Tuesday, February 16, 2010

பரிசலின் புத்தகம்..ஒரு பறவையின் கண்ணோட்டத்தில்

பரிசல் இணையதளத்தில் எழுதிய கதைகளும்..ஒன்றிரண்டு விகடனில் வந்தவையும் சேர்த்து மொத்தம் 17 சிறுகதைகளின் தொகுப்பாக நாகரத்னா பதிப்பகத்தின் சார்பில் சக பதிவர் குகன் பதித்துள்ள புத்தகம்'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்"

இதில் இரு கதைகளைத் தவிர மற்றவை மிகச் சிறியக் கதைகள்.

தனிமை கொலை தற்கொலை- விக்னேஷ்,அமுதன் இரு நண்பர்கள்.விக்னேஷ்..மிருதுளா என்ற பெண்ணிடம் நட்பு பாராட்ட..அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமுதன்..நண்பனைப் பற்றி மிருதுளாவிடம் போட்டுக் கொடுக்க..நட்பில் விரிசல் ஏற்படுகிறது.இதனால்..தன் நண்பன் அமுதனைக் கொல்ல விழைகிறான் விக்னேஷ்..ஆனால் அமுதனோ தன் நண்பன் தன் நண்பன் தன்னை விட்டு விலகுவதுக் கண்டு..வேறு ஒரு முடிவு எடுக்கிறான்..கொஞ்சம் பரிசல் நடை..கொஞ்சம் சுஜாதா நடை

2)காதல் அழிவதில்லை- இதிலும் நண்பர்கள் இருவர்..மகேஷ்வரி என்னும் பெண்..காதல் வயப்படும் காதலன் என்னவெல்லாம் பேசுவான்..எப்படியெல்லாம் பேசுவான்..என்பதையெல்லாம் இயல்பாக எழுதியுள்ளார்..உண்மைக் காதல் என்றும் அழியாது என்கிறார் போலும்..

3)காதலிக்கும் ஆசை இல்லை- இரு பெண்கள்..ஒரு ஆண்..கேசவ் வை திவ்யா காதலிக்க..அவளுடன் அந்த எண்ணத்தில் பழகாத கேசவ் அதை நாசுக்காக அவளுக்குத் தெரிவிக்கிறான்..இது கதை..திவ்யாவின் தோழியின் பெயர் தீபா என்று இருப்பதால் இது சாத்தியமாகிறது.

4)பட்டெர்ஃபிளை எஃபெக்ட்- கதையில் வரும் சிறுமிகள் மீரா..மேகா..வேலைக்கு செல்லும் அம்மா உமா..பரிசலின் உண்மைக்கதையாய் இருக்கக்கூடும்..மீரா தி கிரேட் என்று சொல்லவைக்கும் கதை.

5)இருளின் நிறம்- மின்வெட்டை ஆதரிக்கும் பேரப்பிள்ளைகளிடம் பாசமுள்ள பாட்டியின் கதை..விகடனில் வெளிவந்து பாராட்டுப் பெற்றது.

6)நான் அவன் இல்லை- சார்லி..வேலை தேடப்போய் வம்பில் மாட்டிக் கொள்ள..அவனை காவல் துறையிடம் இருந்து காப்பாற்ற யாருமே இல்லை..மணிமாறன் அதிர்ஷ்டக்காரன்..அவன் யார் என்கிறீர்களா..சார்லி சொல்லும் 'நான் அவனில்லை' யில் இருக்கிறது விடை

7)மாற்றம்- தான் சிறுவனாயிருந்தபோது முடி வெட்டிக் கொள்ள சென்ற முடிதிருத்தகத்தையும்..கால மாற்றத்தில்..அந்த கடைகள் எல்லாம் நவீன வசதிகளுடன் மாறிவிடுவதையும்..அப்படி தான் சென்ற ஒரு கடையின் முதலாளி பழைய கடையின் ஆளே என்று அறிகிறான் அவன்..காலத்தின் மாற்றம்..அந்த மனிதனின் ஒரு பழக்கத்தை மட்டும் மாற்றவில்லை என்கிறது கதை.

8)மனிதாபிமானம்-மனிதநேயம் பற்றி பேசுகிறோம்..ஆனால்..மனிதாபிமானம் நிறைந்த ஒருவர்..அதனால் பயனடைந்த குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அடையும் மனவேதனையை அற்புதமாகச் சித்தரிக்கும் கதை.

