Saturday, February 20, 2010

இறைவன் ஒரு பச்சோந்தியா...

இறைவன் இருக்கின்றானா
இருந்தால்
அவன் நிறம் என்ன?
வினவினான் ஒருவன்
அவன் பச்சை நிறம்
மரம்,செடி,கொடி,புல்
அவன் நீல நிறம்
வானத்தைப் போல
அவன் பழுப்பு நிறம்
பாறை, மலையைப் போன்று
அவன் வெண்மை நிறம்
உச்சியிலிருந்து விழும் நீரானபோது
அவன் சிவப்பு நிறம்
கீழ் வானத்தில் சூரியன்
வந்திடும் போது
அவன் மஞ்சள் நிறம்
வெயில் சுட்டெரிக்கும் போது
சூரியன் மறைந்ததும்
அவன் நிறம் கருப்பு
வானவில்லாய் தோன்றும் போது
பல நிறங்கள்
என்றதும்
பேதை கேட்டான்
அப்போது அவன் ஒரு
பச்சோந்தியா என
அவன் செம்புலப்புயல் நீர்
என்றிட்டேன்.

(மீள்பதிவு)

18 comments:

அன்புடன் நான் said...

இறைவன் பச்சோந்தி கிடையாது.... அது பார்க்கும் பார்வையை பொறுத்தது..... கவிதைக்கென மெனக்கிட்டிருக்கின்றீர்கள்.....

பாத்திமா ஜொஹ்ரா said...

இறைவனாகிய ஏகன் எந்த கற்பனைக்கும்,உதாரணங்களுக்கும் அப்பாற்பட்டவன்.நீங்கள் எதுவும் ஒன்றை உருவம் கொடுத்து,உருவகப்படுத்தினால் அது கண்டிப்பாக இறைவன் கிடையாது.

goma said...

இதிலிருந்தே புரிந்திருக்குமே இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பது......

Chitra said...

பச்சோந்தி? நீர்? எல்லாம் human standards

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சி. கருணாகரசு said...
இறைவன் பச்சோந்தி கிடையாது.... அது பார்க்கும் பார்வையை பொறுத்தது..... கவிதைக்கென மெனக்கிட்டிருக்கின்றீர்கள்.....//

வருகைக்கு நன்றி..கருணாகரசு
கவிதையை இன்னொருமுறை படியுங்கள்..அவன் பச்சோந்தியா எனக் கேட்டது ஒரு பேதை..அதற்கு என் பதில் அவன் 'செம்புலப்பெயல் நீர்' என்பது..அதாவது அவன் அந்தெந்த இடத்திற்கு..அந்தெந்த மனிதர் விரும்பும் வடிவத்தில் இருப்பவன் என்பதாகும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பாத்திமா ஜொஹ்ரா said...
இறைவனாகிய ஏகன் எந்த கற்பனைக்கும்,உதாரணங்களுக்கும் அப்பாற்பட்டவன்.நீங்கள் எதுவும் ஒன்றை உருவம் கொடுத்து,உருவகப்படுத்தினால் அது கண்டிப்பாக இறைவன் கிடையாது.
//

வருகைக்கு நன்றி..பாத்திமா ஜொஹ்ரா
கருணாகரசின் பின்னூட்டத்திற்கு என் பதில் பார்க்கவும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
இதிலிருந்தே புரிந்திருக்குமே இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பது......//
வருகைக்கு நன்றி..கோமா
கவிதையின் பொருளை சரியாகப் புரிந்துக் கொண்டுள்ளீர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
பச்சோந்தி? நீர்? எல்லாம் human standards//

சொல்ல வருவது புரியவில்லை சித்ரா..

சிநேகிதன் அக்பர் said...

//இதிலிருந்தே புரிந்திருக்குமே இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பது......//

சரியா சொன்னீங்க.

Anonymous said...

God is omnipresent, omniscient and omnipotent என்பது ஆத்திகரின் கொள்கை.

இதைச் சொல்ல ஒரு கவிதையா?

புதிதாக ஏதாவது சிந்தித்து கவிதை எழுதவும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
Jo Amalan Rayen Fernando

உயிரோடை said...

//அவன் செம்புலப்புயல் நீர்
என்றிட்டேன். //

அருமைங்க‌

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உயிரோடை said...
//அவன் செம்புலப்புயல் நீர்
என்றிட்டேன். //

அருமைங்க‌//

நன்றி Lavanya

Thenammai Lakshmanan said...

கவிதை அருமை டிவிஆர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி thenammailakshmanan

vidivelli said...

மிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........
உண்மையாகவே கடவுள் பச்சோந்தி தானுங்க........
இருந்த டவுட்ட கிளிய பண்ணீட்டீங்க!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
vidivelli