Friday, February 26, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(26-2-10)

நம்மிடம் உள்ள குறைகளை யார் சொன்னாலும் அவர்களுக்கு நாம் சந்தோஷத்துடன் நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் அவர்களை விட நமக்கு வேண்டியவர் வேறு யாரும் இருக்க முடியாது.

2)கப்பல் கடலில் மிதக்கும் போதுதான் கப்பலுக்கு மதிப்பு..அரசியல்வாதி பதவியில் இருக்கும் போதுதான் அவனுக்கு மதிப்பு..நம் பதிவை நாம் தமிழ்மணத்தில் இணைத்தாலும்..நம் நண்பர்களின் ஆதரவு ஓட்டு விழுந்து..வாசகர் பரிந்துரையில் பதிவு வந்தால் தான்..அதன் பதிவாளருக்கு மதிப்பு

3)எல்லாப் பழத்திற்கும் கொட்டை உள்ளே இருக்கும்..முந்திரிப் பழம் ஒன்றுக்கு மட்டுமே கொட்டை வெளியே இருக்கும்..எல்லாச் செடிகளும் பூத்துதான் காய்க்கும்..பூசணிச் செடி மட்டுமே காய்த்துதான்
பூக்கும்.

4)தனது ரசிகர்கள் சார்பில் நடத்திய மையம் பத்திரிகையை வெப்சைட் ஆக்க இருக்கிறாராம் கமல்.இதில் கமல் தனது 50 வருட திரைவாழ்க்கையை தொடராக எழுத இருக்கிறாராம்.'களத்தூர் கண்ணம்மா'வில் தொடங்கி இன்றைய நாள் வரையிலான சம்பவங்கள் இதில் இடம் பெற உள்ளன.அத்துடன் தமிழ்மொழியுடனான தனது தொடர்பு, பங்களிப்பு பற்றியும் இதில் குறிப்பிட உள்ளாராம்.இதற்கான டீமை ஏற்படுத்திவிட்டாராம்.இதற்காக கல்லூரி விரிவுரையாளர்கள் கொண்ட குழுவையும் ஏற்படுத்தியுள்ளாராம்.

5) ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை புரிந்துள்ள டெண்டுல்கர் இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ள ஓட்டம் 13447..இதில் 47 செஞ்சரியும்,54 முறை 50ஓட்டங்களும் அடங்கும்.தவிர்த்து 44 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
442 ஒரு நாள் போட்டிகள் ஆடி..17594 ஓட்டங்களும் 46 செஞ்சரியும்..93 முறை 50 ஓட்டங்களும் அடங்கும்.தவிர்த்து 154 விக்கட்டுகள் எடுத்துள்ளார்.

தன் ஒரு நாள் போட்டி உலக சாதனையை..ஒரு இந்தியரே முறியடிக்க வேண்டும்..அதுவே தன் விருப்பம் என்றுள்ளார்.

6) கொசுறு ஒரு ஜோக்

வேலை நேரத்தில பேசறவன் உருப்பட மாட்டான்னு சொல்றீங்களே..நீங்க என்ன வேலை செய்யறீங்க
வக்கீலா இருக்கேன்

28 comments:

Vidhoosh said...

:)

gulf-tamilan said...

/வாசகர் பரிந்துரையில் பதிவு வந்தால் தான்..அதன் பதிவாளருக்கு மதிப்பு/
:((( அப்படியில்லை!நிறைய பேர் ஒட்டு போடுவது இல்லை!!

vasu balaji said...

கலக்கறீங்க சார்:))

ஈரோடு கதிர் said...

:)))

தர்ஷன் said...

மர முந்திரியும் Angiosperm தான். மேலே நாம் பழம் எனச் சாப்பிடுவது சதைப்பற்றோடு விருத்தியடைந்த அதன் காம்பு போன்ற பகுதியை. அதன் உண்மையான பழம் வித்தை மூடியிருக்கும் உறையே

க.பாலாசி said...

