Sunday, February 14, 2010

தமிழ்ப் படமும்...தமிழ்ப் பதிவர்களும்..


கேபிள் சங்கர், பரிசல்காரன் இருவரும் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள் புத்தக வெளியீட்டு விழாவில்..கலந்துக் கொண்ட பிரமிட் நடராஜன் பேசுகையில்..

தான் கேபிள் சங்கருக்கு சித்தப்பா முறை உறவு என்றும்..1959ல் சென்னை வந்த தன்னை கேபிளாரின் தந்தை கொடுத்த ஆதரவையும் நினைவுக் கோரினார்.மேலும் பேசுகையில்..அன்று வெளியிடும் புத்தகங்கள் முழுதும் தான் படிக்கவில்லை என்றும்..ஆயினும் கேபிளின் எழுத்தில்..50-55 வயதான எழுத்தாளருக்கான முதிர்ச்சி இருக்கிறது என்றும் கூறினார்.இச் சமயம் மற்றொரு பிரதம விருந்தினரான தமிழ்ப் பட இயக்குநர் சி.எஸ்.அமுதன் உள்ளே நுழைந்தார்.

கலைஞருக்கான விழாவில்..ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது..ரஜினி உள்ளே நுழைந்தால்..எந்த அளவு கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்படுமோ..அப்படியான சலசலப்பு எழுந்தது.,

அதற்கு பின் புத்தக வெளியீட்டு விழா..சிறிது நேரம் 'தமிழ்ப் பட.'.வெற்றிக்கான பாராட்டு விழாவாக மாறியது .பிரமிடார்..தான் இதுவரை அப்படம் பார்க்கவில்லை என்றும்..காரணம் டிக்கெட் கிடைக்கவில்லை என்றுக் கூறியதுடன் நில்லாமல்..'இன்று கூட மாயாஜாலில் டிக்கெட்டிற்கு முயன்றதாகவும்..அதன் நிர்வாகிகள் எந்த படத்திற்கான டிக்கெட் வேண்டுமானாலும் தருவதாகவும்..தமிழ்ப்பட டிக்கெட் இல்லை என்று சொன்னது...சாரி..சார்..உங்களுக்கே இது கொஞ்சம் மிகையாகத் தெரியவில்லை.இதை என்னைப்போன்றவர் சொல்லியிருந்தாலும் ஒப்புக்கொண்டிருக்கலாம்.

அடுத்து பேசிய இயக்குநர்..தான் தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார் பின்..இணையத்தில் தன் படம் பற்றி விமரிசனம் எப்படி வருகிறது என பார்த்ததாகவும்..தான் பார்த்த முதல் தமிழ்ப்படத்திற்கான விமரிசனம் பரிசலுடையது என்றும்..அதைப் படித்தபின் படம் வெற்றி என எண்ணியதையும் குறிப்பிட்டார்.அவர் மேலும் பேசுகையில்..பதிவர்கள் செய்யும் விமரிசனம் உயர் தரத்தில் இருப்பதாகவும்..பத்திரிகைகள் விமரிசப்பதைவிட தரமானதாகவும்..எதை சொல்ல வேண்டுமோ அதைச் சொல்வதாகவும்..சில குறிப்பிட்ட காட்சிகள் பற்றிய சஸ்பென்ஸை வெளியிடாமல் திரையில் பாருங்கள் என்று எழுதுவதையும் பாராட்டினார்.கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பார்வையாளர்களை இணையதள விமரிசனங்கள் திரையரங்கிற்கு வரவைப்பதாகக் கூறினார்.தன் பெயரை..கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் என்று போட்டுக் கொண்டாலும்..அவற்றில் பெரும்பங்கு நம் சக பதிவர் சந்துருக்கு இருக்கிறது என்று சொன்ன இயக்குநர் பாராட்டுக்கு உரியவர்.எவ்வளவு இயக்குநர்கள் இப்படி உண்மையைச் சொல்வார்கள்?

வெளியிட இருக்கும் புத்தகங்கள் இரு நாட்கள் முன்னதாகவே தனக்கு கிடைத்திருந்தும்..தன்னால் வேலைப்பளு காரணமாக படிக்க முடியவில்லை என்றும்..தான் கூடிய விரைவில் படித்து..அதை எழுதியவர்களை தொடர்புக் கொண்டு..தன் கருத்தைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

பின் அஜயன்பாலா பேசினார்...பேசினார்..பேசினார்..

