Sunday, January 31, 2010

தமிழ்(ப்)படம்...இது விமரிசனமல்ல


வலைப்பூ நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு மித்த பாராட்டுகளுடன்..சமீப காலங்களில் விமரிசித்துள்ள ஒரு தமிழ் படம்..'ப்' உண்டா இல்லையா என்று இவர்கள் தீர்மானம் செய்யவே நீண்ட நாட்கள் யோசித்திருப்பார்கள் போலும்..இப்படம் வெளியாகியுள்ள அனைத்து திரையரங்கிலும்..அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.கழகக் கண்மணிகளுடன் சேர்ந்து நாமும் இப்படத்தை ஒரு வெற்றி படமாக்குவோம்.இது ஒரு ஸ்பூஃப்படமாம் :-))

மல்லாக்கப் படுத்துக் கொண்டு..காரி உமிழ்ந்திருக்கிறார்கள்.

ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிப்பு..சிரிப்பு..சிரிப்புதான்..ஓவர்டோஸ் என்று கூட சொல்லலாம்.ஆடையின்றி போவோரைக் கூட பார்த்து சிரிப்பவர்கள் நாம்.

சாதாரணமாகவே..ஒருவர் தெருவில்..வாழைப்பழத்தோலால் வழுக்கி தெருவில் விழுந்தால் கூட..சாதாரண மனிதன் முதலில் சிரிப்பான்..பின்னர்தான் அடிப்பட்டவனுக்கு உதவப் போவான்.கிட்டத்தட்ட இப்பட இயக்குநர் அந்த வேலையைத் தான் செய்துள்ளார்.தமிழ்ப் பட உலகின்..லாஜிக் பற்றி கவலைப் படாத போக்கைக் காட்டி..நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.அப்படிப் பார்த்தால்..பெரும் பொருட்செலவில் தயாரிக்கப் படும்..பிரம்மாண்டப் படங்கள், அவை எந்த மொழிப் படங்களாக இருந்தாலும்..அவற்றுள் லாஜிக் இருக்கிறதா?

அமுதனின் இப்போக்கு கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவதற்கு சமம்.

முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்புக் கொண்ட..லாஜிக்குடன் ஒரு வெற்றி படத்தை..அமுதன் கொடுத்து விட்டு..அடுத்து இப்படி ஒரு படம் கொடுத்திருந்தால் கூட ரசித்திருக்கலாம்.அதைவிடுத்து..எல்லோருக்கும் தெரிந்தவற்றையே..அவர் சார்ந்துள்ள துறை பற்றி..கிண்டலுடனும்..கேலியுடனும் சொல்வதை என்னால் ரசிக்க முடியவில்லை.

பார்ப்போம்..அடுத்து இந்த அமுதன் என்ன செய்யப் போகிறார் என்று.

11 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ.கே.., ஓ.கே..,

என்னைப் பொறுத்தவரை சிறந்த ஸ்பூஃப் வேட்டைக்காரந்தான்.

goma said...

எனக்கென்னவோ தமிழ் படம் இடையில் ப் வராது என்றுதான் தோன்றுகிறது.

பிரபாகர் said...

அய்யா,

தங்கள் கருத்து சரியே... இருப்பினும் சினிமா என்ற பெயரில் பன்ச் டயலாக், 500 பேரை தனி ஆளாய் சிதறடிப்பது, பட்டப்பெயர், அல்லக்கைகள், பாடலோடு அறிமுகமாவது என இருக்கும் மோசமான விஷயங்களை செருப்பால் அடித்ததுபோல் சொல்லியிருப்பது ரசிக்கும்படியாய்த்தான் இருக்கிறது.

அமுதன் திறமையானவர்தான், கண்டிப்பாய் நிரூபிப்பார்.

பிரபாகர்.

Good citizen said...

"மல்லாக்கப் படுத்துக் கொண்டு..காரி உமிழ்ந்திருக்கிறார்கள்"அமுதனின் "இப்போக்கு கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவதற்கு சமம்"

அப்பப்பா முடியலெ!!!தயவு செய்து டயலாக்க மாத்துங்கப்பா!!!
நீங்கள் சொல்வதுபோல் ஒரு தெர்ந்த இயக்குனரால் இதை செய்ய முடியாது
கார்ணம் அவரிடமும் லாஜிக் குறைகள் கொட்டிக்கிடக்கும். ஆகவே
ஒரு புது இயக்குனரால் மட்டுமே இதை செய்ய முடியும்,பூனைக்கு மணி
கட்டியிருக்கிறார்,,பார்ப்போம் அட்த்த படத்தில் அமுதன் என்ன செய்கிறார் என்று,,,என்னை பொறுத்தவரைத் தேவையில்லாத பன்ச்சுக்களையும்
கட்டயக் குத்து பாட்டுக்களையும்
ஓவர் பில்டப்களையும் குறைத்தாலெ
போதும்,, மோத்தத்தில் தமிழ்படத்தை நாங்கள் ரொம்பவெ ரசிக்கிறோம்

"உழவன்" "Uzhavan" said...

//பார்ப்போம்..அடுத்து இந்த அமுதன் என்ன செய்யப் போகிறார் என்று. //

அதான.. பார்க்கலாம் இவரோட அடுத்த படத்த

raja said...

the director has to do next film without the logics which he crtisised in this film ,lets c his next movie

உண்மைத்தமிழன் said...

அடுத்த படமும் இதே மாதிரிதானாம்..!

Starjan (ஸ்டார்ஜன்) said...

தமிழ்படம் தமிழா இல்லை ஆங்கில படமா ..

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் ..கருத்துக்கும் நன்றி
suresh
goma
பிரபாகர்
moulefrite
" உழவன் "
Raja
உண்மைத் தமிழன்
henry J
Starjan

நசரேயன் said...

//ஸ்பூஃப்படமாம்//

அது என்னய்யா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
//ஸ்பூஃப்படமாம்//

அது என்னய்யா ?//

:-))