9)நட்பில் ஏனிந்த பொய்கள்?-இரு நண்பர்கள் பற்றிய கதை..தான் உயர்ந்த நிலையில் இருப்பதாகப் பொய் சொல்லும் நண்பனை, அவன் சொல்வது பொய் எனத் தெரிந்தும்..கற்பனையில் அவன் அப்படியே வாழட்டும் என எண்ணுகிறான் மற்ற நண்பன்.

10)கைதி- ஒரு பக்கக் கதை ..எதிர்பாரா முடிவு..

11)ஜெனிஃபர்- இத்தொகுப்பில் உள்ள பெரிய கதை..இணையத்தில் படித்திருந்தும்..மீண்டும் படிக்கையிலும் சுவை குன்றாத நடை.ஒருவர் மேல் உள்ள பொசசிவ்னஸ் அவரை திருமணம் செய்துக்கொண்டால்..நாளடைவில்..விரும்பாத காரியங்கள் செய்கையில் கோபத்திற்கு ஆளாகக் கூடும்..அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இரண்டு பேரும் சேர்ந்து இருக்கிறோம்..அதற்கு குந்தகம் ஏற்படக் கூடாது..என்ற 46வயது முதிர்கன்னியின் கதை..இக் கதை ஆக்கியோனின் கருத்து இது என்று கொள்ளாமல்..ஜெனிஃபரின் கருத்து என எண்ணினால் விமரிசிக்க ஏதும் இல்லை.

12)கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்- கதையின் ஆரம்பத்திலெயே முடிவு தெரிந்து விடும் சிறுகதை..விசேஷமாக ஏதும் இல்லை.

13)டைரிக்குறிப்பும்..காதல் மறுப்பும்- ஒரு பாரகிராஃப் முடித்து அடுத்ததை விடுத்து..அடுத்ததை தொடர்புக்கு படிக்கும் யுக்தியில் அமைந்த கதை..இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம்..ஆனாலும் முடிவு பாதியிலேயே தெரிந்து விடுகிறது.இக்கதையை ஏன் புத்தகத்தின் தலைப்பாய் பரிசல் தேர்ந்தெடுத்தார்?..கதையின் தரத்திற்கா..அப்படியெனில் ..சாரி ..பரிசல்..நீங்கள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டிய தலைப்பு..இவற்றில் ஒன்றாய் இருந்திருக்கலாம்..
பட்டெர்ஃபிளை எஃபெக்ட்...அல்லது மனசுக்குள் மரணம்

14)மனசுக்குள் மரணம்- இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த கதை.முன்னரே படித்திருந்தாலும்..பரிசலின் அருமையான நடை மீண்டும்..மீண்டும் படிக்க வைத்தது..சுஜாதா இன்று இல்லை..ஆனால்..அவர் விட்டு விட்டு சென்ற பாணியை பரிசல் முயன்றால் ஓரளவு நிரப்பலாம்..இக் கதையை விமரிசிப்பதைவிட..புத்தகம் வாங்கி படியுங்கள்..

15)ஸ்டார் நெம்பர் ஒன்- ஒரு பிரபல கதாநாயகி..சில வருஷங்கள் கழித்து நிலை மாறியதும்..குணம் மாறிவிடுகிறாள்..ஆனால் அவளால் ஒரு காலத்தில் அவமானப்படுத்தப்பட்ட அசிஸ்டண்ட் டைரக்டர் இயக்குநர் ஆகி எடுக்கும் படத்தில் அவளுக்கு நேரும் கதியும்..இயக்குநர் அவளை நடத்திய விதமும்..இக்கதை சொல்கிறது.

16)நட்சத்திரம்- பணக்கார வீட்டு சிறுமியும்..ஏழை சிறுமியும் பற்றிய கதை.பணக்கார வீட்டு பெண்ணிடம் இருந்து கிடைத்த நட்சத்திர ஸ்டிக்கருக்கு பதில்..ஏழை சிறுமிக்கு இரவில் ஃபிளாட்ஃபாரத்தில் படுத்தவாறு..போர்த்திக் கொண்டிருக்கும் கிழிந்த போர்வையில் வானத்து நட்சத்திரங்கள் தெரிகின்றன.

