி.மு.க., ராஜிநாமா நாடகம் ஆடினாலும் கடைசியில் விட்டுக் கொடுத்தது தெரிகின்றது.

பிற்கால ஆதாயத்தை எண்ணி பா.ம.க., தன் தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளது.அதுபோலவே தனக்குக் கிடைத்த மூன்று தொகுதிகளில் ஒன்றை முஸ்லிம் லீக் விட்டுக் கொடுத்துள்ளது.

தி.மு.க., 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடப் போகிறது.வென்று ஆட்சி அமைத்தாலும் அது மீண்டும் மைனாரிட்டி ஆட்சியாய்தான் இருக்கப் போகிறது.இந்த முறை கூட்டணி ஆட்சி அமைந்தாலும் ஆச்சர்யபட தேவையிராது.

தேர்தலுக்குப் பின் இன்னும் நிறைய அரங்கேற்றங்கள் உள்ளது.

இன்றைய நிலையில் காங்கிரஸ்,தி.மு.க., சமரசம்...சம்பந்தப் பட்ட கட்சியினரை திருப்தி படுத்த முடியவில்லை என்றாலும்..

இந்த சமரசத்தால் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.

தி.மு.க., வின் சாதாரணத் தொண்டனைப் பொறுத்தவரை கட்சியை பிடித்திருந்த ஏழரை விட்டுவிட்டதாக எண்ணி பட்ட சந்தோசம் இவ்வளவு விரைவில் அகன்ற வருத்தம் கண்டிப்பாக இருக்கும்.



Monday, March 7, 2011

காங். வரும் என்ற நம்பிக்கையால் தாமதிக்கும் அதிமுக-குழப்பத்தில் மதிமுக, சிபிஐ





 திமுக, காங்கிரஸ் இடையே மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சி எப்படியாவது தனது அணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்புக்கு போய் விட்டது அதிமுக. இதனால் நேற்று சிபிஎம்மைக் கூப்பிட்டு ஒப்புக் பேசி அனுப்பி வைத்த அதிமுக, இன்று மதிமுக, சிபிஐ ஆகிய இரு கட்சிகளையும் கூப்பிடாமல் மீண்டும் கிடப்பில் போட்டுள்ளது.

இதை விட ஒரு அரசியல் கட்சியைக் கேவலப்படுத்த முடியாது என்ற நிலைக்கு சிபிஎம், சிபிஐ மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. காலடியில் விழுந்து கிடக்காத குறையாக இந்த மூன்று கட்சிகளும் ஜெயலலிதாவிடம் தீவிரமான நட்பைக் கொண்டிருந்தன. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்திற்காக முதல்வர் கருணாநிதியையு, திமுக அரசையும் மிகக் கடுமையாக சாடி விமர்சனம் செய்து பேசி வந்தன.

ஆனால் இன்று இந்த மூன்று கட்சிகளையும் மிதியடிக்குச் சமமான நிலைக்குக் கொண்டு போய் விட்டார் ஜெயலலிதா.

காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரக் கூடிய திடீர் வாய்ப்புகள் உருவானதால், இந்த மூன்று நட்புக் கட்சிகளையும், விரும்பத்தகாத கட்சிகளாக கருதத் தொடங்கி விட்டார் ஜெயலலிதா என்கிறார்கள். விஜயகாந்த் கூட்டணிக்கு வந்து விட்ட தெம்பும், காங்கிரஸும் வந்தால் இன்னும் சிறப்பு என்ற எண்ணமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணிக்கு வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் சிபிஎம், மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளை மறுபடியும் கூப்பிட்டுப் பேசாமல் காலம் தாழ்த்தி வந்தது அதிமுக. இதனால் இந்த மூன்று கட்சிகளும் அதிருப்தி அடைந்தன. ஆனாலும் அதற்கு மேல் செய்ய இவர்களால் முடியாது என்பதால் வாய் மூடி மெளனம் காத்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று திடீரென திமுக, காங்கிரஸ் இடையே சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தோன்றவே, ஆடிப் போன அதிமுக, சிபிஎம்மை அவசரமாக கூப்பிட்டு, ஒரு ஹோட்டலில் வைத்து ஒப்புக்குப் பேசி அனுப்பி வைத்தது.

இதையடுத்து தங்களையும் அதிமுக தரப்பு கூப்பிடும் என்ற எதிர்பார்ப்பில் சிபிஐ, மதிமுக ஆகியவை இருந்தன. ஆனால் அழைப்பு வரவில்லை. திமுக, காங்கிரஸ் இடையே மீண்டும் சிக்கல் என்ற செய்தியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி முறிந்தால் உடனே இழுத்துப் போட்டு விடத் தயாராக இருக்கிறது அதிமுக. அப்படி காங்கிரஸ் வந்தால், சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகியவை தேவையில்லை என்பது அதிமுகவின் கருத்து. எனவேதான் மதிமுகவையும், சிபிஐ கட்சியையும் கூப்பிடாமல் மீண்டும் அதிமுக தொங்கலில் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு கேவலமான நிலை மதிமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வரும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விஜயகாந்த் கட்சியை விடவா இவர்கள் குறைந்து போய் விட்டார்கள் என்ற ஆதங்கம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

(நன்றி தட்ஸ்தமிழ் )

அவளின்றி ஒரு அணுவும் அசையாது..