பொன்.வாசுதேவன் பேசுகையில்..பதிப்பகத்தார் இன்னலைக் கூறினார்..இன்னமும் தன் பதிப்பகத்தில் ஒரு அறை முழுதும்..புத்தகங்கள் தேங்கிக் கிடப்பதாகக் கூறியவர்..நர்சிம் எழுதிய புத்தகம் நன்கு மூவ் ஆவதாகவும்..அடுத்து பா.ரா., வின் புத்தகமும் விற்கிறது என்றார்.

அடுத்து புத்தகங்களை வெளியிட்ட நாகரத்னா பதிப்பக உரிமையாளரும்..சக பதிவருமான குகன்..பரிசலுக்கும்..சங்கருக்கும் நன்றியை தெரிவித்தார்.

சங்கரின் வரவேற்புரை..மண வீட்டில் புது மணப்பெண்ணிடம் காணும் கூச்சத்துடன் இருந்தது.

பரிசல்..ஏற்புரையில்..தன்னை எழுதத் தூண்டிய நண்பர்களை நினைவுக் கூர்ந்தது அழகு.

நிகழ்ச்சியை இந்தவார தமிழ்மண நட்சத்திர பதிவாளரான சுரேகா தொகுத்து வழங்கினார்..அருமையாக இருந்தது அவர் வழங்கிய முறை.

இநிகழ்ச்சிக்கும்..தமிழ்ப்படத்திற்கு ஹவுஸ்ஃபுல் ஆவது போல் ஹால்ஃபுல் லாக பதிவர்கள்.ஒவ்வொருவரையும்..தனித்தனியே பெயரிட்டால்..பலர் விட்டுப் போக வாய்ப்புண்டு..ஆகவே அதை தவிர்க்கிறேன்..அதே சமயம்..நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார் பரிசல்.தவிர கோவையிலிருந்தும்,திருப்பூரில் இருந்தும்வந்திருந்த வடகரை வேலன்,சஞ்செய்,வெயிலொன்,சொல்லரசன், ஈரவெங்காயம் ஆகியவர்களுக்கு பாராட்டுகள்.

இந்நிகழ்ச்சியைப் பற்றி நான் சொல்ல விரும்புவது..

1)பதிவர்களே! உஷார்..ஏனோ தானோ என எழுதாதீர்கள்..உங்கள் எழுத்துகள்..பத்திரிகைகளாலும்..திரைத்துறையினராலும் படிக்கப் படுகின்றன..பொறுப்புணர்ந்து செயல் படுங்கள்.

2)நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலர் வெறும் கையுடன் திரும்பினர்..அவர்கள் எல்லாம்..புத்தகங்களை வாங்கிச் செல்லுங்கள்..அப்போதுதான் நாளைக்கு நீங்கள் எழுதும் புத்தகங்களும் வாங்கப்படும்.

3)இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரதம விருந்தினர்கள்..அன்று வெளியிடப் படும்..புத்தகங்கள் பற்றி மட்டுமே பேசுங்கள்.. உங்களுக்கு புத்தகங்கள் முன்னதாகக் கொடுக்கப் படுகின்றன..உங்களுக்கு வேலைப்பளு இருந்தாலும்..புத்தகத்தைப் படித்துவிட்டு அது பற்றி மேடையில் பேசுங்கள்.தடம் மாற வேண்டாம்.

ஆமாம்..நீ புத்தகங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லையே என்கிறீர்களா?

பரிசலின் 'டைரிக்குறிப்பும் காதல்மறுப்பும்' (மொத்தம் 17 சிறுகதைகள்)

கேபிள் சங்கரின்'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்..'(13 சிறுகதைகள்)

இரண்டு புத்தகங்களையும் நேற்றுதான் வாங்கியுள்ளேன்..படிக்காமல் விமரிசிக்க நான் என்ன பிரதம விருந்தினரா..படித்துவிட்டே எழுதுகிறேன்..

(புகைப்படம் மோகன்குமார் இடுகையிலிருந்து சுடப்பட்டது)

50 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலர் வெறும் கையுடன் திரும்பினர்..அவர்கள் எல்லாம்..புத்தகங்களை வாங்கிச் செல்லுங்கள்..அப்போதுதான் நாளைக்கு நீங்கள் எழுதும் புத்தகங்களும் வாங்கப்படும்.//

நல்ல அறிவுரை, இந்த நடைமுறை தமிழகத்தின் சில பகுதிகளில் உண்டு.






