Friday, February 19, 2010

தேங்காய். மாங்காய்.. பட்டாணி.. சுண்டல்(19-2-10)

தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும் பூமியின் பொறுமையும், பொறுப்புள்ள புன்னகையும், துணை வாடத் தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகிறதோ..அங்கே வாழ்வதுதான் காதல் - கண்ணதாசன்

2)குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தான் கண்ணீர் உற்பத்தியாகிறது.அதாவது tearducts .

3)நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்த போது ஃபோரே என்னும் இருபது வயது பெண் மீது காதல் வயப்பட்டு..அவளை பிரிய மனமின்றி..ராணுவ வீரன் போல அவளுக்கு உடையணிவித்து யுத்தகளத்திற்கு அழைத்துச் சென்றானாம்.நெப்போலியன் காதலித்த பெண்களின் எண்ணிக்கை ஐம்பதற்கும் மேல் ஆகும்.

4)இந்த வருடம் இப்போது நடைபெறும் ஃபெப்ரவரி மாதத்திற்கு ஒரு விசேஷம் உண்டு.அதாவது ஓன்றாம் தேதி..வார முதல் நாள் திங்களன்று ஆரம்பிப்பது போல வரும் மாதம்.இம்மாதம் எல்லாக் கிழமைகளும்..நான்கு..நான்கு வரும்..இது போல பதினோரு வருடங்களுக்கு ஒரு முறை வருமாம்.

5) அந்த பிரபல நடிகர் நடித்த முதல் படத்தில்..எந்தெந்த இடங்களில் அவர் சிறப்பாக நடிக்கவில்லை என நினைத்தார்களோ..அந்தக் காட்சிகளை..சுமார் ஆறாயிரம்..ஏழாயிரம் அடிகள் திரும்பவும் செட் போட்டு ஏ.வி.எம்., ஸ்டூடியோ விலும்..வெளியிலும் சுமார் இருபது நாட்கள் ஒரே மூச்சில் எடுத்து முடித்தார்கள்.அந்தப் படம் 'பராசக்தி' நடிகர் சிவாஜி கணேசன்.

6)ஒரு வருடத்திற்கு 34 முறைகள் மத்திய அமைச்சர்களின் குடும்பங்கள் இலவசமாக விமானப் பயணம் செய்யலாமாம்.

7) கொசுறு- ஒரு ஜோக்

தமிழ் அகராதியை வைத்துக் கொண்டு அமைச்சர் என்ன தேடிக்கொண்டிருக்கிறார்
தான் அடுத்து என்ன பட்டம் வாங்கலாம் என்று பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்

35 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//இந்த வருடம் இப்போது நடைபெறும் ஃபெப்ரவரி மாதத்திற்கு ஒரு விசேஷம் உண்டு.இம்மாதம் எல்லாக் கிழமைகளும்..நான்கு..நான்கு வரும்..இது போல பதினோரு வருடங்களுக்கு ஒரு முறை வருமாம்.//

ஒஹ் ஆமா சார்..நன்றி

goma said...

:-))))
present sir

Paleo God said...

நெப்போலியன் கதை நல்லா இருக்கு சார்..:))

அமர பாரதி said...

அய்யா.

//இம்மாதம் எல்லாக் கிழமைகளும்..நான்கு..நான்கு வரும்..// லீப் வருடத்தைத் தவிர அனைத்து வருடத்திலும் இப்படித்தான் வரும். 28 நாட்களை நான்கால் வகுத்தால் வார நாட்கள் ஏழு வரும். லீப் வருடத்தில் மட்டும் 1ம் தேதி வரும் கிழமை ஐந்தாவதாக வரும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// பிரியமுடன்...வசந்த் said...
//இந்த வருடம் இப்போது நடைபெறும் ஃபெப்ரவரி மாதத்திற்கு ஒரு விசேஷம் உண்டு.இம்மாதம் எல்லாக் கிழமைகளும்..நான்கு..நான்கு வரும்..இது போல பதினோரு வருடங்களுக்கு ஒரு முறை வருமாம்.//

ஒஹ் ஆமா சார்..நன்றி///

வருகைக்கு நன்றி வசந்த்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
:-))))
present sir//

நன்றி goma

பிரபாகர் said...