                                   (போட்டோ நன்றி -highdefinitionphotosandwallpapers.blogspot.co...)


இன்று மகளிர்தினமாம்

எண்ணுகையில்

நகைக்கவே தோன்றுகிறது

மண்ணில் தவழவிட்டவள் அவள்

வழி நடத்துபவள் அவள்

பாசத்தைப் பொழிபவள் அவள்

ஒவ்வொரு நிலையில்

தாய் மனைவி மகள் என

ஒவ்வொரு பெயரில்...

அவனின்றி ஒரு அணுவும் அசையாதாம்

அந்த அவனைப் பார்த்தவரில்லை..

என்னைக் கேட்டால்

பளீச்சென செப்பிடுவேன்

அவளின்றி ஒரு அணுவும் அசையாது

வாழ்வில் அவளின் அரவணைப்பு

வருடந்தோறும்

வசந்தத்தைப் பொழியும்

 அவளுக்கென எதற்குத் தனிநாளாம்

எண்ணுகையில்

நகைக்கவே தோன்றுகிறது
 

எள்ளி நகையாடும் செயல்







கார்மேகங்கள்

கதிரவனை

சற்று நேரம் மறைக்கலாம்

கைகளால் பரிதியை மறைப்பது

கை கொட்டி சிரிக்கும் செயலாம்

மேகங்கள் விலகியதும்

நிர்மல வான சூரியனை

நிரந்தரமாய் மறைத்திடலாம் என

எண்ணுவது

எள்ளி நகையாடும் செயல்

உணர்வாய் நீயே





Sunday, March 6, 2011

பிரச்சனைக்கு தொகுதிகள் காரணமல்ல..காங்கிரஸ்



இந் நிலையில் திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு தொகுதிகள் ஒதுக்கீடுப் பிரச்சனை காரணமல்ல என்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் 63 இடங்களைக் கேட்பதாகவும், கேட்கும் தொகுதிகள் தரப்பட வேண்டும் என்றும் கோருவதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், பிரச்சனை அதுவல்ல என்று டெல்லி பத்திரிக்கையாளர்களிடம் காங்கிரஸ் தரப்பு மறுத்து வருகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது குடும்பத்தினரை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்ற திமுக தலைமையின் கோரிக்கையைப் பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேச முடியாத வகையில், ராகுல் காந்தி தரப்பு முட்டுக் கட்டை போட்டதும் தான் திமுகவின் கோபத்துக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீதிமன்ற நெருக்கடியால் அடுத்த சில நாட்களில் கனிமொழி மட்டுமன்றி கலைஞர் தொலைக்காட்சியின் முதலீட்டாளர் என்ற வகையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும் சிபிஐ கேள்வி கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் தான் திமுக இந்த முடிவுக்கு வந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனையை உருவாக்கி அதை ஒரு காரணத்தை வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டால், பின்னர் தங்களை சிபிஐ விசாரணை செய்தால், கூட்டணியிலிருந்து விலகியதால் காங்கிரஸ் தங்களை பழி வாங்குவதாகக் கூறிக் கொண்டு அனுதாபம் தேடிக் கொள்ளலாம் என திமுக நினைக்கிறது என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில்.

இதனால் தான் திமுகவுடன் காங்கிரஸ் தரப்பு பேச்சு நடத்தாமல் உள்ளது. வெறும் தொகுதிப் பங்கீடு பிரச்சனை என்றால் உடனே பேசித் தீர்வு கண்டிருக்க முடியும். இங்கு பிரச்சனை தொகுதிகள் அல்ல.. ஸ்பெக்ட்ரம் விசாரணை தான் என்கிறார்கள்.

பி.ஜே.தாமசும்..அரசியல்வாதிகளும்





ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த தாமஸ், அந்த பதவிக்கு வந்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு.

மேலும் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில்..

'முக்கிய பதவிக்கு ஆட்களை நியமிக்கும் போது அவர்களின் நேர்மையும் கணக்கில் கொள்ள வேண்டும்.இனி வரும் காலத்தில் எந்தப் பதவியாக இருந்தாலும், அதிகாரிகளின் பெயரை மட்டும் பரிசீலிக்காமல்,பொது வாழ்க்கையில் நேர்மையாகவும், மக்கள் நலனுக்காக உழைக்கும் அனைவரின் பெயரையும் பரிசீலிக்க வேண்டும்' என்றும் எடுத்துச் சொல்லி இருக்கிறது.

