Wednesday, February 17, 2010

சிறு பட்ஜெட் படங்களை விழுங்கும் தமிழ்ப்படங்கள்

2010ம் ஆண்டு பிறந்து 45 நாட்களுக்குள் சில நல்ல தமிழ்ப் படங்கள் வந்துள்ளன.ஆனாலும் அவை எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை.அவற்றிற்கு பல காரணங்கள் சொல்லப் பட்டாலும்..முக்கியக் காரணமாக நான் நினைப்பது திரையரங்கங்கள் பற்றாக்குறை.படங்கள் வரும் அளவிற்கு திரையிட அரங்குகள் இல்லை.

அந்த நாட்களில் படங்கள் வந்தாலும்..சென்னையை பொறுத்த மட்டில்..ஒரு படம் அதிக பட்சம் நான்கு அரங்குகளிலேயே வெளியாகும்..வெளியான நான்கு தியேட்டரிலும் நூறு நாட்கள் ஓடும்..அரங்கு நிறைந்த 100 காட்சிகள் என்றெல்லாம் விளம்பரம் வரும்.

ஆனால் இப்போதோ..பிரபல தயாரிப்பாளர்கள்..நடிகர்கள் படம் பல முக்கிய தியேட்டர்களைப் பிடித்துக் கொண்டுவிடுகின்றன.தவிர்த்து..திரைக்கு வந்து சில நாட்கள் தினமும்..மொத்தத் தியேட்டரிலும் நாளொன்றுக்கு 100 காட்சிகள் ஓடுகின்றன..அதாவது..படம் தோல்வியுற்றாலும்..மக்களிடமிருந்து..அதிக பட்சம் பணம் சில நாட்களில் கறந்து விடுகிறார்கள்.சமீபத்திய உதாரணங்கள்..கந்தசாமி,வேட்டைக்காரன்,ஆயிரத்தில் ஒருவன்,குட்டி ஆகியவற்றைச் சொல்லலாம். சமீபத்தில் வந்த அசல்,தீராத விளையாட்டுப் பிள்ளை ஆகியவை இப்போது கிட்டத்தட்ட 70 காட்சிகள் தினம் நடைபெறுகின்றன.

இந்தப் போக்கால்..மீடியம் பட்ஜெட் படங்கள்..நன்றாக இருந்தாலும் தியேட்டர் கிடைப்பதில்லை.அப்படியே கிடைத்தாலும்..இப்படங்கள் அவற்றில் ஒரிரு காட்சிகளே ஒரு நாளைக்கு நடைபெறுகின்றன.இதற்கு உதாரணமாக போர்க்களம்,நாணயம் ஆகியவற்றைச் சொல்லலாம்.இவையும் நல்ல வரவேற்பு பெற வேண்டிய படங்கள்.சின்ன மீனை பெரிய மீன்கள் சாப்பிட்டு விட்டன.தவிர்த்து..ஒரு மினிமம் பட்ஜெட் படத்திற்கு பெரிய தியேட்டரில் 150 ரூபாய் கொடுக்க நம்ம ஆளுங்க தயாராய் இல்ல.

தீராத விளையாட்டுப் பிள்ளை பெரிய பேனர் என்பதால்.. சில படங்கள் வசூல் சற்று திருப்திகரமாக இருந்தும் அவற்றை எடுத்துவிட்டு இப்படம் போடப்பட்டுள்ளது.

ஜக்குபாய், தியேட்டர் கிடைக்காததால் பொங்கலன்று வெளியாகவில்லை..அன்று வெளியாகி இருந்தால்..இன்னும் சில லட்சங்கள் அதிகம் வசூலித்திருக்கும்..

தமிழ்ப்படம்..வெளிவந்த அன்று..அதற்கு வழிவிட குட்டி படம் சில தியேட்டர்களிலிருந்து எடுக்கப்பட்டது.

சமீபத்தில்..பண்டிகைகளில் நான்கு படங்கள் வரவேண்டும்..மாதம் இவ்வளவு படம் வரவேண்டும் என்றெல்லாம் தீர்மானித்த பட அதிபர்கள்..ஒரு படம் அதிக தியேட்டர்களை எடுத்துக் கொண்டு..மற்ற படங்களுக்கு தியேட்டர் இல்லை என்ற நிலையையும் மாற்ற வேண்டும்..

இல்லையேல்..இதே போக்கு நீடித்து..பெரிய பேனர்..நல்ல சேனல் விளம்பரம் உள்ள படங்கள் மட்டுமே..தரம் தாழ்ந்திருந்தும் வரும் நிலை ஏற்படும்.தரமுள்ள மீடியம் ,குறைந்த பட்ஜெட் படங்கள் வெளிவரா நிலை ஏற்படும்.