விழாவிற்கு வந்தால் பெரிய அளவில் மொய் வைப்பார்கள்..,

அத்திரி said...

//பின் அஜயன்பாலா பேசினார்...பேசினார்..பேசினார்..
//

ஐயா இந்த ஒரு நிகழ்வு மண்டை காய வைத்தது......... மைக்கை கடிச்சி துப்பாத குறைதான்.....பேச்சில் சுவாரஸ்யமே இல்லை

CS. Mohan Kumar said...

நிகழ்ச்சி தொகுத்து சுருக்கமாய் இங்கே வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா. என் பதிவில் தங்கள் பெயர் தவறாக நான் போட்டமைக்கு மாணிக்க; (தூக்க கலக்கம். தங்கள் பெயர் நன்றாகவே தெரியும்) ; மாற்றி விடுகிறேன்

Paleo God said...

சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்,,:))

goma said...

.அப்போதுதான் நாளைக்கு நீங்கள் எழுதும் புத்தகங்களும் வாங்கப்படும்.//

அந்த என் கனவு நிறைவேறும் காலத்துக்குத்தான் நானும் காத்திருக்கிறேன்...

கார்க்கிபவா said...

சந்தோஷம் அய்யா

goma said...

நல்ல பதிவு...சிறப்பான நிகழ்ச்சியை ,சிறப்பாக வர்ணித்திருக்கிறீர்கள்

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

நல்ல விளக்கமான இடுகை - புத்தக வெளியீட்டு விழாவினைப் பற்றிய இடுகை

அறிவுரைகளுடன் முடித்தது நன்று

நல்வாழ்த்துகள் டிவிஆர்

திருவாரூர் சரவணா said...

//இரண்டு புத்தகங்களையும் நேற்றுதான் வாங்கியுள்ளேன்..படிக்காமல் விமரிசிக்க நான் என்ன பிரதம விருந்தினரா..படித்துவிட்டே எழுதுகிறேன்..//

சரியான வார்த்தைகள்.

எனக்கு தபாலில் புத்தகம் வந்து சேர்ந்தபிறகுதான் படிக்கணும். ஆனா நான் புத்தகம் படிச்சு முடிக்கிற வரைக்கும் இந்தப் புத்தகங்கள் பற்றிய விமர்சனம் படிக்கிறதை ஒத்தி வெச்சிடலாம்னு நினைக்கிறேன். சரிதானே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
SUREஷ்
அத்திரி
மோகன் குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்,,:)) //

நன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
கார்க்கி
Cheena sir
திருவாரூரிலிருந்து சரவணன்

butterfly Surya said...

ரத்தின சுருக்கமாய் அருமையான பகிர்வு.

நன்றி.

அகநாழிகை said...

டிவிஆர் சார், அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். எழுத்தின் முதிர்ச்சி என்பது இதுதான். நான் பொதுவாகப் பேசியதன் காரணம் நிகழ்ச்சி மேடையில் அமரும்போதுதான் புத்தகத்தையே நான் பார்க்க முடிந்தது. மேலும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே புத்தகத்தை அளித்தால் வருகிறவர்கள் அதைப்பற்றி பேச இயலும். இதை (நான் உள்பட)வேலைப்பளு, சூழல் காரணமாக யாரும் செய்ய மறந்துவிடுகிறார்கள். புத்தகத்தை முன்பாகவே கொடுத்து அதைப்பற்றி மட்டும் பேசுங்கள் என்று கூறவேண்டும். அதே போல மேடையில் பேசும்போது சபையில் உள்ளவர்கள் சலசலத்துக்கொண்டே இருப்பதும், வந்திருப்பவரை அவமானப்படுத்தும் செயல். ஒருவர் எப்படி பேசுவார் என்பது தெரிந்துதான் விழா நடத்துபவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். அதோடு உடன்பட்டு பேச்சை கேட்க வேண்டும் என்றில்லை. பேசும்போது இடையூறில்லாமல் இருக்கலாம் இல்லையா? இது எனது கருத்து.

Karthick Chidambaram said...

அருமை - வாழ்த்துக்கள்.

//நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலர் வெறும் கையுடன் திரும்பினர்..அவர்கள் எல்லாம்..புத்தகங்களை வாங்கிச் செல்லுங்கள்..அப்போதுதான் நாளைக்கு நீங்கள் எழுதும் புத்தகங்களும் வாங்கப்படும்.//

எல்லோரும் புத்தகம் வாங்க வேண்டும்.

eluthuvathukarthick.wordpress.com

vasu balaji said...

தட்டு.குட்டு. அபாரம்.:)

Chitra said...

/////இரண்டு புத்தகங்களையும் நேற்றுதான் வாங்கியுள்ளேன்..படிக்காமல் விமரிசிக்க நான் என்ன பிரதம விருந்தினரா..படித்துவிட்டே எழுதுகிறேன்.. /////


....... ha,ha,ha,ha....

நிகழ்ச்சியை நேரில் பார்க்கிற மாதிரியே இருந்தது. நன்றாக தொகுத்து எழுதி இருக்கீங்க. பதிவர்களுக்கு தேவையான அறிவுரைகளுக்கும் நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உண்மையில் அஜயன் பாலா மட்டுமே புத்தகத்தைப் பற்றியும் கதைகளைப் பற்றியும் பேசினார். எனக்கு அவருடைய பேச்சு பிடித்திருந்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// butterfly Surya said...
ரத்தின சுருக்கமாய் அருமையான பகிர்வு.

நன்றி.//


நன்றி Surya

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வாசு..

நீங்கள் கூறுவது உண்மை..ஒவ்வொருவரும் பத்து நிமிடங்களே பேச வேண்டும் என முதலிலேயே சொல்லியிருக்கலாம்..இப்படி அவர் நீண்ட நேரம் பேசியதால்..சொன்னக் கருத்துகள் பல நீர்த்துவிட்டன.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Imayavaramban

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
தட்டு.குட்டு. அபாரம்.:)//


நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
ha,ha,ha,ha....

நிகழ்ச்சியை நேரில் பார்க்கிற மாதிரியே இருந்தது. நன்றாக தொகுத்து எழுதி இருக்கீங்க. பதிவர்களுக்கு தேவையான அறிவுரைகளுக்கும் நன்றி.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
உண்மையில் அஜயன் பாலா மட்டுமே புத்தகத்தைப் பற்றியும் கதைகளைப் பற்றியும் பேசினார். எனக்கு அவருடைய பேச்சு பிடித்திருந்தது.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜ்யோவ்ராம்..
பதிவில் எந்த இடத்திலும் அஜய் பாலாவின் பேச்சை நான் குறைகூறவில்லை..அவர் பேச எடுத்துக் கொண்ட நேரம்..அவர் ஆரம்பத்தில் சொல்லிய பல விஷயங்களை மறக்கடித்து விட்டது.சுருங்கச் சொல்லியிருந்தால் அமர்க்களமாய் இருந்திருக்கக்கூடும்.
ஆமாம்..அவர் பேசுகையில்..இந்த புத்தகத்தில் இருக்கும் கதையெல்லாம் சிறந்த கதைகள் என்று கூறமாட்டேன்..என்று சொன்னாரே..அதைக் கவனித்தீர்களா? அப்படி சொல்லுவது முறையா? அதுவும் மேடையில்..குறை ஏதேனும் இருந்திருந்தால் தனியே சொல்லியிருக்கலாம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

புத்தக வெளியீட்டு விழாவை நேரில் பார்த்தது போல உள்ளது .

ந‌ல்ல அருமையான கருத்துரை .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Starjan

Unknown said...

பதிவில் நல்ல நகைச்சுவை இழைந்தோடுகிறது. நான் மிஸ் செய்து விட்டேன் வேறு வேலை இருந்ததால்.

//அவர் மேலும் பேசுகையில்..பதிவர்கள் செய்யும் விமரிசனம் உயர் தரத்தில் இருப்பதாகவும்..பத்திரிகைகள் விமரிசப்பதைவிடதரமானதாகவும்..எதை சொல்ல வேண்டுமோ அதைச் சொல்வதாகவும்..//

ஏன் படித்தவர் பரிசலுக்கு பின்னூட்டம் போட்டு பாராட்டக்கூடாது?காரணம் என்ன?

சிநேகிதன் அக்பர் said...

தொகுப்பு நேரில் சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தியது நன்றி ஐயா.

Anonymous said...

தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

மணிஜி said...

நீங்கள் பிரமாத விருந்தினர் சார் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ரவிஷங்கர் said...
பதிவில் நல்ல நகைச்சுவை இழைந்தோடுகிறது. நான் மிஸ் செய்து விட்டேன் வேறு வேலை இருந்ததால்.

//அவர் மேலும் பேசுகையில்..பதிவர்கள் செய்யும் விமரிசனம் உயர் தரத்தில் இருப்பதாகவும்..பத்திரிகைகள் விமரிசப்பதைவிடதரமானதாகவும்..எதை சொல்ல வேண்டுமோ அதைச் சொல்வதாகவும்..//

ஏன் படித்தவர் பரிசலுக்கு பின்னூட்டம் போட்டு பாராட்டக்கூடாது?காரணம் என்ன?//

ரவிஷங்கர்..சில விஷயங்களில் ரொம்ப தீவிரமாய் ஆராயக்கூடாது..அப்படி ஆராய்ந்தால் 'கிணறு வெட்ட..ஏதோ கிளம்பியது என்பார்களே' அந்த நிலை வந்துவிடும்..நமது எல்லை இவ்வளவுதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
தொகுப்பு நேரில் சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தியது நன்றி ஐயா//.

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வடகரை வேலன் said...
தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.//

மகிழ்ச்சியை பாதியாகி உங்களுக்குத் தர நான் தயாரில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

// தண்டோரா ...... said...
நீங்கள் பிரமாத விருந்தினர் சார் !//

நம்புகிறேன் மணிஜி

☼ வெயிலான் said...

தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!!!!

creativemani said...

நல்ல பகிர்வு சார்.. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெயிலான் said...
தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!!!!//


நன்றி வெயிலான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அன்புடன்-மணிகண்டன் said...
நல்ல பகிர்வு சார்.. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..//

நன்றி அன்புடன்-மணிகண்டன்

*இயற்கை ராஜி* said...

nice:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Raji

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி vittalan

தாராபுரத்தான் said...

அய்யா வணக்கம்.புத்தகம் வெளியீட்டு நிகழ்வில் உங்கள் உருவம் பார்த்தேன். இந்த பதிவில் உங்கள் அனுபவம் தெரிந்தது. மீண்டும் வணக்கமுங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தாராபுரத்தான் said...
அய்யா வணக்கம்.புத்தகம் வெளியீட்டு நிகழ்வில் உங்கள் உருவம் பார்த்தேன். இந்த பதிவில் உங்கள் அனுபவம் தெரிந்தது. மீண்டும் வணக்கமுங்க.//


உங்களிடம் உரையாடவில்லையே..எப்படி உங்களைத் தவறவிட்டேன்

மரா said...

//படிக்காமல் விமரிசிக்க நான் என்ன பிரதம விருந்தினரா..படித்துவிட்டே எழுதுகிறேன்.. //
உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்.தங்களை ‘கிழக்கு’ மாடில சந்தித்திருக்கிறேன்.நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மயில்ராவணன்

குடுகுடுப்பை said...

அருமை.

நானும் தொடர்ந்து எழுதுகிறேன், நேரமில்லாத நேரத்திலும், எல்லாம் ஒரு நாளைக்கு சினிமாவில டைரடக்கராகனுங்கைற ஆசைதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
அருமை.

நானும் தொடர்ந்து எழுதுகிறேன், நேரமில்லாத நேரத்திலும், எல்லாம் ஒரு நாளைக்கு சினிமாவில டைரடக்கராகனுங்கைற ஆசைதான்.//


வருகைக்கு நன்றி..
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள்..
நீங்க நெனச்சா முடியும்..

பரிசல்காரன் said...

தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா. அள்ள அள்ளக் குறையாத அன்பை உங்கள் வசத்தில் வைத்திருக்கிறீர்கள். நானும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பரிசல்காரன் said...
தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா. அள்ள அள்ளக் குறையாத அன்பை உங்கள் வசத்தில் வைத்திருக்கிறீர்கள். நானும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்...//

நன்றி கிருஷ்ணா..ஆனாலும் உங்களைவிட அதிகம் நான் மகிழ்ந்தேன்..காரணம் ஒரே நேரம்..உங்களையும், ராஜேந்திரனையும் பார்க்க முடிந்த இரட்டிப்பு மகிழ்ச்சி