அய்யா,

சொல்ல நினைச்சத அமர பாரதி சொல்லிட்டாரு. நெப்போலியன் மேட்டர் சூப்பர்...

பிரபாகர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நெப்போலியன் கதை நல்லா இருக்கு சார்..:))//

நன்றி ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

இராகவன் நைஜிரியா said...

// இந்த வருடம் இப்போது நடைபெறும் ஃபெப்ரவரி மாதத்திற்கு ஒரு விசேஷம் உண்டு.இம்மாதம் எல்லாக் கிழமைகளும்..நான்கு..நான்கு வரும்..இது போல பதினோரு வருடங்களுக்கு ஒரு முறை வருமாம்.//

லீப் வருடங்கள் தவிர எல்லா பிப்ரவரி மாதங்களுக்கும் நான்கு..நான்கு கிழமைகள் தான் வரும். 28 நாட்களை 7 வகுத்தால் 4 கிடைக்கும்.

இந்த வருடம் திங்கட் கிழமை 1 ஆம் தேதி ஆரம்பிக்கின்றது. அது மாதிரி 11 வருடங்களுக்கு ஒரு முறை திங்கட்கிழமை ஆரம்பிக்கும் என்று இருக்கலாம்.

2016 ஆம் வருடமும் திங்கட்கிழமைத்தான் ஆரம்பிக்கும். ஆனால் லீப் வருடம் என்பதால், 5 திங்கட்கிழமைகள் வரும்.

இராகவன் நைஜிரியா said...

// நெப்போலியன் காதலித்த பெண்களின் எண்ணிக்கை ஐம்பதற்கும் மேல் ஆகும்.//

அய்யோடா.... ஒன்ன சமாளிக்கவே இங்க முடியல... என்னதான் ராஜாவா இருந்தாலும்... நெப்போலியன் பெரிய ஆள்தான்..

இராகவன் நைஜிரியா said...

// ஒரு வருடத்திற்கு 34 முறைகள் மத்திய அமைச்சர்களின் குடும்பங்கள் இலவசமாக விமானப் பயணம் செய்யலாமாம். //

அதாவது கணக்கு வச்சு 34 முறை. கணக்கிலாம எத்தனை முறை வேண்டுமானாலும்...

குடும்பங்கள் என்று போட்டுள்ளதில் உள்குத்து எதாவது இருக்கின்றதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அமர பாரதி said...
அய்யா.

/////இம்மாதம் எல்லாக் கிழமைகளும்..நான்கு..நான்கு வரும்..// லீப் வருடத்தைத் தவிர அனைத்து வருடத்திலும் இப்படித்தான் வரும். 28 நாட்களை நான்கால் வகுத்தால் வார நாட்கள் ஏழு வரும். லீப் வருடத்தில் மட்டும் 1ம் தேதி வரும் கிழமை ஐந்தாவதாக வரும்.//

நான் சொல்ல வந்தது முதல் நாள்..ஒன்றாம் தேதி வார முதல்நாள் திங்களன்று வந்து..அந்த வாரம் 7ஆம் நாள் அந்த வார ஞாயிறில் முடிவது போல
பதிவிலும் சற்று மாற்றியிருக்கிறேன்
வருகைக்கு நன்றி அமர பாரதி

இராகவன் நைஜிரியா said...

// கொசுறு- ஒரு ஜோக்

தமிழ் அகராதியை வைத்துக் கொண்டு அமைச்சர் என்ன தேடிக்கொண்டிருக்கிறார்
தான் அடுத்து என்ன பட்டம் வாங்கலாம் என்று பெயர் தேடிக்கொண்டிருக்கிறார் //

சரியான அகராதி புடிச்ச அமைச்சரா இருப்பார் போலிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// இராகவன் நைஜிரியா said... இந்த வருடம் திங்கட் கிழமை 1 ஆம் தேதி ஆரம்பிக்கின்றது. அது மாதிரி 11 வருடங்களுக்கு ஒரு முறை திங்கட்கிழமை ஆரம்பிக்கும் என்று இருக்கலாம். //

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
அய்யா,

சொல்ல நினைச்சத அமர பாரதி சொல்லிட்டாரு. நெப்போலியன் மேட்டர் சூப்பர்...