22 comments:

திருவாரூர் சரவணா said...

பத்திரிகைகளை நம்பாமல் நம் எழுத்தை நாமே பதிப்பிப்பது போல் டி வி டி வடிவத்தில் வீடுகளில் நேரடியாக எல்லாரும் படத்தை ரிலீஸ் செய்யும் தொழில் நுட்பம் பரவலானால்தான் இதற்கு விடிவுகாலம் என்பது என் எண்ணம்.(படத்தை இப்படி பார்க்கும் தொழில் நுட்ப வசதி எல்லார் வீட்டிலும் வேண்டுமே. அதைச்சொன்னேன்.)

Chitra said...

பெரிய பேனர்..நல்ல சேனல் விளம்பரம் உள்ள படங்கள் மட்டுமே..தரம் தாழ்ந்திருந்தும் வரும் நிலை ஏற்படும்.

..........என்னது இன்னும் ஏற்படலையா? சரியா போச்சு.
உங்கள் ஆதங்கம் புரியுது. தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் இந்த விஷயத்தை கண்டு கொள்ளாதது ஏன்?

Karthick Chidambaram said...

நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்கிறேன் ... இது தமிழ் திரை உலகிற்கு நல்லத்தில்லை
http://eluthuvathukarthick.wordpress.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி சரவணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
பெரிய பேனர்..நல்ல சேனல் விளம்பரம் உள்ள படங்கள் மட்டுமே..தரம் தாழ்ந்திருந்தும் வரும் நிலை ஏற்படும்.

..........என்னது இன்னும் ஏற்படலையா? //

இன்னமும் முழுவீச்சில் இறங்கவில்லை என்றே எண்ணுகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Imayavaramban said...
நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்கிறேன் ... இது தமிழ் திரை உலகிற்கு நல்லத்தில்லை//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
Imayavaramban

மணிஜி said...

உங்கள் கருத்து சரியானதுதான் சார். விண்ணை தாண்டி வருவாயா படத்துக்காக எல்லா தியேட்டர்களும் புக் செய்யப்பட்டி விட்டதால் பையா தள்ளி போகிறது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கருத்து கணிப்பு .. விமர்சனம் .

இன்னும் நிறைய தகவல்கள் அறிய ஆவலாக உள்ளது .

உண்மைத்தமிழன் said...

ஸார்..

தயாரிப்பாளர் யூனியனில் கார்டு வாங்கிவி்ட்டீர்களோ..?

வாழ்த்துக்கள்..! முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுங்களேன்..!

உங்களை எங்கயோ கொண்டு போகிறேன்..!!!!!!!!!!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தண்டோரா ...... said...
உங்கள் கருத்து சரியானதுதான் சார். விண்ணை தாண்டி வருவாயா படத்துக்காக எல்லா தியேட்டர்களும் புக் செய்யப்பட்டி விட்டதால் பையா தள்ளி போகிறது.//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி தண்டோரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல கருத்து கணிப்பு .. விமர்சனம் .

இன்னும் நிறைய தகவல்கள் அறிய ஆவலாக உள்ளது .//

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644
உங்களை எங்கயோ கொண்டு போகிறேன்..!!!!!!!!!!!!!!//

:-)))))

Vidhya Chandrasekaran said...

சரியான ஆதங்கம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
சரியான ஆதங்கம்.//

வருகைக்கு நன்றி வித்யா

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் சார்.

Cable சங்கர் said...

ithai பற்றி ஒரு விரிவான பதிவு எழுத இருக்கிறேன் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் சார்.//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Cable Sankar said...
ithai பற்றி ஒரு விரிவான பதிவு எழுத இருக்கிறேன் சார்//

படிக்கக் காத்திருக்கிறேன்

Muruganandan M.K. said...

உண்மையை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
பணமும் பகட்டும் இருந்தால் நல்லதற்கு காலமில்லை என்றாகிவிட்டது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Dr

nerkuppai thumbi said...

உங்கள் பதிவில் சொன்ன விஷயம் சரியானதே.
மேலும், திரைப் படத் தயாரிப்பில் செலவு குறைக்க முடியாதா?
அவர்களை சிக்கனமாக படம் எடுக்க கட்டாயப் படுத்த வேண்டும்; இதை ரசிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களை அதிக கட்டணம் செலுத்தி பார்க்காமல் பெரிய பட்ஜெட் படங்களை ஆதரிக்காமல் இழப்பு அடையச் செய்ய வேண்டும். அப்போது தான், குறைந்த பட்ஜெட் படங்கள் நல்ல படங்கள் வர ஏதுவாகும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
nerkuppai thumbi