இந்த கருத்துகள் அரசு அதிகாரிகள் நியமனத்திற்கு மட்டுமல்ல அவர்களை நியமனம் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

ஆம்..இந்த அரசியல்வாதிகளை நியமிப்பது யார்..?

கண்டிப்பாக இவர்களைத் தெர்ந்தெடுக்கும் மக்கள் தானே..

ஆகவே மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் போதும்...

வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், எந்த ஜாதியைச் சேர்ந்தவர் ,எந்த கூட்டணியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கணக்கில் கொள்ளாது..

வேட்பாளர்..நல்லவரா..நேர்மையானவரா..அவரைத் தேர்ந்தெடுத்தால் மக்களுக்கும்..நாம் சேர்ந்துள்ள தொகுதிக்கும் நல்லது செய்பவராக இருப்பாரா..என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு தகுந்தவருக்கு வாக்களிக்க வேண்டும்..

உண்மையான ஜனநாயகம் மலர்வது என்பது மக்கள் கையில்தான் உள்ளது.

இதை மக்கள் உணர்ந்தால்...

நாடு சிறக்கும்..ஊழல் ஒழியும்.

Friday, March 4, 2011

பா.ம.க., ம.தி.மு.க., வரிசையில் தே.மு.தி.க.,





இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு எதிராக வை.கோ., ம.தி.மு.க., ஆரம்பித்தார்.

அவரின் ஆதரவாளர்கள் அவருடம் சென்றனர்.

அந்த இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இவர் கட்சியும் வரும் என எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் என்ன வாயிற்று?

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியா நிலையில் வை.கோ., மீண்டும் தி.மு.க., வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணியில் இணைந்துக் கொண்டார்,கட்சி ஆரம்பித்ததின் நோக்கம் மறைந்தது.சென்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., வைவிட சில தொகுதிகள் அதிகமாய்க் கிடைத்ததால் அ.தி.முக., கூட்டணிக்கு மாறினார்.

மரம்வெட்டிக் கட்சியின் நிலையும் அதே போலத்தான் ஆயிற்று..தனித்து போட்டி போணியாகாது எனத் தெரிந்து ஒவ்வொரு தேர்தலுக்கும் தனக்கு வசதியானக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.

ஆனால் இவர்களிலிருந்து சற்று மாறுபட்ட நிலையில் இருந்தார் விஜய்காந்த்.2001ல் ஜெ ஆட்சிக்கு வந்து பதவி ஏற்றபோது..அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த விஜய்காந்திற்கு அன்றுதான் தானும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்னும் எண்ணம் வந்திருக்க வேண்டும்.

கட்சி ஆரம்பித்ததுமே யாருடனும் கூட்டு கிடையாது..மக்களிடம் தான் என் கூட்டு என்றார்.பலன்..கணிசமான அளவு வாக்குகள் பெற முடிந்தாலும்..அது..தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்க உதவாது என உணர்ந்தார்.

பழுத்த மரமே கல்லடி படும் என ஒரு சொலவடை உண்டு.அதுபோல ஆட்சியில் இருக்கும் கலைஞரே ,தன் முதல் எதிரி என்று கூறத் தொடங்கினார்,

வரும் தேர்தலில் தனித்துப் போட்டி என்றால் தேறாது என உணர்ந்து முதலில் கலைஞர் ஆட்சியை ஒழிப்பேன் என கூட்டணி ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்,அப்படி ஒரு நிலை எடுக்காவிடின் தன் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்ற நிலை வேறு.

பாவம்..அவரைச் சொல்லி என்ன பயன்..

இந்நிலையில் 41 தொகுதிகள் ஜெ ஊற்றித்தர, மன்னிக்கவும்..ஒதுக்கித்தர கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டார்.

இனி விஜய்காந்தின் கட்சியைப் பொறுத்தவரை , இந்த இடுகையின் தலைப்புதான் .

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (4-3-11)

1)விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்ளிட்ட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளது. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது



2)இந்த வாக்கியத்தைப் பாருங்கள்..இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இந்த வாக்கியத்தை பின்னிருந்து படித்தாலும் அதேதான்.பாலிண்ட்ரோம் வாக்கியம் இது

Was it a car or a cat i saw



3)தற்போது உலகளவில் 1கோடியே 80 லட்சம் பேர் டிமென்ஷியா என்னும் மூளைக்கோளாறு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனராம்.விடமின் பி12 குறைவே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.



4)உலகின் பரப்பளவில் 2.4 விழுக்காடு பரப்பளவே இந்தியாவின் பரப்பு.ஆனால் மக்கள் தொகையில் 17 விழுக்காடை ஆக்கிரமித்துள்ளோம்.