பிரபாகர்.//

பதிவிலும் சற்று மாற்றியிருக்கிறேன்
நன்றி பிரபாகர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
// நெப்போலியன் காதலித்த பெண்களின் எண்ணிக்கை ஐம்பதற்கும் மேல் ஆகும்.//

அய்யோடா.... ஒன்ன சமாளிக்கவே இங்க முடியல... என்னதான் ராஜாவா இருந்தாலும்... நெப்போலியன் பெரிய ஆள்தான்..//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
குடும்பங்கள் என்று போட்டுள்ளதில் உள்குத்து எதாவது இருக்கின்றதா?//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///இராகவன் நைஜிரியா said...
2016 ஆம் வருடமும் திங்கட்கிழமைத்தான் ஆரம்பிக்கும். ஆனால் லீப் வருடம் என்பதால், 5 திங்கட்கிழமைகள் வரும்.///

2021 ஆம் ஆண்டு இதே போல ஃபெப்ரவரி ஒன்றாம் நாள் திங்களன்று ஆரம்பிக்கும்

Chitra said...

சுண்டல், ருசிகர தகவல் பொட்டலம்.

dondu(#11168674346665545885) said...

2010 -க்கு பிறகு பிப்ரவரி மாதம் திங்களில் ஆரம்பிப்பது 2016, 2021, 2027, 2038, 2044, 2049, 2055, 2066.... லிஸ்ட் போதுமா?

பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_26.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
சுண்டல், ருசிகர தகவல் பொட்டலம்.//

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//dondu(#11168674346665545885) said...
2010 -க்கு பிறகு பிப்ரவரி மாதம் திங்களில் ஆரம்பிப்பது 2016, 2021, 2027, 2038, 2044, 2049, 2055, 2066.... லிஸ்ட் போதுமா? //


திங்களில் ஆரம்பிப்பது மட்டுமல்ல......ஒவ்வொரு கிழமையும் நான்கு நான்கு மட்டுமே வருவது அடுத்து 2021ல் தான் வரும்.அதாவது ஒன்றாம் நாள் திங்களன்று ஆரம்பித்து..ஒவ்வொரு கிழமையும் நான்கு நாட்கள் வருவது 2021ல் தான்

vasu balaji said...

ராகவன் பேக் டு ஃபார்ம் போலயே:)). கண்ணதாசன் கண்ணதாசந்தான். அருமை சார்.

உண்மைத்தமிழன் said...

தேடி முடிச்சிட்டாரா இல்லையான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க..!

மக்களுக்கு இருக்குற பிரச்சினையில இவருக்கு இவர் பிரச்சினைதான் பெரிசு போல.. அடுத்தப் பட்டத்துக்கு தலைப்பும், காரணத்தையும் தேடிக்கிட்டிருக்காரு..!

தாராபுரத்தான் said...

எனக்கு எல்லாமே புதுத்தகவல் சார்.நன்றி.

dondu(#11168674346665545885) said...

அந்த 11 வருட இடைவெளிதான் எப்போதுமே இருக்கும் என்றில்லை என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்.

2021-2027 (6 வருடம்), 2038, 2044-2049 (5 வருடம்), 2049-2055 (6 வருடம்).....

அன்புடன்,
டோண்டு ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
ராகவன் பேக் டு ஃபார்ம் போலயே:)).//

yes

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
கண்ணதாசன் கண்ணதாசந்தான். அருமை சார்.//

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தேடி முடிச்சிட்டாரா இல்லையான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க..!

மக்களுக்கு இருக்குற பிரச்சினையில இவருக்கு இவர் பிரச்சினைதான் பெரிசு போல.. அடுத்தப் பட்டத்துக்கு தலைப்பும், காரணத்தையும் தேடிக்கிட்டிருக்காரு..!//

நீங்க தான் கண்டுபிடிக்கணும்..இல்ல..ஜகத்ரக்க்ஷகன் கிட்ட கேட்கணும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தாராபுரத்தான் said...
எனக்கு எல்லாமே புதுத்தகவல் சார்.நன்றி.//

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி டோண்டு சார்

க ரா said...

நல்ல சுவைமிக்க சுண்டல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.இராமசாமி said...
நல்ல சுவைமிக்க சுண்டல்//

நன்றி க.இராமசாமி

Menaga Sathia said...

சுண்டல் சுவையாயிருக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Mrs.Menagasathia said...
சுண்டல் சுவையாயிருக்கு...//

நன்றி Mrs.Menagasathia