//தன் ஒரு நாள் போட்டி உலக சாதனையை..ஒரு இந்தியரே முறியடிக்க வேண்டும்..அதுவே தன் விருப்பம் என்றுள்ளார்.//

விருப்பம் நிறைவேறட்டும்...

நல்ல இடுகை...

சிநேகிதன் அக்பர் said...

நல்ல டேஸ்ட் & போஸ்ட் சார்.

மங்குனி அமைச்சர் said...

சார் நீங்க சொன்ன எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்தான் ஆனா அத நல்ல ரசனையோட நல்ல ஸ்டைல்ல சொல்லிருக்கிங்க

இராகவன் நைஜிரியா said...

// .நம் பதிவை நாம் தமிழ்மணத்தில் இணைத்தாலும்..நம் நண்பர்களின் ஆதரவு ஓட்டு விழுந்து..வாசகர் பரிந்துரையில் பதிவு வந்தால் தான்..அதன் பதிவாளருக்கு மதிப்பு //

அதுக்காகத்தான் நான் பின்னூட்டம் போட்டாலும், போடாவிட்டாலும் கூடியவரை ஓட்டு போட்டுவிடுவேன். இந்திய எலக்‌ஷனில்தான் ஓட்டு போட முடிவதில்லை... இங்கயாவது போட்டு விடுவோமே என்று போட்டு விடுவது உண்டு.

இராகவன் நைஜிரியா said...

// .பூசணிச் செடி மட்டுமே காய்த்துதான்
பூக்கும்.//

பாகற்காயும் அப்படித்தான் என நினைக்கின்றேன் அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// வேலை நேரத்தில பேசறவன் உருப்பட மாட்டான்னு சொல்றீங்களே..நீங்க என்ன வேலை செய்யறீங்க
வக்கீலா இருக்கேன் //

இது... வக்கீல் பேசலன்னா...கேஸ் அம்பேல்..

Chitra said...

சூப்பரு...........!!!

க ரா said...

கலக்கல் பட்டாணி ::)

Karthick Chidambaram said...

கடைசி நகைச்சுவை - அருமை அருமை.

-Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Vidhoosh s
gulf-tamilan
வானம்பாடிகள்
கதிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தர்ஷன் said...
மர முந்திரியும் Angiosperm தான். மேலே நாம் பழம் எனச் சாப்பிடுவது சதைப்பற்றோடு விருத்தியடைந்த அதன் காம்பு போன்ற பகுதியை. அதன் உண்மையான பழம் வித்தை மூடியிருக்கும் உறையே//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தர்ஷன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
பாலாசி
அக்பர்
மங்குனி அமைச்சர்
இராகவன் நைஜிரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// இராகவன் நைஜிரியா said
பாகற்காயும் அப்படித்தான் என நினைக்கின்றேன் அண்ணே///

பாகற்காய் மட்டுமல்ல..புடலங்காய், பீர்க்கங்காய் எல்லாமே அப்படித்தான்..ஆனால் அவை எல்லாமே காயாகாது..வாடி கருத்திடும்..ஆனால்..பூசணி எல்லாமே காயாகும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said
இது... வக்கீல் பேசலன்னா...கேஸ் அம்பேல்..//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வித்யா
Chitra
இராமசாமி
Imayavaramban

SUREஷ்(பழனியிலிருந்து) said...

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SUREஷ்

பனித்துளி சங்கர் said...

கலக்குறிங்க போங்க !
பகிர்வுக்கு நன்றி !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பனித்துளி சங்கர்

பா.ராஜாராம் said...

அருமை டி.வி.ஆர் சார்!
(சமீபமாக உங்களை புகை படங்களில் பார்க்கிறேன்.இவ்வளவு காலம் டி.வி.ஆர். என்று அழைத்ததற்காக வருந்துகிறேன் சார்.)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பா.ரா..,சார் எல்லாம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்..யாரோ ஆரம்பித்தது அப்படியே ஒட்டிக்கொண்டுவிட்டது

Thenammai Lakshmanan said...

சுண்டல் நல்ல கார சாரம் ராதாகிருஷ்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி thenammailakshmanan