5)இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகள் 6661 ஆகும்.

6)நமது நாணயங்கள் டெல்லி,மும்பை,ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் உள்ள நாணயசாலைகளில் அச்சடிக்கப்படுகின்றன.நம்மால் நாணயங்களைப் பார்த்து அவை எங்கு அச்சடிக்கப்பட்டன என சொல்ல முடியுமா?
முடியும்..எப்படி என்கிறீர்களா..
ஒவ்வொரு நாணய சாலைக்கும் ஒரு சின்னம் உண்டு.அதை வைத்து கண்டுபிடிக்கலாம்
டெல்லியில் அச்சடிக்கப் பட்டிருந்தால்..அந்த நாணயம் உருவாக்கப் பட்ட ஆண்டிற்குக் கீழே . (புள்ளி) இருக்கும்.
மும்பை எனில் பக்கவாட்டில் சதுரம் இருக்கும்
ஹைதராபாத் எனில் * (ஸ்டார்) இருக்கும்
கொல்கத்தா எனில் எந்தச் சின்னமும் இருக்காது

Thursday, March 3, 2011

நானும்..விகடனும்..





இந்த வார விகடனில் ஜெயிப்பாரா கேப்டன், ஜெயா என ஒரு கட்டுரை வந்துள்ளது.

கூட்டிக் கழித்தால்..இப்போதே ரிசல்ட் என..

நான் தி.மு.க., அனுதாபியாய் இருந்தாலும்..கூட்டணிக் குறித்து..கூட்டிக் கழித்து நானும் ஒரு இடுகை இட்டேன்.


இதனால் எனது தி.மு.க., நண்பர்கள் சிலர் மனக்கசப்பு அடைந்தனர்.

கணக்கு என்று பார்க்கின் அ.தி.மு.க., வே பலம் வாய்ந்ததாகத் தெரிகிறது என மீண்டும் கூறுகிறேன்.மேலும் காங்கிரஸுடன் கூட்டணி இந்த முறை சற்று பலவீனமாகவே உள்ளது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.



பார்க்க

http://tvrk.blogspot.com/2011/01/blog-post_6636.html 

அள்ளிக் கொடுக்கும் கலைஞர்





மன்னராட்சிக் காலத்தில்...மன்னனை வாழ்த்திப் பாடி பொன்னும், பொருளும் பெறுவர் தமிழ்ப் புலவர்கள்.

அந்த காலம் மீண்டும் திரும்பியுள்ளதோ என்று நினைக்க வைக்கிறது இந்த செய்தி

 துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. இந்த விழாவில் கட்சி சார்பற்று முழுக்க முழுக்க தமிழறிஞர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் பேசியவர்கள் அரசியலைத் தொடத் தவறவில்லை.

பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசுகையில், ஒரு குழந்தை பிறந்தால் பெற்றோருக்கும் உற்றார்-உறவினர்களுக்கும்தான் மகிழ்ச்சி. ஆனால் 59 வயது இளைஞரின் பிறந்த நாளை ஊரே உறவாடி கொண்டாடி மகிழ்கிறது. ஒருவரை மக்கள் எளிதில் பாராட்டி விடமாட்டார்கள். அதற்கான தகுதி இளைஞர்களை வழிநடத்தும் தளபதியிடம் உள்ளது. தந்தையின் தடத்தில் எப்படி நடப்பது என்பதை இன்றும் படித்து பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.

கருணாநிதி ஆட்சியில் அள்ளி கொடுக்கிறாருங்க.... ஓய்வு பெற்ற பேராசிரியரான எனக்கு ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா? மாதம் ரூ. 33 ஆயிரம். வாங்கிட்டு போ... சந்தோஷமா வாழு என்று தமிழக மக்களை வாழ வைக்கிறவர் அவர். தந்தைக்கு பெருமை சேர்ப்பவர் தளபதி. பேசுவதை விட செயல் திறன்தான் நாளைய வெற்றிக்கு அடையாளம். அப்படிப்பட்டவர் மு.க. ஸ்டாலின்.

இளைஞர்கள்தான் இந்த நாட்டின் மாற்றத்தை உருவாக்குபவர்கள். இளைஞர்களை வழி நடத்துபவர் மு.க.ஸ்டாலின். கலைஞரும், தளபதியும் மனிதர்களை நேசிப்பவர்கள். தமிழகம் வளர கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும், என்றார்.

விழாவில் திண்டுக்கல் லியோனி பேசுகையில், தமிழ் காப்பாற்றப்பட வேண்டும். ஒரு மொழி அழிந்து விட்டால் இனம் அழிந்து விடும். தமிழ் வாழ, தமிழகம் வளர கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும் என்பது தமிழறிஞர்கள் ஆசை. இளைஞர்கள் தடம் மாறாமல் அணிவகுக்க வேண்டும், என்றார்.