17)சமூகக்கடமை- சமூகக்கடமைப் பற்றி பேசும் சுயநலவாதியின் கதை..

பரிசலின் இச்சிறுகதைத் தொகுப்புக் கதைகள் அனைத்தும் முன்னரே படிக்கப்பட்டதாய் இருந்தாலும்..மீண்டும் படிக்கையில் சுவாரஸ்யமாகவே உள்ளது.ஆனாலும்..பதிவர்களின் எழுத்துகளை புத்தகமாகக் கொண்டுவரும் பதிப்பகத்தார்..அவர் இணையத்தில் எழுதாத சில கதைகளையும் இணைக்கலாம்.

இப்புத்தகம் வாங்கலாமா? என்கிறீர்களா..கண்டிப்பாக வாங்கலாம்..17 கதைகள் வெறும் 50 ரூபாய்க்கு..நீங்கள் வாங்குவதோடு நில்லாது..உங்கள் நண்பர்கள் இல்ல விழாவிற்கும்..பணமாய் மொய் எழுதுவதற்கு பதில் இது போன்ற புத்தகங்களை வாங்கி பரிசளிக்கலாம்..

மொத்தத்தில்..சின்ன சுஜாதாவின் புத்தகம் படித்த திருப்தியை இப்புத்தகம் ஏற்படுத்தியது.

18 comments:

Radhakrishnan said...

நல்லதொரு விமர்சனம். மனசுக்குள் மரணம் தலைப்பு வித்தியாசமாக இருந்திருக்கும்.

vasu balaji said...

படிக்கணும் சார்:). விமரிசனம் தூண்டுகிறது.

Sanjai Gandhi said...

அடடே .. வாங்கின உடனே படிச்சிட்டிங்க போல.. க்ரேட் சார்..

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பார்வை சார்.

சரவணகுமரன் said...

ஆஹா!

Chitra said...

மொத்தத்தில்..சின்ன சுஜாதாவின் புத்தகம் படித்த திருப்தியை இப்புத்தகம் ஏற்படுத்தியது.


..........nice compliment! மிகவும் ரசித்து படித்து எழுதிய விமர்சனம், அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said...
நல்லதொரு விமர்சனம். மனசுக்குள் மரணம் தலைப்பு வித்தியாசமாக இருந்திருக்கும்//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ராதாகிருஷ்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
படிக்கணும் சார்:). விமரிசனம் தூண்டுகிறது.//

படியுங்க பாலா..
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SanjaiGandhi™ said...
அடடே .. வாங்கின உடனே படிச்சிட்டிங்க போல.. க்ரேட் சார்..//

வருகைக்கு நன்றி SanjaiGandhi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
நல்ல பார்வை சார்.//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சரவணகுமரன் said...
ஆஹா!//

நன்றி சரவணகுமரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
..........nice compliment! மிகவும் ரசித்து படித்து எழுதிய விமர்சனம், அருமை.//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Chitra

சுரேகா.. said...

அன்புப்பரிசலின் சிறுகதைத்தொகுப்பை அழகாக பார்த்திருக்கிறீர்கள்.

நன்றி சார்!

உயிரோடை said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு, விழாக்க‌ளுக்கு புத்த‌க‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌லாம் என்ற‌து ந‌ல்ல‌ சிந்த‌னைத் தூண்ட‌ல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சுரேகா.. said...
அன்புப்பரிசலின் சிறுகதைத்தொகுப்பை அழகாக பார்த்திருக்கிறீர்கள்.

நன்றி சார்!//


வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி சுரேகா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உயிரோடை said...
ந‌ல்ல‌ ப‌கிர்வு, விழாக்க‌ளுக்கு புத்த‌க‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌லாம் என்ற‌து ந‌ல்ல‌ சிந்த‌னைத் தூண்ட‌ல்//


நன்றி Lavanyaa

பரிசல்காரன் said...

ஐயா.. மிக்க நன்றி!

மனசுக்குள் மரணம்தான் நான் தேர்ந்தெடுத்த தலைப்பு. ஆனால் சில காரணங்களுக்காக அது தவிர்க்கப்பட்டது...!

உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பரிசல்